என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சந்தேகம்"
- தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார்
- தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவரது மகன் தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு அவரது வீட்டின் அருகே உள்ள வாலிபால் விளையாடும் மைதானத்தில் உள்ள வாலிபால் போஸ்டரில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியடி உயிரிழந்த நிலையில் இருந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் அனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரியதர்ஷினி விசாரணை செய்தார். அப்போது தனது மகன் சாவில் சந்தேகம் இருப்ப தாக கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், உடலை எடுக்க விடாமல் முற்றுகை யிட்டனர். இவரை அடித்து கொலை செய்து யாரோ தூக்கில் மாட்டி இருக்கி றார்கள் எனவும், இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனவும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு இணங்கிய பொதுமக்கள் உடலை எடுக்க விட்டனர். உடனடியாக உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.
- போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அப்போது அவ்வழியாக வந்த 3 நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
கடலூர்:
கடலூர் தேவனா ம்பட்டினம் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் ஆகியோர் கே.கே நகர் பகுதியில் இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் 3 நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என்பதனை முகம் அடையாளம் கண்டறியும் போலீஸ் ஆப் மூலம் புகைப்படம் எடுக்க முயன்றனர்.
அப்போது இந்த நபர்கள் போலீசார் புகைப்படம் எடுக்க விடாமல் தடுத்து பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் வண்ணாரபாளையம் சேர்ந்தவர்கள் முகிலன், முரளி, முத்தையன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது
- தமிழ்ச்செல்வன் கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணி செய்து வருகிறார்.
- தாயார் இன்பவள்ளி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
கடலூர்:
சிதம்பரத்தை அடுத்த குமராட்சி கோப்பாடியில் வசித்து வந்தவர் இன்பவள்ளி (வயது 38). இவர் சத்துணவு கூடத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (45) என்பவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தமிழ்ச்செல்வன் கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி கோயம்புத்தூரில் வசிக்கிறார். இளைய மகள் இலக்கியா தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். மகன் 10-ம் வகுப்பு முடித்து விட்டு கம்பி பிட்டர் வேலை செய்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்ச்செல்வன் கிராமத்திற்கு வந்தார். அது முதல் இங்கேயே தங்கியுள்ளார். இதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. குறிப்பாக இன்பவள்ளியின் நடத்தையில் தமிழ்ச்செல்வனுக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நர்சிங் கல்லூரிக்கு சென்ற இலக்கியா, கல்லூரி முடித்து நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது அவரது தாயார் இன்பவள்ளி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இலக்கியா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குமராட்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்ட இன்பவள்ளியின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக புகாரின் பேரில் தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நான் கேரளாவில் பணி செய்து வந்தேன். பொங்கலை முன்னிட்டு வீட்டிற்கு வந்தேன். அதிலிருந்து எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. எனது மனைவி இன்பவள்ளியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூறினேன். வேலை இருக்கிறது என்று வெளியில் சென்று விடுவார். இதையடுத்து நானே சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் எனது மனைவி, மாலையில் வீட்டிற்கு வருவார். உடனே வேலை இருக்கிறது என்று கூறிவிட்டு வெளியே சென்று விடுவார். இரவு 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வருவார். நான் ஏதாவது கேட்டால் என்னிடம் சண்டையிடுவாள்.
சத்துணவு கூடத்தை பொருத்தவரையில் மாணவர்களுக்கு சமையல் செய்து முடித்து விட்டு மதியமே வீட்டிற்கு வந்து விடலாம். ஆனால், இன்பவள்ளி வீட்டிற்கு வருவதே இல்லை. இது சம்பந்தமாக எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். இந்நிலையில் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரை வாங்கிக் கொண்டு நேற்று மதியம் வீட்டிற்கு வந்தேன். அப்போது வீட்டில் இருந்த இன்பவள்ளி, என்னை பார்த்தவுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். அவரை தடுத்த நான் எங்கு செல்கிறாய் என்று கேட்டேன். வேலை இருக்கிறது. வெளியே செல்கிறேன் என்று கூறினார். வெளியே சென்றால் கத்தியால் வெட்டி விடுவேன் என்று நான் மிரட்டினேன். அதனை பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல இன்பவள்ளி முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் கத்தியால் இன்பவள்ளியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இவ்வாறு தமிழ்ச்செல்வன் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
- அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.
- 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்து செம்பனார்கோயில் காவல் நிலைய எல்லைக்குள் தனிப்படை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, ரமேஷ் மற்றும் போலீசார் நரசிம்ம பாரதி. அசோக் குமார், செந்தில், கார்த்திக், விஜயன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்ப டையில் விசாரித்தனர். விசாரணையில் அவர் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் மேலபாதியை தெற்கு தெருவை சேர்ந்த மனோகர் (வயது 40) என்பதும் அவர் மயிலாடுதுறையில் 2 மோட்டார் சைக்களிலும், மணல்மேட்டில் ஒரு மோட்டார் சைக்கிள், செம்பனார் கோயிலில் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள் திருடியது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன் தொல்லையால் மன உளைச்சல்.
- போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கு சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி அவுரி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 52).
இவர் திருமருகல் சீராக்குளம் தெருவில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கடை வெகு நேரமாகியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கு சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
உடன் போலீசார் சம்சுதீன் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சில அடி உயரத்தில் நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த எனது பாட்டி மரணத்தில் சந்தேகம் உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 30) என்ஜினீயரிங் படித்துள்ளார்.
இன்று அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள வயர்லெஸ் டவரில் திடீெரன வேக வேகமாக ஏறினார்.
இதனை பார்த்த போலீசார், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது ராம்குமார், சில அடி உயரத்தில் நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் எதுவாக இருந்தாலும் கீழே இறங்கி வாருங்கள். பேசி சரிசெய்து கொள்ளலாம் என்றனர்.
ஆனால் ராம்குமார் இறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் உங்களது கோரிக்கையை கீழே இறங்கி வந்து தெரிவியுங்கள் என்றனர். இதையடுத்து ராம்குமார் டவரில் இருந்து கீழே இறங்கினார்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு ராம்குமார் போலீசாரிடம் கூறும்போது:-
எனது பாட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது.
அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை என்னிடம் தர வேண்டும் என்று கேட்டேன்.
ஆனால் கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து டவரில் ஏறினேன் என்றார்.
இதனை தொடர்ந்து போலீசார் ராம்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராம்குமார் ஏற்கனவே ஒருமுறை டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
தற்போது அவர் 2-வது முறையாக தற்கொலை மிரட்டல் விடுத்திருப்பது குறிப்பிடதக்கது.
- இன்றைய காலகட்டத்தில் காளாண் வளர்ப்பின் அவசியம் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.
- விவசாயிகள் காளான் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழிதேவன் கிராமத்தில் 2022-23 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.
திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு கலைச்செல்வன் தலைமையில் பயிற்சி நடைப்பெற்றது. பயிற்சிக்கு ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி இன்றைய காலகட்டத்தில் காளாண் வளர்ப்பின் அவசியம் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சந்திரசேகரன் காளாண் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றி விரிவுரை மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தார்.
விவசாயிகள் காளாண் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் வட்டாரத்தில் நடைமுறை படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலவலர் சிந்து மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.
- தமிழக அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் என மகாசபை நிறுவன தலைவர் வலியுறுத்தினார்.
- இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
ராமநாதபுரம்
அகில இந்திய அகமுடையார் மகாசபை நிறுவன தலைவர் ரஜினிகாந்த் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகில் தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. ஆனால் மாணவியின் தாய் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு திட்டமிட்ட படுகொலை என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவியின் மரணம் குறித்து நீதி கேட்டு பெற்றோர்கள் 4 நாட்கள் போராட்டம் நடத்தி வந்தும் பள்ளி மாணவி மரண விவகாரத்தில் உளவுத்துறை, காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இதற்கு காரணமானவ ர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்தச் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல கணவன் முயற்சித்தார்.
- ஆதிகேசவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்தார். பின்னர் மனைவி என்றுகூட பாராமல் சரோஜினியின் கழுத்தை அறுத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி யூனியன் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் ஆதிகேசவன். கூலி தொழிலாளி. அவரது மனைவி சரோஜினி (வயது 42). கடந்த சிலநாட்களாக ஆதிகேசவன் தனது மனைவியின் நடத்தையின் சந்தேகப்பட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இன்று காலையும் பிரச்சினை வெடித்தது. ஆத்திரம் அடைந்த ஆதிகேசவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்தார். பின்னர் மனைவி என்றுகூட பாராமல் சரோஜினியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்ட நிலையில் சரோஜினி அலறித்துடித்தவாறு கீழே விழுந்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த ஆதிகேசவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய சரோஜினி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குபதிந்து ஆதிகேசவனை தேடி வருகிறார்கள்.
- கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி சாவில் சந்தேகம் என உறவினர்கள் மனு கொடுத்துள்ளனர்.
- பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டுள்ளனர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சிஅருகே மூங்கில்துறைப்பட்டு அருகே பொருவளூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர் (36) மாற்றுத்திறனாளி. இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த அவரது சகோதரி ஜெயந்தி மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபுவிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- எனது தங்கை மலர் கடந்த 27- ந் தேதி பெருமனம் கிராமத்திற்கு துக்கம் விசாரிக்க தனியார் மினிபேருந்தில் பயணம் சென்றார். அப்போது அவரை மணலூர்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டுள்ளனர்.
எனது அக்கா மலருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. இதனால் எனது அக்கா மலர் இரவு முழுவதும் பெட்ரோல் பங்கிலேயே இருந்துள்ளார். அந்த மினி பேருந்தும் அங்கேயே நிறுத்தப்பட்டு இருந்தது. மறுநாள் 28- ந் தேதி பெட்ரோல் பங்க் வேலையாட்கள் மூலம் எனது அக்கா மலர் அங்கு இருப்பது குறித்த தகவல் வந்தது. பின்னர்மலரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். தொடர்ந்து புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்த போது கடந்த 29- ந் தேதி இறந்துவிட்டார். எனது அக்கா மலர் இறப்பில் சந்தேகம் உள்ளது. எனவே அக்கா மலர் உடலை தோண்டி எடுத்து உடல் கூறாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு கணவன் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று புகார் அளித்தார்.
- மேலும் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னரே இறப்பு குறித்த சந்தேகம் விலகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அரச மரம் பஸ் நிறுத்தம் சென்னியப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார் (50). லாரி டிரைவர். இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவி ராஜேஸ்வரி (45), ஒரு மகள் உள்ளார்.
சூரியகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த 7 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர உணவு ஏதும் சாப்பிடாமல் அடிக்கடி மது அருந்தி வந்த சூரியகுமார் சம்பவத்தன்று வீட்டில் இறந்து கிடந்தார். உடனே இறந்து கிடந்த சூரியகுமாரை அவரது உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக கோபி மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் உறவினர்களுடன் வந்த ராஜேஸ்வரி தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு சூரியகுமார் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சூரியகுமார் உடலை பிரேதபரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ேமலும் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னரே இறப்பு குறித்த சந்தேகம் விலகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- தக்கலை போலீஸ் படையினர் திக்கணங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- புதூர் பகுதியில் நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனை நடத்தியபோது 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி:
தக்கலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீஸ் படையினர் திக்கணங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது புதூர் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் நைசாக ஓட முயற்சித்தார்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரது கையில் இருந்த பையை சோதனை செய்த போது பிராந்தியுடன் கூடிய மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அவரை கைது செய்து போலீசார் அவரது கையில் இருந்த விசாரனையில் கைது செய்யபட்ட நபர் புதூர் கொட்டாரத்துவிளையை சேர்ந்த தொழிலாளி சசிகுமார் என்று தெரிய வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்