search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224031"

    • தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம். எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வந்த பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், பூதப்பாண்டி கட்டிடபிரிவு உதவி பொறியாளர் அலுவலகம் ஆகியவை பராமரிப்புக்கு என்று தென்காசி மாவட்டம் ஆலங்கு ளம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று தக்கலையில் இயங்கி வந்த கட்டிட பிரிவு அலுவலகம் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    தமிழக பொதுப்பணித்து றையில் கட் டிடஅமைப்பு உருவாக்கப்பட்டபோது, குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டம், 4 உப கோட்டம் மற்றும் 10 பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அரசு கட்டிடங்களை பராமரிப்பு செய்து வருவ துடன், புதிய கட்டிடங்க ளையும் கட்டி வருகிறது.

    இந்த அலுவலகங்கள் குமரி மாவட்டத்தில் இருந்து மாற் றப்படுவதால் ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம், 3 உதவி பொறி யாளர் இளம் பொறியாளர், ஒரு கண்காணிப் பாளர், ஒரு உதவியாளர் பணியிடம் போன்றவை இந்தமாவட் டத்தில் இருந்து பறிபோய் விடுகிறது. இதனைக் கருத் தில் கொண்டு, குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த அலுவலகங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு பிறப்பிக்கப் பட்ட அரசு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.

    • வெண்கல சிலை சென்னையில் தயாராகிறது
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் பெரியார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் சிலை உள்ளது.

    இதையடுத்து கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க திமுக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தற்பொழுது பொது இடங்களில் சிலை வைப்பதற்கு அனுமதி இல்லாததால் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்து வருகிறார். வெங்கல சிலை அமைக்கும் பணிகளை துரிதமாக முடித்து அந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அழைத்து திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சிலை அமைப்பதற்கான பணிகள் திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் நடந்து வருகிறது. அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர் இடித்து அகற்றப்பட்டு உள்ளது.

    சிலை அமைக்கப்பட உள்ள பகுதியில் கான்கிரீட் அமைக்கப்பட்டு உள்ளது .சென்னை ஓமந்தூரார் அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை தயாரித்த தீனதயாள் என்பவர் சிலையை தயாரித்து வருகிறார்.சென்னை மீஞ்சூர் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் வெண்கலசிலை தயாராகி வருகிறது. இந்த சிலையை அடுத்த மாதத்திற்குள் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியுடன் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • மின்சாரம் தடைபட்டதால் பரபரப்பு
    • மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் பரிதவிப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கீழ்தளத்தில் இருந்த மின்இணைப்பில் இருந்து நேற்று இரவு திடீரென தீ பொறிகள் வந்தது.

    இதையடுத்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    உயர் மின்னழுத்தத்தின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு சில அலுவலகங்களில் இன்று காலை மின்சாரம் தடைப்பட்டது.

    மதியம் வரை மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். மின் இணைப்பை சரி செய்யும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    • மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்
    • இரவு 9 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.

    நாகர்கோவில்:

    மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை யாளர் பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். காலை தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

    இதை தொடர்ந்து இரவு 9 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.

    • திறந்து வைக்க தே.மு.தி.க. வலியுறுத்தல்
    • மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி நிதி ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து 13 பேன்களுடன் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மத்திய பகுதியில் அமைந்துள்ளது தக்கலை தாலுகா அலுவலகம்.

    இந்த தாலுகா அலுவலகத்தை சுற்றி வட்ட வழங்கல் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், சார் கருவூல அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகம், கிராம அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு ஓய்வெடுக்க போதுமான அறைகள் எதுவும் இல்லை. இதை கருத்தில் கொண்டு 2002 வருடத்தில் உள்ள அப்போைதய கலெக்டர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி நிதி ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து 13 பேன்களுடன் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இது வரைக்கும் திறக்கபடவில்லை.

    வருவாய் துறை அதிகாரிகளும் கண்டு கொள்ள வில்லை. இக்கட்டிடத்தை உடனே பொதுமக்கள் நலன் கருதி திறக்க வேண்டும் என தே.மு.தி.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் டேவிட் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் தக்கலை தாலுகா அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் ஓய்வறையை திறக்காவிடில் தே.மு.தி.க. சார்பில் திறந்து வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • சாலை மறியலில் ஈடுபட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக தூக்கி சென்று 9 பேரை கைது செய்தனர்.

    சேலம்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் பைரோஸ்கான் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர் . ஆனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக தூக்கி சென்று 9 பேரை கைது செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • 5 மாவட்டங்களில் புதிய போலீஸ் கேண்டின்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் திறந்து வைத்தார்.
    • விரைவில் ஆயுதப்படை, மாவட்ட போலீஸ் அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் போலீசாரு க்கான மளிகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்கும் வகையில் புதிய பல்பொருள் கேண்டீன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழக.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கி, புதிய போலீஸ் கேண்டீனை ரிப்பன் வெட்டி காவலர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி வைத்த அவர், முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். பின்னர் போக்கு வரத்து போலீசாருக் புதிய கட்டிடத்தை டி.ஜி.பி. திறந்து வைத்தார்.

    இதைய டுத்து மயிலாடுது றையில் இருந்து புதிதாக தொடங்கப்பட்ட செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்கு றிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் புதிய போலீஸ் கேண்டின்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மயிலாடுதுறையில் விரைவில் ஆயுதப்படை, மாவட்ட போலீஸ் அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை நகரில் கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம் திறக்க பரிசீலிக்கப்படும் என்றார்.

    விழாவில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • போராட்டம் இன்று 2-வது நாளாக நீடிப்பு
    • மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு எந்த சலுகைகளும் செய்யவில்லை

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே தாழக்குடி வீரநாராயண மங்கலம் பகுதியை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது 39 )ஆட்டோ டிரைவர்.இவர் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.

    இவர் தனது சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்க வேண்டும். அனைத்து அலுவலகங்களுக்கும் செல்ல சாய்வு தளம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்புக்கொடியுடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தகவல் வெளியானது.

    இதையடுத்து வள்ளிநா யகம் வீட்டிற்கு சென்ற ஆரல்வாய்மொழி போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி னார்கள். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வள்ளி நாயகத்தை ஆரல்வா ய்மொழி போலீஸ் நிலைய த்திற்கு அழைத்து சென்றனர்.பின்னர் அவர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.

    போலீசாரால் விடுவி க்கப்பட்ட பிறகு அவர் அங்கிருந்து நேராக நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    கலெக்டர் அலுவலக த்திற்கு வந்த வள்ளிநாயகம் கையில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து நேசமணி நகர் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அவர் கருப்பு கொடியுடன் ஆட்டோவில் புறப்பட தயாரானார்.

    அப்போது திடீரென போலீசாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து வள்ளி நாயகம் கலெக்டர் அலுவலகத்தின் எதிர்புறம் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.விடிய விடிய அவர் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    இன்று காலையிலும் தொடர்ந்து வள்ளிநாயகம் போராட்டத்தில் ஈடுப ட்டுள்ளார். இதுகுறித்து வள்ளிநாயகம் கூறுகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு எந்த சலுகை களும் செய்யவில்லை இது தொடர்பாக நான் போராடி வருகிறேன் என்றார்.

    • தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் பள்ளி முன்பு நாள்கணக்கில் குப்பை, இறைச்சி கழிவுகள் தேங்கி கிடக்கின்றன.
    • இதனால் மாணவ-மாணவிகள், அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் புறவழிச்சாலை முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை உள்ளது. 1350 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், ஊழிய ர்கள் என 300 பேர் பணிபுரிகின்றனர்.

    இந்நிலையில் இந்த பள்ளி அருகே சிலர் குப்பைகளையும், இறைச்சி கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் பள்ளி முன்பு நாள்கணக்கில் குப்பை, இறைச்சி கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. அதில் இருந்து புழு, கொசுக்கள் உற்பத்தி ஆவதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது. மேலும் குப்பைகளை நாய்கள் அங்கும் இங்குமாக பரப்பிவிட்டு செல்கிறது. இதனால் பள்ளி முன்பு குப்பை கூடங்களாக காட்சியளிக்கிறது.

    இதனால் மாணவ-மாணவிகள், அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர். குப்பை கள், இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும், தேங்கி உ ள்ளவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகம், பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே மாணவ- மாணவிகள் நலன் கருதி உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.

    • ஒன்றிய பா.ம.க. அலுவலகம் திறக்கப்பட்டது.
    • ஆலோசனைக்கூட்டமும் நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் அருகே வி.கைகாட்டியில் பா.ம.க. ஒன்றிய அலுவலகம் திறப்பு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செம்மலை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னதுரை, ஒன்றிய செயலாளர் சக்திவேல், சங்கர்குரு, ரமேஷ் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    மாவட்டச் செயலாளரும், ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு தலைவருமான காடுவெட்டி ரவி கலந்து கொண்டு, தெற்கு ஒன்றிய பா.ம.க. அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில், ஒன்றிய செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் கிளை நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு பொறுப்பாளர்களும் தொடர்பு கொண்டால் தான் கிளை நிர்வாகிகள் உற்சாகமாக பாடுபடுவார்கள். பொறுப்பாளர்கள் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். தமிழகத்தில் பா.ம.க. ஆள வேண்டும், அன்புமணி ராமதாஸ் முதல்வராக அமர வேண்டும் என்ற உறுதிமொழியுடன் அனைவரும் ஒற்றுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என பேசினார்.

    • வேலை அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை ஆர்.டி.ஓ.விடம் மனுக்களாக அளித்தனர்.
    • மாற்றுத்திறனாளிக்கு ஏற்ப வேலை மற்றும் 4 மணி நேரம் மட்டும் பணி போன்ற கோரிக்கை பரிசீலித்து நிர்வாக அனுமதி பெற்று நடைமுறைபடுத்துவதாக தெரிவித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள குறைபாபாடுகள் தொடர்பாக மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேதாரண்யம் ஆர்.டி.ஓ ஜெயராஜ்பவுலின் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

    முகாமில் அனைத்து ஊராட்சிகளிலும் வேலை அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு தங்கள்குறைகளை ஆர்.டி.ஓ.விடம் மனுக்களாக அளித்தனர்.முகாமில் வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் பகுதியை சேர்ந்த சுந்தரேசன்மாற்றுதிறனாளி ்பார்வையில்லாதவர் மனு எழுதாமல் வந்துவிட்டார்

    அவரிடம் ஆர்.டி.ஓ குறைகளை கேட்டு அவருக்காக தானே மனு எழுதினார். பின்பு அவரிடம் படித்து காண்பித்தார். பின்பு அவர் மாற்று திறனாளிக்கு ஏற்ப வேலை மற்றும் 4 மணி நேரம் மட்டும் பணி போன்ற கோரிக்கை பரிசீலித்து நிர்வாக அனுமதி பெற்று நடைமுறைபடுத்துவதாக தெரிவித்தார்.பொதுவாக அரசு அலுவலகங்களில் மனு எழுதி கொண்டு சென்றாலே அதை அலட்சியமாக வாங்கி அலையவிடுவது வழக்கம்.ஆ னால் பொதுமக்களுக்காக மனுவை கேட்டு ஆர்.டிஓ எழுதிதை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

    • உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
    • வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த மே மாதம் திறப்பு விழா செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் சார்பு நீதிமன்றத்தையும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்,குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி திறந்து வைத்தார். இதில் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல், வழக்கறிஞர்கள் வெங்கடாசலபதி, ஈஸ்வரமூர்த்தி, மகேஸ்வரன், ராஜேஷ், மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×