search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி"

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பட்டியல் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தின் 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் கூட்டம் நடத்துவதற்கான செலவு தொகையை ரூ.1000த்தில் இருந்து ரூ.5000மாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம ஊராட்சியின் 1.4.2022 முதல் 31.7.2022 முடியவுள்ள காலாண்டின் வரவு செலவு விபரங்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்களின் பார்வைக்காக தகவல் பலகை வைக்கப்பட்டது. மேலும், கிராம சபையில் வரவு செலவுக் கணக்குகள் ஒப்புதல் பெறப்பட்டது.

    தமிழக அரசால் 15.8.2022 முதல் 2.10.2022 வரை தனிநபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு எழில் மிகு கிராமம்" என்ற சிறப்பு பிரச்சாரம் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பல்வேறு துறைகள் மற்றும் சமூக பங்கேற்புடன் மேற்கொள்ளுதல் குறித்து விவாதித்து செயல்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் உற்பத்தி தடை செய்தல், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - 2 திட்டத்தின் கீழ் 2022-23 ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகளின் விவரம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், 2010-க்கு பின்னர் புதிய குடிசைகள் அமைத்துள்ளோர் விவரம் குக்கிராமம் வாரியாக கணக்கெடுத்தல், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயனடையும் வகையும் அரசின் நடவடிக்கைகள் குறித்தும், பயனாளிகள் பட்டியல் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

    பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் துறை சார்ந்த திட்டங்களைப் பற்றி விளக்கினார்கள். மேலும், ஊத்துக்குளி வட்டாரம், சின்னேகவுண்டன்வலசு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வினீத் கலந்து கொண்டார். திருப்பூர் வட்டாரம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மா வட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர்-திட்ட இயக்குநர் கலந்து கொண்டார். 

    • நாளை (திங்கள்கிழமை) சுதந்திர திருநாளன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை (திங்கள்கிழமை) சுதந்திர திருநாளன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கும்.

    இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே இக்கிராம சபை கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற வுள்ள கிராம சபைக்கூ ட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்தி ட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.

    நாகர்கோவில், ஆக.12-

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 -ந் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் கலை 11 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண்வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக்கூட்டம் நடத்திடவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்க ளுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15-ந் தேதி அன்று காலை 11 மணியளவில் கிராமசபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.

    இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் இக்கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்கவு ள்ளனர்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற வுள்ள கிராம சபைக்கூ ட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்தி ட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 5-ந் தேதி பகல் 11 மணிக்கு நடைபெறும்.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளின் ஜல் ஜீவன் இயக்கத்தின் முலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வீடு தோறும் குடிநீர் என்ற நிலையை ஏற்படுத்திய ஊராட்சியாக 9 ஊராட்சிகள் அறிவிக்கப்படு கிறது.

    அதன்படி அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரவிபுதூர் ஊராட்சி, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பறக்கை ஊராட்சி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தலக்குளம் ஊராட்சி, தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்குறிச்சி மற்றும் முத்தலக்குறிச்சி ஊராட்சிகள், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அருவிக்கரை, கண்ணனூர் மற்றும் ஏற்றக்கோடு ஊராட்சி, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஆகிய 9 ஊராட்சிகளிலும் வருகிற 5-ந் தேதி பகல் 11 மணிக்கு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

    எனவே பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஊராட்சி மன்ற வளாகத்தில் கூடியிருந்த மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களை சந்தித்து அரசின் உதவிகள் குறித்து கேட்டார்.
    • மகளிர் சுயஉதவிகுழு வினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

     வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் உள்ள 3 ஊராட்சிகளில் நடந்துவரும் ஊரக வளர்சி பணிகள், மகளிர் சுயஉதவி குழுவினரை சந்திப்பு மற்றும் சீரமைக்கப்பட்ட நூலக திறப்பு விழா என பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் பெரியகருப்பன் தலைஞாயிறு ஒன்றியம் நாலுவேதபதி ஊராட்சி மன்றம் அருகே ரூ 1.19 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்தார்.

    பின்னர் அரசு திட்டத்தில் வளர்க்கபட்டுள்ளசுமார் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான முருங்கை,புங்கை, புளி, மா உள்ளிட்ட மரக்கன்றுகளை பார்வையிட்ட அமைச்சர் மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க அறிவுறுத்தினார்.

    மேலும் ஊராட்சி மன்ற வளாகத்தில் கூடியிருந்த மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களை சந்தித்து அரசின் உதவிகள் குறித்து கேட்டார். பின்பு அங்கு மரக்கன்றுகளை நட்டார்

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    மகளிர் சுயஉதவிகுழு வினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அருகில் உள்ள நூலகம் ரூ 1.19 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது போல் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் உள்ள நூலகங்களை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

    ஆனால் சென்னையில் கடந்த ஆண்டுகளில்மறைந்த திமுக தலைவர் கருணா நிதியால் பல லட்சரூபாய் செலவில் பல்வேறு வகையான அனைத்து நூல்களுடன் அமைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை அதிமுக அரசு கவனிக்கவில்லை.

    அந்த நூலக கட்டடத்தை பல்வேறு முறையில் பயன்படுத்தும் முயற்சியை தடுத்து முதல்வர் ஸ்டாலின் நூலகத்தை மேலும்பொலிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க நூலகமும், அதில் உள்ள பயன் தரும் நூல்களும் ஆகும். அப்படிபட்ட நூலகங்களை பாதுகாப்பதில் அரசு மட்டும்போதாது.

    பொதும க்களின் ஒத்துழைப்பும் தேவை. நூலகத்துட்டு தேவையான புத்தங்களை பொதுமக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் வழங்கி பாதுகாக்க வேண்டும்.அப்படி சிறப்பாக பாதுகாக்கப்பட்டு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது.
    • எதிர்த்து யாரும் போட்டியிடாததால், வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி விஜய் தேர்வானார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில்விஜய் (வயது 34) என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி விஜய் தேர்வானார்.

    • இடைத்தேர்தலில் 2பேர் போட்டியிட்டனர்.
    • பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் பிரேமா 642 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் 2பேர் போட்டியிட்டனர். பிரேமாபூட்டு சாவி சின்னத்திலும் , பரிமளா ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர்.

    இதில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட பிரேமா 642 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட பரிமளா 144 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 

    • அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக் மற்றும்பிளாடிக் கப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கு மாறு பேரணியில் வலியுறு த்தப்பட்டது.
    • பேரணி ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே தொடங்கி முக்கிய, தெரு க்கள் வீதிகள் வழியாக சென்று அரசு தொடக்கப்பள்ளிவரை சென்று நிறைவுற்றது.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், இரும்புதலை ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி பேரணியை தொடங்கி வைத்தார்.

    அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக் மற்றும்பிளாடிக் கப்பு களை பயன்படுத்துவதை தவிர்க்கு மாறு பேரணியில் வலியுறு த்தப்பட்டது.

    பேரணி ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே தொடங்கி முக்கிய, தெரு க்கள் வீதிகள் வழியாக சென்று அரசு தொடக்கப்பள்ளிவரை சென்று நிறைவுற்றது. இதில் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.ரமா பிரபா.உதவி ஆசிரியர்கள் நிர்மலா, லெட்சுமணன், ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு மற்றும் ஊரா ட்சி பணியாளர்கள், மாண வர்கள், கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதி கேட்டோம். ஆனால் பொதுமக்களை அனுமதிக்கவில்லை
    • கூட்டம் முடிந்ததும் சந்திப்பதாகவும் அதுவரை வெளியில் காத்து இருக்கும் படியும் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள தளி ஊராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் வெ. உதயகுமார் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கல்பனா மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் திருமூர்த்தி மலை அருகே உள்ள இலங்கைத்தமிழர்கள் முகாமிற்கு ரூ. 4 லட்சம் செலவில் 10.000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைப்பது உட்பட மே மாதத்திற்கான தொழில், சொத்து ,குடிநீர் வரி வசூல் விவரங்கள் உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தின் போது தளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மன்றக் கூட்டத்தை பார்வையாளர் பகுதியில் இருந்து காண வந்தனர். இதற்கு மன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர் அதனால் அவர்கள் கூட்ட அரங்கிற்கு வெளியே அமர்ந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, மன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதி கேட்டோம். ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து செயல் அலுவலர் கல்பனாவிடம் கேட்டபோது, மன்ற கூட்டம் நடைபெறும் போது பொதுமக்கள் வந்து பார்வையாளர் பகுதியில் அமர முற்பட்டனர். அப்போது சில கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக வந்ததாக தெரிவித்தனர். எனவே கூட்டம் முடிந்ததும் சந்திப்பதாகவும் அதுவரை வெளியில் காத்து இருக்கும் படியும் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. அதன்படி கூட்டம் முடிந்ததும் அவர்களை அழைத்து கோரிக்கை விபரம் கேட்கப்பட்டது என்றார்.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை செயல்படுத்த இ டெண்டர் முறையினை கைவிட்டு அந்தந்த ஊராட்சி மூலமே செயல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும்.
    • வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து கண்காணிக்கும் பொருட்டு ஏற்படும் இடர்பாடுகளை அறிந்து அம்முடிவை கைவிட வேண்டும்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலத்தில் பாபநாசம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் கூட்டமைப்பு தலைவர் திருமண்டங்குடி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கூட்டமைப்பு செயலாளர் கோவிந்தன்நாட்டு சேரி ஜெயசங்கர் வரவேற்றார். மாவட்ட கூட்டமைப்பு தலைவர் பாஸ்கர், மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கூட்டமைப்பின் மாநில தலைவர் முனியாண்டி கலந்துகொண்டு சிறப்புரை–யாற்றினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊராட்சிக்கு வரவேண்டிய மாநில நிதிக்குழு மானிய நிதியை மாதம் தவறாமல் விடுவிக்க வேண்டுமெனவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளையும், தோல்வியுற்ற நபர்களையும் இணைத்து வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து கண்காணிக்கும் பொருட்டு ஏற்படும் இடர்பாடுகளை அறிந்து அம்முடிவை கைவிட வேண்டும் எனவும்,

    அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை செயல்படுத்த இ டெண்டர் முறையினை கைவிட்டு அந்தந்த ஊராட்சி மூலமே செயல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும் எனவும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பஞ்சாயத்துராஜ் அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டுமெனவும், பஞ்சாயத்தில் ஈ.பி. கணக்கில் மிகையாக தொகை உள்ள ஊராட்சிகளில் கூடுதல் தொகையை முதல் கணக்கிற்கு நிதி மாற்றம் செய்ய வேண்டுமெனவும்,

    ஒவ்வொரு ஊராட்சியிலும் கூடுதல் தூய்மை காவலர்கள், கூடுதல் ஒ.எச்.டி. இயக்குனர்களை ஊராட்சிகளின் தேவைக்கேற்ப நியமனம் செய்ய வேண்டும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை அடுத்த நிதியாண்டு இறுதிக்குள் அனைத்து ஊராட்சிகளுக்கும் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு துணைச் செயலாளர் நாசர், துணைத்தலைவர்கள் ராஜ்குமார், விஜய் பிரசாத், உள்பட 34 ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    • வீரமணி தலைமையா சிரியர் வடகரை ஆலத்தூர் சிறப்புரை நிகழ்த்தினார்.
    • மாணவி காணொளி காட்சியின் மூலம் நடத்திய வினாடி -வினா போட்டியில் மாவட்ட அளவில்முதலிடம் பெற்றதனால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

    அதில் சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய கவுன்சிலர் அன்பரசன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சாந்தி தேவராஜன், ஊராட்சி மன்ற தலைவி பாக்கியலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருண், ஊராட்சி மன்ற துணை தலைவர் அண்ணாதுரை, வட்டார கல்வி அலுவலர்கள் (பொ) ஜெயலட்சுமி, தாமோதரன், தலைமையாசிரியை ஜெயசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வீரமணி தலைமையா சிரியர் வடகரை ஆலத்தூர் சிறப்புரை நிகழ்த்தினார். இந்த பள்ளியில் பயிலும் மாணவி காணொளி காட்சியின் மூலம் நடத்திய வினாடி -வினா போட்டியில் மாவட்ட அளவில்முதலிடம் பெற்றதனால்அவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது.

    • கூத்தம்பூண்டி ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • தெருக்களில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை போட வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி ஊராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் பயன்படுத்தி வரும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து குப்பைகளை போடுவதற்காக சிவப்பு மற்றும் பச்சை நிற சிறிய குப்பைத் தொட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

    காய்கறி கழிவுகள், தேங்காய் நாறு, சிரட்டை ஓடுகள் இவையெல்லாம் மக்கும் குப்பைகள் எனவும், இதனை ஒரு குப்பைத்தொட்டியிலும், பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், கேரிபேக்ஸ் போன்றவைகளை மக்காத குப்பைகள் எனவும் அந்த குப்பைகளை மற்றொரு குப்பைத் தொட்டியில் போட வேண்டும் எனவும், தெருக்களில் அந்த குப்பைகளை போட வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கூத்தம்பூண்டி ஊராட்சி தலைவர் பாவாயம்மாள் ராமசாமி, ஊராட்சி செயலாளர் சந்திரன் மற்றும் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×