என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்த்திருவிழா"
- திருப்பூர் விஸ்–வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்தி–ருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- கோவில்களில் வருடந்தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும்.
திருப்பூர்:
திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்–திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பூர் அரிசி கடை வீதியில் பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளது. கோவில்களில் வருடந்தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா வருகிற ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வருகிற 2-ந் தேதி விஸ்வேஸ்வர சாமி தேரும், 3-ந் தேதி வீரராகவப் பெருமாள் தேரும் இழுக்கப்படுகிறது. தேர்த்திருவிழாவிற்கான கொடியேற்று விழா நேற்று கோவிலில் நடைபெற்றது. முதலாவதாக விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்த கொடியேற்று விழாவில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் நமச்சிவாய கோஷத்துடன் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வீரராகவப் பெருமாள் கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது.
- தேர்த்திருவிழா ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
- செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு பூஜையும், கிராம சாந்தியும் நடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் விஸ்வேஸ்வர சாமி, வீரராகவப் பெருமாள் கோவில்களின் வைகாசி விசாக தேர்த்திருவிழா வருடந்தோறும் கோலாகமாக நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த வருடம் தேர்த்திருவிழா ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்காக கோவிலில் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. 2 தேர்களிலும் சாரம் கட்டப்பட்டுள்ளது. இன்று காலை மகுடபூஜையுடன் தேரை அலங்கரிக்கும் பணியும், செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு பூஜையும், கிராம சாந்தியும் நடக்கிறது. இந்த வருடம் தேர்களுக்கு புதிய வடக்கயிறுகளும், துணிகளும் அமைக்கப்படுகிறது. 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்குகிறது.
அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மண்டப கட்டளை பூஜைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் இருவேளையும் (ரிஷபம், பூதம், ஆதிசேஷன், கற்ப விருட்சம், காமதேனு, அதிகாரநந்தி, குதிரை, சிம்மம், யானை, கைலாசம், கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில்) திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தோ்த்திருவிழாவையொட்டி தினமும் கலைநிகழ்ச்சிகளும், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. தோ்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.
- தேர்த்திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பக்தர்கள் அலகுகுத்தி அக்னி சட்டி எடுத்து பூங்கரகம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி அம்மன் தேருக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
அப்போது அம்மனுக்கு பூச்சாட்டுதல், அபிஷேகம்-அலங்காரம், மாவிளக்கு பூஜை மற்றும் கரக ஊர்வலம் ஆகியவை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து. பக்தர்கள் அலகுகுத்தி அக்னி சட்டி எடுத்து பூங்கரகம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோத்தகிரி முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் குமரவேல், இளங்கோ, ராமமூர்த்தி, முத்துசாமி, ராமசாமி, அமிர்தலிங்கம், சுப்பிரமணி, பாலு ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
- கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 28-ந் தேதி மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கலில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழாவையொட்டி கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, கம்பம் நடும் நிகழ்ச்சி, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை யாகசாலை ஆரம்பம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தன.
இதில் பொள்ளாச்சி கோவை, கிணத்துக்கடவு வட்டார பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) முதல் 23-ந் தேதி வரை மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி மாவிளக்கு எடுத்து வருதல் பொங்கல் விழாவும் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தொடங்கி வைக்கின்றனர். 26-ந் தேதி 2-ம் நாள் தேர் திருவிழாவும், 27-ந் தேதி 3-ம் நாள் தேர் திருவிழாவும் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து 28-ந் தேதி மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
- பென்னக்கோணம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது
- திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள பென்னக்கோணம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, மகா மாரியம்மன், செல்லியம்மன், அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் மலர் அலங்காரத்துடன் தினமும் சாமி வீதியுலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
அதன் பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகா மாரியம்மன் தேரோட்டம், மேள, தாளங்கள் மற்றும் வாண வேடிக்கையுடன் நடைபெற்றது.கீழக்குடிக்காடு, கழனிவாசல், பெருமத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவச கோஷத்துடன், தேரின் வடம் பிடித்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
- தேர் இழுத்தல் நிகழ்ச்சி மங்கள வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க வெகுவிமர்சியாக நடைபெற்றது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், அதகப்பாடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிற்கான திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது, 3-ம் தேதி சாமி ஜம்பு நிகழ்ச்சியும், 4-ம் தேதி தீமிதித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து கரக வேடிக்கை நிகழ்ச்சி மற்றும் செல்லியம்மன் பட்டாளம்மன் அழைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 9-ம் தேதி விநாயகர் தேர் இழுத்தல் நிகழ்ச்சியும், 10-ம் தேதி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் தேர் இழுத்தல் நிகழ்ச்சி மங்கள வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க வெகுவிமர்சியாக நடைபெற்றது. இதில் அதகப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று பந்தகாசி நிகழ்ச்சியோடு கோவில் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்தனர்.
- வைகாசி விசாகத்தே ர்த்திருவிழா, ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்க உள்ளது.
- தேர் அலங்கார துணிகளை மாற்றுவது என பல்வேறு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாகத்தே ர்த்திருவிழா, ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்க உள்ளது. அதற்காக தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன், தேர்த்திருவிழா துவங்குகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மையப்ப ரும், ஸ்ரீவீரராகவப் பெருமாளும், தேர்வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து ஜூன் 2-ந் தேதி ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமிகோவில் தேரோட்டமும், 3-ந் தேதி ஸ்ரீவீரராகவப்பெருமாள் தேரோட்டமும் நடக்க உள்ளது.
தேர்த்திருவிழா ஏற்பாடுகள்குறித்த ஆலோசனைகூட்டம் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்தது. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.,செல்வராஜ் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் சரவணபவன், விழாஏற்பாடுகள் குறித்து விவரித்தார். பல்வேறு அமைப்பினரும், தேர்த்திருவிழா ஏற்பாடு குறித்துபேசினர்.கலை நிகழ்ச்சிஏற்பாடு, தேர்களுக்குபுதிதாக வடக்கயிறு வாங்குவது, தேர் அலங்கார துணிகளை மாற்றுவது என பல்வேறு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை திருத்தேர்பவனி தொடங்கியது.
- பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி வீதிகளில் வலம் வந்ததை ஏராளமான கிறிஸ்தவர்கள் கண்டு வழிபட்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஅள்ளி, பூலாப்பட்டியில் மிகவும் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி தமிழ்நாடு சமூக சேவை சங்க இயக்குனர் ஜேசுதாஸ் மற்றும் கிறிஸ்து பாளையம், தூய ஜான் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லூர்துசாமி ஆகியோர் கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைத்தனர்.
கடந்த 8-ம் தேதி திங்கட்கிழமை ஆரோக்கியதாஸ் திருச்செங்கோடு நவநாள் திருப்பலி தொடங்கி வைத்தார்.
தருமபுரி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் லாரன்ஸ் பையஸ் தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை திருத்தேர்பவனி தொடங்கியது. இதில் வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித செபஸ்தியார் எழுந்தருளினார்.
பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி வீதிகளில் வலம் வந்ததை ஏராளமான கிறிஸ்தவர்கள் கண்டு வழிபட்டனர். வான வேடிக்கையுடன் நடைபெற்ற இந்த தேர் பவணியில் பூலாப்பட்டி பங்குதந்தை பாதிரியார் புஷ்பராஜ் மற்றும் ஏராளமான மக்களும் கலந்து கொண்டார்கள். விழாவை முன்னிட்டு புனித செபஸ்தியார் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
- சின்ன கிருஷ்ணாபுரம் எல்லையில், பிரசித்தி பெற்ற புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
- இக்கோவி லில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி இறுதி வாரத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி கொட்டவாடி பிரிவு சாலை அருகே சின்ன கிருஷ்ணாபுரம் எல்லையில், பிரசித்தி பெற்ற புதுப்பட்டி மாரி யம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவி லில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி இறுதி வாரத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு தேர்த்திரு விழாவை யொட்டி கடந்த 2 நாட்களாக ஊர் மக்கள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. பிரமாண்டமான மரத்தேர் கலைநயமிக்க வண்ண சேலைகளால் அலங்க ரிக்கப்பட்டு, நேற்று மாலை, கோயில் வளாகத்தில் இருந்து முதல்நாள் தேரோட்டம் நடைபெற்றது.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். மீண்டும் இன்று மாலை கோயிலை சுற்றி திருத்தேர் பவனி வந்து நிலை நிறுத்தப்படும்.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், தங்கள் வேண்டு தல் நிறைவேற்றிய அம்ம னுக்கு, உடலில் அலகு குத்தி யும், பூங்கரகம், அக்னிகரகம் எடுத்தும், உருளதண்டம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது- வருகிற 18-ந்தேதி தேரோட்டம்
- இன்று காலை 7.20 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார்.
மண்ணச்சநல்லூர்,
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். ஆண்டின் அனைத்து நாட்களிலும் இங்கு உள் ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.இக்கோவிலில், ஒவ் வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர்த்தி–ருவிழா இன்று கொடயேற்றத்துடன் தொடங்கி–யது.
இதை–யொட்டி இன்று காலை 7.20 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார்.பின்னர் 7.41 மணிக்கு கொடியேற்றம் நடைபெற் றது. கோவில் குருக்கள் கொடிமரத்தில் அம்மன் படம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். மேலும் தினமும் இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன , ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், மரகுதிரை வாகனம் உள்ளிட்ட பல் வேறு வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்க–ளுக்கு காட்சி தருகி–றார்.வருகிற 17-ந்தேதி அம் மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வழிநடை கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந்தேதி (செவ் வாய்க்கிழமை) நடைபெறு–கிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளுகிறார்.அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித் தல் நிகழ்ச்சி நடைபெறு–கிறது. இதில் லட்சக்கணக் கான பக்தர்கள் கலந்து–கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளி காம–தேனு வாகனத்தில் புறப்பாடா–கிறார். 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப் பாடாகிறார்.
21-ந்தேதி மாலை அம்மனுக்கு அபி–ஷேகமும், இரவு 8 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப–உற்சவ தீபாரா–தனையும் நடைபெறுகிறது.25-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்திலும் புறப்பாடாகிறார். விழா–விற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணிகாரர் பழனி–வேல் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
- குதிரை வாகனத்தில் சாமி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கோபி,
கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்து வருகிறது. முன்னதாக கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 30-ந் தேதி காலை 10 மணியளவில் கோவிலுக்கு முன்புள்ள கொடி மரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது. 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள், சாமி தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணி அளவில் திருப்படி பூஜை விழாவும் நடைபெற்றது.
காலை 9மணி அளவில் சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி இன்றுமாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.
இதை யொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை கோயில் அடிவாரத்தில் அன்னதானம் நடைபெறுகிறது.
நாளை 6-ந் தேதி தேதி மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வலம்வருதல்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாலை 6.30 மணி அளவில் வள்ளி தெய்வானை உடன் சண்முக பெருமான் மலர் பல்லக்கில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- கொண்டத்து காளியம்மன் கோவிலில் வருகிற 4-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
- பக்தர்களுக்கு தடுப்பு கட்டைகள், கழிவறைகள், குடிநீர் வசதி, தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பெருமாநல்லூர் :
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் வருகிற 4-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. குண்டம் இறங்குவதற்கு அவினாசி, குன்னத்தூர், ஊத்துக்குளி, திருப்பூர் மாநகர பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிய உள்ளனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு தடுப்பு கட்டைகள், 30-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள், பக்தர்களுக்கு குடிநீர் வசதி ,வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு, தங்கும் வசதி, சிறப்பு பஸ்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு சசாங் சாய் கோவிலுக்கு வருகை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பவுல்ராஜ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் பக்தர்கள் கூட்டத்தில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 4 கண்காணிப்பு கோபுரம், 5 பகுதிகளில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் அவினாசி தீயணைப்புத்துறையினரும் ஈடுபட உள்ளனர். ஆய்வின் போது பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, கோவில் செயல் அலுவலர் காளிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்