என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழாய்"
- ரூ.6லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் குடிநீர் விரிவாக்கப் பணி.
- குடிநீர் குழாய் விரிவாக்கப் பணி துவக்க விழா நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி 15வது வார்டு மேற்கு பல்லடம் கருப்பாண்டி வீதி, பழனியப்பா வீதி, எஸ்.வி.கிளினிக் வீதி, கொசவம்பாளையம் சாலை, கிருஷ்ணப்பா வீதி, ராமசாமி ஆகிய வீதியில் ரூ.6லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் குடிநீர் பகிர்மான குழாய் அமைத்து விரிவாக்கப் பணி துவக்க விழா நடைபெற்றது.
இந்த பணியை நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் துவக்கி வைத்தார். இதில் நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு, பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, நகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, நகர தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், குட்டி பழனிசாமி,சேகர்,அன்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 48 பேர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணம்:
கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது. துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 48 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் அய்யப்பன் பேசுகையில், தனது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அடைப்பை சரிசெய்ய வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. கவுன்சிலர் பத்மகுமரேசன் பேசுகை யில், தாராசுரம்பகுதி கும்பகோணம்மாநகரா ட்சியால் புறக்கணிக்க ப்படுகிறது என்றே நினைக்க தோன்றுகிறது. தாராசுரம் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. கவுன்சிலர் ஆதிலட்சுமி பேசுகையில், கூட்டத்தில் முக்கியமான பொருளை விவாதத்திற்கு கொண்டு வந்துள்ள போது அது குறித்து விவாதிக்காமல் கூட்டத்தை முடித்து தீர்மானங்களை நிறைவேற்றுவது கண்டிக்க த்தக்கது என்றார்.
இதேபோல, கவுன்சி லர்கள் பலர் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். கூட்டத்தில் நகர் நல அலுவலர் பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அம்ரூத் திட்டத்தில், 4வது குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இடைப்பட்ட பகுதியில் குழி தோண்டி உடனுக்குடன் குழாய் பதிக்கும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தில், 4வது குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மேல்நிலைத் தொட்டிகளிலிருந்து வார்டு பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யும் வகையில், ரோட்டோரங்களில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் கொங்கு மெயின் ரோடு, அம்பேத்கர் நகர் பகுதியில் இக்குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது.
இதில் இடையில் லட்சுமி நகர் பிரதான ரோடு சந்திப்பு முதல் ரெயில்வே கேட் வரை சில மீட்டர் தூரத்துக்கு வினியோக குழாய் பதிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த இடைப்பட்ட பகுதியில் குழி தோண்டி உடனுக்குடன் குழாய் பதிக்கும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப் பாலத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் குழாயில் பழுது ஏற்பட்டு ஆங்காங்கே குடிநீர் வெளியேறி பாலத்தின் மீது பீச்சி அடித்து வருகிறது.
- குடிநீர் குழாய் உடைப்பால் பொதுமக்கள் பாதிப்பு.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கிணறு அமைத்து மின் மோட்டார் வைத்து அங்கிருந்து இந்தப் பாலத்தின்மேல் ஓரமாக குடிநீர் குழாய் அமைத்து பரமத்திவேலூர் பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டுவருகிறது.
குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு ஆங்காங்கே குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் வெளியேறி பாலத்தின் மீது பீச்சி அடித்து வருகிறது.
இதனால் பாலத்தின் ஓரத்தில் நெடுகிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகனங்கள் தண்ணீரில் பட்டு நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது.
எனவே துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி குடி நீர் வெளியேறாமல் தடுத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி 6மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது
- ஒரு வேலையை சரியாக முடித்துவிட்டு அடுத்த வேலையை தொடங்க வேண்டும்.
வீரபாண்டி :
திருப்பூர் சுண்டமேட்டிலிருந்து முருகாம்பாளையம் வழியாக காதுகேளாதோர் பள்ளி வரை சாலையின் இடதுபுறமாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. தோண்டிய குழி சரிவர மூடப்படாத நிலையில் சாலையின் வலது புறமாக கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி 6மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் பணி முடியவில்லை. சாலையின் ஒரு பக்கம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி சரியாக மூடப்படவில்லை. சாலையின் இருபக்கமும் குழி தோண்டியதால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் உயிரை கையில் பிடித்துகொண்டு செல்கின்றார்கள். மேலும் இரவு நேரத்தில் தினந்தோறும் விபத்து ஏற்படுகின்றன. எனவே ஒரு வேலையை சரியாக முடித்துவிட்டு அடுத்த வேலையை தொடங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இந்தியாவின் பெருநகரங்களில் செயல்பாட்டில் உள்ள வீட்டிற்கு வீடு குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டம் நாகை மாவட்டத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
- நாகை மாவட்டம் முழுவதும் வீட்டிற்கு வீடு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும்.
நாகப்பட்டினம்:
உலக நாடுகள் மட்டு மில்லாமல், மும்பை, டில்லி உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் செயல்பாட்டில் உள்ள வீட்டிற்கு வீடு குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டம் நாகை மாவட்டத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. திருமருகலை அடுத்த சீயாத்தமங்கை கிராமத்தில், தமிழகத்திலேயே முதல் முதலாக 14 வீடுகளில் குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டத்தை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
டோரண்ட் கேஸ் நிறுவனம் சார்பாக தொடங்கப்பட்டுள்ள குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டத்தில் இதுவரை 65 இல்லத்தரசிகள் பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் முழுவதும் வீட்டிற்கு வீடு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
சீயாத்தமங்கை கிராமத்தில் மிகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு சேமிப்பு நிலையத்தில் இருந்து, 17 கிலோ தூரம் பூமி வழியாக 1 முதல் ஒன்றரை அடி ஆழத்தில் குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. வீட்டிற்கு வீடு மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைப்பது போல எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டு, சமையலறைக்கு நேரடியாக எரிவாயு கொடுக்கப்பட்டுள்ளது.
எல்.பி.ஜி. சிலிண்டரை விட பாதுகாப்பானதாக இருக்கும். கேஸ் தீரும் அச்சம், புக் செய்ய வேண்டியதில்லை, 24 மணி நேரமும் தடையில்லா கேஸ் விநியோகம் என பல அம்சங்களை கொண்ட திட்டத்தில், செலவீனமும் சிக்கனமாகும். குழாய் மூலம் வழங்கப்படும் எரிவாயுவில், 1 கொள்ளளவு ரூ.45 வீதம் ரூ.805 மட்டுமே செலவாகும். மின்சார கட்டணம் போல இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இணைய வழியிலேயே எரிவாயு கட்டணம் செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நுகர்வோர் அலைய வேண்டிய அவசியமில்லை.
கெயில் நிறுவனத்தில் இருந்து, இறக்குமதி செய்யப்படும், சமையல் எரிவாயுவானது குழாய்கள் மூலம் பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு வீடு கொண்டு வருவதை கண்காணிக்க 24 மணிநேரமும் தொழில்நுட்ப கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது. நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 1 லட்சத்து, 60 ஆயிரம் இணைப்புகள் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று டோரண்ட் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- மேலூர் அருகே கீழையூரில் குழாய் உடைந்து காவிரி கூட்டுக் குடிநீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
- திருப்பத்தூர் மெயின் ரோட்டில் காவிரி கூட்டுகுடிநீர் குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழையூர் சுந்தரி அம்மன்கோயில் முன்பாக திருப்பத்தூர் மெயின் ரோட்டில் காவிரி கூட்டுகுடிநீர் குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் அந்த குழாயில் இருந்து உடைந்து இன்று காலையில் திடீரென தண்ணீர் வீணாக வெளியேறி அங்குள்ள நிலத்தில் பாய்க்கின்றது.
இதேபோல் மேலூர் நகர மற்றும் கிராம பகுதியிலும் அடிக்கடி பல இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைவதும் தண்ணீர் வீணாக வெளியேறும் வாடிக்கையாக உள்ளது.
தண்ணீருக்காக பொது மக்கள் சிரமம் அடையும் வேளையில் இது போன்று பல லட்சம் லிட்டர் வீணாகி வெளியேறுவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரி விக்கின்றனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 ஆண்டுகளில் 41 ஆயிரத்து 311 வீடுகளுக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ராமநாதபுரம்
தமிழ்நாட்டில் குழாய் நெட்வொர்க் உள்கட்டமைப்பு மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு இயற்கை எரிவாயுவை எளிதாக வழங்க ஏ.ஜி. அண்ட் பி. பிரதாம் திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த நிதியாண்டில் பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடியில் 3 துணை பூஸ்டர் எரிவாயு நிலையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் கீழக்கரையில் இரும்பு குழாய் பதிக்கும் பணியை எரிவாயு தேவை அதிகரித்து வருவதால் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடி உள்பட பல்வேறு இடங்களில் மேலும் நிலையங்களை தொடங்க இலக்கு வைத்துள்ளது.
24 மணி நேர இயற்கை எரிவாயு விநியோகத்தை ராமநாதபுரம், பட்டணம்காத்தான், ராமேசுவரம் பகுதிகளில் எரிவாயு கட்டங்களை நிறுவி மார்ச் 2023-க்குள் 15 ஆயிரம் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு என்ற இலக்குடன் உள்கட்டமைப்பு பணிகளில் செயல்படுகிறது.
இந்த விரிவான திட்டத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும். பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடி ஆகிய பகுதிகளில் இந்த நிதியாண்டில் 3 துணை பூஸ்டர் நிரப்பும் நிலையங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன.
பட்டினம்காத்தான், சக்கரக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் நடுத்தர அடர்த்தி பாலி எத்திலீன் நெட்வொர்க்குகள் மூலம் இந்த பகுதிகளில் பி.என்.ஜி. சேவையை தொடங்க உள்ளன. அடுத்த 7 ஆண்டுகளில் 11 எரிவாயு நிரப்பு நிலையங்களை தொடங்குவதன் மூலம் 41 ஆயிரத்து 311 வீடுகளுக்கு பி.என்.ஜி. விநியோகத்தை உறுதி செய்யும் என ஏ.ஜி. அண்ட் பி.பிரதாம் மண்டலத் தலைவர் பூமாரி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்