search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229948"

    • வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டைக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்தது.
    • இதனை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி 2-வது வார்டு குலசேகரன் கோட்டைக்கு திண்டுக்கல்- மதுரை நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி நகர்புற சாலையில் இருந்து 1½ கிலோமீட்டர் தூரம் ராமநாயக்கன்பட்டி, பொன்மலை பொன் பெருமாள் கோவில், பத்திரப்பதிவு அலுவலகம், பெருமாள் கண்மாய் வழியாக செல்ல வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலை யை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

    இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படியும், அமைச்சர் மூர்த்தி ஆலோசனையின்படியும் தற்போது நபார்டு வங்கி 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை விழா நடந்தது. இந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதவி பொறியாளர் கருப்பையா வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தார் சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி மோகன், ஜெயகாந்தன், திருப்பணி குழு தலைவர் ஏடு.ராதா கிருஷ்ணன், முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா, பிரகாஷ், பிரபு, அரவிந்தன், முரளி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சில நாட்களுக்கு முன்பு கஞ்சங்கொள்ளையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார்.
    • சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த அணைக்கரை விநாயகன் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 40). விவசாய கூலி தொழிலாளி.

    இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.

    இவர் சில நாட்களுக்கு முன்பு கஞ்சங்கொள்ளையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார்.

    இந்நிலையில், திடீரென இன்று காலை அவரது வீடு மளமளவென தீப்பிடித்து எரிந்தது.

    இதனை கண்ட கிராமமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள் மற்றும் தளவாட சாமான்கள் என சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குபதிவு செய்து கூரை வீட்டில் தீ வைத்தது யார்? எப்படி தீ பிடித்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜே.சி.பி. வாகனம் எரிந்து சேதம்
    • கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள அடைக்கலபுரத்தைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 39). ஜே.சி.பி. வாகனத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். கலிங்கப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் இவரது ஜே.சி.பி. வாகனத்தின் ஆப்பரேட்டராக உள்ளார். சம்பவத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள மூக்கரநத்தம் பகுதியில் உள்ள செந்தட்டிக் காளை என்பவருக்கு சொந்தமான வயல் காட்டில் ஜே.சி.பி. உதவியுடன் முள் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் கருப்பசாமி ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு மேட்டில் சென்றபோது ஜே.சி.பி. வாகனம் பழுதாகி நின்று விட்டது. இதையடுத்து மெக்கானிக்கை அழைத்து வருவதற்காக கருப்பசாமி சென்றார்.

    அப்போது அருகே உள்ள சோளக்காட்டில் வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் காற்றின் வேகத்தில் தீ பரவி ஜே.சி.பி. வாகனத்தில் தீப்பிடித்தது. அந்த வழியாக வந்தவர்கள் அதனைப் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் மற்றும் வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து இரண்டு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் ஜே.சி.பி. வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஜே.சி.பி. வாகனம் முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து மாரிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சைக்கிளில் இந்த வழியாக செல்கின்றனர்.
    • சாலையில் முன்பகுதி சேதம் அடைந்து உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் ரெயில்வே கீழ் பாலத்தில் உள்ள சுரங்கப்பாதை சாலை பூக்கார தெருவுக்கு எளிதாக செல்லலாம். இதன் வழியாக சைக்கிள், மோட்டார் சைக்கிள், சிறிய ரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.

    சாந்த பிள்ளை கேட்டில் இருந்து மேரிஸ் கார்னர் வழியாக பூக்கார தெருவுக்கு செல்லும்போது கிலோமீட்டர் சற்று அதிகரிக்கும். ஆனால் இந்த ரெயில்வே கீழ் பாலம் வழியாக செல்லும்போது கிலோமீட்டர் குறையும்.

    இதனால் இந்த சாலை வழியாக தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் சைக்கிளில் இந்த வழியாக செல்கின்றனர்.ஆனால் சாந்தபிள்ளை கேட்டியிலிருந்து செல்லும் சாலையில் முன்பகுதி சேதம் அடைந்து உள்ளது. இதனால் இந்த வழியை கடக்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

    சில நேரங்களில் தடுமாறி விபத்தை சந்திக்கின்றனர். பள்ளி மாணவர்களும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே ரயில்வே கீழ்பாலம் சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் 10 ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்திருந்தார்.
    • தீ வைக்கப்பட்ட 10 ஏக்கர் கரும்பு வயல் முற்றிலும் எரிந்து சேதமானது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் 10 ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்திருந்தார். இவரைப் போலவே அருகில் உள்ள விவசாயிகள் பலரும் கரும்பு பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பையாவின் கரும்புஇன்னும் சில தினங்களில் அறுவடை செய்யவுள்ள நிலையில் அவரது கரும்பு வயலை அப்பகுதியை சேர்ந்தசிலர் முன்விரோதம் காரணமாக தீ வைத்ததாக கருப்பையா தெரிவித்து வருகிறார்.  தீ வைக்கப்பட்ட 10 ஏக்கர் கரும்பு வயல் முற்றிலும் எரிந்து சேதமானது.

                                                                                                           மேலும் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வைத்திருந்த நீர்மூழ்கி மோட்டார் மற்றும் போர்வெல்லும் சேர்ந்து தீயில் சேதம் ஆனது. இதனால்   20 லட்சம் ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. கரும்பு வயல் தீ விபத்தில் எரிந்து சேதமான நிலையில் இதுகுறித்து கரும்பு வயலைஅதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர்.மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் புகாரின் அடிப்படையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். கரும்பு வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பும்போது தீயில் எரிந்த கரும்புவிற்கு அதிகாரிகள் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனுமதி அளித்து கரும்புவைஎடுத்துக் கொண்டு முழு விலை தர வேண்டும் எனவும் கருப்பையா தெரிவித்துள்ளார். 

    • கூத்தையன் மனைவி பழனியம்மாள். இவரின் வீடு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது .
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த கூத்தையன் மனைவி பழனியம்மாள். இவரின் வீடு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது

    இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

    • . சதீஷ் என்பவர், இதே பகுதியில் 3ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் காராமணி பயிர் சாகுபடி செய்து இருந்தார்.மறுநாள் காலையில் சென்று பார்த்த போது அங்கு வைத்திருந்த காராமணி பயிர்கள் தீயில் கருகி இருந்தது.
    • யாரோ மர்ம நபர்கள் காராமணி பயிருக்கு தீ வைத்தது தெரிய வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அ ட ச ல் கிராமத்தில் பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் சதீஷ்இவர் இதே பகுதியில் 3ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் காராமணி பயிர் சாகுபடி செய்து இருந்தார். இந்த காரமணி பயிரை அறுவடை செய்து அதை எந்திரம் மூலம் அடிப்பதற்காக டிராக்டரை கொண்டு வந்து அடித்துக் கொண்டிருக்கும் போது சிறிது நேரம் ஓடிய பின் டிராக்டர் பழுதானது .மறுநாள் காலையில் சென்று பார்த்த போது அங்கு வைத்திருந்த காராமணி பயிர்கள் தீயில் கருகி இருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் காராமணி பயிருக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதனால் சதீஷ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தீ வைத்து எரிக்கப்பட்ட காராமணி பயிரின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும் .இது குறித்து சதிஷ் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் அன்பரசு சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
    • காட்டு யானைகள் மீண்டும் நெல் வயல்களை சேதப்படுத்தி சென்றுள்ளன.

    தென்காசி:

    தென்காசி அருகே திரவியநகர், மத்தளம்பாறை உள்ளிட்ட கிராமங்களை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் அந்த பகுதிகளில் நெல் நடவு செய்யப்பட்டு நெற்கதிரில் பால் பிடிக்கும் நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து காட்டு யானைகள் கீழே இறங்கி வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    தற்போது மீண்டும் காட்டு யானைகள் நெல் வயல்களில் இறங்கி சேதப்படுத்தி சென்றுள்ளன. மேலும் அருகில் இருந்த வயல்களில் உள்ள வாழை மற்றும் தென்னை மரங்களையும் பிடுங்கி எரிந்து சேதப்படுத்தி உள்ளன.

    இதனால் விவசாயி கள் இரவில் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். காட்டு யானைகளை வெடி களை வெடிக்க செய்து விவசாயிகள் விரட்டினாலும் அவை தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே எகால் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து வீட்டில் இருந்த மாரிமுத்து மகன் குமார் அலறியடித்து க்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கூரை வீட்டின் மீது தண்ணீரை ஊற்றியும், கூரை வேயப்பட்ட சோகயை பிடுங்கி எரிந்தும் தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த நெல் மூட்டைகள், துணி, மின்சாதன பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் உளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    • கடம்பவிளாகம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.
    • வேதாரண்யம், வடபாதி, எக்கல், கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட குன்னலூர் ஊராட்சியில், குடிசை தீவில் இருந்து எக்கல், கடம்பவிளாகம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

    இந்த சாலையானது மேலமருதூர் மெயின் சாலையை இணைக்கும் வழித்தடமாக இருப்பதால், விவசாயிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த வழியாக தான் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், வடபாதி, எக்கல், கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி பூமிநாதன் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அறுவடைக்கு தயாரான பல ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.
    • ஈரப்பதம் காயாததால் பல பகுதிகளில் அறுவடை பணி முற்றிலும் பாதிப்பு.

    பாபநாசம்:

    தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையால் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பல ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

    விவசாய நிலங்களில் இன்னும் ஈரப்பதம் காயாததால் பல பகுதிகளில் அறுவடை பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை நடைபெறாததால் தற்போது வைக்கோல் கட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கால்நடை விவசாயிகளுக்கு வைக்கோல் கிடைக்காததால் கரும்பு சோகையை தங்களது மாடுகளுக்கு தீனியாக வழங்கி வருவதாக கால்நடை வளர்ப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • நிவாரணம் வழங்க கோரிக்கை
    • காலம் தவறிய மழையால் பாதிப்பு

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளில் உள்ள பாளையூர் குளவாய்ப்பட்டி. மணியம்பலம். கத்தக்குறிச்சி. களங்குடி. வல்லத்தி. ராக்கோட்டை. திருவரங்குளம். பெரியநாயகிபுரம். வம்பன். கொத்த கோட்டை. தெட்சிணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் காலம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மாவட்ட வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் தமிழக அரசு நிவாரணத்தை விரைந்து வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×