search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229948"

    • ஏராளமான கால்நடைகள் வந்து வயல்களில் சுற்றித்திரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
    • கால்நடைகளை பிடித்து கால்நடை பட்டியில் அடைக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மேலும் நேரடி சம்பா விதைப்பு நடைபெறுகிறது. தற்சமயம், சாகுபடி நிலங்களில் ஏராளமான கால்நடைகள் வந்து வயல்களில் சுற்றித் திரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

    மேலும் நகர் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை வைக்கும் போது அதை தின்று சேதப்படுத்துகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, கால்நடைகளை பிடித்து கால்நடை பட்டியில் அடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வன விலங்குகளால் மக்காசோள பயிர்கள் சேதமடைந்ததற்காக நிவாரணம் வழங்குமாறு ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் அதிக அளவில் இந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    மதுரை

    மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட மக்காச் சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பேரையூர், கல்லுப்பட்டி பகுதியில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் அதிக அளவில் இந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

    இதுகுறித்து தமிழக அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக் கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு ஆயிரக்க ணக்கான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.

    அதேபோன்று தற்போது வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு போர்க்கால அடிப்படையில் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராமப்புற வயல்வெளிகளில் வெட்டுகிளிகள் போல் மயில்கள் கூட்டம், கூட்டமாய் காணப்படுகின்றன.
    • வீடுகளின் மேற்கூரைகளிலும், தென்னை மரங்களிலும் வசிக்க தன் வாழ்வை மாற்றி அமைத்துக்கொண்டது.

    திருவோணம்:

    ஒருகாலத்தில் மயில்களை மலைப்பகுதிகளில் அல்லது வனவிலங்குகள், பறவைகள் சரணாலயத்தில்தான் காணமுடியும். எங்காவது கோயில்களில் அரிதாகக் காணலாம். ஆனால், தற்போது கிராமப்புற வயல்வெளிகளில் வெட்டுகிளிகள்போல் மயில்கள் கூட்டம், கூட்டமாய் காணப்படுகின்றன.

    தஞ்சை மாவட்டம் திருவோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மயில்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது.

    வயல்களில் தாவரங்களை உண்பதாலும் சோளம் கடலை போன்ற தாவரங்களை தன் கால்களால் தாவரத்தை சாய்த்து உண்பதாலும் மற்றும் அறுவடை செய்த தாவரங்களை கூட்டம் கூட்டமாக வந்து உண்பதாலும் வேளாண் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    அதனை துரத்தி விட்டாலும் மீண்டும் மீண்டும் வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    குன்று காடுகளில் பழக்கப்பட்ட மயில்கள் தன்னை மாற்றிக் கொண்டு வயல்வெளிகளில் வாழ பழகி விட்டது.

    வீடுகளின் மேல் கூரைகளிலும் கட்டிடங்களிலும் தென்ன மரங்களிலும் வசிக்க தன் வாழ்வை மாற்றி தகவமைத்துக்கொண்டது.

    ஊர்களின் ஓரங்களில் உள்ள குளங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் அவற்றை சுற்றி அதிக மரங்களை வளர்ப்பதால் மற்றும் சிறு சிறு காடுகள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி சமவெளி பகுதிகளில் காடுகளை வளர்ப்பதாலும் மயில்கள் ஊர்களில் உள்ளே வருவதை நம்மால் தவிர்க்க இயலும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • ஜெயக்குமார் மனைவி தேவகியிடம் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கி அரசின் கான்கிரீட் வீடு கட்டி தருவதாக உறுதியளித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பச்சை பெருமாநல்லூர் ஊராட்சியை சேர்ந்த மத்தளமுடையான் கிராமம் ஜெயக்குமார் என்பவரின் குடிசை வீட்டில் நேற்று மின் வயரிலிருந்து கசிந்த மின்சாரத்தால் தீப்பொறி ஏற்பட்டு கூரையில் பட்டு வீடு எரிந்து சாம்பல் ஆனது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும், வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து சாம்பலாயின.

    இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் தீ விபத்தில் வீட்டை இழந்த ஜெயக்குமார் மனைவி தேவகியிடம் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கி அரசின் கான்கிரீட் வீடு கட்டி தருவதாக உறுதியளித்தனர்.

    தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு நிவாரணம்ஒன்றியக்குழு உறுப்பினர் காமராஜ், தி.மு.க. முன்னாள் ஒன்றியதுணைச் செயலாளர் சம்பத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • மணவாளக்குறிச்சி போலீசில் புகார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே சாத்தன்விளையை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 65). ஐ.ஆர்.இ.எல். மணல் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்த மாக உரப்பனவிளையில் தோட்டம் உள்ளது. தங்கதுரை இந்த தோட்டத்தில் கல்தூண் மற்றும் முள் வேலி அமைத்திருந்தார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த செல்வன், அசோக் என்ற இளங்கோ, செல்வகுமார், தங்கராஜ், சேகர், யுவராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் தோட்டத்தில் உள்ள கல்தூண் மற்றும் முள்வேலியை சேதப்படுத்தினார்கள்.

    இது குறித்து தங்கதுரை மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.போலீசார் முள்வேலியை சேதப்படுத்திய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
    • இதனால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகவும் நேரிடுகிறது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலம் கல்லணை.

    கல்லணையில் காவிரி, கொள்ளிடம், மற்றும் கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளின் பாலங்கள் அமைந்துள்ளன.

    பாலங்களில் உள்ள மதகுகளின் வழியாக காவிரி டெல்டா மாவட்டத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கப்படும்.

    சுற்றுலாத்தலமா கவிளங்கு வதால் திருச்சி மாவட்டத்திலிருந்து, தமிழகத்தின் பிற பகுதியில் இருந்தும் விடுமுறை நாட்களில் மட்டும் இல்லாமல் தினம் தோறும் ஏராளமான மக்கள் வந்து பார்த்து செல்வார்கள்.

    திருச்சியில் இருந்து கல்லணைக்கு திருவளர்ச்சோலை வழியாகவும் சர்க்கார் பாளையம் வழியாகவும் இரண்டு சாலைகள் உள்ளன.

    சர்க்கார் பாளையம் வழியாக வரும் சாலை திருச்சி மாவட்டத்தில் பெரும்பான்மையான தூரமும் தஞ்சை மாவட்ட எல்லையில் குறைந்த அளவிலான தூரமும் சாலை உள்ளது.

    தோகூர் பஸ் நிலையத்தில் இருந்து வேங்கூர் வரையுள்ள சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

    வேங்கூருக்கும் தோகூருக்கும் இடையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை சீரமைக்கப்படாமல் மிகவும் சிதிலம் அடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் இந்த வழியாக கல்லணையை சுற்றிப் பார்க்க கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மாநில நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும்

    இந்த மூன்று கிலோமீட்டர் தொலைவு உள்ள சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவு உள்ள சாலை மட்டும் மிகுந்த சேதமடைந்து காணப்படுகிறது.

    இதனால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகவும் நேரிடுகிறது.

    சீரமைக்கப்படாத நிலையில் உள்ள ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலையை உடனடியாக சீரமைத்து கல்லணைக்கு வரும் பயணிகள் பாது காப்பான‌ பயணத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

    • சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 120 வீடுகளில் 400 பேர் வசித்து கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.
    • கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளும் சேதமடைந்துவிட்டது.

    தரங்கம்பாடி:

    சீர்காழி தாலுக்கா வெள்ள மணல் மீனவ மக்கள் சார்பில் கிராமத் தலைவர் வீரபாண்டியன், துணைத்தலைவர் புகழேந்தி ஆகியோர் கலெக்டர் லலிதாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களது கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கழிமுகத்தின் படுகையில் அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 120 வீடுகளில் 400 பேர் வசித்து கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.

    இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தின் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளும் சேதமடைந்து விட்டது.

    தொடர் வெள்ள நீரினால் மண் அரிப்பு ஏற்பட்டு படுகை பகுதி பாதிப்புக்குள்ளாகியது. எனவே எங்களுக்கு ஆற்றின் கரையோரம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, அதில் வீடு கட்டிதர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அனைவரும் வேறு இடத்துக்கு வருவார்களேயானால் இடம் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார்.

    • வெள்ள மோடியில் ஊய்காட்டு சிவ சுடலை மாடன் கோவில் உள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    அம்மாண்டிவிளை அருகே உள்ள வெள்ள மோடியில் ஊய்காட்டு சிவ சுடலை மாடன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் முன்பு மாசானசாமி மண்டபம் இருக்கிறது. நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மாசானசாமி மண்டபம் மீது மோதியது. இதில் கோவில் மண்டபம் சேதமடைந்தது.

    இச்சம்பவம் குறித்து ஊர் தலைவர் ராதாகிருஷ்ணன் மணவாளக்குறிச்சி போலீ சில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது.
    • இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது.

    எடப்பாடி:

    எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு ஏதுமின்றி வறண்ட வானிலை நிலவி வந்தது., இந்த நிலையில், நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது.

    பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணித்தனர். திடீர் கனமழையால் எடப்பாடி அடுத்த காவிரி வடிநிலப் பகுதிகளான மோளப்பாறை, ஓடைக்காட்டூர் மற்றும் நெடுங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

    அப்பகுதி வயல்களில் தேங்கிய நீரை விவசாயிகள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான மானாவாரி நிலங்களில் தற்போது நிலக்கடலை பயிர் செய்யப்பட்டுள்ள நிலையில், பூ பிடிக்கும் தருவாயில் உள்ள நிலக்கடலை பயிர்களுக்கு திடீர் மழை சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • கொள்ளிடம் பாலத்தில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்தனர்.
    • 1.40 லட்சம் கன அடி வரை தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    சீர்காழி:

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைக–ளில் இருந்து அதிகப்படியான உபரி நீரானது தமிழக பகுதிக்கு வந்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து அணைக்கு வரும் 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீரானது முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றின் வழியே திருப்பி விடப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட தண்ணீரானது மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலந்து வருகிறது.

    கொள்ளிடம் பாலத்தில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்தனர். இந்நிலையில் தண்ணீர் படிப்படியாக உயர்ந்து கொள்ளிட ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் கடலை நோக்கி செல்கிறது. கொள்ளிடம் சோதனை சாவடி அருகே ஆற்றங்கரை தெரு மற்றும் நாதல்படுகை பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

    இதேபோல் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, முல்லை, மல்லி, கத்திரிக்காய், வெண்டை, செடிமுருங்கை, மரவள்ளிகிழங்கு உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். நாதல்படுகை கிரா–மத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த செங்கல் சூளையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தகி சுடாத 60 ஆயிரம் செங்கல் தண்ணீரில் முழுவதுமாக அடி–த்துச் செல்லப்பட்டு விட்டது.மேலும் 20 செங்கல் சூளைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. 1.40 லட்சம் கன அடி வரை தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பாக மேடான பகுதிக்கு செல்லுமாறு சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று வலியுறுத்தினர்.

    மேலும் வீடுகளை வெள்ள நீர் முழுவதுமாக சூழும் பட்சத்தில் மக்களை வெளியேற்றி உணவளிக்கும் வகையில் முகாம்கள் அமைத்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாதல் படுகை கிராமத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளை சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் படகின் மூலம் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
    • கடந்த 5 நாட்களாக ராட்சச அலைகள் எழுந்து மணல் பரப்பு முழுவதையும் மூழ்கடித்து உள்ளது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், ஆகிய மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் பலத்த காற்று வீசியதால் ராட்சத அலைகள் எழும்பின. இதனால் வள்ளம் கட்டுமரம் மீனவர் கள் அதிகமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    குளச்சல் கடற்கரையில் பழைய பாலம் ஒன்று உள்ளது. இதனை கண்டு களிக்கவும், கடற்கரையின் அழகை ரசிக்கவும் சூரியன் மறையும் காட்சியையும் கண்டுகளிக்க சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    தற்போது குளச்சல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படுவதால் கடல் அழகை ரசிக்க வரும் பொது மக்கள் கடற்கரையில் உட்கார முடியாமல் தவித்தனர். கடந்த 5 நாட்களாக ராட்சச அலைகள் எழுந்து மணல் பரப்பு முழுவதையும் மூழ்கடித்து உள்ளது இதனால். மாலை வேளை களில் பொழுதை கழிக்க கடற்கரைக்கு வரும் மக்கள் மணல் பரப்பில் அமர முடியாமல் திரும்பி சென்றனர்.

    குளச்சல் துறைமுக பாலம் அடி பகுதியில் கடல் அரிப் பால் மணல் இழுத்து செல்லபட்டு பாலத்தின் தூண்கள் அஸ்திவாரம் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. ராட்சத அலையால் கடற்கரையின் மணல் பரப்பு முழுவதையும் கடல்நீர் ஆக்கிரமித்துள்ளது.

    தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதுபோல் கொட்டில் பாட்டிலும் கடலரிப்பு ஏற்பட்டு மணற்பரப்பில் கட்டப்பட்டிருந்த மீன் ஏலம் கூடம் கட்டிடம் சேதமடைந்து அஸ்திவாரத்தில் அடியில் மணல் பரப்பு அடித்து செல் லப்பட்டதால் அஸ்திவாரம், கான்கிரீட் உடைந்து கட்டிடம் கடலில் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏல கூடத்தின் அஸ்தி வாரம் இடிந்து சரிந்து காணப்படுகிறது.

    ஆபத்தான நிலையில் உள்ள இந்த மீன் ஏல கூடத்தை இடித்து மாற்றம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திரருச்சுழியில் வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.
    • வழக்கம்போல் இரவு நேரத்தில் வீட்டில் விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் சுந்தரராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில் சுந்தர் -ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

    இருவரும் தினந்தோறும் இரவு நேரத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வழக்கம்போல் இரவு நேரத்தில் வீட்டில் விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.

    காலையில் அதிக சத்தத்துடன் பல்பு வெடித்ததாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.

    இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது. வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்த நிலையில் அருப்புக்கோட்டை தீயணை ப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இது குறித்து திருச்சுழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ரெயில் நிலையம் பகுதியில் புகை மண்டலமாக தெரிந்ததால் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×