search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • முத்துப்பாண்டிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
    • பள்ளி ஆசிரியர்கள் சிறுமி பள்ளிக்கு வராததை கண்டு வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கரையூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவி. அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தேவியின் கணவர் உடல் நலக்குறைவால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவன் இறந்த பிறகு தனது குழந்தைகளுடன் கரையூரில் வசித்து வந்த தேவிக்கு தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் முத்துப்பாண்டி மிஸ்டு கால் மூலம் அறிமுகம் ஆனார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தூத்துக்குடி சென்று வசித்து வந்தனர்.

    இந்நிலையில் முத்துப்பாண்டிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு அருகில் உள்ள படுக்கையில் தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் பெர்னாண்டோ (50) என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சுரேஷ் பெர்னாண்டோவுக்கும், தேவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் முத்துப்பாண்டியை கைவிட்டு விட்டு கள்ளக்காதலன் சுரேஷ் பெர்னாண்டோவுடன் தேவி கரையூர் வந்தார்.

    அங்கு பெர்னாண்டோ இரவு நேரங்களில் தேவியின் 12 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இருப்பினும் அதனை தேவி கண்டு கொள்ளவில்லை.

    இதனால் மனம் உடைந்த 12 வயது சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் சிறுமி பள்ளிக்கு வராததை கண்டு வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது அக்கம்பக்கத்தினர் நடந்த விவரத்தை கூறினர். இதை கேட்ட பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக சமூகநல பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் சமூக நல அலுவலர்கள் தாராபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் கடந்த மாதம் 4-ந்தேதி அந்த சிறுமியின் தாய், சுரேஷ் பெர்னாண்டோ ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிறகு சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி முன்பு சிறுமி வாக்குமூலம் அளித்தார்.

    அந்த வாக்கு மூலத்தில், தனது தாயின் கள்ளக்காதலன் சுரேஷ் பெர்னாண்டோ தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதற்கு உடந்தையாக தனது தாய் இருந்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் அருகில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதான 2 சிறுவர்கள் மீதும் பாலியல் புகார் தெரிவித்தார். நீதிபதியிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம் அந்தப்பெண்ணின் தாய் மற்றும் கள்ளக்காதலன் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

    • மாணவியின் தாயாரை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.
    • மனவிரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது சாவில் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில், மாணவியின் தாயாரை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அந்த பெண் மற்றொரு நபருடன் பழக்கத்தில் இருந்து வந்ததாகவும், அதற்கு அவரது உறவினர் பெண் ஒருவர் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனவிரக்தி அடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாயார், அவருடன் பழக்கத்தில் இருந்த நபர் மற்றும் உடந்தையாக இருந்த பெண் ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • சிறுமியை கடந்த ஏப்ரல் 18ம் தேதி அன்று குருகிராமில் இருந்து சந்தீப் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர் கடத்திச் சென்றுள்ளனர்.
    • இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

    சிறுமியை கடந்த ஏப்ரல் 18ம் தேதி அன்று குருகிராமில் இருந்து சந்தீப் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர் கடத்திச் சென்றுள்ளனர்.

    பின்னர், சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிறுமி அளித்து வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (கற்பழிப்பு), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டம் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மர்மநபர்கள் இந்தக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச்சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் மதுபாட்டில்களை திருடியதாக திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (வயது 24), வெங்கடாபுரம் பகுதியைச்சேர்ந்த ஆகாஷ் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி செங்கல்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.
    • அவர்களிடம் இருந்து 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காரையும் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.

    அதில் 208 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் காரில் வந்தவர்களிடம் விசாரித்ததில் சென்னை முகமலை சென்னிரகுப்பம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது34), போரூர் லட்சுமணன் (38) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காரையும் பறிமுதல் செய்தனர்.

    • மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
    • 2 பேர் குடிபோதையில் தண்ணீர் பாட்டில் வாங்கிய பின் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் சாலை வெல்ஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (30). இவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீராம் இவரது மனைவியுடன் பெட்டி கடையில் இருந்துள்ளார்.

    அப்போது கடைக்கு வந்த ஜடையம்பாளையம் புதூர் குறிஞ்சி நகரை சேர்நத அருன்குமார் (25), சிறுமுகை சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த தீபக்(21) ஆகியோர் கடையில் இருந்த ஸ்ரீராம் மற்றும் இவரது மனைவி ஆகியோரிடம் குடிபோதையில் தண்ணீர் பாட்டில் வாங்கிய பின் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீராமையும் இவரது மனைவியையும் அருன்குமார், தீபக் ஆகியோர் தாக்கி உள்ளனர்.

    இதையடுத்து இவர்கள் இருவரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அருன்குமார், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • தனியார் திருமண மண்டபம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார்.
    • வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கஞ்சா பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன்ஜோசுபதம் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தருமபுரியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாருக்கு எஸ்.வி. சாலையில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். இதில் அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார்.

    உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் தொழிற்மையம் காமராஜர் நகர் விஜயன் மகன் சுதர்சன் (வயது24) என்பவர் 1 கிலோ 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் தருமபுரியில் உள்ள சவுளூர் மேம்பாலம் அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    உடனே அவரை பிடித்து விசாரித்ததில் மணிப்பூர் கிராமம் கோகுலகண்ணன் (22), சோகத்தூர் தினேஷ் (20) ஆகிய 2 பேர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் வாலிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் பையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாைவ மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
    • கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கரூர்:

    கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வடிவேல் தலைமையிலான போலீசார் ஆத்தூர் பிரிவு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் கரூர் ராமானுஜா நகரை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 31), வடிவேல் நகரை சேர்ந்த பிரவீன் (25) ஆகிய 2 பேரும் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • குடிபோதையில் இருந்த அவர்கள் சிக்கன் கபாப் ரோல் வாங்கி சாப்பிட்டனர்.
    • ருசியாக இல்லாத கபாப் சிக்கனுக்கு பணம் தரமாட்டோம் என கூறி காரில் ஏறி புறப்பட்டனர்.

    பரேலி:

    உத்தரபிரதேசம் பரேலி அருகே பிரேம் நகர் பகுதியில் பிரியதர்ஷினி நகரில் பழமையான ஓட்டல் ஒன்று உள்ளது. ஓட்டலை அங்கூர் சப்பர்வால் என்பவர் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வாலிபர் ரஸ்தோகி, அவரது நண்பர் தசீம்ஷம்சி என்ற இருவரும் ஓட்டலுக்கு வந்தனர்.

    குடிபோதையில் இருந்த அவர்கள் சிக்கன் கபாப் ரோல் வாங்கி சாப்பிட்டனர். உணவு பரிமாறப்பட்டு சாப்பிட்டு முடித்த அவர்கள் சிக்கன் கபாப் ருசியாக இல்லை என்று ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்தனர்.

    சிக்கன் தயாரித்த சமையல்காரரை கூப்பிடுங்கள் என ஆவேசமாக வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். ருசியாக இல்லாத கபாப் சிக்கனுக்கு பணம் தரமாட்டோம் என கூறி காரில் ஏறி புறப்பட்டனர்.

    அப்போது ஓட்டல் உரிமையாளர் சமையல்காரர் நசீர்அகமதுவை அழைத்து அவர்களிடம் பணத்தை வாங்கி வருமாறு கூறினார். அவர் தகராறு செய்த வாலிபர்களிடம் சென்று சிக்கன் சாப்பிட்டதற்கான பில் தொகை ரூ.120-ஐ கேட்டார்.

    ருசியாக சமைக்காத நீ எங்களிடமே பணம் கேட்கிறாயா? என்று கேட்டு நசீர் அகமதை துப்பாக்கியால் சுட்டனர். இதில் நெற்றியில் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். பின்னர் இருவரும் காரில் ஏறி தப்பி சென்றனர்.

    ரஸ்தோகிக்கு உத்தி ரபிரசேத்தில் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரஸ்தோகியின் தந்தையின் பெயரில் உரிமம் உள்ள துப்பாக்கியை அவர் எடுத்து வந்துள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ரஸ்தோகி, தசீம்ஷம்சி ஆகிய 2 பேரை கைது செய்தனர். ரஸ்தோகியின் தந்தை மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நசீர்அகமதுக்கு மனைவி மற்றும் 10 வயதில் பெண் குழந்தை உள்ளனர்.

    • சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
    • கொலையாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி கனிவண்ணனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன் (வயது 27). சமையல் மாஸ்டர். இவர் கடந்த 2-ந்தேதி இரவு கொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து, சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மேற்பார்வையில்தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி கனிவண்ணனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கணிவண்ணன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், கனிவண்ணன் மத்திய துணை ராணுவ படையை சேர்ந்த ஒருவரிடம் தொலைபேசியில் பேசியது தெரியவந்தது. இதுகுறித்த தீவிர விசாரணையில் மத்திய துணை ராணுவ படை வீரர் தேவேந்திரன் (52) என்பதும், இருவரும் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து, சீர்காழி தென்பாதியில் உள்ள தேவேந்திரனின் வீட்டிற்கு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் தனிப்படை போலீசார் சென்று சோதனை நடத்தினர். அதில் ஒரு கை துப்பாக்கி, 6 தோட்டாக்கள், 3 காலி தோட்டாக்கள் ஆகியவை வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

    இவை அனைத்தும் கொலை வழக்குடன் ஒத்துப்போனதால் தேவேந்திரனிடம் போலீசார் மீண்டும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கிடைத்த தகவலின்படி, போலீசார் அங்கிருந்து புறப்பட்டு தேவேந்திரனின் சொந்த ஊரான வைத்தீஸ்வரன் கோவில் அருகே சேத்தூர் கிராம உடையூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.அங்கிருந்து, மேலும் ஒரு துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் காலித்தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதன் மூலம் கனிவண்ணனை, அவரது நண்பர் தேவேந்திரன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதை தொடர்ந்து போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். சமையல் மாஸ்டரை அவரது நண்பரே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தங்க நகை வியாபாரி பரத் க.க.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் ரோகித், பரத். தங்க நகை வியாபாரிகளான இவர்கள் 2 பேரும் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி 600 கிராம் தங்க நகைகளை கோவை ராஜவீதியை சேர்ந்த மொத்த நகை வியாபாரியிடம் விற்றனர்.

    இரவாகி விட்டதால் கோவையிலேயே தங்கி விட்டு மறுநாள் அதிகாலை நேரத்தில் தங்களது மோட்டார் சைக்கிளில் ரூ. 4 லட்சம் பணத்துடன் பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிள் க.க.சாவடி- வேலந்தாவளம் ரோட்டில் பிச்சனூர் அருகே சென்றபோது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம குப்பல் 2 பேரையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தங்க நகை வியாபாரி பரத் க.க.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்த பாலக்காட்டை சேர்ந்த மிதூன் (28), ரஞ்சித்(22) அபினேஸ்(27), ரஞ்சித்குமார் (32) ஆகிய 4 பேரை கடந்த 30-ந் தேதி கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தனிப்படை போலீசார கேரளாவில் முகாமிட்டு தேடி வந்தனர். இந்தநிலையில் தனிப்படை போலீசார் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாபாறையை சேர்ந்த பிரமோத் (34), சுனில் (46) ஆகிய 2 பேரையும் இன்று கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணை முடிந்தம் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வழக்கு கடந்த டிசம்பர் மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
    • கைது செய்யப்பட்ட சிறுவன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் விழிஞ்சம் கல்வெட்டான்குழி ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது நசீம். இவரது மனைவி சுஜிதா. இவர்களது மகன் ஆதில் முகம்மது (வயது 12).

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் குமரி மாவட்டம் திட்டு விளை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். 6-ந்தேதி ஆதில் முகம்மது திடீரென மாயமானார்.

    இந்நிலையில் 8-ந்தேதி அந்த பகுதியில் உள்ள குளத்தில் ஆதில் முகம்மது பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை.

    இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ஆதில் முகம்மதுவின் தாயார் சுஜிதா கேரள முதல்-மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். ஆதில்முகம்மது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மீண்டும் விசாரணை தொடங்கியது.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசாரணை தொடங்கி னார்கள். டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பான தகவல்களை சேகரித்தனர். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    சம்பவத்தன்று ஆதில் முகம்மதுவை அழைத்து சென்ற சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆதில் முகம்மது குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட போது டி-ஷர்ட் எதுவும் அணியவில்லை. ஆனால் அவர் வீட்டில் இருந்து சென்றபோது டி-சர்ட் அணிந்திருந்தார். அந்த டீ-சர்ட் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

    கடந்த 6 மாதமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சிறுவன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 304(2) ஆபத்தான இடத்திற்கு அழைத்து செல்லுதல், 201 தடயத்தை மறைத்தல், 202 செல்வதை சொல்லாமல் மறைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். ஒரு ஆண்டுக்கு பிறகு இந்த வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×