என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 231320"
- ஜனவரி 2021-இல் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழப்போர் எண்ணிக்கை 95 சதவீதம் வரை சரிந்துள்ளது.
- கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 91 சதவீதம் வரை குறைந்துள்ளது.
மே 12 ஆம் தேதியில் இருந்து அமெரிக்காவுக்குள் வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
அந்த வகையில், "கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஃபெடரல் ஊழியர்கள், காண்டிராக்டர்கள், சர்வதேச பயணிகள் ஆகியோருக்கு மே 11 ஆம் தேதியில் இருந்து நீக்குகிறோம். இதே நாளில் இருந்து கொரோனா வைரஸ் பொது சுகாதார எச்சரிக்கை காலமும் முடிவுக்கு வரும்," என்று வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஜனவரி 2021-இல் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழப்போர் எண்ணிக்கை 95 சதவீதம் வரை சரிந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 91 சதவீதம் வரை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. தடுப்பூசி அவசியம் என்ற விதிகள் மற்றும் பிரமாண்ட தடுப்பூசி பிரசாரம் காரணமாக பல லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த தேசிய சுகாதார அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.
- கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- 150 மாடு, கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் தாலுகாகீரனூர் கிராமத்தில் கால்நடைத்துறை மூலம் மாடுகள், கன்றுகளுக்கு கால்கானை, வாய்க்கானை எனப்படும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிமுனியசாமி தலைமை தாங்கினார்.
கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர்கள் வீரன், சமாதான ஜெபமாலை மேரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செந்தில்வேல் ஆகியோர் கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வைத்தியனேந்தல், மேலப்பனைக்குளம், கீழப்பனைக்குளம் கிராமங்களில் 150 மாடு, கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
- 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
- நோய்களிருந்து கால்நடைகளை பாதுக்காப்பது எப்படி?
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் கால்நடைதுறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமையில் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
மேலும், நோய்களிருந்து கால்நடைகளை பாதுக்காப்பது எப்படி? பராமரிப்பது எப்படி? உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- இந்த முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மாதாக்கோட்டை சாலையில் இன்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்இந்த முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார் .
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இன்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் 2 லட்சத்து 92 ஆயிரம் கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
விடுதல் இன்றி அனைத்து கிராமங்களிலும் இந்த பணி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் நர்மதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தமிழ்செல்வம், உதவி இயக்குனர் சையத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், தாசில்தார் சக்திவேல், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், எஸ்.பி.சி.ஏ அலுவலர் சாரா உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், முகமது ரபி, விஜயலட்சுமி பாரதி, முனைவர் சதீஷ்குமார், ஆடிட்டர் ராகவி, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சென்னை மாவட்டத்தில் உள்ள 9,350 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு.
- கோமாரி நோய் தடுப்பூசிப்பணி இன்று முதல் இந்த மாதம் 21.3.2023 முடிய 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 9,350 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் மூன்றாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி இன்று முதல் இந்த மாதம் 21.3.2023 முடிய 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
- செல்லப்பிராணிகள் உடன் ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவழிக்கும்போது மனஅழுத்தம் நீங்கிவிடும்.
- அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் குடற்புழு நீக்கம், வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி"தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
விழாவின் 5-ம் நாளில் மாவட்டத்தில் முதன்முறையாக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது.
இதில் டாபர்மென், லேப்ரடார், கோல்டன் ரெட்ரைவர், ஸ்பிட்ஸ், போமரேனியன் உள்பட பல வெளிநாட்டு நாய்களும், சிற்பி பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் உள்ளிட்ட உள்நாட்டு நாய்களும் கலந்து கொண்டன.
நிகழ்ச்சிக்கு சிறப்பு பார்வையாளராக கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆகும். நமக்கு அதிகமான மனஅழுத்தம் இருக்கும்போது செல்லப்பிராணிகள் உடன் ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவழிக்கும்போது மனஅழுத்தம் நீங்கிவிடும்.
இக்கண்காட்சி மயிலாடுதுறையில் முதன்முதலாக மிக குறுகிய காலத்தில் நாய்கள் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது என்றார்.
கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் குடற்புழு நீக்கம், வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.
மேலும், சிறந்த 10 செல்லப்பிராணிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் சிறப்பு செய்தனர்
இதில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 5 கால்நடை மருத்துவமனைகளும், 15-க்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்களும், 5-க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவமனைகளும் உள்ளன. இவை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு, மாடு கோழி நாய் உள்பட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- இந்த நிலையில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்பட ஒன்றியங்களில் சில வாரங்களாக வெறிநாய் தடுப்பூசி இல்லை. ஊசி போட நாயுடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 5 கால்நடை மருத்துவமனைகளும், 15-க்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்களும், 5-க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவமனைகளும் உள்ளன.
இவை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு, மாடு கோழி நாய் உள்பட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முக்கியமாக மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், கோமாரி தடுப்பூசி, வயிற்றில் உள்ள புழுக்களை நீக்க மருந்து, வெறி நாய் கடி தடுப்பூசி ஆகியவை குறிப்பிட்ட இடைவெளியில் போடப்படுகிறது.
இந்த நிலையில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்பட ஒன்றியங்களில் சில வாரங்களாக வெறிநாய் தடுப்பூசி இல்லை. ஊசி போட நாயுடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
சிறப்பு முகாமில் வெறிநாய் தடுப்பூசி அனைத்தும் போடப்பட்டுவிட்டது என்றும், இனிமேல் வந்தால் தான் தடுப்பூசி போடப்படும் என்றும் கூறுவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே தேவையான தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 10 மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டது.
- 60 கன்றுகளுக்கு குடல் புழு நீக்கம், மருந்து பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூர் ஊராட்சி சித்தாளத்தூர் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் உலக வங்கி நிதியுதவிதிட்டத்தின் கீழ் நீர்வள நிலவள திட்டத்தின்படி கால்நடை மலடி நீக்கம் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிக்கண்டன் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார்.
முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர் டாக்டர் மகேந்திரன் தலைமையில் ஆய்வாளர் சாந்தி, உதவியாளர் மகாலெட்சுமி, பிரசன்னா, மாதவன் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட சினைபிடிக்காத மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சையளிக்கப்பட்டது.
மேலும் தாது உப்பு கலவை மற்றும் தாது உப்பு கட்டி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் 10 மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டது.
மாடுகளுக்கான மடி வீக்கம் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
60 கன்றுகளுக்கு குடல் புழு நீக்கம், மருந்து பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
இந்த முகாமில் தேசிய வேளாண் திட்டமூலம் செயல்படுத்தப்படும் கருசிதைவு நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் நடைபெற்றது இதில் நான்கு முதல் எட்டு மாதம் வரை உள்ள கன்றுகளுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு இவைகளுக்கு காது வெள்ளைகள் பொருத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
- 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் சிகிச்சை.
- சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வேதாரண்யம்:
நாகைமண்டல இணை இயக்குனர் விஜயகுமார், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோரின் அறிவுரையின் பேரில் வேதாரண்யம் தாலுக்கா மணக்குடி ஊராட்சியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது
முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை குடற்புழு நீக்கம் பெரியம்மை தடுப்பூசி போடுதல் ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடபட்டன.
மேலும் சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பரிசுகள் வழங்க ப்பட்டன முகாமில் கால்நடை உதவி மருத்துவர் ஸ்ரீதர் பாபு கால்நடை ஆய்வாளர் செல்விஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.
- 16 லிட்டர் பவர் ஸ்ப்ரேயர்களை பின்னேர்ப்பு மானிய அடிப்படையில் வழங்கினார்.
மதுக்கூர்:
மதுக்கூர் வட்டாரம் பாலாஜி கோட்டை பஞ்சாயத்தில் வேளாண் துறை மற்றும் கால்நடை துறையுடன் இணைந்து கால்நடை பாதுகாப்பு முகாம் நடைபெற்றது.
இதில் 15 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடன் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மற்றும் ஆலோசனைகளை டாக்டர் ரூபவாஹினியிடம் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பாலாஜி கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் பாலாஜி கோட்டை கிராமத்தை சேர்ந்த 19 விவசாயிகளுக்கு வேளாண் துறையின் மூலம் 16 லிட்டர் பவர் ஸ்ப்ரேயர்களை பின்னேர்ப்பு மானிய அடிப்படையில் வழங்கினார்.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் அட்மாதிட்ட அலுவலர் ராஜு ஆகியோர் முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு பவர்ஸ்பிரேயர்களை வழங்கியதுடன் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிற திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினர்.
முன்னோடி விவசாயிகள் அடைக்கலம் ராஜேந்திரன் வடுவம்மாள் மற்றும் தீபிகா திருஞானம் உள்ளிட்ட விவசாயிகள் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார்.
- பொதுமக்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா 2022 -23-ம் ஆண்டு திட்டம் சார்பில் வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.
முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார்.
இதில் கால்நடை மருத்துவர்கள் மகேந்திரன், ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர்கள் முருகேஷ், சாந்தி, நிர்மலா, கால்நடை உதவியாளர்கள் வீரமணி, சண்முகம், பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, செல்வராஜ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிருந்து பொதுமக்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதில் பேரூராட்சி கவுன்சிலர் லட்சுமி செல்வம், அப்பகுதி பிரதிநிதிகள் செல்வம், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மேலவஸ்தாசாவடியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைய உள்ளது.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் எஸ்.பி.சி.ஏ.க்கு சொந்தமாக கட்டிடம் உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.சி.ஏ. ( மிருகவதை வதை தடுப்பு சங்கம் ) சங்கத்திற்கு சொந்தமான மாதாக்கோட்டையில் உள்ள செல்லப் பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
இதில் செல்லப்பிராணி களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாதாக்கோ ட்டையில் எஸ்.பி.சி.ஏ. சங்கத்திற்கு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக சொந்தமாக கட்டிடம் கட்டப்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் எஸ்.பி.சி.ஏ.க்கு சொந்தமாக கட்டிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரக்கூடிய நாட்களில் நாய் ஷோ நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் சுமார் 40 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
நகராட்சிக்கு சமமான அளவில் இந்த ஊராட்சி விளங்குகிறது. நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மேலவஸ்தாசாவடியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைய உள்ளது. அதன் பிறகு சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் தமிழ் செல்வன், உதவி இயக்குனர் சையது அலி, தாசில்தார் சக்திவேல், நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்