search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவம்"

    • சித்த மருத்துவம் கற்றுக்கொண்டு போலியாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்ததார்.
    • குறைந்த படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தபடி அப்பகுதி மக்களுக்கு ஆங்கிலம் மருத்துவம்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக முத்துப்பேட்டை மற்றும் எடையூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நாச்சிகுளம் பகுதியில் சோதனை செய்தபோது அப்பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம்(வயது 62) என்பவர் சித்த மருத்துவம் கற்றுக்கொண்டு போலியாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர். அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த அடைஞ்சவிளாகம் பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(56) என்பவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்தது தெரியவந்தது .இதனையடுத்து ராஜேநதிரனை போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல் முத்துப்பே ட்டை அடுத்த எடையூர் போலீசார் அம்மலூர் மாரியம்மன் கோவில் தெரு வில் சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன்(65) என்பவர் குறைந்த படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தபடி அப்பகுதி மக்களுக்கு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிவசுப்பிரமணியனை கைது செய்தனர்.

    • மூத்த குடிமக்களுக்காக ஆண்டுக்கு 2 முறை மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாமை நடத்துகிறது.
    • உயரம், எடை, சர்க்கரை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. போன்ற இலவச பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக சேவை மனப்பான்மையுடன் தொழில் பயிற்சி மற்றும் தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது. அதேபோல், மூத்த குடிமக்களுக்காக ஆண்டுக்கு 2 முறை மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாமை நடத்துகிறது.

    அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் 28-ந்தேதி (நாளை) காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கிண்டி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மூத்த குடிமக்கள் தங்களுடைய வயதுக்கு ஏற்ப தங்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? என்பது பற்றிய மருத்துவ ஆலோசனைகள், அதனைச் சார்ந்த மருத்துவ வல்லுனர் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

    மேலும் உயரம், எடை, சர்க்கரை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. போன்ற இலவச பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். பரிசோதனைக்கு பின்பு அவசியம் ஏற்பட்டால், மருத்துவ உதவிகளும் அளிக்கப்படும்.

    ஊட்டச்சத்து நிபுணரின் பாதுகாப்பான உணவு முறைகள், கண் பரிசோதனை தேவைப்படுபவர்களுக்கு கட்டணமில்லா அறுவை சிகிச்சை, கண் கண்ணாடி மருத்துவ உதவிகளும் வழங்கப்படும்.

    அதுமட்டுமல்லாமல், சட்ட வல்லுனர்களை கொண்டு சட்ட ஆலோசனையும் நடத்தப்படும். இதில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் 9361086551, 8124878192, 9659671245 ஆகிய செல்போன் எண்களில் எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் மூத்த குடிமக்கள் மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனைகளை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 வீதம் வழங்கப்பட உள்ளது.
    • 5 மாணவிகள் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 13 மாணவிகள் வெற்றி பெற்றனர். இதில்

    11-ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    சாதனை படைத்த மாணவி அபிநயாவுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மாணவிக்கு சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி பாராட்டினர்.

    மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட், உதவி தலைமை ஆசிரியர் பரஞ்சோதி, அறிவியல் ஆசிரியர் செந்தில் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பொது–மக்கள் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டினர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 வீதம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் கடந்த நீட் தேர்வில் இப்பள்ளியை சேர்ந்த 5 மாணவிகள் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மெட்ராஸ்-ஐ எனப்படும் கண்நோய் பாதிப்பு தென்காசியில் வேகமாக பரவி வருகிறது.
    • தட்ப வெப்பநிலை காரணமாகவே மெட்ராஸ்-ஐ அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    தென்காசி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தொடர்ந்து தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே மெட்ராஸ்-ஐ எனப்படும் கண்நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதற்குள்ளான மாணவர்களை விடுப்பு எடுத்துக்கொள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகிறது.

    தட்ப வெப்பநிலை

    இந்த பாதிப்பானது திடீர் மழை மற்றும் வெயில் என தட்ப வெப்பநிலை மாறி மாறி ஏற்பட்டு வருவதன் காரணமாகவே அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த முறை தென்காசியில் வழக்கத்தைவிட அதிகமானோர் இந்த கண்நோய்க்கு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கண்களில் எரிச்சலுடன் அரிப்பும், கண்கள் சிவப்பு நிறமாக மாறுவதும், கண்ணில் வீக்கம், உறுத்தல், க‌ண்க‌ளி‌ல் ‌நீ‌ர் வடித‌ல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த பாதிப்பு பாதிக்கப்பட்டவரின் உடமைகளை நேரடியாக தொடுவதன் மூலம் பரவலாம்.

    தடுக்கும் வழிமுறைகள்

    இந்த பரவலை தடுக்க க‌ண் வ‌லிக்கு‌ம் போது, தா‌ன் பய‌ன்படு‌த்து‌ம் பொரு‌ட்களை ம‌ற்றவ‌ரோடு ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள‌க் கூடாது. த‌னியாக சோ‌ப்பு, துண்டு போ‌ன்றவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். கண்வலி உள்ளவர்களைப் பார்ப்பதாலேயே இது ஒட்டிக் கொள்ளாது.

    ஒ‌வ்வொரு முறை உ‌ங்க‌ள் க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பிறகு‌ம், கையை சோ‌ப்பு போ‌ட்டு‌ கழுவ வே‌ண்டு‌ம். வெளியில் சென்று வந்தவுடன் கை, முகம் ஆகியவற்றை சோப்பு போட்டு கழுவுங்கள் என மாணவ-மாணவிகளுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • குடும்பநல சிகிச்சை இரு வாரவிழா 21-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி மாவட்ட இணை இயக்குனர் பிரேமலதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை இரு வாரவிழா கடந்த 21-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவுரையின்படி ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி மாவட்ட இணை இயக்குனரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் டாக்டருமான பிரேமலதா, குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரதம் மூலம் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சையின் சிறப்பம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் ராஜேஷ், மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வெள்ளைச்சாமி, மகப்பேறு பிரிவு முதன்மை குடிமை மருத்துவர் புனிதவதி, அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் ஸ்வர்ணலதா, கார்த்திக், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் டேவிட் ஞானசேகர், புள்ளி விபர உதவியாளர் வேலு, வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர்கள் , செயின்ட் மேரி செவிலியர் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் மாணவிகள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • காது, மூக்கு, தொண்டை, சித்த மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • சிறப்பு மருத்துவ சேவைகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமை நடைபெற்றது.

    முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் வரவேற்று பேசினார்.

    ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் முன்னிலை வைத்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தனர்.

    முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், அயன் முறை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, சித்த மருத்துவம், உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    முகாமில் மருத்துவ அலுவலர்கள் ஜெகன், அனிதா, அழகு சிலம்பரசி, பாரதி, பிரியங்கா, சித்த மருத்துவர் கனிமொழி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தியாகராஜன், சுகாதார அலுவலர்கள் நாடிமுத்து, செல்லப்பா, சாமிநாதன், உள்பட கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் சிறப்பு மருத்துவ சேவைகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

    முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    10 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

    • இளையான்குடியில் அரசு அலுவலர்களுக்கான மருத்துவ முகாமை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர் குடும்பத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    • தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.
    • சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவகல்லூரியிலும், ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவகல்லூரியில் இடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நெய்விளக்கு வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி- ராணி தம்பதிக்கு ஸ்ரீபரன் (வயது 21) என்ற மகனும், சுபஸ்ரீ (18) என்ற மகளும் உள்ளனர்.

    இவர்கள் இருவரும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளனர்.

    பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள வீராசாமி விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். மூட்டை தூக்கும் தொழில் செய்யும் போது விபத்து ஏற்பட்டு அதில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.

    இவரது மனைவி ராணி அதன்பிறகு தையல் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இந்த ஏழ்மையான சூழ்நிலையில் தன் மகன் மகள்களை மருத்துவராக பார்க்க வேண்டும் என பெற்றோர் கனவு கண்டனர்.

    இதற்காக இரவு பகல் பாராது ராணி தையல் வேளையிலும் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.

    மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீபரன், சுபஸ்ரீ இருவரும் மருத்துவக் கல்லூரியின் கனவுகளோடு தஞ்சாவூரிலே பயிற்சியில் சேர்ந்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றனர்.

    இதில் சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும் ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 

    • 2 ஆயிரத்து 700 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
    • திருப்பூர் மாவட்டத்தில் அழைக்கப்பட்ட 166 பேரில், 84 பேர் முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சிலிங், கடந்த 20ந் தேதி துவங்கியது. சென்னையில் நேரடியாக நடந்த இந்த கலந்தாய்வில் அரசு பள்ளி ஒதுக்கீட்டில், 2 ஆயிரத்து 700 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் அழைக்கப்பட்ட 166 பேரில், 84 பேர் முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். இதில் ஜெய்வாபாய் மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் 7 மாணவிகளுக்கு விரும்பிய கல்லுாரியில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

    குறிப்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கோவை மருத்துவ கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ., பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி, கே.எம்.சி.எச்., மருத்துவ கல்லூரி, ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி, ராஜா முத்தையா கல்லூரி, சென்னை, துாத்துக்குடி, கடலூர் பல் மருத்துவமனை, நந்தா பல் மருத்துவமனை ஈரோடு, மதுரை, திருச்சி, அரியலூர், கரூர், திருப்பூர் போன்ற மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயில மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.

    அதிகபட்சமாக ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் பள்ளியில் 7 பேர், கணபதிபாளையம் பள்ளியில் 3, உடுமலை பெண்கள் பள்ளியில் 3, அய்யன்காளிபாளையத்தில் 2, பெருமாநல்லூர் ஆண்கள் பள்ளியில் 2, கணக்கம்பாளையத்தில் 2 பேர் வீதம் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்பில், 18 பேர், பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பில் 15 பேருக்கு சீட் கிடைத்துள்ளது.

    இது குறித்து மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்க துவங்கியது முதல் நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் மருத்துவ கல்வி பயில முன்வருகின்றனர். அரசின் 7.5 ஒதுக்கீடு திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பூரில் கடந்தாண்டை விட 5 பேர் இம்முறை கூடுதலாக மருத்துவ கவுன்சிலிங்கில் தேர்வாகியுள்ளனர். அரசு பள்ளி அளவில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையில், திருப்பூர் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. திருப்பூர் அரசு பள்ளி மாணவர்களிடையே மருத்துவ கல்வி பயில்வதற்கான ஆர்வமும், முனைப்பும் அதிகரித்துள்ளதை காட்டுகிறது என்றார்.

    • சிங்கம்புணரி அருகே சித்த மருத்துவ முகாம் நடந்தது.
    • வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி,

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டாரம், சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மருதிப்பட்டியில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த இந்த முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேசன், துணைத் தலைவர் கமலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார். சூரக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆதித்யா, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சரவணன், சிங்கம்புணரி மருத்துவமனை சித்த மருத்துவர் ரஹீமா பானு ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 225 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மருந்தாளுநர் சோலைசாமி, சுகாதார ஆய்வாளர் எழில் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

    • ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் ரத்த அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    சாத்தான்குளம்:

    தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தூத்துக்குடி சுகாதார பணிகளின் பொற்செல்வன் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பண்டாரபுரம் சத்தியநகரம் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சுகாதார ஆய்வாளர் மந்திர ராஜன் வரவேற்று பேசினார்.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி திட்ட விளக்க உரையாற்றினார். சத்தியநகரம் சேகர குரு மர்காசிஸ் டேவிட் வெஸ்லி ஜெபம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் செல்வதுரை நன்றி கூறினார்.

    முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, கொலஸ்டிரால் பரிசோதனை, கொரோனா சளி பரிசோதனை, கொரோனா தடுப்பூசி ரத்த அளவு பரிசோதனை செய்யப்பட்டது. 

    • ராமநாதபுரத்தில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • இளம்பெண்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்து டாக்டர் விளக்கி பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை, இன்னர்வீல் கிளப் இணைந்து வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    இளம்பெண்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும், இயற்கை காய்கறிகள் சாப்பிடுவதன் அவசியம் குறித்தும் ஆரோக்கியா மருத்துவமனை டாக்டர் வித்யா பிரியதர்ஷினி விளக்கினார்.

    கிளப் தலைவி ரூபா, செயலாளர் பாக்கியலட்சுமி, முன்னாள் தலைவர் ரேகா, தலைமை ஆசிரியை ஜோ விக்டோரினா, தொழிற்கல்வி ஆசிரியை சிவகாமசுந்தரி உட்பட மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    ×