என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 233400"
- நீடாமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
- நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திருவாரூர்:
நீடாமங்கலம் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சக்குளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.
- ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
- திருவலஞ்சுழி தொடங்கி தஞ்சாவூர் நோக்கி ஒரு பிரிவாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாபநாசம்:
கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சா லையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் தொடங்கி கும்பகோணம் நோக்கி ஒரு பிரிவாகவும், திருவலஞ்சுழி தொடங்கி தஞ்சாவூர் நோக்கி ஒரு பிரிவாகவும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் பகுதியில் பசுபதி கோயில், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், ரெகுநாதபுரம், பண்டா ரவாடை, ராஜகிரி, பாபநாசம், திருப்பாலைத்துறை, சுவாமிமலை ஆகிய 11 இடங்களில் மழைநீர் வடிகால் வசதிக்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் பழனியப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 9-ந் தேதி நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
எனவே அன்றைய தினம் அருளானந்தநகர், பிலோமினாநகர், காத்தூண்நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர், பூக்காரத்தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரிநகர், திருப்பதிநகர், செல்வம் நகர், அண்ணாமலைநகர், ஜெ.ஜெ.நகர், டி.பி. எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், எஸ்.பி.அலுவலகம், கலெக்டர் பங்களாரோடு, டேனியல் தாமஸ்நகர், ராஜராஜேஸ்வரிநகர், காவேரிநகர், நிர்மலாநகர், என்.எஸ்.போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், ஆர்.ஆர்.நகர், சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தம்மாள்நகர், குழந்தைஏசு கோவில் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாழப்பாடி பேரூராட்சியில், ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் நவீன ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
- சேலம் மண்டல பேருராட்சி உதவி இயக்குநர் கணேஷ்ராம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில், ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் நவீன ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் ச.வாழப்பாடி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டப் பணிகளை, சேலம் மண்டல பேருராட்சி உதவி இயக்குநர் கணேஷ்ராம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இரு பணிகளையும் விரைந்து முடித்து, மக்கள் பயன் பட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், உதவி பொறியாளர் தினேஷ்குமார், பேரூராட்சி தலைவர் கவிதா சக்கர வர்த்தி, துணைத்தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி மற்றும் பேரூராட்சி உறுப்பி னர்கள் உடனிருந்தனர்.
- நசுவினியாறு வடிகால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
- பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் நாடியம்பாள்புரம் பாளமுத்தி ஏனாதி அருகே சுக்கிரன்பட்டி வடிகால் வாய்க்கால் நீர்வளத் துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டது.
பொன்னவ ராயன் கோட்டை அருகே நசுவினியாறு வடிவேல் நீரவளத்துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் விபரங்களை சிறப்பு செயலியில் பதிவேற்றப்பட்டு பணிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.
இதன் மூலம் மாவட்டம் தோறும் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் வடிகால் மற்றும் வாய்க்கால்களில் விரைவா கவும் சீராகவும் தூர்வார ப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முன்னதாக பட்டுக்கோ ட்டையில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பயிற்றுநர்களுக்கான பயிற்சியினை தொடக்கி வைத்து பயிற்சி பெறுபவ ர்களிடம் பயிற்சி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல ஊரக வளர்ச்சி நிறுவன கூடுதல் இயக்குநர் மற்றும் முதல்வர் பிரபாகர், கல்லணைக் கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் பவழக்கண்ணன், கல்லணை கால்வாய் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் மற்றும் அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் 544 இடங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மா பேட்டை ஒன்றியங்களை சார்ந்த 252 குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா பாபநாசத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை உரையாற்றினார். அரசு தலைமை கொறடா கோவி. செழியன் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச் . ஜவாஹிருல்லா, தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையாளர் கருணாகரன் வரவேற்றார். தலைமை பொறியாளர் முரளி திட்ட விளக்க உரையாற்றினார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என்.நேரு கலந்துகொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்புடன் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஒன்றியங்களில் 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்து விழா பேருரையாற்றினார்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது :-
தனது துறைக்கு இந்த வருடம் 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் 5 கோடியே 50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்படும். தமிழகத்தின் பெரு நகரங்களாக விளங்கும் கோவை ,மதுரை, சேலம் ஆகிய ஊர்களில் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்றும்,
, இந்த வருடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது துறைக்கு மட்டும் தமிழக அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 544 இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :- ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்துவதில் தமிழகம் 23 வது இடத்தில் இருந்ததாகவும் ,கே என் நேரு இத்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றதும் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது என்றும் அதற்காக விருதும் கிடைத்துள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட தி.மு.க துணை செயலாளர்கள் கோவி.அய்யராசு, துரைமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் தாம ரைச்செல்வன், பாத்திமா ஜான் ராயல் அலி, ராதிகா கோபிநாத், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அம்மா பேட்டை ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றிய குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்கு மார்,பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் நாசர், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், மற்றும் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் தஞ்சாவூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர் எழிலரசன் நன்றி கூறினார்.
பாபநாசத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தினை அமைச்சர் கே. என். நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு தலைமை கொறடா கோவி செழியன் , எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா, சந்திரசேகரன், நீலமேகம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.
- வாறுகால் அமைக்கும் பணியை மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் கடங்கநேரி ஊராட்சி துணை தலைவர் தங்ககிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வபுரம் என்ற ரெட்டியார்பட்டியில் ரூ. 17.1 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ. 9.9 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்கும் பணி மற்றும் ரூ. 7.20 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கடங்கநேரி ஊராட்சி துணை தலைவர் தங்ககிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகி மகராஜசிங், வார்டு உறுப்பினர்கள் அசோக், சுந்தரி, ஊராட்சி செயலர் அந்தோணி, அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டிட திட்டமிடப்பட்டது.
- கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.
குத்தாலம்:
கோமல் ஊராட்சியில் ரூ.42.63 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டும் பணியை மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு நிதியிலிருந்து ஊராட்சி செயலகம் கட்டிட திட்டமிடப்பட்டு, அதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.
ஊராட்சிமன்ற தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஊராட்சி செயலக கட்டிட பூமி பூஜையை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தி.மு.க ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் திவ்யா சரண்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தொடக்க நிலையிலேயே பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.
- சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு பாசனம் தரும் நீர் கட்டமைப்பாகவும் விளங்கும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் சாளுவனாற்றுகரையில், எழிலூர் தொடங்கி நெடும்பலம் வரை உள்ள திடலை பயன்படுத்தி ஏரி வெட்ட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
எழிலூரில் வெட்டப்படும் ஏரியானது எழிலூர், மருதவனம், வங்கநகர் ஓவர்குடி ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் ஆதாரமாகவும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு பாசனம் தரும் நீர் கட்ட மைப்பாகவும் விளங்கும்.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு இங்கு ஏரி வெட்ட வேண்டுமென திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியது. ஆனால், தொடக்க நிலையிலேயே பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.
இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நீர் ஆதாரத்தை கருத்தில் கொண்டு ஏரி வெட்டுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நிர்வாக இயக்குனர் சசிகலா இன்று காலை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
- பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி னார்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வ தற்காக செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா இன்று காலை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நெல்லிக் குப்பம் பகுதியில் 6 குளங்கள் தூர்வாரப்படும் பணிகள், ஜம்புலிங்க பூங்காவில் காலை சிற்றுண்டி செய்வதற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வரு வதை நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அனைத்து பணிகளும் அரசு விதிக்கப்பட்ட உத்தரவு படியும், அந்தந்த காலக்கட் டத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி னார். அப்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி, பொறியாளர் பாண்டு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- அகர திருக்கோவிலக்கா பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.
- பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு அகர திருக்கோவிலக்கா பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீரென ஆய்வு செய்தார்.
மேலும், பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, நகராட்சி ஆணையர் வாசுதேவன், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சாய்வு நாற்காலிகள், எவர்சில்வர் கைப்பிடிகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.
- கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கழிவறை அமைத்து தர வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே கரந்தையில் கருணாசாமி கோவில் உள்ளது. இக்கோயிலின் கிழக்கு பகுதியில் 1400 ஆண்டுகள் பழமையான சூரிய புஷ்கரணி என்கிற திருக்குளம் சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
பல ஆண்டுகளாக இக்கோயில் குளத்துக்கு வரும் நீர்வழிப் பாதை பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தடைபட்டதால் குளம் குட்டை போல் வரண்டு காணப்பட்டது. மேலும் குளத்தை சுற்றி பல இடங்களில் குடியிருப்புவாசிகள் குளக்கரையை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
இந்நிலையில் இக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை பராமரிக்க இப்குதி மக்கள் கடந்த 2019-ம் ஆண்டு தங்களுடைய சொந்த செலவில் குளத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அப்போது வடவாற்றிலிருந்து தண்ணீர் வரும் நீர் வழிப்பாதையை கண்டுபிடித்து அதனை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்தனர்.
இதைதொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
பின்னர், குளம் முழுமையாக தூர்வாரப்பட்டு குளத்தை சுற்றி நான்கு கரையிலும் நடைபாதை, குளம் முழுவதும் சாய்வுத்தளம், சுற்றுச்சுவர், படித்துறை, அலங்கார மின் விளக்குகள், சாய்வு நாற்காலிகள், எவர்சில்வர் கைப்பிடிகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் குளத்தின் தூர்வாரும் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 9 சுடுமண் உறைகிணறுகளையும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் குளத்தில் புனித நீரை நிரப்பி அதை பராமரிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கழிவறை அமைத்து தர வேண்டும் என மேயரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது:
தஞ்சாவூரில் 40 குளங்கள் உள்ளது. இதில் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யன்குளம், சாமந்தான் குளம், அழகி குளம் ஆகியவை புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது கருணாசுவாமி கோயில் குளம் புனரமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.மேலும், கரந்தையில் ஜைன குளம், குஜிலியன் குளம் ஆகியவை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
ஆய்வின் போது மாநகரா ட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், பொறியாளர் கார்த்தி, மாநகராட்சி மண்டலத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சுகந்தி துரைசிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்