என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 233400"
- 150 மிதவைகள் கொண்டு கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.
- தெப்ப உற்சவம் நாளை 16-ந் தேதி இரவு நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் நடைபெற உள்ள தெப்ப உற்சவத்தை யொட்டி 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான முறையில் 150 மிதவைகள் கொண்டு கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.
தொடர்ந்து தெப்பம் அலங்கரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தெப்ப உற்சவமானது நாளை (மார்ச்.16) இரவு 7 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இதனையொட்டி நடை பெற்ற வெள்ளோட்டத்தில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்ட தெப்பத்தின் உறுதித் தன்மை குறித்து பொதுப்பணித்துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் தெப்பத்தில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது.
- இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி நீர்நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றும் பணியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்:-
மக்களுக்கு முக்கிய தேவையாக இருக்கின்ற நீராதாரங்களை பாதுகாத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. ஆறு, குளம், குட்டைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது, நிலத்தடி நீர் மாசுபடுகிறது. எனவே, இந்த செடிகளை முற்றிலும் அகற்றி அதனை நகராட்சி நுண்ணுர தயாரிப்பு மையம் மூலம் பாலம் சேவை நிறுவனத்தின் மேற்பார்வையில் இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- பல வருடங்களாக சீரமைக்காமல் பழுதடைந்து காணப்பட்டது.
கன்னியாகுமரி:
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மெதுகும்மல் ஊராட்சியில் பல வருடங்களாக சீரமைக்காமல் பழுதடைந்து காணப்பட்ட செம்மான் விளை செல்லும் சாலை, சுந்தரவனம் - திட்டங்கினாவிளை சாலையில் மழை நீர் ஓடை, நெய்யாறு இடதுக்கரை கிளை சானல் கரையில் குரங்குமான் விளை பகுதியில் கன மழையால் இடிந்து விழுந்த பக்கசுவர், கம்மங்கூடல் குளத்தில் பக்கசுவர் போன்ற பணிகளை செய்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. செம்மான்விளை செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக அமைக்க ரூ.3 லட்சமும், சுந்தரவனம்- திட்டங்கினாவிளை சாலை யில் மழை நீர் ஓடை அமைக்க ரூ.5 லட்சமும், நெய்யாறு இடதுக்கரை கிளை சானல் கரையில் குரங்குமான் விளை பகுதியில் கன மழையால் இடிந்து விழுந்த பக்கசுவர் அமைக்க ரூ.5 லட்சமும், கம்மங்கூடல் பகுதியில் உள்ள குளத்தில் பக்கசுவர் அமைக்க ரூ.5 லட்சமும் என 4 பணிகளுக்கும் மொத்தம் ரூ.18 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்தார். பின்னர் இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ்வரி, ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்லன், மற்றும் ஷாஜி, டிஜூ காங்கிரஸ் நிர்வாகிகள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கட்டுமான பணிகள் முதற்கட்டமாக ரூ. 26 கோடியே 76 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.
- பாதாள சாக்கடை பணிகளும், பைபாஸ் சாலை பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில்உள்ள காமராஜர் பஸ்நிலையம் பழுதடைந்து காணப்பட்ட தால் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதற்கான கட்டுமான பணிகள் முதற்கட்டமாக ரூ. 26 கோடியே 76 லட்சம் மதிப்பில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் 18 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இதேபோல், மன்னார்குடியில் பாதாள சாக்கடை பணிகளும், பைபாஸ் சாலை பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
விழாவில் நகர்மன்ற தலைவர் மண்ணை சோழராஜன், தி.மு.க. நகர செயலாளர் வீரா கணேசன், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் மகாபாரதி அரியாபிள்ளை குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- முதல் கட்டமாக குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தொடங்கியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாப்பிள்ளை குளம் உள்ளது. பல ஏக்கரில் பறந்து விரிந்துள்ள இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் அப்பகுதியில் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சீர்காழி நகராட்சி மூலம் ரூ.1 கோடியே 11 லட்சம் செலவில் குளத்தை அழகுப்படுத்தும் விதமாக கரைகளை பலப்படுத்தி, நீர் நிரப்பி, சுற்றி நடைபாதை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த வாரம் பணிகளை தொடங்க நகராட்சி நிர்வாகம் முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி அரியா பிள்ளை குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தொடங்கிட நகராட்சி ஆணையர் வாசுதேவனுக்கு அறிவுறுத்தினார்.
இதனை அடுத்து சீர்காழி டிஎஸ்பி லாமெக் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் குளத்தை சுற்றி குவிக்கப்பட்டு முதல் கட்டமாக குளத்தை தூய்மைப்படுத்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தொடங்கியது. நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் சித்ரா, நகர்மன்ற உறுப்பினர் நாகரத்தினம்செந்தில் ஆகியோர் மேற்பார்வையில் ஜேசிபி எந்திரம் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
போலீஸ் பாதுகாப்புடன் குளம் தூர் வாரும் முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகளில் பெரும்பாலானவை முடிந்து விட்டன.
- குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 112 பணிகள் எடுக்கப்பட்டு அதில் 92 பணிகள் முடிந்துள்ளது. மீதம் 20 பணிகள் நடந்து வருகிறது. 4 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். கடன் இல்லா மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி விளங்குகிறது. மற்ற மாநகராட்சிகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது .
தஞ்சையில் பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் நவீன எந்திரங்கள் மூலம் சாலைகள் சுத்தப்படுத்தப்படுகிறது .
சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகளில் பெரும்பாலானவை முடிந்து விட்டன. இன்னும் 3 மாதத்தில் சிவகங்கை பூங்கா திறக்கப்படும்.
முதலாம் ஆண்டு நிறைவடைந்து தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். வளர்ச்சியை நோக்கி தான் அனைத்து பணிகளும் இருக்கும். ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது .
10 ஏக்கர் அளவில் சுத்தப்படுத்தப்பட்டு விட்டன. குப்பை கிடங்கு முழுவதுமாக அகற்றப்பட்ட பிறகு 10 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்பும், 10 ஏக்கரில் யாத்ரி நிவாஸ் கட்டப்படும். பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு இந்த யாத்ரி நிவாஸ் பயனுள்ளதாக இருக்கும்.
நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டில் 51 வார்டுகளிலும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினோம். அவற்றின் அடிப்படையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ரூ.1112 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அமைச்சர் கே. என். நேருவிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் மக்களோடு மேயர் என்ற தலைப்பில் மக்களை சந்திக்க உள்ளோம்.
திருவையாறு பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பள்ளி அருகே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரிய அளவில் வாகன பார்க்கிங் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவிலை சுற்றி பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இருக்காது .
புதிய பஸ் நிலைய புனரமைப்புக்காக ரூ.50 கோடி, மீன் மார்க்கெட் கட்ட ரூ.35 கோடி, சீனிவாசபுரம் - டி.பி.எஸ். நகரை இணைக்கும் வகையில் ரூ.120 கோடியில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 17 மாநகராட்சி பள்ளிகளில் சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்.
தஞ்சை மாநகராட்சியில் குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. 30 எம்.எல்.டி தண்ணீர் தான் தேவை. ஆனால் 60 எம்.எல்.டி தண்ணீர் வரப்போகிறது. இதை தவிர விளார், மாரியம்மன் கோவில், நாஞ்சிக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்பட 13 ஊராட்சிகள் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணையப் போகிறது. அப்படி இணையும் போதும் தண்ணீர் பிரச்சனை இருக்காது.
வருகிற 8-ந்தேதி தஞ்சாவூர் ெரயில்வே நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளோம். தஞ்சையில் இன்னும் 6 மாதத்தில் விமான சேவை தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பகுதிகள் செயல்பட்டு வருகின்றது.
- வெளிநோயாளிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது
கோத்தகிரி
கோத்தகிரியில் உள்ள பழமையான கட்டிடங்களில் ஒன்று அரசு மருத்துவமனை கட்டிடமாகும். இந்த கட்டிடத்தில் வெளிநோயாளிகள் பிரிவு பகுதி, அவசர சிகிச்சை பிரிவு பகுதி, பெண்கள் மகப்பேறு பகுதி என பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பகுதிகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு ரத்த வங்கி கட்டிடமும், பிணவறை கட்டிடமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக கட்டப்பட்டது. நாளுக்குநாள் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளின் வருகையும், வெளிநோயாளிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பழைய அவசர சிகிச்சை பிரிவில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த சிக்கலை போக்கும் விதமாக அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நவீன வசதியுடன் கூடிய கட்டிடத்தை கட்டும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த கட்டிட பணியானது மேலும் விரைவாக முடிக்க வேண்டி கடந்த சில வாரங்களாக இரவும், பகலாக நடைபெற்று வருகிறது. இதனால் கட்டிட பணி வேகமாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
- மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
- பழமையான கட்டிடத்தை விதிமுறைகளின்படி இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் முடிவடைந்த பஸ் நிலைய பராமரிப்பு பணிகள் மற்றும் ரூ.2.8 கோடி மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் நேரடியாக ஆய்வு செய்தார்.
திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் நடந்த பணிகளை பார்வையிட்ட கலெக்டர் பின்னர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கலெக்டர் பஸ்நிலையத்திற்குள் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகள், மற்றும் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள பழமையான ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ள கட்டிடத்தை விதிமுறைகளின்படி இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பஸ் நிலைய மேம்பாட்டு திட்டத்தில் நிதி பெற்று பேரூராட்சிக்கு வருமானம் வரத்தக்க வகையில் நிரந்தர கடைகள் கட்டி வாடகைக்கு விட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்து பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
- சேலம் மாவட்டம், கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம் பகுதியில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
- பாலப்பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் பாலப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம், கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம் பகுதியில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் காகாபாளையம் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசின் ஒப்பந்த அடிப்படையில் ரூ.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது.
இந்த உயர்மட்ட மேம்பாலமானது சேலத்தில் இருந்து 16-வது கிலோ மீட்டரில் செல்லியம்பாளையம் - கனககிரி ஏரி வரை 1 கிலோ மீட்டர் தூரம் வரை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலப்பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் பாலப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த பாலம் பணி நடைபெறும் வழியாக ஈரோடு, கோவை , கொச்சின், கேரளா, உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகள் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் கனரக வாகனங்கள் இவ்வழியே ஊர்ந்து சென்று வருவதால் இவ்விடத்தில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்தும், உயிரிழப்பும் நடைபெற்று வருகிறது.
பாலம் கட்டுமான பணி நடைபெறும் அருகாமையில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இப்பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் ஏராளமான பள்ளி கல்லூரி வாகனங்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதமாக செல்கின்றன.சேலத்தில் இருந்து மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் கோவை நோக்கி செல்ல இந்த சாலையை பயன்படுத்து வதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிக காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
இது குறித்து நிர்வாக தரப்பில் கூறியதாவது:
இந்த பாலவேலை ஒரு ஆண்டு காலதாமதமாக காரணம் மண் அள்ளுவதில் கடும் சிக்கல் எழுந்துள்ளது.ஏனெனில் நாங்கள் முறையாக ஆவணம் பெற்று மண் எடுத்தால் தனிநபர் தன் செல்வாக்கை பயன்ப டுத்தி அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கிறார்.அதிகாரிகள் எங்கள் வாகனங்களை பறிமுதல் செய்துவிடுகின்றனர்.
இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மாநில, மத்திய அரசின் டெண்டர் வேலைகளுக்கு தேவையான மண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதனால் பாமரர்கள் முதல் பெரும் ஒப்பந்த நிறுவனங்கள் வரை கடும் சிக்கலில் உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை முறைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுவாக எந்த பணிகள் என்றாலும் குறித்த காலத்தில் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது. அதற்கான தடைகளை சரிசெய்து மேம்பாலம் பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
- பி.ஏ.பி., திட்டம், பாலாறு படுகை பாசன அமைப்பு முறையின் கீழ் 134 பாசன சங்கங்கள் உள்ளன.
- முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டது.
உடுமலை:
பி.ஏ.பி., பாசன திட்டத்தில் விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் கீழ் நீரினைப்பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களை அத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் ஓட்டுப்பதிவு முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.
பி.ஏ.பி., திட்டம், பாலாறு படுகை பாசன அமைப்பு முறையின் கீழ் 134 பாசன சங்கங்கள் உள்ளன. 9 பகிர்மான குழு தலைவர்கள், 45 பகிர்மான குழு உறுப்பினர் மற்றும் திட்டக்குழு தலைவர் ஆகிய பதவிகள் உள்ளன. இம்முறையில் முதல் கட்டமாக கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் பகிர்மானக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பகிர்மான குழு தலைவர்களில் ஒருவர் திட்டக்குழு தலைவராகவும், மற்றவர்களை திட்டக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் நிர்வாக முறை இருந்தால் மட்டுமே பாசன திட்டங்கள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும்.
மேலும் தேர்வு செய்யப்படும் பாசன சபை நிர்வாகிகள், தண்ணீர் வழங்குவது, விவசாயிகளுக்கு நீர் பிரித்து கொடுப்பது, வாய்க்கால் பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவர். இந்த பதவிகளுக்கான தேர்தல் கடந்த 2009-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டது. பதவியில் இருந்தவர்களின் பதவிக்காலம் கடந்த 2014 டிசம்பர் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பின் 8 ஆண்டாக தேர்தல் நடத்துவது இழுபறியாகி வந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 17-ந் தேதி தேர்தல் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற முதல் கூட்டம் ஏப்ரல் 19-ந்தேதி நடந்தது.
பி.ஏ.பி., திட்டத்தில் முதற்கட்ட தேர்தல் நடந்த நிலையில் தொடர்ந்து நடத்த வேண்டிய பகிர்மான குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு தலைவர் தேர்தல் 10 மாதமாக நடத்தப்படவில்லை.தொடர்ந்து நடத்த வேண்டிய தேர்தல்களையும் உடனடியாக நடத்த வேண்டும் என பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட, எண் 2 மற்றும் 3க்கான பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 18ந் தேதி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பகிர்மான குழு தலைவர் மற்றும் 10 பகிர்மான குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 112 பாசன சங்க தலைவர்கள் ஓட்டளித்து 7 பகிர்மான குழு தலைவர் மற்றும் ஒரு பகிர்மான குழுவிற்கு 5 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் 35 பேர் தேர்வு செய்ய வேண்டும்.
கோவை மாவட்ட பகுதியில் தேர்தல் நடந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக பதவிகள் உள்ளதால் திருப்பூர் மாவட்ட பகுதியிலும் உடனடியாக நடத்த வேண்டும். திட்ட குழு தலைவர் தேர்தலையும் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற மார்ச் 10-ந்தேதி நடக்கிறது.உடுமலை, தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
- பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.
குடிமங்கலம்:
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் மரப்பயிர்களுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால் அதிகப்படியான இடங்களில் மா விவசாயத்தில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.அதன்படி மாந்தோப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன. ஏப்ரல் முதல் இவை காய்ப்புக்கு வரும் என்பதால் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மாங்கன்றுகள் நட்டு 4 ஆண்டுகளில் இருந்து பலன் தரும். கோடை காலங்களில் இதன் விளைச்சல் உச்சநிலையில் இருக்கும்.இப்பகுதியில் விளையும் மாங்காய்கள் அதிக தசைப்பிடிப்புடன் இனிப்புத்தன்மை நிறைந்ததாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.
குறைவான பராமரிப்பு, கூலி ஆட்கள் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பலரும் மா விவசாயத்திற்கு மாறி கொண்டிருக்கின்றனர். விளைச்சல் அதிகரிப்புக்கு பராமரிப்புப்பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு மக்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
- மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெட்டாறு பாலம் பழுதடைந்த காரணத்தால், அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆனால் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக நாகப்பட்டினம் நாகூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் வெட்டாறு பாலத்தின் சீரமைப்புப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் வெட்டாறு பாலம் சீரமைப்புப் பணி யினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும், மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்