என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 233400"
- பேராவூரணி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
பேராவூரணி:
மின் நிலையத்தில்மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் பேராவூரணி உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியி ட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பேராவூரணி துணை மின் நிலையத்தில் நாளை 4-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்விநியோகம் பெறும் பேராவூரணி, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், கட்டயங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், துறவிக்கா டு, செருவாவிடுதி, சித்துக்காடு, வா.கொல்லைக்காடு, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, படப்பனா ர்வயல், மணக்காடு, ரெட்டவயல், பெருமகளூர் மற்றும் சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் நாட்டாணி க்கோட்டை, குருவிக்கரம்பை, கள்ளம்பட்டி, பள்ளத்தூர், நாடியம், திருவத்தேவன், மல்லிபட்டினம், சேதுபாவா சத்திரம், குப்பத்தேவன், கழனிவாசல், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு, பேராவூரணி சேது ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனவும், மின்தடை தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பால்பண்ணைச்சேரி பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட உள்ளது.
- ரூ 20 லட்சம் மதிப்பில் கடைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 26-வது வார்டு பாரதி மார்கெட் பகுதியில், ரூ.12 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம் மற்றும் பால்பண்ணைச்சேரி பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட உள்ளது.
அதே போல், ரூ 20 லட்சம் மதிப்பில், நாகை தம்பிதுரை பூங்கா மேம்படுத்துதல், கடைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.
இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, உறுப்பினர்கள் முகம்மது நத்தர், திலகர், பிரதீப், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை.
- தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் 10 முறை மனு அளித்துள்ளோம்.
திருவாரூர்:
திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை மைய கட்டிடம், மருத்துவ மாணவர் மன்றம் நவீன சமையலறை கூடம் ஆகியவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்விற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது, பான் மசாலா, குட்காவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை.
இப்போது அடிப்படை பணிகளை தொடங்கினாலும் கட்டுமான பணிகளை தொடங்க 6 மாதம் ஆகும்.
மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கிய அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் தொடங்கப்பட்ட பிற மாநிலங்களில் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்காக தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் 10 முறை மனு அளித்துள்ளோம்.
மாவட்டத்திற்கு ஒரு அரசு செவிலியர் கல்லூரி என்ற கொள்கை முடிவின்படி திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் கல்லூரி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் மதிவாணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சீர்காழி விளந்திடசமுத்திரம் முதல் பள்ளிவாசல் வரை சுமார் 800 மீட்டர் தூரம் உள்ள சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
- சாலையின் இருபுறமும் கூடுதலாக அகலப்படுத்தப்பட்டு முழுமையாக தார்சாலை அமைக்கப்படுகிறது.
சீர்காழி:
சீர்காழி விளந்திடசமுத்திரம் முதல் பள்ளிவாசல் வரை சுமார் 800 மீட்டர் தூரம் உள்ள சாலை கைவிடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யும் பணிக்காக ரூ.1.90கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் சாலையின் இருபுறமும் கூடுதலாக அகலப்படுத்தப்பட்டு முழுமையாக தார்சாலை அமைக்கப்படுகிறது.
இந்த பணிகளை சீர்காழி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சசிகலாதேவி திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்.
அப்போது சாலை ஆய்வாளர் பிரபு உடனிருந்தார்.
- தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.3.32 கோடியில் பணிகள் நடந்து வருவதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
- உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய ரூர்பன் திட்டம் வாணியங்குடி தொகுப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் வாணியங்குடி, சோழபுரம், சக்கந்தி, காஞ்சிரங்கால், அரசனிமுத்துப்பட்டி, கொட்டகுடி, கீழ்பாத்தி மற்றும் இடையமேலூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தலா ரூ.47.42 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பஞ்சா யத்திலும் சூரிய உலர்த்தி, கடலைமிட்டாய், பால்கோவா உற்பத்தி, கால்நடை தீவனம் உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு ஆகிய 6 எந்திரங்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி பணி நடைபெற உள்ளது.
உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் தோட்டக்கலைத்துறை மூலம் எந்திரங்கள் நிறுவும் பணி மற்றும் காஞ்சிரங்கால் பஞ்சாயத்து கிராமத்தில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஹெக்டேர் பரப்ப ளவில் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை ரூர்பன் நர்சரி செயல்பாடுகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மகளிர் திட்ட அலுவலர் வானதி, தோட்டக்கலை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.966.62 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட 103 பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீ்ழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.966.62 கோடி மதிப்பீட்டில் பொழுது போக்கு பூங்கா, பஸ் நிலையம், குடிநீர் வினியோகம், அங்கன்வாடி மையம் மேம்படுத்துதல், குளங்களை பாதுகாத்தல், புதிய பஸ்நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம், மழைநீர் வடிகால் மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட 103 பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாகவும், தரமாகவும் முடித்து கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. உத்தரவிட்டார்.
இதில் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு இணையாக பயிரிடப்படும் கரும்பில் புதிய வகை நோய் காணப்படுகிறது.
- ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 21-22-ம் ஆண்டு முதல் ரூ.114 கோடி மனித சக்தி நாள் உருவாக்கப்பட்டு உள்ளது. 22-23-ம் ஆண்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
தூய்மை இந்தியா இயக்கத்தில் வல்லம் பேரூராட்சியில் கழிவுகள் மேலாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.
அதனைப் பின்பற்றி மற்ற பேரூராட்சிகள், நகராட்சிகளில் கழிவுகள் மேலாண்மை அமைக்க ஆலோசிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை துறையில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் பூண்டி, அம்மாபேட்டை வழியாக அந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.
மின்சாரத் துறையின் மூலம் மாநகராட்சிகளில் நடைபெறும் சாலை விரிவாக்கங்களில் மின்சார துறைகளின் தேவைகளை நிறைவேற்றி தரவும், இரும்புதலையில் மின் துணை நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள மின் இலாகா அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு இணையாக பயிரிடப்படும் கரும்பில் புதிய வகை நோய் காணப்படுகிறது.
அதனை கட்டுப்படுத்துவதற்கு வேளாண்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை சட்டரீதியாக பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- காதாரப் பணிகளை வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் டயர்களில் தண்ணீர் தேங்கி அதில் கொசு உற்பத்தியாகிறது.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேக்கம் ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி சுகாதாரத் துறை சார்பில், நகரில் பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. பல்லடம் 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில் நடைபெற்ற சுகாதாரப் பணிகளை வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொசு உற்பத்தியை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது :-
பொதுமக்கள் தங்களது வீட்டில் குப்பைகள்,பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே நல்ல தண்ணீரை உரிய முறையில் மூடி வைக்கவேண்டும். பொதுமக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் டயர்களில் தண்ணீர் தேங்கி அதில் கொசு உற்பத்தியாகிறது. எனவே பொதுமக்கள் அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தவும், தரமானதாகவும் அமைக்க வேண்டும்.
- 3 கட்டுமான குழுக்களை கொண்டு ஒரே நேரத்தில் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பாபநாசம்:
கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
கும்பகோணம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சிதிலமடைந்து பொது போக்குவரத்துக்கு பெரும் சவாலாக இருந்து வந்த நிலையில் சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு இந்த சாலையில் தற்போது சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
தஞ்சாவூரிலிருந்து தொடங்கப்பட்டுள்ள அந்த பணியானது ஒரேயொரு கட்டுமான குழுவைக் கொண்டு கும்பகோணம் நோக்கி மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றது.
கடந்த சில வாரங்களாக பெய்துள்ள தொடர்மழை காரணமாக இந்த சாலை உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாலை சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தவும், தரமானதாகவும் அமைத்திட வேண்டும்.தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் ரவுண்டானாவிலிருந்து அய்யம்பேட்டை வரை ஒரு பகுதியாகவும். அய்யம்பேட்டை தொடங்கி பாபநாசம் உத்தாணி வரை ஒரு பகுதியாகவும், உத்தாணி முதல் தாராசுரம் புறவழிச்சாலை வரை ஒரு பகுதியாகவும் ஆக 3 பகுதியாக இந்த பணிகளை, 3 கட்டுமான குழுக்களை கொண்டு ஒரே நேரத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வேகமாக இந்த பணிகளை நிறைவு செய்ய முடியும்.
இந்த நெடுஞ்சாலையில் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் கட்டுமானத்தின் போது, அய்யம்பேட்டை, பாபநாசம் பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி பொறியாளர்கள். பேரூராட்சி மன்றத் தலைவ ர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலும், பேரூராட்சி அல்லாத கிராமப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் பொறியாளர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றியக் குழு மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- அனைவரையும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
- நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை செய்து தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் ஊராட்சி நர்சரி பகுதியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், வட்டார வன அலுவலர் சுகுணா, மாவட்ட வன அலுவலர் செந்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை அருளாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த ஆண்டு கபிஸ்தலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை செய்து தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கூட்டத்தில் தணிக்கை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், பணிதல பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 28 லட்சத்தில் 95 தனி நபர் கழிவறைகள் கட்டப்படுகிறது.
- விரைந்து பணிகள் முடிக்கபட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 31 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பொது கழிவறைகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
மேலும், நகராட்சி சார்பில் 95 தனிநபர் கழிவறை கட்டும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இது குறித்து நகராட்சி கமிஷனர் ஹேமலதா கூறியதாவது:-
வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 28 லட்சத்தில் 95 தனி நபர் கழிவறைகள் கட்டப்படுகிறது.
இதில் ஒவ்வொரு கழிவறையும் ரூ. 9 ஆயிரத்து 330 அரசு மானியமாக 30 ஆயிரம் செலவில் கட்டப்படுகிறது.
தற்போது 18 கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், ரூ. 31 லட்சம் 28 ஆயிரம் செலவில் கட்டப்படும் பொது கழிவறையும் விரைந்து பணிகள் முடிக்கபட்டு பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு விடப்படும் என்றார்.
ஆய்வின்போது வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கர், ஆத்மா குழு தலைவர் சதாசிவம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.
- 100 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
- வணிக வளாக வாகனம் நிறுத்தும் பகுதியில் பூச்சந்தை தற்காலிக இடமாற்றம்.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தினமும் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.
மேலும் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில் பூக்கார தெருவில் சாலை குறுகியதாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் மாநகராட்சி சார்பில் பூக்கார தெருவில் 100 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் தொடங்க உள்ளது. பூக்கார தெருவில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
இதனால் இங்கு பல ஆண்டுகளாக இயங்கி வரும் பூச்சந்தையை தற்காலிகமாக வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள வணிக வளாக வாகனம் நிறுத்தும் பகுதியில் இன்று முதல் பூச்சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனையொட்டி ஏற்கனவே இயங்கி வந்த இடத்தில் கடை வைத்திருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது கடைகளை மாற்றினர். இன்னும் சில கடைகள் மட்டும் பூச்சந்தையில் உள்ளது. அதுவும் வரக்கூடிய நாட்களில் இடமாற்றம் ஆகி விடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்