search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234502"

    • புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், பூச்சி ராஜேஷ் ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமார், ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை பஸ் டிப்போ மற்றும் சேணிஅம்மன் கோவில் அருகில் வண்டியில் காய்கறி கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், பூச்சி ராஜேஷ் ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமார், ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • கார்முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஸ்ரீராமை வெட்டியதுடன் அவரை தாக்கினர்.
    • இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள விநாயக மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே காடகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 21). சம்பவத்தன்று இவர் தனது வீட்டிலிருந்து திருக்கோவிலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரசவத்தி ற்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.திருக்கோவிலூர் -விழுப்புரம் சாலை காடகனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வடகரை தாழனூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த கார்முகிலன், விநாயகமூர்த்தி ஆகிய 2 பேரும் ஸ்ரீராம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். இதனையடுத்து கார்முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஸ்ரீராமை வெட்டியதுடன் அவரை தாக்கினர். மேலும் ஸ்ரீராம் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூபாய் 1000 பணத்தை திருடிச் சென்றனர்.

    இது குறித்து ஸ்ரீராம் அரங்கண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கார்முகிலன் மற்றும் விநாயகமூர்த்தி ஆகியோரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூருக்கு தப்ப முயன்ற கார்முகிலனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்முகிலன் மீது அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள விநாயக மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • தனது குழந்தை கள் மற்றும் மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கூறினார்.
    • அவரை தாக்கி அவர் அணிந்திருந்த நகை, செல்போன் மற்றும் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர்.

    தேனி:

    தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன்ராஜன் (வயது 34). இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கனகராஜன் மகள் சூர்யகலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். கணவர் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சூர்யகலா பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அவர்களை பார்க்க கந்தன்ராஜன் மாமனார் வீட்டிற்கு சென்றார். தனது குழந்தை கள் மற்றும் மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கூறினார்.

    இதில் இருதரப்பின ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கனகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து கந்தன்ராஜனை தாக்கி அவர் அணிந்திருந்த நகை, செல்போன் மற்றும் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கனகராஜன் உள்பட 6 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கனகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கந்தன்ராஜன் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை கீழே தள்ளி விட்டனர்.
    • அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்

    வடமதுரை:

    வடமதுரை அருகே கோவககவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ரீட்டா (வயது35). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை கீழே தள்ளி விட்டனர்.

    இதையடுத்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ரீட்டா வடமதுரை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • இளநீர் வாங்குவது போல் நடித்து மாணவரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிதாகபட்டியை சேர்ந்தவர் முத்தழகன். இவரது மகன் மரம்பதி(வயது17). பிளஸ்-2 மாணவர். இவர் கோடை விடுமுறையில் இளநீர் விற்பனை செய்து வருகிறார். அவர் மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் உள்ள வல்லாளபட்டி பகுதியில் நேற்று இளநீர் விற்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இளநீர் வாங்குவது போல் நடித்து மரம்பதி சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் இளநீர் விற்ற பணம் ரூ.3 ஆயிரத்து 220 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி முத்தழகன் மேலவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவரிடம் பணம் பறித்த மேலூரைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    • இரவில் பின்தொடர்ந்து சென்ற கும்பல் துணிகரம்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடவள்ளி,

    கோவை சிறுவாணி சாலை பூலுவம்பட்டியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 40) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் டாஸ்மாக் கடையில் அதிகம் விற்பனையாகி இருந்தது. மொத்தம் ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் வசூலாகி இருந்தது. இன்று மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ஆகும்.

    எனவே வசூலான பணத்தை நாளை (செவ்வாய்க்கி ழமை) தான் வங்கியில் கட்ட முடியும். இதனால் கடையில் பணத்தை வைத்திருந்தால் பாதுகாப்பாக இருக்காது, எனவே தனது கட்டு ப்பாட்டில் வைத்திருக்கலாம் என சண்முகசுந்தரம் கருதினார். இதையடுத்து இரவு 11.30 மணி அளவில் கடையை பூட்டி விட்டு பணத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    வடிவேலம் பாளையத்தை நெருங்கிய வேளையில் அங்குள்ள ஒரு சந்திப்பில் மோட்டா ர்சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்த னர். 3 பேரும் சேர்ந்து சண்முகசு ந்தரத்தை தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் பண த்தை பையுடன் பிடுங்கிச் சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகசுந்தரம் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் பணம் பறித்தவர்கள் யாரும் சிக்கவில்லை.

    சண்முகசுந்தரம் பணத்து டன் செல்வதை நோட்டமி ட்டே மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை பறித்தது விசா ரணையில் தெரியவந்தது. பணம் பறித்த நபர்கள் என்பது குறித்து பேரூர் சரக டி.எஸ்.பி. ராஜபாண்டி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 7 பேர் கொண்டு கும்பல் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.
    • 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர்.

    கோவை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் டாலர் காலனியில் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி சஞ்சீவி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள ஓட்டலில் தங்கி இருந்து நிலம் வாங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    10-ந் தேதி சஞ்சீவி அறையில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை கேரளா மற்றும் மதுரையை சேர்ந்த போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் சஞ்சீவியிடம் நீங்கள் இரிடியத்தை மறைத்து வைத்து பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என கூறி அவரை மிரட்டினர். பின்னர் 7 பேர் கொண்டு கும்பல் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.

    இதனை தொடர்ந்து சஞ்சீவியை அவர்கள் கோவைக்கு கடத்தி வந்தனர். வரும் வழியில் அவரது டிரைவரை கரூரில் இறக்கி விட்டு வந்தனர். பின்னர் காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அப்போது 7 பேர் கொண்ட கும்பலுடன் கேரளாவை சேர்ந்த முக்கிய குற்றவாளியான சிபின் என்பவர் தான் கேரள போலீஸ் என கூறி அங்கு வந்தார். அவருடன் கிப்சன், அலெக்ஸ் ஆகியோரும் வந்து இருந்தனர்.

    இவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர். ஆனால் அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை கும்பல் பறித்து கொண்டனர். மேலும் அவர் அணிந்து இருந்த 16 பவுன் தங்க செயின், 10 பவுன் கைச் செயின், 4 பவுன் மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்தனர்.

    பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள டோல்கேட் அருகே இறக்கி விட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அழைக்கவும் என கூறி விட்டு சென்றனர். இது குறித்து சஞ்சீவி காட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என கூறி மிரட்டி ரியஸ் எஸ்டேட் அதிபரை கடத்தி 8 நாட்கள் சிறை வைத்து மிரட்டி 30 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • தம்பதியான இருவரும் நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்கள்.
    • தம்பதி நகை வாங்க பணத்துடன் வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    பெரம்பூர்:

    ஆந்திரா, குண்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பாராவ், லட்சுமி. தம்பதியான இருவரும் நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் நகை வாங்கிச்செல்வது வழக்கம்.

    இதேபோல் இன்று காலை தம்பதி சுப்பாராவ்-லட்சுமி இருவரும் நகை வாங்குவதற்காக ரூ.60 லட்சத்துடன் பஸ் மூலம் மாதவரம் பஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆட்டோ மூலம் கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இடைத்தரகர் ஒருவரை பார்ப்பதற்காக வந்தனர். அப்போது ஆட்டோவை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுப்பாராவ்-லட்சுமி தம்பதியை வழிமறித்தனர். அவர்களிடம் நகை வாங்குவது தொடர்பாக பேச்சு கொடுத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் சுப்பாராவ்-லட்சுமி ஆகியோர் வைத்திருந்த ரூ.60 லட்சத்தை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதனால் தம்பதியினர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆர்.கே. நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் ரூ.60 லட்சத்தை பறித்து சென்றதால் தம்பதியினர் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் கொள்ளை தொடர்பாக மாறி மாறி போலீசாரிடம் கூறி வருகிறார்கள். இதனால் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    தம்பதி நகை வாங்க பணத்துடன் வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அவர்கள் மாதவரத்தில் இறங்கி ஆட்டோவில் வந்தது வரை கொள்ளையர்கள் பின்தொடர்ந்து வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து மாதவரம் பஸ்நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டு வருகிறார்கள். தம்பதியிடம் ரூ.60 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் சென்னை பாரிமுனையில் ஆந்திரா நகை வியாபாரிகளிடமும் லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சுயநினைவை இழந்த அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் செயினை கழற்றி கொடுத்துள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியை சுயநினைவு இழக்க செய்து பணம் மற்றும் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி.

    இவரது மனைவி மரகதம் (வயது 60). இவர் தனது வீட்டின் அருகே காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று மரகதம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் மரகதத்திடம் வீட்டில் தோஷம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் மாந்திரீகம் செய்தால் தோஷம் நீங்குவதுடன், வியாபாரத்தில் பண வரவு கூடும் என ஆசை வார்த்தை கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய அவர் அந்த வாலிபரை மாந்திரீகம் செய்து தருமாறு வீட்டிற்குள் அழைத்து சென்றார். வீட்டிற்குள் சென்றதும் அந்த வாலிபர் மாந்திரீகம் செய்வதாக கூறி ஏதோ வசிய மருந்தை மரகத்தின் நெற்றில் தேய்த்து உள்ளார்.

    சிறிது நேரத்தில் அவர் சுய நினைவை இழந்தார். அப்போது அந்த வாலிபர் மரகதம் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை கழற்றி கொடுக்குமாறு கூறினார். சுயநினைவை இழந்த அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் செயினை கழற்றி கொடுத்துள்ளார். பின்னர் பீரோவில் வைத்து இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தையும் அந்த வாலிபரிடம் எடுத்து கொடுத்து உள்ளார். செயின் மற்றும் பணத்துடன் அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் மரகதத்தின் கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் தனது மனைவி சுயநினைவு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்த பின்னர் மரகதம் சுயநினைவுக்கு வந்தார். பின்னர் அவர் தனது கணவரிடம் நடத்த சம்பவங்களை கூறினார்.

    இது குறித்து அவர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியை சுயநினைவு இழக்க செய்து பணம் மற்றும் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இளங்கோ கூலி வேலை செய்து வருகிறார்.
    • பணம் பறித்த ஸ்ரீஹரியை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை நீலிகோண ம்பாளையம் அருகே செட்டியார் தோட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது50).

    இவர் அந்த பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஸ்ரீஹரி (20). சம்பவத்தன்று இளங்கோ வீட்டில் இருந்தார். அப்போது ஸ்ரீஹரி அவரது வீட்டிற்கு சென்று மது அருந்துவதற்கு பணம் தரும்படி கேட்டார். இதனையடுத்து அவர் என்னிடம் பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்கு மட்டுமே பணம் உள்ளது என தெரிவித்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஹரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.250 பணத்தை பறித்தார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இது தொடர்பாக அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை திருடி சென்ற ஸ்ரீஹரியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிறிது தூரம் ஆட்டோ சென்றதும் நான்கு வாலிபர்களும் சேர்ந்து திடீரென டிரைவர் ராஜாவை சரமாரியாக தாக்கினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தாம்பரம்:

    சேலையூரை அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவர். நேற்று இரவு இவரை 4 வாலிபர்கள் சவாரிக்கு அழைத்தனர். சிறிது தூரம் ஆட்டோ சென்றதும் நான்கு வாலிபர்களும் சேர்ந்து திடீரென டிரைவர் ராஜாவை சரமாரியாக தாக்கினர்.

    பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2500-யை பறித்து தப்பி சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • பெலிக்ஸ் பாலை கையால் கன்னத்தில் அடித்து மது குடிக்க பணம் தா என்று அரிவாளை காட்டி மிரட்டினார்
    • பிரபு மீது ஏற்கனவே 2 கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கையை அடுத்த புல்லுவிளை மெயின் ரோட்டை சேர்ந்தவர் பெலிக்ஸ்பால் (வயது 55). இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    பெலிக்ஸ் பால் நேற்று காலையில் வீட்டில் இருந்த போது பறக்கையை சேர்ந்த மணிகண்ட பிரபு என்ற பறக்கை மணிகண்டன் அரிவாளுடன் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தார்.அவர் பெலிக்ஸ் பாலை தகாத வார்த்தைகளால் பேசி கையால் கன்னத்தில் அடித்து மது குடிக்க பணம் தா என்று அரிவாளை காட்டி மிரட்டினார். அத்துடன் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.500 ஐ எடுத்தார்.

    உடனே பெலிக்ஸ் பால் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்தனர்.அவர்கள் மணிகண்ட பிரபுவை சுற்றி வளைத்து பிடித்து கம்பாலும், கையாலும் தர்ம அடி கொடுத்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்ட பிரபுவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பெலிக்ஸ் பால் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மணிகண்ட பிரபு மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான மணிகண்ட பிரபு மீது ஏற்கனவே 2 கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது பெயர் சுசீந்திரம் போலீசில் ரவுடி பட்டியலில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே படுகாயம் அடைந்த மணிகண்ட பிரபு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×