என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 235761"
- டவுன் ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
திருச்சி
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடைகள் அமைப்பது தொடர்பாக குற்றங்குறைகளற்ற திட்ட வட்டமான ஒழுங்குமுறை உடைய தெளிவான நடைமுறைகள் சென்ற ஆண்டு பின்பற்றப்பட்டது. அதேபோல் நடப்பு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
டவுன் ஹால் மைதானத்தில் பின்வரும் விவரப்படி அ, ஆ, இ. பகுதி என பாகுபாடு செய்ய ப்பட்டு "அ" பகுதியில் 80 சதுர அடி கொண்ட 37 தரைக்க டைகளும், "ஆ" பகுதியில் 80 சதுர அடி கொண்ட 19 தரை க்கடைகளும் "இ" பகுதியில் 80 சதுர அடி கொண்ட 24 தரைக்கடைகளும் அமை த்திட உத்தேசிக்க ப்பட்டுள்ளது.
கடை ஒவ்வொன்றும் அனுமதி வழங்கப்படும் நாளிலிருந்து தீபாவளி பண்டிகை முடிவுறும் வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும். 'அ' பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் ரூ.6,500 பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் ரூ-5500 'இ' பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் ரூ.4500ம் ஆகும்.
தரை க்கடைகள் அமைக்க விரும்பும் நபர்கள் எந்தப் பிரிவு தரைக்கடை வேண்டுமோ அதைத் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அதற்கான கட்டணத் தொகையை வருவாய் கோட்டாட்சியர், திருச்சிராப்பள்ளி என்ற பெயரில் வங்கி கேட்பு காசோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து திருச்சி கோட்டாட்சியரிடம் வருகிற 12-ஆம் தேதி பிற்பகல் 05.45 மணிக்குள் சேர்க்க வேண்டும்.
தரை க்கடைகள் எண்ணிக்கை யைவிட மனு செய்தவர்களின் எண்ணி க்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலில் "அ" பிரிவுக்கு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும். அதில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் "ஆ" பிரிவுடன் சேர்ந்து குலுக்கல் நடைபெறும். "ஆ" பிரிவில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் "இ" பிரிவில் சேர்ந்து குலுக்கல் நடத்தப்படும்.
மேற்படி குலுக்கல் நகர வர்த்தக குழு பிரதிநிதிகள் மாவட்ட உபயோகிப்பாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சி, வரு வாய்கோ ட்டாட்சி யர் திருச்சி வருவாய் கோ ட்டாட்சியர் அலுவ லகத்தில் 14 தேதி நடத்த ப்படும் என தெரிவிக்க ப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- வீரதீர செயல்புரிந்த சிறுமிகளுக்கு விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி - 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
தமிழக அரசு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் மூலமாக அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.இதன்படி வருடந்தோறும் மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி - 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
அதே போன்று, வருகிற ஜனவரி 2023-ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர் 2022-ன்படி) மேற்குறிப்பிட்டவாறு தகுதியான பெண் குழந்தை களிடமிருந்து விண்ண ப்பங்கள் நவம்பவர் 30-ந் தேதி வரை வரவேற்கப்ப டுகின்றன.
விருது
விருதிற்கான விண்ண ப்பங்கள் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயி லாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலு வலரிடம் சமர்பிக்கப்பட வேண்டும்.
இவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூக நல இயக்குநரகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ண ப்பங்கள் மாநில அளவில் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்ட, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு ஜனவரி 24-ந் தேதி அன்று மாநில விருது வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் தெரிவித்து ள்ளார்.
- மத்திய பணியாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி நடந்தது.
- இப்போட்டித் தோ்வுகளுக்கு அக்டோபா் 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம்
மத்திய அரசு சாா்பில் பல்வேறு துறைகளுக்கான உதவிப்பிரிவு அலுவலா், உதவித் தணிக்கை அலுவலா், வருமான வரித்துறை ஆய்வாளா், உதவியாளா் மற்றும் தபால்துறை உதவியாளா் போன்ற 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பவதற்கான போட்டித்தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இளங்கலை பட்டப்ப டிப்பில் தோ்ச்சி பெற்ற வா்கள் இப்போட்டித் தோ்வு களுக்கு அக்டோபா் 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளன. அதில் சோ்ந்து பயிற்சிபெற விரும்புவோா் விண்ணப்ப விவரங்களுடன், வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94873 75737 என்ற மொபைல் எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவிதார்.
- ஜனவரி 23 ந்தேதி வழங்கப்படுவதாக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விருது பெற பரிசீலனைக்கான காலம் 1.7.2022 முதல் 31.8.2022 வரையென தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் :
சுபாஸ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருது இந்திய அரசால் ஆண்டு தோறும் வழங்கப்பட உள்ளதென அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 ம் ஆண்டிற்கு இவ்விருதைப் பெற தகுதியானவர்கள் அரசின் இணையதள முகவரியில் விண்ணப்பித்துபயன்பெறலாம்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையரக உள்த்துறை அமைச்சகம், பேரிடர் மேலாண்மைத் துறையில் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் செய்த சிறப்பான செயல்களை அங்கீகரிக்கும் விதமாக, சுபாஸ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் என்ற விருதை , ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான ஜனவரி 23 ந்தேதி வழங்கப்படுவதாக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருது, சுருள் மற்றும் மூன்று ரொக்க தொகை உடைய ரூ.51 லட்சம், ரூ.5 லட்சம் கொண்டது. மொத்தம் 3 விருதுகள் மட்டும். அனைத்தும் தனிநபராகவோ அல்லது அனைத்தும் நிறுவனமாகவோ அல்லது கூட்டாகவோ வழங்கப்படும். இவ்விருது பெற பரிசீலனைக்கான காலம் 1.7.2022 முதல் 31.8.2022 வரையென தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் கூறப்பட்டுள்ளது.
இவ்விருதுக்கு இணையவழி விண்ணப்பம் செய்வது தொடர்பான விரிவான செயல்முறைகள் darpg.gov.in. "https://awards.gov.in" என்ற இணையதள முகவரியில் கிடைக்கிறது. இவ்விருது குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் நன்கு விளம்பரப்படுத்துமாறும், அதிகளவில் இணையவழி விண்ணப்பங்கள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பதிவு செய்வதை உறுதிப்படுத்துமாறும் அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட இணையதள முகவரியில் "https://awards.gov.in என்ற இணைப்பை பார்வையிட முன்னிலைப்படுத்தவும் , மாவட்ட உள்ளூர் தொலைகாட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தி பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேலும் அனைத்து அரசு துறை அலுவலக அறிவிக்கை பலகைகளில் இவ்விருது குறித்த அரசு கடிதத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே திருப்பூர் மாவட்டத்தில் 1.7.2022 முதல் 31.8.2022 வரையிலான காலத்தில் பேரிடர் மேலாண்மை துறையில் சிறப்பான செயல் புரிந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், 2023 ஆம் ஆண்டு சுபாஸ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதை பெற "https://awards.gov.in" என்ற அரசின் இணையதள முகவரியில் நேரடியாக இணையவழி விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- தொழி லாளர்களிடம் இருந்து கல்வி சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி ஆகும்.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) கிருஷ்ணவேணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழி லாளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறு வனங்கள், உணவு நிறுவ னங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி தொழி லாளர்களின் குழந்தைகளுக்கு பிரிகே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு முடிய கல்வி உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு கல்வி ஊக்கத்தொகை, பாடநூல் உதவித்தொகை, உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு உதவித்தொகை, 10, 12-ம் வகுப்புகளுககு மாதிரி வினாத்தாள் வழங்குதல், தொழிற்பயிற்சி உதவித்தொகை, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில அளவிலான விளையாட தகுதி பெறுபவர்களுக்கு விளையாட்டு உதவித்தொகை,
மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, தையல் எந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை, தொழிலாளிக்கு மூக்கு கண்ணாடி வாங்கியதற்கு உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகிய திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களில் பய னடைய தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தொழிலாளியின் மாத ஊதிய உச்ச வரம்பு அடி ப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தொழி லாளர்களிடம் இருந்து கல்வி சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி ஆகும்.
மேலும் விண்ணப் பங்களை செயலாளர் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரி யிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுளளது.
- இளையோர் திருவிழா போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் செயல்படும் சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா நடத்தும் மாபெரும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா விரைவில் நடைபெற உள்ளது.
நேரு யுவகேந்திரா ஆண்டுதோறும் இளைஞர்களின் ஆற்றல்மிகு திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் இளையோர் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மாவட்ட அளவில் தொடங்கி தேசிய அளவில் நிறைவடையும். இந்த வாய்ப்பை சிவகங்கை மாவட்ட இளைஞர்களும், மாணவ- மாணவிகளும் பயன்படுத்தி திறமைகளை வெளிப்படுத்தலாம்.
1)இளம் எழுத்தாளர் போட்டி கவிதை, 2) இளம் கலைஞர் போட்டி ஓவியம், 3)கைபேசி புகைப்பட போட்டி, 4)பிரகடன பேச்சுப்போட்டி, 5)இளையோர் சொற்பொழிவு, 6)கலைத்திருவிழா ஆகியப் போட்டிகள் நடைபெறுகின்றன. வயது வரம்பு 15 முதல் 29 வரை இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
வரிசை எண் 1 முதல் 3 வரை உள்ள போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.1,000, 2-ம் பரிசு ரூ.750, 3-ம் பரிசு ரூ.500, பிரகடன போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1,000, கலைப்போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2,500, 3-ம் பரிசு ரூ. 1,250.
இளையோர் சொற்பொழிவு நிகழ்வில் சிறப்பாக செயல்படும் 4 இளைஞர்களுக்கு தலா ரூ.1,500-, வீதம் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி இடங்களை பிடித்த இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். முன்பதிவிற்கு முன்பதிவு செய்ய கடைசி நாள்-26.9.2022 மாலை 5 மணி ஆகும்.
மேலும் தகவலுக்கு - 95664 53901, அலுவலகம்-04575 290399 என்ற எண்ணிற்கு தொடா்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கட்டிடங்கள், நிலப்பயன் மாற்றத்துக்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- இந்த நடைமுறை கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்
தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாகவும் மற்றும் விரைவாகவும் மனைப்பிரிவு அனுமதி பெறும் வகையில் கடந்த ஜூன் மாதம் ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் ஏராளமானவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர்.
அதேபோல் தற்போது கட்டிடங்கள் முழுமைத்திட்ட நிலப்பயன் மாற்றம் மற்றும் விரிவு அபிவிருத்தி திட்ட மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை ஒற்றை சாளர முறையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சரிபார்ப்பு படிவத்தின்படி, ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பம் செய்து எளிதாக ஒப்புதல் பெறலாம் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- தற்காலிக பட்டாசு சில்லறை வணிகத்திற்கான உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- தீபாவளி பண்டிகையையொட்டி
அரியலூர்
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் அரியலூர் மாவட்டங்களில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்து கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி உரிமத்தினை பெறுவதற்கு தங்களது விண்ணப்பத்தினை வருகிற 30-ந்தேதிக்குள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலமாக கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 ச.மீ. முதல் 25 ச.மீ. வரை உள்ளடக்கியதாகவும், புலத்தினை குறிக்கும் புல வரைபடத்தில் சாலை வசதி, சுற்றுப்புற தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டு காட்டும் புல வரைபடம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் எனில் உரிமையாளர் வீட்டு வரி செலுத்திய அசல் ரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதம், உரிமத்திற்கான கட்டணம் ரூ.500 அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலுத்து சீட்டு, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள வண்ண புகைப்படம், இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் கார்டு/குடும்ப அட்டை /வாக்காளர் அடையாள அட்டை) ஆகிய வழிமுறைகளை கடைபிடித்து விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் வெடிபொருள் விதிகள் 2008-ன் நிபந்தனைகளை கடைபிடிக்காத விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், மாவட்டங்களில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
- மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
மதுரை
மதுரை மாவட்டத்தை சேர்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள்குறை தீர்க்கும் கூட்டரங்கில் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் உள்ள குறைகளை குறிப்பிட்டு, கலெக்டருக்கு கீழ்கண்ட விபர குறிப்புகளுடன் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
மனுவின் மீது ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மனு என்று குறிப்பிட வேண்டும். விண்ணப்பம் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கண்டிப்பாக இரு நகல்கள் அனுப்பப்பட வேண்டும். ஓய்வூதியர் பெயர் (குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தால் உறவுமுறை) குறிப்பிடப்பட வேண்டும்.
ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வந்தால் அவை சம்பந்தமான விபரம், ஓய்வூதிய புத்தக எண் மற்றும் கருவூலத்தின் பெயர் ஆகியவை குறிப்பிட வேண்டும். ஓய்வூதியப் பிரேரணை சென்னை மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருந்தால் அதன் விபரம் குறிப்பிட வேண்டும். ஓய்வூதிய பலன்கள் பெறுவது தொடர்பான கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து விண்ணப்பிக்கவும், கோரிக்கையின் விபரம் தெளிவாக குறிப்பிட வேண்டும். ஓய்வூதியதாரர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய அலுவலர் மற்றும் அலுவலகத்தின் முழு முகவரி, தொலைபேசி எண்ணுடன் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். பிற மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் ஓய்வூதியர் குறை தீாக்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு துறைகளில் இருந்து ஓய்வூதியப் பிரேரணை அனுப்புவதில் ஏற்படும் தாமதம் மற்றும் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் விவாதித்து குறைகளை களைய விரைந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் மதுரை மாவட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பதிலளிக்க உள்ளனர்.
எனவே 30-ந்தேதி நடைபெற உள்ள ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு 15-ந்தேதிக்குள் மனு செய்துள்ள ஓய்வூதியதாரர்கள், அன்றைய தினம் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- விருதுநகர் மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் வரையிலான மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
- இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்புற அனைத்து ஆண், பெண் இருபாலரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக ரூ.17.50 லட்சம் வரையிலான மானித்துடன் கடனுதவி பெற்று புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் 18 வயதிற்கு மேல் இருக்கவேண்டும். சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் உற்பத்திப் பிரிவின் கீழ் ரூ. 10 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேவைப் பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வரையிலும் உற்பத்திப் பிரிவிற்கு ரூ. 50 லட்சம் வரையிலும் தொழில் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.
2022-23-ம் நிதி ஆண்டிற்கான குறியீடு 216 நபர்களுக்கு ரூ.6.24 கோடி மானியம் என விருதுநகர் மாவட்ட தொழில் மையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் வழி முறைகளைப் பின்பற்றி வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகர்ப்புறத்தில் 25 சதவீத மானியம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.
மேலும் இந்த திட்டத்தில் திருத்திய வழிகாட்டுதலின்படி கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்படும் திட்ட அறிக்கையின் பேரில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் பண்ணைகள் சார்ந்த தொழில் தொடங்க இந்த அலுவலகம் மூலம் கடன் வசதி செய்து தரப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த ஆர்வம் உள்ள தொழில் திறமையுள்ள ஆண், பெண் தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் போது ஆதார் எண், பெயர் ஆகியவற்றை பதிவு செய்யும் போது ஏஜென்ஸி என்ற option வரும்போது DIC என தேர்ந்தெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் (89255 34036) என்ற முகவரியில் அணுகி பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமை கோரி இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யும் உரிமங்களை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமை கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்கள் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யும் உரிமங்களை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வெடி பொருள் விதிகள் 2008-ன் படி தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரி க்கப்பட்ட சேவை மையங்கள் ஏதேனும் ஒன்றில் சேவை கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்ப ங்களை வரும் 30-ந் தேதி முடிய பதிவு செய்யலாம். 30-ந் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ண ப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
குறிப்பிட்ட காலக்கெ டுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்தவர்கள் பொது சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ஒப்புகை சீட்டுடன் புல வரைபடம் (6 நகல்கள்) கிரைய பத்திர நகல்கள்-6 (அசல் மற்றும் 5 நகல்கள்), சேவை கட்டணம் ரூ.500 செலுத்திய தற்கான ரசீது, முகவரிக்கான ஆதாரம் ( நிரந்தர கணக்கு எண் அட்டை/ ஆதார் அட்டை/ குடும்ப அட்டை), சொத்து வரி செலுத்திய தற்கான ரசீது மற்றும் கடவு சீட்டு அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவல–கத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மேற்படி விண்ணப்பம் ஏற்கப்பட்டது எனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- சூரிய ஒளி மின்வேலியினை 3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்திட உள்ளது.
- ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர் அல்லது 566 மீட்டர் சூரிய மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.
திருப்பூர் :
விவசாய நிலங்களில் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலி அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத வண்ணமும், விளைபொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடனும் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலியினை 3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2022-23ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட உள்ளது.
சூரிய ஒளி மின்வேலி அமைப்பானது சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தினால் இயங்க கூடியது. சூரிய ஒளி மின்வேலி அமைப்பதனால் விலங்குகள் ,வேட்டைக்காரர்கள் மற்றும் அன்னியர்களுக்கு மின் வேலியில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்து விசை மின் அதிர்ச்சியினால் அசௌகரியம் ஏற்பட்டு விளை பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படாமலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பில்லாமலும் விவசாயிகளுக்கு கிடைத்திட வகை செய்யும்.
ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 2 ஹெக்டேர் பரப்பு அல்லது 566 மீட்டர் சூரிய மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்படும் .சூரிய மின்வேலி அமைப்பதற்கான செலவு தொகையில் 40 சதவீதம் 5 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க (566 மீட்டருக்கு) உண்டான செலவுத்தொகை ரூ.2,08,296 வீதம், 7 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க (566 மீட்டருக்கு) உண்டான செலவுத்தொகை ரூ.2,26,263 வீதம் 10 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க (566 மீட்டருக்கு) உண்டான செலவுத்தொகை ரூ.2,52,879 வீதம், விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு தெரிவு செய்து கொள்ளலாம்.
எனவே இந்த திட்டத்தில் பயன்பெற வன விலங்கினால் ஏற்படும் சேதாரங்களை தவிர்க்கும் பொருட்டு உடுமலைப்பேட்டை வனப்பகுதிகளுக்கு அருகில் விருப்பமுள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் (வே-பொ) உடுமலைபேட்டை , யசோதா ராமலிங்கம் லேஅவுட், (செல்போன் எண் : 9865497731) அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்