search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அருண் படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மஞ்சாடி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன்(25). இவரது நண்பர்கள் கிழக்கே பரம்பில் வீடு பகுதியை சேர்ந்த ஆசிப் அர்ஷத்(24), மஞ்சாடி புதுப்புறம்பு பகுதியை சேர்ந்த அருண்(25).

    இவர்கள் 3 பேரும் தங்களுடைய நண்பரின் திருமணத்திற்காக நேற்று வெளியூருக்கு சென்றிருந்தனர். திருமண விழா கொண்டாட்டங்கள் முடிந்து, 3 பேரும் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    எர்ணாகுளம் மாவட்டம் கச்சேரிப்பாடி பகுதியில் இன்று அதிகாலை வந்த போது, அங்கிருந்த சுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். 3 வாலிபர்கள் படுகாயமடைந்து சாலையில் கிடந்ததை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பார்ததனர்.

    அது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த விபத்தில் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் மற்றும் ஆசிப் அர்ஷத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அருண் படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயிரிழந்த ஜஸ்டின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-மதுரை சாலை தோமையார்புரம் ஏ.டி.காலனியை சேர்ந்தவர் ஜஸ்டின்(38). இவரது மனைவி பிரேமா(32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை மைசூரில் இருந்து தேனிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச்சென்றார். அப்போது திடீரென லாரி தானாக நகர்ந்து அங்கிருந்த ஜஸ்டின் வீட்டிற்குள் புகுந்தது.

    இதில் ஜஸ்டின் மீது சுவர் இடிந்து விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரேமாவிற்கு தலையில் பலத்த காயமும், மகன்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. லாரி வீட்டிற்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேமா மற்றும் அவரது குழந்தைகளை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த ஜஸ்டின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரேமா நிலைமை கவலைக்கிடமாக இருக்கவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். லாரி டிரைவரான திருவண்ணாமலையை சேர்ந்த பழனி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • டிரைவர் பஸ்சை நிறுத்த முயன்றதில் பஸ் ரோட்டோரம் உள்ள 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம்:

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த 35 பேர் சுற்றுலா பஸ் ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

    கடந்த சில நாட்களாக நீலகிரியில் முகாமிட்டு அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் அவர்கள் நேற்று இரவு தாங்கள் வந்த பஸ்சில் ஊட்டியில் இருந்து கொடைக்கானலுக்கு புறப்பட்டனர்.

    நள்ளிரவில் அந்த பஸ் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது ஊட்டியைச் சேர்ந்த சையது அலி (வயது 42), அவரது மனைவி அஸ்மா (35) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்து கொண்டு இருந்தனர்.

    பர்லியார் தோட்டக்கலை பண்ணை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சுற்றுலாபயணிகள் வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    டிரைவர் பஸ்சை நிறுத்த முயன்றதில் பஸ் ரோட்டோரம் உள்ள 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    மோட்டார் சைக்கிளில் வந்த சையது அலி, அவரது மனைவி அஸ்மா ஆகியோர் பஸ்சின் அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.

    பஸ் கவிழ்ந்ததில் அதில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. ஆம்புலன்சு ஊழியர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாராக ஓடியது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    சேலத்திலிருந்து கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் நடக்கும் திருமண விழாவிற்கு வேனில் 15-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நள்ளிரவு வந்தனர். வேனை சேலத்தை சேர்ந்த தினேஷ் ஓட்டினார்.

    இந்த வேன் இன்று காலை 5.30 மணியளவில் விருத்தாசலம் அருகே கோமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாராக ஓடியது. இதனால் வேனில் இருந்தவர்கள் அலறினர். தறிகெட்டு ஓடிய வேன் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பாகம் முழுவதும் நொறுங்கியது. வேனில் இருந்த டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த விபத்தை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுபற்றி தகவலை விருத்தாசம் போலீசாருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்கு செல்லும்போது வேன் மரத்தில்மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • விபத்து ஏற்படும் வகையில் சாலையில் மாடுகள் சுற்றுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். சோமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி வினோதா. இவர்களது மகன்கள் நித்தின், ருத்ரேஷ் (வயது 3½).

    நேற்று முன்தினம் மாலை ராமகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் நடுவீரப்பட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற நடிகர்கள் ஷாருக்கான்-விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் திரைப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இரவு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அனைவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். நித்தின் மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்திலும், பின்பக்க இருக்கையில் வினோதா மகன் ருத்தரேசை கையில் பிடித்தபடி இருந்தனர்.

    இரவு 10 மணியளவில் சோமங்கலம்-தாம்பரம் சாலையை கடக்க முயன்றபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு புகுந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதி நிலை தடுமாறியது. அந்த நேரத்தில் எதிரே வந்த லாரியின் மீதும் மோட்டார் சைக்கிள் மோதி சரிந்தது. இதில் ராமகிருஷ்ணன் குடும்பத்தோடு சாலையில் விழுந்தார். சாலையில் விழுந்த வேகத்தில் சிறுவன் ருத்ரேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராமகிருஷ்ணன், அவரது மனைவி வினோதா, மற்றொரு மகன் நித்தின் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தலையில் பலத்த காயம் அடைந்து இருந்த ருத்ரேஷ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி திருமுடிவாக்கம் பகுதியில் நாகம்மாள் என்பவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையில் திடீரென புகுந்த மாடு மீது மோதியதில் கீழே விழுந்து பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து தாயுடன் வந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கியது குறிப்பிடத்தக்கது.

    விபத்து ஏற்படும் வகையில் சாலையில் மாடுகள் சுற்றுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இருவரும் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தென்காசி எல்.ஆர்.எஸ். பாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 22). ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெருவைச் சேர்ந்தவர் முத்துமணி (29). நண்பர்களான இவர்கள் இருவரும் ராஜபாளையம் செல்லும் வழியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் கார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ராஜபாளையம் ரோட்டில் வன்னியம்பட்டியை அடுத்த தனியார் குண்டூசி மில் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அதே சமயம் கேரள மாநிலம் கொல்லம் அவனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மெரின் வினிதா (32) என்பவர் தனது குடும்பத்தினருடன் வேளாங் கண்ணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மின்னல் வேகத்தில் வந்த கார் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குருமூர்த்தி, முத்துமணி இருவரும் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த வன்னியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளோடு நண்பர்கள் விக்னேஷ், யுவராஜ் ஆகியோர் விழுந்தனர்.
    • போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம், மேட்டு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது23). இவர் நேற்று இரவு பாரதி நகர் 2-வது தெருவை சேர்ந்த நண்பரான யுவராஜ் (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மற்றொரு நண்பரை சந்திக்க சென்றார்.

    பின்னர் நண்பர்கள் 2 பேரும் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். பாடி மேம்பாலம் அருகே 200 அடிசாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிக்காக அங்கு கனரக வேன் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென கனரக வேன் மற்றும் அதன் அருகே நின்று கொண்டு இருந்த தொழிலாளி ஏழுமலை (60) மீது வேகமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளோடு நண்பர்கள் விக்னேஷ், யுவராஜ் ஆகியோர் விழுந்தனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். யுவராஜ், ஏழுமலை ஆகி யோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிசிக்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்.

    • பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
    • பழனி கோவிலுக்கு சென்ற போது விபத்தில் தாய்-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தாராபுரம்:

    ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவர் இன்று காலை அவரது பெற்றோர் திருமூர்த்தி-தேவி மற்றும் சகோதரி சவுமியா ஆகியோருடன் பழனி கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றார். காரை சரவணன் ஓட்டினார்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மணக்கடவு பகுதியில் செல்லும் போது முன்னால் சென்ற காரை முந்த முயன்ற போது, எதிரே பழனி கோவிலுக்கு சென்று விட்டு, நாமக்கல் ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த வேன் மீது மோதியதுடன், அந்த வழியாக சென்ற மற்றொரு கார் மீதும் மோதியது. இதில் சரவணன் மற்றும் அவரது பெற்றோர், சகோதரி காயமடைந்தனர். பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் சென்ற காங்கயம் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த டிரைவர் ஆனந்தன், அபிராமி, அஜய், ஹாசினி, லலிதா ஆகியோர் காயமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அலங்கியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 8பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக சரவணனின் தாய் தேவி கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சரவணன் உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சுற்றுலா வேனில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக தாராபுரம் மணக்கடவு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பழனி கோவிலுக்கு சென்ற போது விபத்தில் தாய்-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காரில் இருந்த சண்டிகரை சேர்ந்த தஸ்பீர், திவ்யா மற்றும் நிகாஷ் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
    • கார் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    புதுடெல்லியில் இருந்து மும்பை நோக்கி செல்லும் விரைவு சாலையில் ஆடம்பர ரக ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது.

    அப்போது மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் ஓட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கார் அரியானாவில் நூஹ் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதி விபத்தில் சிக்கியது.

    இதனால் டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த பயங்கர விபத்தில் லாரி டிரைவரான ராம்பிரீத் மற்றும் அவரது உதவியாளரான குல்தீப் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    ஆடம்பர காரில் இருந்த சண்டிகரை சேர்ந்த தஸ்பீர், திவ்யா மற்றும் நிகாஷ் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.

    ரூ.10 கோடி மதிப்பிலான காரின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

    காரை ஓட்டி வந்தவர்கள் அதிவேகமாக இயக்கியதாகவும், சாலையின் வலது மற்றும் இடது என 2 பக்கங்களிலும் வளைத்து ஓட்டியதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர்.

    விபத்து குறித்து நூஹ் போலீசார் கூறுகையில், டேங்கரில் இருந்தவர்கள் வழக்கமாக இந்த வழித்தடத்தில் செல்லக்கூடியவர்கள். விபத்து ஏற்பட்ட போது இருவாகனங்களும் டெல்லியில் இருந்து வந்து கொண்டு இருந்தன. கார் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் குர்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் வாக்குமூலம் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • கேசவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்து விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

    சங்ககிரி:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா இருகாலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 34).

    இவர் சங்ககிரி குப்பனூர் பகுதியில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் லோடிங் மேனாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு கேசவன் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் திருமணத்திற்கு செல்வதற்காக சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.

    அப்போது வேலம்மா வலசு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் நூல் மில் வேன் மோதியது. இதில் கேசவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்து விட்டார்.

    இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவரான தேவூர் வட்ராம்பாளையத்தைச் சேர்ந்த பாலு (43) என்பவர் வேனை அதே இடத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர். பலியான கேசவனுக்கு செல்வராணி என்ற மனைவியும், சாய்கவுசிக் (6), வினிதா (3) என்ற குழந்தைகளும் உள்ளனர்.

    • நிலைதடுமாறி கீழே விழுந்த வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மரூர்பட்டி அடுத்த குமாரகவுண்டனூரை சேர்ந்தவர் முனியன் மகன் வரதராஜ் (வயது 72).

    மாட்டு வியாபாரியான இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பொம்மைகுட்டை மேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் வரதராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீசார் வரதராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஜேடர்பாளையம் மணல்மேடு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் மைதீஸ்வரன் (21). கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்த முருகானந்தன் மகன் சுரேந்திரன் (23) ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் நாமக்கல்-பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது வள்ளிபுரம் மேம்பாலம் பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த டாரஸ் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மைதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சுரேந்திரன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சுரேந்திரனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனார். பின்னர் அவர் மேல்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் தூக்கி வீசப்பட்ட திருமாறன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
    • வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஆசாத் ரோட்டை சேர்ந்தவர் லட்சுமண சுவாமி. இவரது மகன் திருமாறன்(வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சமீப காலமாக அவர் நெல்லையில் தனது வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளத்தில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்ப்பதற்காக திருமாறன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். நள்ளிரவில் படம் முடிந்த பின்னர் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தை அருகே தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட திருமாறன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று திருமாறன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    ×