search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    • காரில் பயணம் செய்த சிவப்பிரகாசம் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்துப்பட்டு:

    காஞ்சிபுரம் இ.பி. நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 57). மனைவி மாலதி (53). மகள் நிவேதா (24). இவர்கள் அனைவரும் காரில் நேற்று மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றனர்.

    காரை சிவப்பிரகாசம் ஓட்டி சென்றார். சாமி தரிசனம் முடிந்து இன்று காலை 7 மணி அளவில் சேத்துப்பட்டு வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோழி புலியூர் கூட்ரோடு அருகே கார் வந்து கொண்டிருந்தது.

    'அப்போது தூக்க கலக்கத்தில் இருந்த சிவப்பிரகாசம் காரை தாறுமாறாக ஓட்டினார். இதில் அருகே இருந்த சிறு பாலத்தில் கார் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    காரில் பயணம் செய்த சிவப்பிரகாசம் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் சிவப்பிரகாசத்தையும் நிவேதாவையும் மீட்டனர். அப்போது மாலதி இறந்து விட்டதாக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கூறியதால் தந்தை, மகளை வந்தவாசி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் மாலதிக்கு உயிர் இருப்பதாக கூறி அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாலதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தேசூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சீதாராமன் இடுப்பாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • சீதாராமனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

    குளித்தலை:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரோடு ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன் (வயது 34). இவர் அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    மதுரை மாவட்டம் வில்லாபுரம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26) . இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    நண்பர்களான இவர்கள் இருவரும் கோவையில் நேற்று நடைபெற்ற தனியார் வங்கி மேலாளர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு சென்றனர். பின்னர் ஒரு காரில் இருவரும் வீடு திரும்பினர்.இந்த கார் நேற்று நள்ளிரவு குளித்தலை அருகே திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் வந்த போது விபத்துக்குள்ளானது. திருச்சியில் இருந்து கரூர் நோக்கி தைல மரம் ஏற்றிச் சென்ற லாரியும் அந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் சீதாராமன் இடுப்பாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். திருச்சி மேலாளர் விக்னேஷ் படுகாயத்துடன் தப்பினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து இறந்த சீதாராமனின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சீதாராமனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். உறவினர்கள் அவரை தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்துள்ளனர்.

    மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்தில் கணவர் இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காயம் அடைந்தவர்கள் புல்தானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலை பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஒரு ஆம்னி பஸ்சில் அமர்நாத் யாத்திரைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஹிங்கோலிக்கு திரும்பினர். பஸ் மல்காபூர் பகுதியில் உள்ள நந்தூர் நாகா மேம்பாலத்தில் வந்தபோது அந்தவழியாக நாசிக் நோக்கி தனியார் ஆம்னி பஸ் சென்றது. இந்த பஸ் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றது.

    அப்போது எதிர்பாராதவிதமாக 2 ஆம்னி பஸ்களும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பலியானவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். காயம் அடைந்தவர்கள் புல்தானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயம் அடைந்த 32 பயணிகளுக்கு அருகிலுள்ள குருத்வாராவில் முதலுதவி அளிக்கப்பட்டது. விபத்து காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஷேர் ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • சாலையில் ஓரமாக பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

    பாகூர்:

    கடலூரில் இருந்து கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், ரெட்டி சாவடிக்கான ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.

    இந்த ஆட்டோக்கள் பெரும்பாலும் முறையாக அரசு அனுமதி பெறாமல் வாய்மொழி உத்தரவில் சுமார் 100 வண்டிகள் இயக்கப்படுகிறது.

    அதுபோல இன்று காலை கடலூரில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று கிருமாம்பாக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கன்னியகோயில் 4 முனை சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையை பைக்கில் கடக்க முயன்ற குழந்தையுடன் வந்த பெண் மீது மோதியது.

    மேலும் ஷேர் ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் வந்தவர்களும் சாலையைக் கடந்த பைக்கில் வந்தவர்களும் காயமடைந்தனர். அப்போது சாலையில் ஓரமாக பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

    விபத்தில் கடலூரைச் சேர்ந்த செவிலியர் சுதா(41), அருள்(42), நாராயணன்(50), மற்றும் குழந்தை கல்லூரி மாணவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 6 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்துக்கு ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் முறையாக பராமரிக்கபடாததும், போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் முக்கிய சந்திப்புக்களில் பணியில் ஈடுபடுவது கிடையாது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    • விபத்தில் ரவி வர்மா பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
    • கார் டிரைவர் சம்சுதீன் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் ரவி வர்மா. 60 வயது முதியவரான இவர் தி. நகர் வடக்கு உஸ்மான் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவி வர்மா பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.

    இது தொடர்பாக கார் டிரைவர் சம்சுதீன் கைது செய்யப்பட்டார். இந்த கார் ஜவுளி கடை அதிபர் ஒரு வருடையது என்பது தெரிய வந்துள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் நகை பறிப்பில் ஈடுபட்டனர்.
    • பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடை வீதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இங்கு எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

    இந்த நிலையில் பெண் ஒருவர் நேற்று காலை பொருட்கள் வாங்குவதற்காக பொள்ளாச்சிக்கு வந்திருந்தார். அங்கு உள்ள வெங்கட்ரமணன் வீதியில் நடந்து சென்றார். அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் வந்தனர்.

    திடீரென நடந்து சென்ற பெண்ணை அவர்கள் கீழே தள்ளினர். இதில் அந்த பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் நகை பறிப்பில் ஈடுபட்டனர். அதிர்ச்சி அடைந்த பெண் சுதாரித்து கொண்டு தங்கச்சங்கிலியை காப்பாற்றுவதற்காக கொள்ளையர்களுடன் பேராடினார்.

    இதற்கிடையே கடைவீதியில் நின்றிருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனை பார்த்த 2 கொள்ளையர்களும் நகைப்பறிப்பு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பொள்ளாச்சியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கடைவீதி பஜாரில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிள் கும்பல் துணிகர வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு  கேமராக்களை கைப்பற்றிய போலீசார் அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெண்ணை கீழே தள்ளி நகைப்பறிப்பில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் முகக்கவசமும், பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் ஹெல்மெட்டும் அணிந்து இருந்தனர். இதுதொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

    இந்தநிலையில் பொள்ளாச்சி மேம்பாலத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் நேற்று இரவு அதிவேகமாக வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.

    இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த 2 பேரும் பொள்ளாச்சி கடைவீதியில் பெண் ஒருவரிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது.

    போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் விபத்தில் பலியானது தாராபுரத்தை சேர்ந்த சஞ்சய்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. இன்னொருவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக பொள்ளாச்சி போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி கடை வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 பேர், மேம்பால சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • அடுத்தடுத்து 3 வாகனங்களும் மோதிக் கொண்டதால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
    • விபத்தில் தனியார் பஸ் டிரைவர் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    ஒட்டன்சத்திரம்:

    கோவையில் இருந்து தென்காசி நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆம்னி பஸ் வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சை தென்காசியை சேர்ந்த காளிதாஸ் (வயது36) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பாறைவலசு பிரிவு பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது மதுரையில் இருந்து கோவை நோக்கி புண்ணாக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி மீது ஆம்னிபஸ் பயங்கரமாக மோதியது. அப்போது லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சும், பயங்கரமாக மோதியது. அடுத்தடுத்து 3 வாகனங்களும் மோதிக் கொண்டதால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் தனியார் பஸ் மற்றும் லாரியின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.

    விபத்தில் தனியார் பஸ் டிரைவர் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து அம்பிளிக்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய 14 பயணிகளை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். தனியார் பஸ் டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரி மீது மோதியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி மாற்று வாகனங்கள் மூலம் பயணிகளை அனுப்பி வைத்தனர்.

    • காரில் பயணம் செய்த பாலச்சந்தர் என்பவர் இறந்து போனார்.
    • விபத்து தொடர்பாக வடக்கு போக்குவரத்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரே காரில் இன்று அதிகாலை புதுவைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    வழுதாவூர் சாலையில் கார் அதிவேகமாக சென்ற போது மேட்டுப்பாளையத்தில் கே.எஸ்.பி. ரமேஷ் அலுவலகம் அருகே வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலை யோரத்தில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. மேலும் அருகில் உள்ள மின்கம்பம் மீது மோதியதில் காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.

    இதில் காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாய மடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காரில் பயணம் செய்தவர்களை மீட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக்கலூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதில் காரில் பயணம் செய்த பாலச்சந்தர் என்பவர் இறந்து போனார். மேலும் திருமூர்த்தி என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படடுள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக வடக்கு போக்குவரத்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    புதுவையில் கடந்த சில நாட்களாக இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த வாரம் புதுவைக்கு சுற்றுலா வந்த சென்னை வாலிபர்கள் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி சென்றனர். இதில் 15-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமானது.

    அதுபோல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புதுவைக்கு கிழக்கு கடற்கரை சாலையில் வந்த கார்சாலையோரம் நின்றிருந்த கும்பல் மீது மோதியது. இதில் 4 மீனவ பெண்கள் பலியானார்கள்.

    மது குடித்து விட்டு காரை தாறுமாறாக ஓட்டி செல்வதால் புதுவையில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனை போக்குவரத்து போலீசார் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • போலீசார் விரைந்து வந்து பலியான சீனிவாசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த மிட்டன மில்லி ராணுவ குடியிருப்பை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது51).இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கொசம்பாளையம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் அவர் மிட்டன மில்லியில் இருந்து திருநின்றவூர் வழியாக பணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை பஸ்நிலையம் அருகே பெரியபாளையம் சாலையில் சென்றபோது திடீரென லாரி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சீனிவாசன் சிக்கிக்கொண்டார். இதில் ஹெல்மெட் அணிந்த நிலையிலும் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான சீனிவாசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சின்னமனூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் வாட்டர் டேங்க் பின்புறம் வசித்து வருபவர் கண்ணன். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அருள்கார்த்திகா (17) என்ற மகளும், பார்த்த சாரதி (16) என்ற மகனும் உள்ளனர்.

    பார்த்தசாரதி ஓடைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று தனது நண்பரின் ஆட்டோவை பார்த்த சாரதி சுக்காங்கால்பட்டி அருகே ஓட்டிச் சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சின்னமனூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூவரசன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
    • மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் எலவடை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ்.

    இவரது மகன் பூவரசன் (வயது27). இவரது இவருக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், ஒரு மகளும், 3 மாதம் ஆனநிலையில் ஒரு மகனும் உள்ளனர்.

    பூவரசன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் விடுமுறையில் கடந்த 9 மாதங்களுக்கு சொந்த ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பூவரசன் மொரப்பூரில் இருந்து கல்லாவிக்கு சென்றார். அப்போது கல்லாவி சாலையில் வழியாக வந்தபோது லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த பூவரசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சகை்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த பூவரசன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த வெங்கடாசலபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • விபத்து குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் மணி. இவரது மகன்கள் நரசிம்மன்(38), வெங்கடாசலபதி (33). இவர்களது மைத்துனர் ராஜேந்திரன்(37). அனைவரும் பெயிண்டராக வேலைபார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் வெங்கடா சலபதி உள்பட 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்க சென்றனர். அப்போது வேப்பம்பட்டு பகுதியில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வெங்கத்தூர் நோக்கி வந்தது. அப்போது சரக்கு வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடாசலபதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அண்ணன் நரசிம்மன், மைத்துனர் ராஜேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீஸ இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் விரைந்து வந்து பலத்த காயம் அடைந்த ராஜேந்திரனை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும், நரசிம்மனை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×