என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விருதுகள்"
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 375 மனுக்கள் பெறப்பட்டது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 375 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப் பட்ட அலுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 2021-22 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு விருது மற்றும் காசோலைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மண்டல கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது.
- இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை
தமிழக சிறைத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை சரகத்தில் மட்டும் 2 பெண்கள் உள்பட 14 சிறை காவலர்களுக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய சிறை மைதானத்தில் தமிழக அரசின் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 16 பேருக்கும் சரக டி.ஐ.ஜி. பழனி பதக்கம் வழங்கி பாராட்டினார். இதில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன், சிறை அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது
- மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்திற்கு 14 விருதுகள் வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் இந்திய மருத்துவ சங்க மாநாடு நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் பணிகளை பாராட்டி 14 விருதுகளை பெரம்பலூர் மருத்துவ சங்கம் சமூக சேவைக்காகமுதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் அதிகளவில் இலவச மருத்துவ முகாம் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது மேலும் குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியது. தேசிய மருத்துவ தினத்தை ஒட்டி மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தது. தமிழக அளவில் சாதனை படைத்த இந்திய மருத்துவ சங்கத்தில் அதிக அளவில் டாக்டர்களை உறுப்பினர்களாக சேர்த்தது மற்றும் சமூக சேவையினையும் பாராட்டியும் 14 விருதுகளை பெரம்பலூர் மாவட்ட இந்திய மருத்துவர்கள் சங்கத்தினருக்கு சென்னையில் நடந்த சங்க மாநாட்டில் வழங்கப்பட்டது. இதனை பெரம்பலூர் சங்க நிர்வாகிகளும் மருத்துவர்கள், டாக்டர்கள் வல்லபன், சுதாகர், செங்குட்டுவன், சுமதி செங்குட்டுவன், திருமால், ராஜா முகமது, பகுத்தறிவாளன், கலா, நேரு, ரமேஷ், அன்பரசன்ஆகியோரிடம் இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் டாக்டர் ஜெயலால், செயலாளர் டாக்டர்.தியாகராஜன் முன்னிலையில் 14 விருதுகள் பெரம்பலூர் சங்கத்துக்கு வழங்கினர். முன்னதாக புதிய மாநில மருத்துவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் செந்தமிழ் பாரிக்கு பெரம்பலூர் சங்கத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- 1000 அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- மரக் கன்றுகள் நட்டு சிறப்புற பராமரிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பசுமை பாதுகாவலர் விருது சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கப்பட்டது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்–விடும் பாரதம் சமூக சேவைக்–குழுவின் ஏற்பாட்டில், மரக்கன்றுகளை வளர்த்து பசுமைப் பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயலாற்றி வரும் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1000 அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் குமாரபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப் பள்ளி நாராயண நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தர்மத்தோப்பு-வாசுகி நகர் ஆகிய பள்ளிகளில் செடிகள், மரக் கன்றுகள் நட்டு சிறப்புற பராமரிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பசுமை பாதுகாவலர் விருது சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தளிர்விடும் பாரதம் சமூக சேவைக் குழுவின் தலைவர் சீனிவாசன், செயலாளர் பிரபு வரதராஜன், ஜூவல்லரி செந்தில், மகேந்திரன், செல்வராணி உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் கெளசல்யமணி, பாரதி, நாகரத்தினம் மற்றும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்றரை பவுன் தங்க செயின் வழங்கப்படும்.
- 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அமிர்தவல்லி, வர்ஷினி, பரமேஸ்வரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை வைத்தார். தலைமை ஆசிரியர் அருளாளன் வரவேற்று பேசினார். மாணவ -மாணவிகளுக்கு, கலைவாணன் எம்.எல்.ஏ., சைக்கிள்களை வழங்கி பேசும்போது:-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்றரை பவுன் தங்கச் செயின் வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் முருகதாஸ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அபிநேசா, மாலஸ்ரீ, அட்சயா ஆகியோருக்கும் 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அமிர்தவல்லி, வர்ஷினி, பரமேஸ்வரி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான்அருள் நன்றி கூறினார்.
- கடலூர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதாக் தொடர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- தகுதியுடையவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம் ,அரசுசேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் விண்ணப்பங்கள் பெற்று 30 ந்தேதி க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதாக் தொடர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதானது துணிச்சல் மிகுந்த பாராட்டுதலுக்குறிய செயல்கள் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. மனித உயிர்களை காப்பாற்றும் பொருட்டு நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியவர்கள், தீ விபத்தில் சிக்கியவர்கள், மின்சார விபத்து நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்க விபத்திலிருந்து மனிதர்களை காப்பாற்றியவர்களுக்கு இவ்விருதானது மூன்று வகைகளாக வழங்கப்படுகிறது. சர்வோட்டம் ஜீவன் ரக்ஷாபதாக், உத்தம் ஜீவன் ரக்ஷாபதாக, ஜீவன் ரக்ஷாபதாக் மேற்கண்ட வகைகள் கொண்ட விருதுகள் பெற தகுதியுடையவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம் ,அரசுசேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் விண்ணப்பங்கள் பெற்று 30 ந்தேதி க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
- “ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்” விருதாளரின் மரணத்திற்கு பிறகு வழங்கப்பட்டு வருகிறது.
- மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
சேலம்:
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் பணியாற்றி மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு வரும் இருபாலினத்தவருக்குமான "ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்" விருதாளரின் மரணத்திற்கு பிறகு வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 2022 -ம் ஆண்டிற்கான "ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கு" ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ சம்பவங்கள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுதல், மின்சாரம் நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் இருந்து மீட்பு நடவடிக்கை போன்ற மனிதாபிமானம் சார்ந்த சிறந்த செயல்களில் ஈடுபட்டுவரும் இரு பாலினத்தவரிடமிருந்தும் கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆவணங்களுடன் கூடிய கருத்துருவை 25.07.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- காஞ்சிபுரம் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக கலைத் துறையில் சிறந்து விளங்குகின்ற 10 சிறந்த கலைஞர்களுக்கு அரசு நல திட்ட உதவிகள்.
- காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் பா.ஹேமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மண்டலக் கலை பண்பாட்டு துறையின், காஞ்சிபுரம் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக கலைத் துறையில் சிறந்து விளங்குகின்ற 10 சிறந்த கலைஞர்களுக்கு அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறுகாவேரிபாக்கம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி ஆகியோர் முன்னிலையில் 10 சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகள் வழங்கப்பட்டது.
கலைமுதுமணி பிரிவில் காஞ்சிபுரம் வ.ஜபருல்லாகான் (மிருதங்க கலைஞர்), திம்மராஜம்பேட்டை சுந்தரமூர்த்தி (கைசிலம்ப கலைஞர்), கலைநன்மணி பிரிவில் மாமல்லபுரம் து.தனசேகரன் (கற்சிற்பக் கலைஞர்), ஐய்யம்பேட்டை ம.அண்ணாமலை (ஆர்மோனிய பாடகர்) கலைசுடர்மணி பிரிவில் மணமை சா.மதன் (ஓவியக் கலைஞர்), தெள்ளிமேடு கு.கனகராசு (நாதஸ்வரக் கலைஞர்), கலைவளர்மணி பிரிவில் காஞ்சிபுரம் சு.லலிதா (பரதநாட்டியக் கலைஞர்) பட்டிப்புலம் ராஜரத்தினம் (சிற்பக்கலைஞர்), கலைஇளமணி பிரிவில் த.திவ்யா (பரதநாட்டியக் கலைஞர்) வி.தர்ஷினி (சிலம்பாட்டக் கலைஞர்) ஆகியோர்களுக்கு விருதுகள், காசோலைகள் மற்றும் பொன்னாடைகள் போத்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் உத்தரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் பா.ஹேமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்