search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல்"

    • விருந்து கொடுப்பது எ.வ.வேலுவுக்கு புதிதல்ல.
    • தம்பியும் சீக்கிரம் தீவிர அரசியலுக்கு வரும் என்று உடன் பிறப்புகள் உற்சாகமாக பேசிக் கொண்டார்கள்.

    கட்சி கூட்டத்தை கழக கல்யாணம் போல் நடத்திவிட்டார். அமைச்சர் எ.வ வேலு என்பதுதான் இப்போது தி.மு.க.வில் நடக்கும் பேச்சு தி.மு.க. பாக பொறுப்பாளர்கள் கூட்டத்தை வடக்கு மண்டலத்தில் அமைச்சர் எ.வ.வேலு பொறுப்பு ஏற்று திருவண்ணாமலையில் நடத்தினார்.

    இதுதான் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது மொத்தம் 14000 நிர்வாகிகள்.... அவர்களுக்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் தான் அடேயப்பா என்று எல்லோரையும் பிரமிக்க வைத்தது. பாக பொறுப்பாளர் மாநாட்டுக்கு சற்றும் குறையாத வகையில் நளபாக பொறுப்பாளர் மாநாடு என்று சொல்லும் வகையில் உணவு கூடமும் பிரமிக்க வைத்தது மாவட்டம், தொகுதி, பாகம் என்று தனித்தனியாக விருந்து கொடுக்கப்பட்டது. முன்னதாக அனைவருக்கும் தாம்பூல பை கொடுக்கப்பட்டது. அதில் குடி தண்ணீர் பாட்டில், பென், நோட்டு, ஸ்நாக்ஸ் இருந்தது.

    சாப்பாட்டில் மட்டன் பிரியாணி முதல் வகை வகையான சைவ உணவு வரை இடம் பெற்று இருந்தது. எல்லாமே 'அன்லிமிடெட்' தான்.

    இந்த மாதிரி விருந்து கொடுப்பது எ.வ.வேலுவுக்கு புதிதல்ல. அவ்வப்போது கட்சிக்காரர்களுக்கு சோறு போட்டு வளர்த்து வைக்கிறார் என்று நகைக்சுவையாக சொல்வதுண்டு.

    இந்த கல்யாண வைபோகத்தில் ஹைலைட் எ.வ.வேலு மகன் கம்பன் தான். பம்பரமாக சுழன்று கொண்டிருந்த அவர் கட்சியினர் பார்வையை அடிக்கடி கவர்ந்தார்.

    தம்பியும் சீக்கிரம் தீவிர அரசியலுக்கு வரும் என்று உடன் பிறப்புகள் உற்சாகமாக பேசிக் கொண்டார்கள்.

    • மதச்சார்பின்மை கொள்கையில் ராகுல் காந்தியும் உறுதியாக இருக்கிறார்.
    • மதசார்பின்மையை காப்பாற்ற காங்கிரசோடு இணைந்து களத்தில் நிற்கிறேன் என்றார்.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருப்பதற்கும் காங்கிரசை ஆதரிப்பதற்கும் என்ன காரணம் என்பது பற்றி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

    விடுதலை புலிகளை ஆதரிக்கும் திருமாவளவன் காங்கிரசை ஆதரிக்கலாமா? என்று கேட்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக பாடுபட்ட கட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் முதன்மையான கட்சி என்பதை யாரும் மறக்க முடியாது. இலங்கை தமிழர்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவன் திருமாவளவன்.

    இன்று ஏன் காங்கிரசை ஆதரிக்கிறேன்? பா.ஜனதா அரசால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்துள்ளது. அகில இந்திய அளவில் மதச்சார் பின்மையை ஆதரிக்கும் கட்சி காங்கிரஸ்.

    அன்று நேரு ஆதரித்தார். அவர் வழியில் இந்திரா ஆதரித்தார். அதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தியும் ஆதரித்தார்.

    இன்று மதச்சார்பின்மை கொள்கையில் ராகுல் காந்தியும் உறுதியாக இருக்கிறார். எனவே தான் ஆதரிக்கிறோம்.

    வலிமை இல்லாத கட்சியாக இருந்தாலும் பா ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ்தான். எனவே தான் காங்கிரசை ஆதரிக்கிறேன் . தற்போதைய நிலையில் விடுதலை சிறுத்தைகளால் மட்டும் பாஜனதாவை தோற்கடிக்க முடியுமா? இல்லை திமுகவால் மட்டும் தோற்கடிக்க முடியுமா? எல்லோரும் இணைந்தால் மட்டும் தான் தோற்கடிக்க முடியும். அதனால் தான் மதசார்பின்மையை காப்பாற்ற காங்கிரசோடு இணைந்து களத்தில் நிற்கிறேன் என்றார்.

    அப்போ இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி காங்கிரஸ் என்றது....? அது முடிந்து போன கதை . அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறாரோ?

    • பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பிரிவு துரதிர்ஷ்ட வசமானது.
    • பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் வெற்றிதான் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கும் அடித்தளமாக இருக்கும்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் கோவை விமான நிலையத்தில் நேற்று மதியம் சந்தித்து கொண்டனர். இருவரும் சுமார் ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    தலைவர்கள் இப்படி தனியாக சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தால் தங்கள் ஆதங்கங்களை எப்படியாவது கொட்டி விடுவார்கள் அல்லவா! அப்படித்தான் இந்த நிகழ்வும் அமைந்தது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு அந்த கட்சிகளுக்கு ஏற்படுத்திய வலியைவிட அந்த அணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சியான த.மா.கா.வுக்கு கூடுதல் வலியை ஏற்படுத்தி இருப்பதை வாசன் பட்ட ஆதங்கம் வெளிப்படுத்தியது.

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பிரிவு துரதிர்ஷ்ட வசமானது. தி.மு.க. எதிர்ப்பு அணி ஒன்றாக நிற்க வேண்டும். அ.தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க., பா.ம.க., புதிய தமிழகம் என்று அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியாக நின்றால் எளிதில் வெற்றி பெற முடியும்.

    பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் வெற்றிதான் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கும் அடித்தளமாக இருக்கும் என்ற தனது உள்ள கிடைக்கையை பேச்சின் இடை இடையே வாசன் பதிவு செய்ய தவறவில்லை.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பெரிய அளவில் எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை. அண்ணாமலையின் விமர்சனமும், மேலிடத்தின் பாராமுகமும் தான் அ.தி.மு.க.வினரை ஆத்திரபட வைத்ததை எடப்பாடியின் பேச்சுக்களும் வெளிப்படுத்தியது.

    உடைந்தது உடைந்ததுதான். இனி ஒட்டுவதற்கான வாய்ப்பில்லை என்பதை இரு தலைவர்களும் பேசிக் கொண்டிருந்ததை வைத்து யூகிக்க முடிந்ததாக கூறினார்கள்.

    அரசியல்னா இப்படித்தான் இருக்கும் என்ற மனநிலையோடு எடப்பாடி பழனிசாமி சென்னை விமானத்திலும் வாசன் மும்பை விமானத்திலும் பறந்தார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பைனாகுலர் சின்னத்தை சர்மிளா விரும்பவில்லை.
    • தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா, தெலுங்கானா அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

    தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரசுடன் கைகோர்த்து தேர்தல் களம் காண சர்மிளா விரும்பினார்.

    அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து சர்மிளா 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து தேர்தல் பணியை தொடங்கினார்.

    தனது கட்சிக்கு பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் சர்மிளா விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவரது கட்சிக்கு 'பைனாகுலர்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

    ஆனால் அந்த சின்னத்தை சர்மிளா விரும்பவில்லை. தங்களுக்கு ஏர் உழும் விவசாயி சின்னம் அல்லது பாம்பு புற்று சின்னம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று சர்மிளா விரும்புகிறார்.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட்டுள்ளார்.

    • அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்காளர்களை கவருவதற்காக அரசியல் கட்சியினர் பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானங்களை ஆங்காங்கே பதுக்கி வைத்துள்ளனர்.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறக்கும் படைகள் அமைத்து வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் மது பாட்டில்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்த ரூ.3.68 கோடி மதிப்புள்ளான மது பாட்டில்கள் ரூ.3.17 கோடி ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தெலுங்கானாவில் போலீசார் நடத்திய சோதனையில் இதுவரை 347.16 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியான அ.தி.மு.க. விலகி விட்டது.
    • வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகளும்தான் உள்ளன.

    புதுடெல்லி:

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்திருப்பது பற்றி முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி.யுமான கபில் சிபல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியான அ.தி.மு.க. விலகி விட்டது. பா.ஜனதாவுடன் இன்னும் இருப்பவை எந்த கொள்கையும் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகள்தான்.

    அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் போன்றவர்களின் கட்சிகளும், வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகளும்தான் உள்ளன. பா.ஜனதா, கூடாரத்தில் புகுந்த ஒட்டகம் போன்றது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க.வில் போட்டியிட டிக்கெட் கேட்டு இப்போதே பலர் முயற்சித்து வருகிறார்கள்.
    • ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு மூன்று பேர் வாய்ப்பு கேட்டு காய் நகர்த்தி வருகிறார்கள்.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடுகளை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளன. தமிழகத்தில் தி.மு.க.வினர் கூட்டணி கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதற்கிடையில் தி.மு.க.வில் போட்டியிட டிக்கெட் கேட்டு இப்போதே பலர் முயற்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் வாய்ப்பு கேட்பவர்களை தி.மு.க. தலைமை ஆய்வு செய்து வருகிறது.

    திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.பி. ஞானதிரவியம், பூங்கோதை ஆவடி அருணா மற்றும் சபாநாயகர் அப்பாவு மகன் ஆகியோர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு மூன்று பேர் வாய்ப்பு கேட்டு காய் நகர்த்தி வருகிறார்கள்.

    • கோவை, மதுரை, தென் சென்னை ஆகிய தொகுதிகளில் ஒன்று முக்கியமாக வேண்டும் என்று கமல்ஹாசன் கருதுகிறார்.
    • கோவையை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகம்.

    தான் ஒரு 'பிக்பாஸ்' என்பதால் தொகுதியும் இரண்டு வேண்டும் என்று எதிர் பார்க்கிறார். ஆனால் ஒன்று தான் என்று தி.மு.க. தலைமை உறுதியாக கூறி விட்டதாக கூறப்படுகிறது.

    அப்படியானால் கோவை, மதுரை, தென் சென்னை ஆகிய தொகுதிகளில் ஒன்று முக்கியமாக வேண்டும் என்று கமல்ஹாசன் கருதுகிறார். ஆனால் கோவையில் கமலுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாகவும் எனவே கோவை தொகுதியிலேயே போட்டியிடலாம் என்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதித்து இருக்கிறார்கள்.

    கோவையை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகம். அதேபோல் அ.தி.மு.க.வுக்கும் ஆதரவு இருக்கிறது. எனவே விருமாண்டி விரும்பினால் அந்த தொகுதியை கொடுத்து விடலாம் என்று தி.மு.க.வும் கருதுகிறது.

    • அண்ணாமலையை பா.ஜ.க. தலைமை கண்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
    • அ.தி.மு.க.வினருக்கு சாதகமான பதிலை தெரிவிக்காதது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    அ.தி.மு.க.வுக்கும் பாஜக.-வுக்கும் இடையே, ஏற்பட்டுள்ள கருத்து மோதல் கூட்டணியை உடைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அ.தி.மு.க.வை பொருத்தவரை பா.ஜனதா மேலிடம் அண்ணாமலைக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும் என்பது தான். இதை வலியுறுத்த நேற்று திடீரென்று முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்கள். ஆனால் அவர் நேரம் ஒதுக்கவில்லை.

    இந்நிலையில் அண்ணாமலையை பா.ஜ.க. தலைமை கண்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், எப்படியாவது அமித் ஷாவை சந்தித்து முறையிட வேண்டுமென எண்ணி டெல்லியிலேயே அ.தி.மு.க. தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே அ.தி.மு.க.-வினர் ஜே.பி. நட்டாவை சந்தித்துள்ளனர். ஆனால், அவரும் அ.தி.மு.க.வினருக்கு சாதகமான பதிலை தெரிவிக்காதது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • எங்களுக்கு ஆலயத்தின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது.
    • நம்பிக்கை எதில் இருக்கிறதோ இல்லையோ கை சுத்தமாக இருந்தால் போதும் என்றார்.

    புயல் ஓய்ந்தாலும் அதன் தாக்கம் ஒரு சில நாட்கள் இருப்பது போல சனாதனம் குறித்த சர்ச்சை ஓய்ந்தாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் அது வெளிப்படுகிறது.

    தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஆலயத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் பெயரில் ஆலயத்தை சேர்த்து வைத்துள்ளார்கள் என்று தி.மு.க.வில் அறிவாலயம் என்று பெயர் வைத்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

    எங்களுக்கு ஆலயத்தின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதனால் கமலாலயம் என்று எங்கள் கட்சி அலுவலகத்திற்கு பெயர் வைத்திருக்கிறோம் என்று கிண்டலாக குறிப்பிட்டார். நம்பிக்கை எதில் இருக்கிறதோ இல்லையோ கை சுத்தமாக இருந்தால் போதும் என்றார்.

    • ஜி.கே. வாசன் அவரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
    • வாசனின் வசிய மருந்துக்கு அடங்குமா இந்த விவகாரம்.

    தேசிய அளவில் பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இடம் பெற்றிருந்தாலும் தமிழகத்தில் அந்த இரு கட்சிகளுக்கும் இடையே கரகர மொறமொற என்றுதான் சென்று கொண்டிருக்கிறது. கூட்டணி முறிந்து விட்டது என்று அ.தி.மு.க.வினர் பேசும் அளவுக்கு நிலைமை சென்றது.

    ஆனாலும் மத்தியில் மோடி தான் பிரதமராக வரவேண்டும் என்று செல்லூர் ராஜு தெரிவித்ததன் மூலம் பிரச்சினை கொஞ்சம் அடங்கியது.

    இந்த நிலையில் காங்கேயத்தில் நடை பயணம் சென்ற அண்ணாமலையை தா.மா.க. முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் சென்று சந்தித்து வாழ்த்தினார். ஜி.கே. வாசன் அவரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி த.மா.கா தரப்பில் கூறும் போது, இரு தரப்பிலும் இருக்கும் இறுக்கமான நிலையை போக்கி சுமுகமான உறவை ஏற்படுத்த வாசன் இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்பு பாலமாக செயல்படுவதாக கூறினார்கள். வாசனின் வசிய மருந்துக்கு அடங்குமா இந்த விவகாரம்.

    • அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிரான ஊழல் மற்றும் பொதுநலன் வழக்குகளை தொடர்ந்து பிரபலமானவர்.
    • விசாரணை நடத்த மூவாற்றுபுழா லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் கிரீஷ்பாபு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி களமசேரி பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்பாபு (வயது 47). சமூக சேவகரான இவர், கேரளாவில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிரான ஊழல் மற்றும் பொதுநலன் வழக்குகளை தொடர்ந்து பிரபலமானவர்.

    இந்த நிலையில் நேற்று கிரீஷ்பாபு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் படுக்கையிலேயே பிணமாக கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மகள் வீணா விஜயன், முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, முஸ்லிம் லீக் தலைவர் குஞ்ஞாலிக்குட்டி, காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பலர் கேரளாவை சேர்ந்த ஒரு தாதுமணல் நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த மூவாற்றுபுழா லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் கிரீஷ்பாபு. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரீஷ்பாபு இறந்துவிட்ட தகவல் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை 2 வார ங்களுக்கு ஒத்தி வைக்கப்ப ட்டது. முதல்-மந்திரி மகள் உள்பட பலர் மீதான வழக்கு விசார ணைக்கு வந்த நிலையில், வழக்கு தொட ர்ந்தவர் மர்மமாக இறந்தி ருப்பது கேரளாவில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×