search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம சபை கூட்டம்"

    • சுதந்திர தின சிராம சபா கூட்டம் நாயுடு குருகு ப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முருகேசன் (பொறுப்பு) செய்திருந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், பெரு கோபனப்பள்ளி ஊராட்சி யில் சுதந்திர தின சிராம சபா கூட்டம் நாயுடு குருகு ப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, தமிழக அரசு வழங்கும் இலவச வீடு வேண்டியும், முதியோர் உதவித் தொகை, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் முரளிதரனிடம் மனுக்கள் அளித்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சத்தியா சரவணன், ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், ஊரக துறை, வேளாண்மைத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை, தொண்டு நிறு வனங்கள், மகளீர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அரசு அலு வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முருகேசன் (பொறுப்பு) செய்திருந்தார்.

    • தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
    • கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நாட்டின் 77வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தோவாளை ஊராட்சி ஒன்றியம் சகாயநகர் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.

    அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார். இதையடுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் தன்னார்வலர்கள், சமூக சேவகர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

    வார்டு உறுப்பினர்களும், அரசு அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை இயக்குநர், வேளாண்மை துறை துணை இயக்குநர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற் குட்பட்ட மகிபாலன் பட்டியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கனியன் பூங்குன்றனாருக்கு மணி மண்டபம் அமைத்தல், அவரது பெயரில் பொது நூலகம் அமைத்தல் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    கொன்னத்தான்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் அழகுபாண்டியன் தலைமை தாங்கினார். சமுதாயக்கூடம் கட்டுவது, கொன்னத்தான் கண்மாயில் தடுப்பணை கட்ட வேண்டும். எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    துவார் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அவசரகால தேவையை கருதி காட்டு வழிப்பாதையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும். பூலாம்பட்டியில் அங்கன்வாடி மையம், நீர்த்தேக்க மேல்தொ ட்டியை இடித்து புதிதாக கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது.

    இதில் யூனியன் உதவியாளர் சதீஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு
    • மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    நாகர்கோவில் :

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு தோவளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சகாயநகர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மேலும் தன்னார்வலர்கள், சமூக சேவகர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஊராட்சி மன்றம் சார்பில் சால்வை அணிவித்து மரக்கன்று கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • அந்தந்த ஊராட்சியில் உள்ள புதிய இடங்களில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்குகிறார்.
    • அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் சுதந்திரதின கிராமசபை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடத்தப்படவுள்ளது.

    அந்தந்த ஊராட்சியில் உள்ள புதிய இடங்களில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்குகிறார்.

    அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள்.

    கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குனர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தின கிராமசபை கூட்டம் நடந்தது.
    • 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான வருகிற 15-ந் தேதியன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட் சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மை யான குடிநீர் விநியோ கத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்து தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

    மேற்படி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    எனவே மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு விவாதிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
    • தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.

    கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு,

    தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்), திறந்த வெளியில் மலம் கழிதலற்ற நிலையை தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கை கள், பிளாஸ்டிக்கை தவிரத்து மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, பொது அறிவிப்புகள், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தில் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    எனவே ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராம சபைகளில் தவறாது கலந்து கொண்டு விவாத த்தில், தங்களது கருத்து க்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்து ள்ளார்.

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் கமலக்கண்ணன், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, கீதா, புவனேஸ்வரி, மீனாட்சி, சங்கர் கணபதி, புருஷோத்தனி, விமலா, துரைசாமி முன்னாள் துணை தலைவர் ரமேஷ் உள்பட150- க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது .
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியம் ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட உரல் பட்டி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது . இதில் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் , அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கிராமசேவை கூட்டத்தில் பொது மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
    • ஊராட்சி தலைவர் மாரிமுத்து உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியம் சின்னவீரன்பட்டி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கிராம சபை ஊராட்சியின் தணிக்கை அறிக்கை,சுத்தமான குடிநீர் வினியோகத்துக்கான உறுதிமொழி , கிராம வளர்ச்சி திட்டம் ,அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் வீரத்தாள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாகவேணி, சரஸ்வதி, ஈஸ்வரன், மாலினி, மாரியம்மாள், ரஞ்சித் குமார்,சுக்குலான் , தட்சிணாமூர்த்தி ,ஊராட்சி தலைவர் மாரிமுத்து உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம சபை கூட்டங்களில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
    • ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் தலைமையிலும், நாலூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுஜாதா ரகு தலைமையிலும், வண்ணிப்பாக்கம் ஊராட்சி மஞ்சுளா பஞ்சாட்சரம் தலைமையிலும், பிரயம்பாக்கம் ஊராட்சி இலக்கியா கண்ணதாசன் தலைமையிலும், பழவேற்காடு ஊராட்சி மாலதி சரவணன் தலைமையிலும், திருப்பாலைவனம் ஊராட்சி பவானி கங்கை அமரன் தலைமையிலும்,

    வஞ்சிவாக்கம் ஊராட்சி, வனிதா ஸ்ரீ ராஜேஷ் தலைமையிலும், திருவெள்ளை வாயல் ஊராட்சி முத்து தலைமையிலும், வாயலூர் கோபி தலைமையிலும், காட்டூர் செல்வ ராமன் தலைமையிலும், காட்டுப்பள்ளி சேதுராமன் தலைமையிலும், தட பெரும்பாக்கம் பாபு தலைமையிலும், கொடுர் கஸ்தூரி மகேந்திரன் தலைமையிலும், சிறுவாக்கம் சேகர் தலைமையிலும், ஆலாடு பிரசாத் தலைமையிலும், ஏ.ரெட்டிபாளையம் கவிதா மனோகரன் தலைமையிலும்,

    சோழவரம் ஒன்றியம் ஜெகநாதபுரம் ஊராட்சி மணிகண்டன் தலைமையிலும், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி நந்தினி ரமேஷ் தலைமையிலும், அத்திப்பேடு ஊராட்சி ரமேஷ் தலைமையிலும், பஞ்செட்டி ஊராட்சி, சீனிவாசன் தலைமையிலும், ஆண்டார்குப்பம் ஊராட்சி ஆர்த்தி ஹரி பாபு தலைமையிலும், மாதவரம் ஊராட்சி சுரேஷ் தலைமையிலும், மாலிவாக்கம் ஊராட்சி பாரத் தலைமையிலும், ஆமுர் ஊராட்சி பிரியா ஆனந்தன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • அரசுக்கு சொந்தமான நிலங்களையும், விவசாயிகளின் நிலங்களையும் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதையொட்டி அப்பகுதில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களையும், விவசாயி களின் நிலங்களையும் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் நிலங்களை கையகப்படுத்தி னால், வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், சிப்காட் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடக்கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ஜ.க, கொ.ம.தே.க, தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்காக சிப்காட் எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், மே தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும், நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. வளையப்பட்டி ஊராட்சி ரெட்டையாம்பட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மோகனூர் ஒன்றியத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்படும். விவசாயமும் பாதிக்கப்படும். அதனால், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என, விவசாயிகள் சார்பில் தீர்மானம் கொண்டுவர மனு அளித்தனர்.

    தீர்மானத்தை பெற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் சரஸ்வதி, கிராமசபை தீர்மான நோட்டில், சிப்காட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என எழுதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த கிராம சபை கூட்டத்தில், இதே தீர்மா னத்தை நிறைவேற்ற முடியாது என ஊராட்சி தலைவர் கூறியிருந்த நிலையில், நேற்று பொது மக்கள் வலியுறுத்திய தால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ×