search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்விளக்கம்"

    • தீ விபத்து ஏற்படாமல் இருக்க கடைகளுக்கு வெளிப்புறம் சுவிட்ச் பாக்ஸ் வைக்க வேண்டும்.
    • பட்டாசை மிகவும் ஜாக்கிரதையாக வெடிக்க வேண்டும்.

     தஞ்சாவூர்:

    தஞ்சை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீபாவளி பண்டிகையை விபத்து இல்லாமல் கொண்டாடுவது குறித்து பட்டாசு விற்பனையா ளர்கள், தயாரிப்பாளர்கள், தீயணைப்பு துறை பணியாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டாசு கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகளை வைத்திருக்கக் கூடாது.

    தீ விபத்து ஏற்படாமல் இருக்க கடைகளுக்கு வெளிப்புறம் சுவிட்ச் பாக்ஸ் வைக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் தொட்டியில் 200 லிட்டர் தண்ணீரை நிரப்பி வைத்திருக்க வேண்டும்.

    இருவழி பாதை கட்டாயம் இருக்க வேண்டும். உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யக்கூடாது.

    அனைவரும் விழிப்புடனும் கவனமாகவும் இருந்து விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும்.

    பெரியவர்கள் மேற்பார்வையில் தான் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.

    பட்டாசை மிகவும் ஜாக்கிரதையாக வெடிக்க வேண்டும்.

    நனைந்த பட்டாசுகளை எரிந்து கொண்டிருக்கும் கியாஸ், விறகு அடுப்பின் அருகே வைத்து உலர வைக்க கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தக் கூட்டத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கணேசன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரிய விபத்துக்களில் இருந்து மக்களை மீட்பது எப்படி?
    • தீ விபத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நெடுஞ்சா லை துறை மற்றும் வட்டார மோட்டார் வாகன போக்குவரத்து துறை சார்பில் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு முதலுதவி செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் பாலசுப்பி ரமணியன் தலைமை தாங்கினார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், நெடுஞ்சாலைதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் இந்திரன், உதவி காவல் ஆய்வாளர் முகிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு அலுவலர் ஜூலியஸ் தூய மணி வரவேற்று பேசினார். வெல்ஸ்பன் நிறுவனத்தின் மூத்த மேலாளர் கோபிராஜ் மற்றும் பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

    முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் கிருபாகரன் தலைமையில், ரெட் கிராஸ் தலைமை பயிற்சியாளர் பெஞ்ஜமின் முதல் உதவி குறித்து செயல்முறை விளக்கத்தை பொது மக்களுக்கு செய்துகா ன்பித்தனர். விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு, மரணம் தருவாயில் காப்பாற்றுவது, பெரிய விபத்துக்கள் இருந்து மீட்பது, தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, பின்னர் சிகிச்சை முறை அளிப்பது குறித்தும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலுதவியை செயல்முறை விளக்கத்தை கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் டிரைவிங் சென்டர் கார்த்தி ஒருங்கிணைத்தார்.

    • அமில கரைசல் மூலம் உப்பு அடைப்பான்கள் நீக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம் குப்பதேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயி களுக்கு பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சேதுபா வாசத்தி ரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ஜி.சாந்தி தலைமை வகித்தார்.

    வேளாண்மை பொறியியல் துறையின் உதவி பொறியாளர் செந்தில்கு மார் பயிற்சி குறித்து விவசாயிகளிடம் பேசியதா வது, நுண்ணீர் பாசன கருவிகள் மற்றும் அவற்றின் பராமரிப்பு முறை குறித்தும், சொட்டுநீர் பாசன கருவிகளான வடிகட்டி, அழுத்தமானி, சொட்டுநீர் பாசன குழாய்கள், வெஞ்சுரி (உரம் செலுத்தும் கருவி) ஆகியவற்றின் பராமரிப்பு முறைகள், சொட்டு நீர் பாசனம் அமைக்க தேவைப்ப டும் ஆவணங்கள்.

    அமில கரைசல் மூலம் உப்பு அடைப்பான்கள் நீக்கும் முறை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.மேலும் மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுக ளை ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் தமிழழகன், ஜெயக்குமார் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பிரதீபா ஆகியோர் செய்திரு ந்தனர்.

    முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரம ணியன் நன்றி கூறினார்.

    • முன்னதாக சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
    • நுண் உரக்கிடங்கு வளாகத்தில் செயல்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில்தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகராட்சி செயல்படுத்தி வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை பொதுமக்கள் , சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்விளக்கம் அளிக்கபட்டது.

    நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார் நகராட்சி ஆணையர் வெ ங்கடலட்சுமண ன்முன்னி லை வகித்தார்.

    சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் வரவேற்றார் நிகழ்ச்சியி ல்வர்த்தக சங்க தலைவர் தென்னரசு பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நகராட்சி வளம் மீட்பு மையத்திலும் நுண் உரக்கிடங்கு வளாகத்திலும் செயல்முறை கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் உரக்கி டங்கில் தயார் செய்யப்பட்ட மாதிரி உரம் இலவசமாக வழங்கப்பட்டது.

    திடக்கழிவு மேலாண்மைவளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

    • இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி ஊழியக்காரன்தோப்பு நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஈசானி யத்தெருவில் அமைந்துள்ள நகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் முறை, குப்பைகளை எவ்வாறு கையாளுவது, மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து செயல்விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நகராட்சி ஆணையர் வி.ஹேமலதா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் முன்னிலை வகித்தார். நகரமைப்பு ஆய்வர் மு.மரகதம் மற்றும் சுகாதார ஆய்வர் டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு விழிப்பு ணர்வு செயல்விளக்கம் அளித்தனர்.

    அப்போது 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பி.கஸ்தூரிபாய் மற்றும் 5 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கலைச்செல்வி பங்கேற்றனர்.

    • குடற்புழு நீக்க மருந்துகளை கால்நடைகளுக்கு செலுத்தி செயல்விளக்கம் அளித்தார்.
    • சத்துமருந்து உள்ளிட்டவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த திருலோகி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை சார்பில் கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கால்நடை உதவி டாக்டர் தேவராஜ், குடற்புழு நீக்க மருந்துகளை கால்நடைகளுக்கு செலுத்தி செயல்விளக்கம் அளித்தார்.

    மேலும், சத்துமருந்து, குடற்புழு நீக்க மருந்து உள்ளிட்டவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.

    முகாமில் வட்டார தொழில்நுட்ப குழு ஒருங்கி ணைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குநருமான துரை. சிவவீரபா ண்டியன், வேளாண்மை அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி, உதவி தொழில்நுட்ப மேலாளர் வெங்கடேசன், மனிஷியா ஆகியோர் செய்திருந்தனர்.

    • பேரிடர் ஏற்பட்டால் தன்னை சுற்றி இருப்பவர்களை எவ்வாறு மீட்பது.
    • இடர்பாடுகளை எவ்வாறு சமாளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை போலி ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

    அப்போது பேரிடர் ஏற்பட்டால் தன்னை மட்டும் தன்னை சுற்றி இருப்பவர்களை எவ்வாறு மீட்பதுபேரிடர்ஏற்படும் இடங்களில்உள்ள பொரு ட்களைக் கொண்டுஅந்த இடர்பாடுகளைஎவ்வாறு சமாளிப்பது குறித்துதீ யணைப்பு துறையினர் பயன்படுத்திய கருவிகளை பயன்படுத்தி செய்முறை விளக்கங்களை மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு வீர்கள் செய்து காண்பித்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன், உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • 30 நிமிடத்தில் ஒரு எக்டர் விதைப்பு செய்யலாம்.
    • ட்ரோன் மூலம் களைக்கொல்லிகளை மிக குறுகிய நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அருகே உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து ட்ரோன் மூலம் நேரடி நெல் விதைப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசுகையில்:-

    நேரடி நெல் விதைப்பின் முக்கியத்துவத்தையும், நெல் சாகுபடி முறையில் ஏற்படக்கூடிய ஆள் பற்றாக்குறையை சமாளிக்க ட்ரோன் தொழில்நுட்பம் மிகச்சிறந்தது.

    மேலும், 45-50 கிலோ விதையை பயன்படுத்தி 30 நிமிடத்தில் ஒரு எக்டர் விதைப்பு செய்யலாம். களைகளை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் களைக்கொல்லிகளை மிக குறுகிய நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார்.

    இதில் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பழனிச்சாமி, இயக்குனர் ரகுநாதன் மற்றும் கமலஹாசன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உளவியல் இணை பேராசிரியர் இளமதி செய்திருந்தார்.

    • பல்வேறு பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல்களை கண்காணித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • தண்ணீருடன் மைதா கலந்து பீய்ச்சி அடித்தல் ஆகியன விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வட்டாரம் மருங்குளம் கோபால் நகரில் விவசாயிகளுக்கு தென்னை பயிரினை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் வயலாய்வு பயிற்சி வேளாண்மை- உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகம் இணைந்து நடத்தப்பட்டது.

    உழவர் அலுவலர் தொடர்பும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தமிழ்நாடு வேளாணமைப் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் நியமிக்கப்பட்டு

    வேளாண்மை துறை அலுவலர்களுடன் இணைந்து, பல்வேறு பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல்களை கண்காணித்து, உரிய பரிந்துரை மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக மருங்குளம் கிராமத்தில் தென்னை மரங்களில் பூச்சி நோய் கண்காணிப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பயிற்சியில் மருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதல்வர் டாக்டர் வேலாயுதம் மற்றும் உழவியல் துறை இணைப்பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து , உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்ட தஞ்சாவூர் மாவட்ட ஆலோசகர் இளஞ்செழியன், வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    தென்னையில் காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு தாக்குதல், ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய் மற்றும் வேர் அழுகல் நோய்களின் உழவியல் மற்றும் உயிரியல் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மூலம் கட்டுப்படுத்துதல் ஆகியவை விளக்கப்பட்டது. மஞ்சள் நிற ஒட்டும் பொறி, விளக்கு பொறி, ஆமணக்கு புண்ணாக்கு வைத்து பூச்சிகளை கவர்ந்து அழித்தல், விசைத்தெளிப்பான் மூலம் இலைகளின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து வெள்ளை ஈயை கட்டுப்படுத்துதல், தண்ணீருடன் மைதா கலந்து பீய்ச்சி அடித்தல் ஆகியன விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. மேலும் உயிரியல் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் மூலம் பூச்சிகளை கட்டுப்பாட்டில் வைக்கும் முறைகள் பயிற்சியளிக்கப்பட்டது.

    மேலும், தென்னையில் சமச்சீரான உர மேலாண்மை மற்றும் தென்னை நுண்ணூட்ட கலவை பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. போர்டோ கலவை தயாரிப்பது குறித்தும் எருக்குழியில் மெட்டாரைசியம் உயிர் பூசனம் இடுதல் மற்றும் வேர் மூலம் தென்னை டானிக் எவ்வாறு உபயோகப்படுத்துவது என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் தினேஷ்வரன், உதவி வேளாண்மை அலுவலர் பழனி மற்றும் அட்மா உதவி தொழில் நுட்ப மேலாளர் வாசுதேவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சுயநினைவை இழத்தல் போன்ற நேரங்களில் எப்படி முதலுதவி செய்வது.
    • பல்வேறு உபகரணங்கள், நவீன முறைகள், குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலைக்கல்லூரியில் 52-வது தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் காவேரிபடுகை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர்மதி தலைமை தாங்கினார். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மருத்துவர் இளவரசன் பேசுகையில்:-

    விபத்து, பேரிடர் காலங்களில் ஏற்படும் மயக்கம், சுயநினைவை இழத்தல் போன்ற நேரங்களில் எப்படி முதலுதவி செய்வது, இதயம் செயலிழக்கும் நேரங்களில் மூச்சு கொண்டு வருதல், எலும்பு முறிவு, ரத்த கசிவு, கண் பாதிப்பு, தீக்காயங்கள், விஷவாயு தாக்குதல், மின் தாக்குதல், பாம்பு, விஷ பூச்சிகள் கடித்தல் இவற்றிலிருந்து எப்படி தப்பிப்பது, மற்றவர்களை பாதுகாப்பது குறித்து எடுத்துரைத்தார்.

    தீயணைப்பு அலுவலர் காயத்ரி தீ விபத்தை எவ்வாறு தவிர்ப்பது குறித்து பேசினார். பின்னர், தீ பாதுகாப்பு குறித்த பல்வேறு உபகரணங்கள், நவீன முறைகள், குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பாதுகாப்பு சுற்றுச்சூழல் பிரிவு துணை பொதுமேலாளர் தியாகராஜன், தீயணைப்பு துணை பொது மேலாளர் ரமேஷ் காகிரோ, பொறியாளர் கிரிஷ் மிஷ்ரா, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்கள் பன்னீர்செல்வம், நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ஒருங்கிணைத்தார்.

    • எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அடுத்த மரைக்கான் சாவடி பகுதியில் உள்ள கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் எனப்படும் கெயில் நிறுவன எரிவாயு சேகரிப்பு மையம் உள்ளது.

    அங்கு உள்ள எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    நாகப்பட்டினம் மாவட்ட கலெகடர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வயல் வெளியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டால் எவ்வாறு தகவல் அளிக்க வேண்டும், மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து கெயில் நிறுவன ஊழியர்கள் பொதுமக்களுக்கு செய்து காட்டினார்.

    இதில் வருவாய்த்துறை பினர் தீயணைப்புத் துறையினர் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஜான்சிலட்சுமி தலைமை தாங்கினார்.
    • உயிர் உரங்கள் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மணவாரனப்பள்ளியில் விவசாயிகள் திறமை மேம்பாட்டுத் திட்டத்தில் பட்டுவளர்ப்பு குறித்த செயல்விளக்க பயிற்சி நடந்தது. இதில், மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டுப்புழுவியல் பயின்று வரும் மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சிக்கு அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஜான்சிலட்சுமி தலைமை தாங்கினார்.

    இந்த பயிற்சியின் போது, பட்டுப்புழு வளர்ப்பு, கொட்டகை பராமரிப்பு, கிருமிநாசினி தெளித்தல், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சீராக்குதல் உள்ளிட்டவை குறித்தும், மல்பரி சாகுபடி, பசுந்தாள் உரத்தின் பயன்கள், பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள், வேப்பெண்ணெய் கலந்த ரசாயன உரம் பயன்படுத்துதல், உயிர் உரங்கள் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    வெண்பட்டின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில், பலகலப்பின பட்டு விவசாயிகளை வெண்பட்டு விவசாயிகளாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கான களபயிற்சியை வனக்கல்லூரி மாணவிகள் வனிதா, ஸ்ரீவாணி, சுகன்யா, சுபாஷினி, ஷேபனா ஆகியோர் அளித்தனர். இதில் மணவாரனப்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×