search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி தற்கொலை"

    • விடுதியின் அறையை சுத்தம் செய்வதற்கு தூய்மை பணியாளர் சென்றார்.
    • மாணவி திவ்யஸ்ரீ கடந்த ஓராண்டுக்கு மேலாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்துள்ளார்.

    சென்னை:

    தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகள் திவ்யஸ்ரீ. 20 வயதான இவர் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு சென்ற இவர் மாலை விடுதிக்கு திரும்பினார்.

    விடுதியின் அறையை சுத்தம் செய்வதற்கு தூய்மை பணியாளர் சென்றார். அறையின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்ததால் பின்பக்கமாக சென்று ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது, அறைக்குள் திவ்யஸ்ரீ மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர், விடுதியின் துணை வார்டனுக்கு தகவல் தெரிவித்தார். விடுதி காவலாளிகள் அறையின் கதவை உடைத்து மாணவியின் உடலை மீட்டனர்.

    வேப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    மாணவி திவ்யஸ்ரீ கடந்த ஓராண்டுக்கு மேலாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்துள்ளார். அதற்காக மருந்து சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது.

    • கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    • தாய் பிரியா கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்குமார் (45). இவரது மனைவி பிரியா (40). இவர்களது மகள் ஜோசிகா (19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜோஷிகா கல்லூரி பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஜோஷிகா மன வருத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது தாய் அவருக்கு சமாதானம் கூறி வந்தார். இதையடுத்து ஜோஷிகா கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த ஜோஷிகா நேற்று மாலை திடீரென வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். வேலைக்கு சென்று இருந்த அவரது தாய் பிரியா வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது ஜோஷிகா சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டு வந்து ஜோஷிகாவை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜோஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தாய் பிரியா கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமான மாணவியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
    • வீட்டிற்கு சென்ற மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ்-தங்கம் தம்பதியின் மகள் ஜனனி(16). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் மாணவியை மீட்டு அறிவுரைகள் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசா ரணையில் இவர் அதே ஊரை சேர்ந்த சிவக்கு மார்(19) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

    அவரிடமிருந்து பிரித்து வந்ததால் வேதனையடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    • கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • தற்கொலை குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம், சஞ்சய் காந்தி தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ரிதன்யா (17). கோபியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் மற்றொரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படிக்க அவருக்கு சீட் கிடைத்தது. இதில் படிக்க ரிதன்யா விரும்பினார். தனது விருப்பத்தை பெற்றோரிடம் அவர் தெரிவித்தார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து கலை கல்லூரியிலேயே ரிதன்யாவை படிக்க பெற்றோர் வற்புறுத்தினர்.

    இதனால் மனவேதனையில் இருந்த ரிதன்யா சம்பவத்தன்று இரவு பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த சமயத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த ரிதன்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரிதன்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தற்கொலை செய்த மாணவியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் ராசிபாளையம் ஊராட்சி மாமரத்துப்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். லாரி டிரைவர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு மோகன்ராஜ் (26) என்ற மகனும், சந்தியா (21) என்ற மகளும் உள்ளனர்.

    சந்தியா நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுப்பற்றி தெரியவந்ததம் மோகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தாய் அமுதவதி பராமரிப்பில் சாருஹாசினி வளர்ந்து வந்தார்.
    • அமுதவதி அவிநாசியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உருமையன் வீதியை சேர்ந்தவர் சாருஹாசினி (20). இவர் பெருந்துறையில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரது தந்தை சின்னசாமி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாய் அமுதவதி பராமரிப்பில் சாருஹாசினி வளர்ந்து வந்தார். அமுதவதி அவிநாசியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் அமுதவதி காலை வேலைக்கு சென்று இரவு மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உள் புறமாக தாழிடப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து டிவியின் சத்தம் அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அமுதவதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் சாருஹாசினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடலை பார்த்து அவரது தாய் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரி விடுதியில் தங்கியிருந்த காயத்ரி விதைப்பண்ணை அருகே உள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
    • வாணாபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    திருவண்ணாமலை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் காயத்ரி (வயது 20).

    இவர் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கியிருந்த காயத்ரி விதைப்பண்ணை அருகே உள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று திரண்டனர்.

    அப்போது அவர்கள் மகள் மரணத்திற்கு கல்லூரி நிர்வாகம் கொடுத்த அழுத்தம்தான் காரணம், நீதி கிடைக்கும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றனர்.

    அவர்களிடம், வாணாபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

    விடுதியில் உள்ள மாணவியின் அறையில் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    கல்லூரி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தத்தை தாங்க முடியவில்லை. மாணவர், மாணவிகள் பேசினாலும் தவறாக பார்க்கின்றனர்.

    இங்கிருந்து போனால் போதும். படிக்கவும் முடியவில்லை. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அப்பா, அம்மா உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்து விட்டேன்.

    கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள், நான் உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை என்னை மன்னித்து விடுங்கள். எனது மரணத்திற்கு நான் தான் காரணம் வேறு யாரும் இல்லை என எழுதப்பட்டுள்ளது.

    மாணவி காயத்ரியுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள், அவரது தோழிகள் பாடம் நடத்திய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், முதல்வர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • திருமணம் செய்ய காதலன் மறுத்து விட்டதால் மாணவி கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்ததும், இதனால் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
    • பிரேத பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக இருந்தது உறுதியானது. பின்னர் மாணவியின் உடல் மீண்டும் அங்கேயே புதைக்கப்பட்டது.

    கோத்தகிரி:

    கோத்தகிரியை அடுத்த ஊட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டன்னி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.

    இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்தார்.

    விடுமுறைக்கு ஊருக்கு வந்த மாணவி கடந்த 30-ந்தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை குறித்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

    சம்பவத்தன்று இறந்த மாணவியின் சகோதரி மற்றும் பெற்றோர் வீட்டின் பீரோவில் இருந்த செல்போனை எடுத்து பார்த்தனர்.

    அப்போது மாணவி, பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி டிரைவரான நந்தகுமார்(32) என்பவருடன் அதிக முறை பேசியிருப்பது ரெியவந்தது. இதையடுத்து அவர்கள் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், மாணவியும், வீட்டின் அருகே வசிக்கும் நந்தகுமார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

    நெருங்கி பழகியதில் மாணவி கர்ப்பமாகி விட்டார். இதையடுத்து மாணவி, வாலிபரை தொடர்பு கொண்டு தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார்.

    ஆனால் அந்த வாலிபர், நீ வேறு ஜாதி, நான் வேறு ஜாதி. உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்து விட்டார். மாணவி திருமணம் செய்ய வற்புறுத்தியதால், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை மாணவிக்கு அந்த வாலிபர் அனுப்பி உள்ளார்.

    திருமணம் செய்ய காதலன் மறுத்து விட்டதால் மாணவி கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்ததும், இதனால் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மாணவி கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை அறிய புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி ஊட்டி ஆர்.டி.ஓ., துரைசாமி உத்தரவின் பேரில், தாசில்தார் ராஜசேகரன், வி.ஏ.ஓ., அஜய் கான், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில், தொட்டன்னி பகுதியில் புதைக்கப்பட்ட மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    பிரேத பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக இருந்தது உறுதியானது. பின்னர் மாணவியின் உடல் மீண்டும் அங்கேயே புதைக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த நந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று மாணவியின் தாய், தந்தை ஆகியோர் வெளியே சென்று இருந்தனர்.
    • மிருதுளா தனது பாட்டியிடம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா (வயது 21). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிருதுளாவுக்கு திப்பம்பட்டியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாகவும் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக மிருதுளா அப்துல் ரகுமானுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து கடந்த பிப்ரவரி மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு தானே காரணம் என நினைத்து கடந்த சில நாட்களாக மிருதுளா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். எனவே அவர் தன்னுடைய காதலன் சென்ற இடத்துக்கே அவரும் செல்ல திட்டமிட்டார்.

    சம்பவத்தன்று மாணவியின் தாய், தந்தை ஆகியோர் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் மாணவியின் பாட்டி மட்டுமே இருந்தார். அப்போது மிருதுளா தனது பாட்டியிடம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அங்கு மாணவி துப்பட்டாவில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்து அவரது பாட்டி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோலார்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மிருதுளாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸ் ராஜேஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • காதல் தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த பாலமுருகன் மகள் யாஷினி (வயது 20). இவர் திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த மாணவி இன்று காலை பயணிகள் ரெயில்மூலம் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். தாமரைப்பாடி ரெயில்நிலையம் வந்ததும் ரெயிலை விட்டு இறங்கிய அவர் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸ் ராஜேஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதல் தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    சென்னை பழவேற்காடு பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகள் கிதோரின் ஸ்மைலா. இவர் நெல்லை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரி விடுதி அறையில் தங்கி தினமும் வகுப்புக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை விடுதி அறையில் மாணவி கிதோரின் ஸ்மைலா தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த சக மாணவிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • கல்லூரி மாணவி தற்கொலை குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (43). டெய்லர். இவரது கணவர் சிவபெருமாள். முறுக்கு வியாபாரி. இவர்களது மகள் பொற்கொடி (20). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் அந்த கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த பொற்கொடி தனக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்றும், மேலும் அடிக்கடி தாங்க முடியாத அளவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது தாய் பொற்கொடியை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பினர்.

    இந்த நிலையில் தேர்வு விடுமுறைக்காக பொற்கொடி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கினார். உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த பொற்கொடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாய் பிரேமா மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×