என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 263987"
- இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
- ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் (96), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
ராணி எலிசபெத் மறைவு குறித்த செய்தி அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. லண்டனில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டுள்ளனர்.
இந்நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
- ஜோ பைடன் லண்டன் புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா வெள்ளை மாளிகை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ராணி எலிசபெத் இறுதி சடங்கு குறித்து இங்கிலாந்து உறுதியான தகவலை தெரிவித்ததும் ஜோ பைடன் லண்டன் சென்று இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளார்.
வாஷிங்டன்:
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவு உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ராணி எலிசபெத் உடல் பால்மொரஸ் பண்ணை வீட்டில் இருந்து பக்கிம்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. 10 நாட்களுக்குபிறகு அவரது இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. வருகிற 19-ந்தேதி வெஸ்ட் மின்ஸ்ட் அபே தேவாலய கல்லறையில் ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது.
இறுதி சடங்கில் பல உலக தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த இறுதி சடங்கில் பங்கேற்க போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவரிடம் நிருபர்கள் கேட்ட போது, இறுதி சடங்கில் நான் பங்கேற்பேன். நான் இன்னும் அரசர் சார்லசிடம் பேசவில்லை என்று தெரிவித்தார்.
ஜோ பைடன் லண்டன் புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா வெள்ளை மாளிகை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணி எலிசபெத் இறுதி சடங்கு குறித்து இங்கிலாந்து உறுதியான தகவலை தெரிவித்ததும் ஜோ பைடன் லண்டன் சென்று இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளார்.
- 2006-ம் ஆண்டு, தி குயின் என்ற பெயரில் வெளியான திரைப்படத்தில் ஸ்டீபன் பிரியர்ஸ் இயக்கத்தில், ராணியாக ஹெலன் மிர்ரன் நடித்திருந்தார்.
- 2012-ம் ஆண்டு வாக்கிங் தி டாக்ஸ் என்ற சின்னத்திரை படம் வெளியானது. இதில் ராணி எலிசபெத் வேடத்தில் எம்மா தாம்ப்சன் நடித்திருந்தார்.
லண்டன்:
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் புகழ் கொடி கட்டிப்பறக்கிறது. அவரது வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டும் வகையில் இணையத்தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வெளியாகியது உண்டு.
* தி குரோன் என்ற பெயரில் நெட்பிளிக்ஸ்சில் பீட்டர் மோர்க்கன் உருவாக்கி வெளியிட்ட நிகழ்ச்சி 4 சீசன்கள் தொடர்ந்தது. ராணியின் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியது. இதில் முதல் 2 சீசன்களில் ராணி எலிசபெத் பாத்திரத்தில் கிளாரி போய்யும், எஞ்சிய 2 சீசன்களில் ஆஸ்கார் விருது வென்ற ஒலிவியா கோல்மனும் நடித்து இருந்தனர். 5-வது சீசன் வரும் நவம்பரில் தொடங்குகிறது. இதில் ராணி எலிசபெத்தாக இமெல்டா ஸ்டான்டன் நடிக்கிறார்.
* 2006-ம் ஆண்டு, தி குயின் என்ற பெயரில் வெளியான திரைப்படத்தில் ஸ்டீபன் பிரியர்ஸ் இயக்கத்தில், ராணியாக ஹெலன் மிர்ரன் நடித்திருந்தார். இதில் இளவரசி டயானா மறைவுக்கு பிந்தைய நிகழ்வுகளும் இடம் பிடித்தன. இதில் ஹெலன் மிர்ரனுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
* 2012-ம் ஆண்டு வாக்கிங் தி டாக்ஸ் என்ற சின்னத்திரை படம் வெளியானது. இதில் ராணி எலிசபெத் வேடத்தில் எம்மா தாம்ப்சன் நடித்திருந்தார்.
* 2015-ம் ஆண்டு 'எ ராயல் நைட் அவுட்' என்ற படம் வெளியானது. இதில் ராணி எலிசபெத்தாக கனடா நடிகை சாரா காடன் நடித்திருந்தார்.
பல அரச குடும்பங்களைப் பற்றிய படங்களிலும் ராணி எலிசபெத் பாத்திரம் இடம் பெற்றிருந்தது.
2010-ல் வெளியான தி கிங்ஸ் ஸ்பீச், 2004-ல் சர்ச்சில் தி ஹாலிவுட் இயர்ஸ், 1969-ம் ஆண்டு ராயல் பேமிலி, 2012-ல் தி மெஜஸ்டிக் லைப் ஆப் குயின் எலிசபெத், 2020-ல் எலிசபெத் அண்ட் மார்கரெட்: லவ் அண்ட் ராயல்டி, இந்த ஆண்டும்கூட எலிசபெத் போர்ட்ரெயிட் இன் பாரிஸ் என படங்கள் ராணி கதாபாத்திரத்துடன் வெளிவந்தன. இவையெல்லாமே நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல, திரையிலும் ராணி எலிசபெத் மின்னியதைக் காட்டுகின்றன.
- இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்.
- ராணி எலிசபெத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராணி எலிசபெத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதையாக பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
எழுபது ஆண்டுகள்
அரசாண்ட முதல் அரசி
17 பிரதமர்கள் கண்ட
முதல் மகாராணி
ராஜ குடும்பத்தின்
முதல் பொறி நெறியாளர்
ராணுவப் பணி செய்த
முதல் அரண்மனைப் பெண்
அரசி எனில் தானே என
உலகை உணரவைத்த
முதல் ராணி
உங்களோடு கை குலுக்கியது
என் உள்ளங்கைப் பெருமை
உங்கள் புகழைக்
காலம் சுமந்து செல்லும்
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- இளவரசர் வில்லியம், அரியணைக்கான அடுத்த இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
- அரியணை வாரிசுகளாக இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லட், இளவரசர் லூயிஸ், இளவரசர் ஹாரி, ஆர்ச்சி உள்ளனர்.
லண்டன்:
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியரின் மகன் ஆர்ச்சி மவுண்ட் பேட்டனுக்கு இளவரசர் பட்டத்தையும், மகள் லில்லிபெட்டுக்கு இளவரசி பட்டத்தையும் ராணியின் மறைவு கொண்டு வந்து சேர்த்துள்ளது.
இளவரசர் வில்லியம், அரியணைக்கான அடுத்த இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவரைத் தொடர்ந்து அரியணை வாரிசுகளாக இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லட், இளவரசர் லூயிஸ், இளவரசர் ஹாரி, ஆர்ச்சி உள்ளனர்.
- ராணி எலிசபெத் தனது வெள்ளிவிழா, பொன்விழா, வைர விழாக்களை 1977, 2002, 2012 ஆண்டுகளில் கண்டிருக்கிறார்.
- காமன்வெல்த் நாடுகளின் தலைவராக அவரது முகம் 33 நாடுகளின் நாணயங்களில் இடம் பெற்றிருப்பது தனிப்பெரும் சாதனை.
லண்டன்:
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் எண்ணற்ற சாதனைகளை படைத்துவிட்டு, மரணத்தை தழுவி இருக்கிறார். சாதனைகளின் மறுபக்கமாக அவர் விளங்கி இருக்கிறார். அதுபற்றிய ஒரு அலசல்:-
* ராணி இரண்டாம் எலிசபெத் உலகளவில் மிக நீண்டகாலம் ஆட்சி நடத்தி சாதனை படைத்திருக்கிறார். அவர் 1952-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி தொடங்கி 2022 செப்டம்பர் 8-ந் தேதி வரையில் 70 ஆண்டுகள், 214 நாட்கள் அரசாட்சி நடத்தி இருப்பது அபூர்வ சாதனை.
* உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியாக, ஆப்பிரிக்காவின் காலனித்துவ அகற்றம், இங்கிலாந்தின் அதிகாரப்பகிர்வு, ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குதல் மற்றும் அதில் இருந்து வெளியேறுதல் என பல அரசியல் மாற்றங்களுக்கு தலைமை தாங்கி இருக்கிறார்.
* ராணி எலிசபெத் தனது வெள்ளிவிழா, பொன்விழா, வைர விழாக்களை 1977, 2002, 2012 ஆண்டுகளில் கண்டிருக்கிறார். 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி பவள விழா கண்டது இவர் மட்டும்தான்.
* உலகின் மிகப்பெரிய பணக்கார மகாராணி இவர்தான் இவரது சொத்து மதிப்பு 370 மில்லியன் பவுண்ட், நமது பணமதிப்பில் சுமார் ரூ.3,441 கோடி ஆகும்.
* காமன்வெல்த் நாடுகளின் தலைவராக அவரது முகம் 33 நாடுகளின் நாணயங்களில் இடம் பெற்றிருப்பது தனிப்பெரும் சாதனை.
* ஒன்றுக்கு மேற்பட்ட கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கி வைத்து சாதனை படைத்திருக்கிறார். 1976-ல் மாண்டிரியால் ஒலிம்பிக் போட்டியையும், 2012-ல் லண்டன் ஒலிம்பிக் போட்டியையும் இவர்தான் தொடங்கி வைத்தார்.
* இளவரசர் பிலிப்புடனான ராணி எலிசபெத்தின் திருமண வாழ்க்கை, பிலிப் மரணம் அடைகிற வரையில் 73 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருப்பது சாதனை.
* இங்கிலாந்து மன்னராக சார்லஸ் மகுடம் சூட 70 வருடங்கள், 214 நாட்கள் காக்க வைத்ததும் ஒரு சாதனை.
* வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. எல்லோருக்கும் பாஸ்போர்ட் வழங்கியவர் அவர். ஓட்டுனர் உரிமமும் அவரிடம் கிடையாது.
* ராணி இரண்டாம் எலிசபெத் தனது 89 வயதில் 2015-ம் ஆண்டு தனது வெளிநாட்டு பயணங்களை நிறுத்தும்வரையில், உலகம் முழுவதும் 42 முறை பயணம் செய்திருக்கிறார். மிக நீண்ட வெளிநாட்டு பயணத்தையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். 1953 நவம்பர் முதல் 1954 மே வரையில் 168 நாட்கள் 13 நாடுகளுக்கு தொடர்ந்து பயணம் செய்துள்ளார்.
* ராணி எலிசபெத் மரணம் வரையில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1 கோடியே 11 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்திருப்பதும் சாதனையே.
* 1953-ல் ராணி எலிசபெத் முடிசூட்டிக்கொண்ட ஊர்வலத்தில் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஊர்வலம் 2 மைல் நீளம் கொண்டது. ராணியின் கிரீடத்தில் 1,333 வைரங்கள் பதித்திருப்பதும் சாதனை.
* ராணி எலிசபெத் 600 அறக்கட்டளைகளுக்கும், அமைப்புகளுக்கும் புரவலர்.
* 30 செல்ல நாய்களை ராணி எலிசபெத் வளர்த்திருக்கிறார். 18 வயதில் முதல் செல்ல நாய் சூசனை வைத்திருந்தார்.
சாதனைகளின் மகாராணியாக ராணி இரண்டாம் எலிசபெத் திகழ்ந்திருக்கிறார்.
- இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார்.
- ராணி எலிசபெத்தின் மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக நேபாள அரசு முடிவு செய்துள்ளது.
காத்மண்டு:
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார். 25வது வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார். ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேபாள அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நேபாள தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராணி எலிசபெத் மகன் சார்லஸ் நாளை அந்நாட்டின் மன்னராக அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட உள்ளார்.
- வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன் என இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.
லண்டன்:
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக நாளை அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட உள்ளார் என தகவல் வெளியானது.
மகாராணி எலிசபெத் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதையடுத்து மகாராணி ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், நீண்ட கால அரச குடும்ப வாரிசான 73 வயது சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகிறார்.
இங்கிலாந்து அரசு மரபுப்படி ராணி எலிசபெத் இறந்த முதல் 24 மணி நேரத்தில், சார்லஸ் அடுத்த மன்னர் என லண்டன் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை அக்சஷென் கவுன்சில் நாளை அதிகாரபூர்வ பிரகடனம் வெளியிடுகிறது.
இந்நிலையில், நாட்டு மக்களிடம் மன்னராக பதவியேற்க உள்ள சார்லஸ் முதன்முறையாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களி்ன் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்.
அன்பு, விசுவாசம், மரியாதையோடு என் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன். நான் விரும்பி செய்யும் சமூக சேவை பணிகளில் என்னால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உள்ளது. இங்கிலாந்து இளவரசராக வில்லியம் செயல்படுவார் என தெரிவித்தார்.
- பிரிட்டன் ராணி எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டில் பத்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இந்தியாவில் ராணி எலிசபெத் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நாளை மறுநாள் தேசி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட இருக்கிறது.
பிரட்டனில் நீண்ட காலம் அரசியாக இருந்து சாதனை படைத்த ராணி எலிசபெத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 96. லண்டனில் அவருக்கு அரச குல வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட இருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அரசு குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக ராணி எலிசபெத் மறைவுக்கு பிரிட்டனில் பத்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகள் மற்றும் அரசியல் தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறது. இரங்கல் செய்தியுடன் ராணி எலிசபெத் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறது.
ஆப்பிள் வலைதளத்தில் உள்ள ராணி எலிசபெத் புகைப்படத்தை 1952 ஆம் ஆண்டு டோரோத்தி வைல்டிங் எடுத்தார் என கூறப்படுகிறது. ராணி எலிசபெத் மறைவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப வழக்கப்படி அரசி அல்லது மன்னர் உயிரிழந்தார் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வாரிசு பதவி ஏற்க வேண்டும். அதன்படி இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர்.
ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நடைபெற இருக்கிறது. அங்கு ராணியின் உடல் மூன்று நாட்களுக்கு வைக்கப்பட இருக்கிறது. அந்த மூன்று நாட்களும் பொதுமக்கள் தினமும் 23 மணி நேரம் அஞ்சலி செலுத்தலாம்.
- ராணி எலிசபெத் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் கார் ஓட்டலாம்.
- சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கவில்லை.
ராணி எலிசபெத் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் கார் ஓட்டலாம். லைசென்சு தேவையில்லை. பாஸ்போர்ட்டும் தேவையில்லை. ஒரு முறை சவுதி மன்னரை விருந்துக்காக ராணி அழைத்து இருக்கிறார். அப்போது மன்னரை ஏற்றிக்கொண்டு ராணியே கார் ஓட்டி சென்றிருக்கிறார். அவரது எளிமையை பார்த்து சவுதி மன்னரும் வியந்து இருக்கிறார்.
ஆனால் அவர் கார் ஓட்டி சென்றது வேறு காரணத்துக்காக, அப்போது சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கவில்லை. அதை இடித்துரைப்பதற்காக ராணி கார் டிரைவராக செயல்பட்டு இடித்துரைக்கத்தான்.
- ராணி எலிசபெத் மறைவுக்கு பிரிட்டனில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் நாளை மறுநாள் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
புதுடெல்லி:
பிரிட்டனில் நீண்ட காலம் அரசியாக இருந்தவர் என்ற சாதனை படைத்த ராணி எலிசபெத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 96. லண்டனில் அவருக்கு அரச குல வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.
ராணி எலிசபெத் மறைவுக்கு முதல் கட்டமாக பிரிட்டனில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 நாட்கள் ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணி எலிசபெத் மறைவை ஒட்டி இந்தியா முழுவதும் வரும் 11ம் தேதி துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது.
- இங்கிலாந்து ராணிக்கு ஆண்டுதோறும் இரண்டு பிறந்த நாட்கள் கொண்டாடுவது வழக்கம்.
- இங்கிலாந்து பாராளுமன்றம் அறிமுகப்படுத்தும் புதிய சட்டங்களில், ராணி தான் கையெழுத்திட வேண்டும்.
* இங்கிலாந்து ராணிக்கு ஆண்டுதோறும் இரண்டு பிறந்த நாட்கள் கொண்டாடுவது வழக்கம். ஒன்று அவருடைய உண்மையான பிறந்தநாள். மற்றொன்று அரசு எடுக்கும் விழா. இது ஜூன் மாதம் ஏதாவது ஒரு சனிக்கிழமை கொண்டாடப்படும். அதன்படி, ஜூன் 5, 2021-ல் எளிமையாக கொண்டாடப்பட்டது.
* உண்மையான பிறந்தநாள் அன்று மூன்று இடங்களில் 41, 21, 62 என துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை உண்டு.
* ராணியாக பதவி ஏற்று 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 70 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதை நான்கு நாள் விழாவாக, பக்கிங்ஹாம் அரண்மனை கொண்டாடியது.
* ராணி எலிசபெத்தால் முன் போல், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள இயலவில்லை என்பதால் கடந்த சில ஆண்டுகளாக நேரடி பங்கேற்பை குறைத்துக்கொண்டே வந்தார்.
* அவருடைய மகன் சார்லஸ், ராணியின் பணிகளில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.
* ராணி ஆண்டுக்கு 2,000-த்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். உடல்நலம் குறைந்ததால் திருமண வரவேற்பு, அரச குடும்பத்து நிகழ்வுகள், தோட்ட பார்டிகள் நடக்கும்போது இவற்றில் ராணி சார்பாக அவரது குடும்பத்தினர் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
* காமன்வெல்த் மற்றும் பல நாடுகளில் நடக்கும் தேசிய நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்கள், ராணி சார்பாக குடும்பத்தினர் பங்கேற்பர். குறைந்தது 3,000 பொது நிகழ்ச்சி இயக்கங்களுக்கு தலைவராகவோ அல்லது போஷகராகவோ இருந்தார் ராணி.
* அரண்மனைக்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் கடிதங்கள் வரும். அவை அனைத்துக்கும் ராணி சார்பில் பதில் எழுதி அனுப்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளை அழைத்து, ராணிதான் பரிசு வழங்குவார்.
* ராணியின் அரண்மனையில் அவர் புழக்கத்துக்கென்று, தனி ஏ.டி.எம். உண்டு.
* ராணிக்கென தனியாக கவிஞரை நியமித்துக் கொள்ளலாம்.
* இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தும் புதிய சட்டங்களில், ராணி தான் கையெழுத்திட வேண்டும்.
* மேல் சபையின், லார்ட்ஸ் என்ற கவுரவம் மிக்க பதவிக்கு, வியாபாரம், கலை மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் சாதித்தவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பர். அதற்கு ராணியின் ஒப்புதல் பெற வேண்டும்.
* அரசு அமைக்க, உத்தரவிட ராணிக்கு முழு அதிகாரம் உள்ளது. அதேபோல் கலைக்கவும் முழு அதிகாரம் உண்டு.
* மதத்தின் தலைவி. சர்ச் ஆப் இங்கிலாந்தின் தலைவியான ராணிதான் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டரின்போது தன் வயதுக்கு ஏற்ப சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பு வெள்ளி காசுகளை வழங்கி கவுரவிப்பார்.
* ராணியை கைது செய்ய முடியாது. வழக்கு போட முடியாது. அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்.
* ராணிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. எந்த நாட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் போகலாம். ஆனால், ராணியின் குடும்பத்தினருக்கு பாஸ்போர்ட் தேவை.
* எதற்கும் வரி கட்ட வேண்டாம். ஆனால் 1992-ம் ஆண்டு முதல் ராணி சொந்த விருப்பத்தின்படி வரி கட்டி வந்தார்.
* தேம்ஸ் நதியில் குறிப்பிட்ட தூரத்திற்குள் நீந்தும் வாத்துகள் அனைத்தும் ராணிக்கு சொந்தம்.
* கடலின் கரையை ஒட்டிய 5 கி.மீ. தூரத்தில் பிடிபடும் கடற்பன்றிகள், உணவுக்கு பயன்படும் பெரிய மீன் வகைகள் மற்றும் சுறாக்கள் ராணிக்கு சொந்தமாகும்.
* ஆண்டிகுவா, படுவா, திபகாமாஸ், பார்புடா, பெலிஸ், கனடா, க்ரேனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, பப்பா நியூகயானா, செயின்ட் கீட்ஸ், நெவிஸ், க்ரேனாடைன்ஸ், காலமன் தீவுகள் மற்றும் துவலு நாடுகளுக்கும், எலிசபெத் தான் ராணியாக இருந்தார். இனி அவரது மகன் சார்லஸ் ராஜாவாக இருப்பார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்