என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில் சோதனை ஓட்டம்"
- கடந்த 17-ந்தேதி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
- புதிய பாலத்தை சரக்கு ரெயில் கடந்து சென்றது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சுமார் 2 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது.
இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் கடந்த 17-ந்தேதி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை 14 பெட்டிகளுடன் சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது 90 கி.மீ. வேகத்தில் புதிய பாலத்தை சரக்கு ரெயில் கடந்து சென்றது.
இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் நடைபெற்று வரும் பணிகளை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.எம்.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த புதிய பாலத்தில் வரும் நவம்பர் மாதத்திற்குள், மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
#WATCH | Tamil Nadu: Southern Railway General Manager RN Singh inspected the new railway bridge constructed at Pampan, in Rameswaram. pic.twitter.com/Q7gUi49zQD
— ANI (@ANI) October 22, 2024
- பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
- மின்வயர்கள் சரி பார்க்கும் பணியில் பொறியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் புதிய பாம்பன் ரெயில் பாலப் பணிகளுக்காக 23.12.2023 அன்று முதல் ராமேசுவரத்திற்கு முற்றிலுமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரெயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்திற்கு ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ரூ.535 கோடி மதிப்பில் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு சமீபத்தில் பணிகள் முடிவடைந்து, பாலத்தின் நடுவே செங்குத்து தூக்கு பாலத்தை வெற்றிகரமாக தூக்கி, இறக்கி சோதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக பாம்பன் புதிய ரெயில் பாலம் வழி யாக மண்டபம்-ராமேசு வரம் இடையே சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மண்டபத்திலிருந்து ஒரு என்ஜினுடன், காலியான 17 சரக்கு பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் ராமேசுவரத்திற்கு சென்றது. முதலில் 30 கி.மீ. வேகத்தில் சரக்கு ரெயில் இயக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 45 கி.மீ. வேகம், 60 கி.மீ. வேகம் அதிகரித்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பின்னர் பாம்பன் புதிய ரெயில் பாலம் வழியாக மண்டபம்-ராமேசுவரம் இடையே மின்சார ரெயிலை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. மின்சார ரெயில் இயக்க அமைக்கப்பட்ட மின்கம்பங் களில் மின்வயர்கள் சரி பார்க்கும் பணியில் தற்போது பொறியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.
இந்த சோதனை ஓட்டத்தின்போது புதிய பாலத்திலிருந்து பாம்பன் வரையிலுமான புதிய தண்ட வாளங்களில் சென்சார் கருவிகள் பொறுத்தப்பட்டு பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
விரைவில் முதன்மை ரெயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி தலைமையில் புதிய ரெயில் பாலம் ஆய்வு நிறைவு அடைந்ததும், புதிய பாம்பன் பாலம் திறக்கப்படுவது குறித்த தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரெயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
- புல்லட் ரெயில் மூலம் பெய்ஜிங்கிலிருந்து-ஷாங்காய்க்கு 4.18 மணி நேரத்தில் செல்ல முடியும்.
பெய்ஜிங்:
சீன அரசு அதிவேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் ரெயிலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு டத்தோங் நகரில், இதற்கு என்று 2 கி.மீ தொலைவுக்கு வழித்தடத்தை உருவாக்கியது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் அதிவேக ரெயில் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்த அதிவேக ரெயில் மாக்லேவ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல் படக் கூடியது. இந்த ரெயிலின் சக்கரம் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது. இதனால், இந்த ரெயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
தற்போது 2 கி.மீ வழித் தடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ரெயில் எதிர்பார்த்த வேகத்தை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷாங்சி மாகாண அரசு மற்றும் சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில கழகம் இணைந்து அதிவேக ரெயில் திட்டத்தை மேற் கொண்டு வருகிறது.
அதிவேக ரெயில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் இடையே உள்ள 1,200 கி.மீ தூரத்தை 90 நிமிடங்களில் கடக்க முடியும். தற்போது சீனாவில் பயன்பாட்டில் இருக்கும், மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயில் மூலம் பெய்ஜிங்கிலிருந்து-ஷாங்காய்க்கு 4.18 மணி நேரத்தில் செல்ல முடியும்.
- தற்போது ரெயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- நெல்லை இருந்து திருச்செந்தூர் செல்ல 2 மணி நேரத்திற்கு மேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக நெல்லை-திருச்செந்தூர் ரெயில் தண்டவாளத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியது.
அந்த சமயம் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் 800-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிக்கிக் கொண்டது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில் சேதமடைந்த ரெயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் டீசல் என்ஜின் மூலம் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ரெயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று மாலை நெல்லையில் இருந்து ஒரு டீசல் என்ஜின் மட்டும் திருச்செந்தூர் நோக்கி சோதனை ஓட்டம் சென்றது.
இந்த சோதனை ஓட்டத்தில் 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும், ரெயில்வே தண்டவாளம் சேதமடைந்து தற்போது சீரமைக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதையில் இன்று வரை ரயில் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சோதனை ஓட்டம் நடந்துள்ளது. நாளை (6-ந்தேதி) முதல் பயணிகள் ரெயிலை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது சோதனை ஓட்டத்தில் ரெயில் திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரை வருவதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது டீசல் என்ஜின் மூலம் தான் இந்த ரெயில் இயங்குகிறது. தற்போது வரை இந்த வழித்தடத்தில் மின்சார ரெயிலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே நாளை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் மட்டும் இயங்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் டீசல் என்ஜின் மூலமாகவா அல்லது மின்சாரம் மூலமாகவா என்பது தற்போது வரை தெரியவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் ரெயில் தண்டவாளம் சேதமடைந்த இடங்களில் ரெயில் செல்லும்போது 20 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்கப்படும் என்றும் தெரிகிறது.
எனவே நெல்லை இருந்து திருச்செந்தூர் செல்ல 2 மணி நேரத்திற்கு மேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது. மின்சார ரெயில் மூலம் செல்லும்போது 1 மணி நேரம் 10 நிமிடங்களில் ரெயில் திருச்செந்தூரை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வரும் ரெயிலை, போடி வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- ரெயிலை இயக்குவதற்கு முன் செய்யப்பட வேண்டிய சிக்னல் செக்கிங், என்ஜின் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
மதுரை:
மதுரை-போடி இடையேயான 90.4 கிலோமீட்டர் தூர மீட்டர் கேஜ் ரெயில் பாதையை, அகல ரெயில் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக இந்த வழித்தடத்தில் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அகல ரெயில்பாதை அமைக்கும் பணி முதலில் தொய்வாக நடந்து வந்தது. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. மதுரை-போடி இடையிலான மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகற்றப்பட்டு, அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது.
இந்த பணி 12 ஆண்டுகள் நடந்து வந்த நிலையில், மதுரை-தேனி இடையிலான அகல ரெயில் பாதை பணி முற்றிலும் முடிவடைந்தது. இதையடுத்து மதுரை-தேனி இடையே அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் கடந்த ஆண்டு மே மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதையடுத்து தேனியில் இருந்து போடி வரையிலான அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்தை தொடங்குவதற்காக, அந்த வழித்தடத்தில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. 15 கிலோமீட்டர் தொலைவிலான அந்த வழித்தடத்திலும் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முற்றிலும் முடிந்தது.
இதனால் மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வரும் ரெயிலை, போடி வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரெயிலை இயக்குவதற்கு முன் செய்யப்பட வேண்டிய சிக்னல் செக்கிங், என்ஜின் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினரும் தேனி-போடி இடையேயான அகல ரெயில் பாதையில் கடந்த ஜனவரி மாதம் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து பிப்ரவரி மாதம் மதுரை-போடி இடையே அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மதுரை-போடி இடையே பயணிகள் ரெயில் மட்டுமின்றி, சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி வழியாக மதுரைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் போடி வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ரெயில்கள் இயக்கப்படும் நேரமும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அறிவித்தபடி பிப்ரவரி மாதம் மதுரை-போடி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில், நாளை (15-ந்தேதி) முதல் போடி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் சென்னை-மதுரை இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் போடி வரை நீட்டிக்கப்படும் என்றும், இந்த ரெயில் சேவையும் நாளை முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. சென்னையில் இருந்து நாளை புறப்படும் எக்ஸ்பிரசில் நாளை மறுநாள் மதுரைக்கு வந்து தேனி செல்கிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், மதுரை-போடி இடையேயான அகல ரெயில் பாதையில் இன்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதிவேக சோதனை ஓட்ட ரெயில், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணி அளவில் புறப்பட்டது.
110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. மதியம் 11.15 மணியளவில் போடி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு, மதியம் மதுரைக்கு வந்தடைந்தது.
அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதால் மதுரை-போடி இடையேயான வழித்தடத்தில் ரெயில் வந்து செல்லும் நேரங்களில் தண்டவாள பகுதியில் மக்கள் யாரும் செல்லக்கூடாது என்று ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்ட ரெயில் போடி வரை இயக்கப்படுவதால், தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நாளை நிறைவேற உள்ளது.
- நீராவி ரெயில் என்ஜின் வடிவமைப்பில் மின்சார ரெயில்
- பழமையான நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்
அரக்கோணம்:
ஆவடியில் இருந்து நீராவி ரெயில் என்ஜின் போன்று வடிவமைக் கப்பட்ட மின்சார ரெயில் 4 ஏ.சி. பெட்டிகளுடன் சோதனை ஒட்டமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
இது குறித்து ரெயில்வே அலுவலர்கள் தெரிவித்த போது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த நீராவி ரெயில் என்ஜின் பெட்டிகளின் முன் புறம் மற்றும் பின்புறமும் இருக்கும்படி அமைக் கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் சோதனை ஓட்டமாக ஆவடியில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்பட்டது என்றனர்.
நீராவி ரெயிலை பார்த்த பயணிகள் ஆரம்ப காலத்தில் பயணித்த பழமையான நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
- சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்கள் எப்போதும் அதிக அளவு வருவாயை கொடுக்கும் வழித்தடங்கள் கொண்டதாகவே உள்ளது.
- சிக்னல்களுக்காக பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ரெயில்கள் மணிக்கணக்கில் காத்து நின்று செல்வதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை-தென்காசி இடையே வருகிற 9-ந்தேதி சுமார் 121 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதேபோல் நெல்லை-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்கள் எப்போதும் அதிக அளவு வருவாயை கொடுக்கும் வழித்தடங்கள் கொண்டதாகவே உள்ளது. ஆனால் சிக்னல்களுக்காக பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ரெயில்கள் மணிக்கணக்கில் காத்து நின்று செல்வதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
இதன் காரணமாக நெல்லை-தென்காசி, திருச்செந்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளுடன், பாதைகள் பலப்படுத்தப்பட்டு வேகம் அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக 64 கிலோமீட்டர் நீளம் கொண்ட நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடம் 2012-ல் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது.
ஆனால் தற்போது வரை 70 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே அந்த பாதையில் ரெயில்கள் இயங்கி வருகிறது. அதன் வேகத்தை அதிகரிக்கும் வகையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோமீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட இருக்கிறது.
வருகிற 9-ந்தேதி நெல்லையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் அதிவேக ரெயிலானது 10.15 மணிக்கு தென்காசி சென்றடையும். மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 12 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோதனை முடிந்த பின் நெல்லையில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ரெயில் தண்டவாளங்கள் பலப்படுத்தப்பட்டு மின்மயமாக்கல் பணிகள் முடிந்தவுடன் அட்டவணை மாற்றம் செய்யப்பட்டு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக நெல்லை-சென்னை இடையே இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டதால் 8 மணி நேரத்தில் சென்னை செல்லும் வகையில் பகல் நேர தேஜாஸ், வந்தே பாரத் போன்ற ரெயில்கள் இயக்க வேண்டும் என்றனர்.
- மதுரை-திருமங்கலம் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
- பொதுமக்கள் ெரயில் பாதையை கடக்கவோ அல்லது நெருங்கவோ முயற்சிக்க வேண்டாம் என மதுரை ரெயில்வே கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை
தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மது ரைக்கும் கன்னி யாகு மரிக்கும் இடையே இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை- திருமங்கலம் இடையே உள்ள 17 கிலோமீட்டர் தொலைவுக்கு 2-வது அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. மதுரை-திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில்பாதையின் உறுதித் தன்மையை ஆய்வுசெய்ய நாளை(3-ந்தேதி) அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி வி.கே.குப்தா தலைமையிலான குழுவினர் மதுரை வருகின்றனர். நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மதுரை- திருமங்கலம் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் தண்டவாளத்தை ஒட்டி குடியிருக்கும் பொதுமக்கள் ெரயில் பாதையை கடக்கவோ அல்லது நெருங்கவோ முயற்சிக்க வேண்டாம் என மதுரை ரெயில்வே கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.
- பாலாறு, பொன்னையாறு பாலங்களின் தன்மை குறித்து ஆய்வு
- கூடுதலாக ரெயில்களை இயக்க வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
வேலூர்:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை வழியாக தினமும் 120-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு கோவை கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு இந்த வழியாக ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிக பட்சமாக ரெயில்களின் வேகம் 110 கிலோமீட்டர் வரை உள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் வட மாநி லங்களுக்கு செல்லக்கூடிய ஒரு சில ரெயில்களில் வேகம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வரை ரெயில்களில் வேகத்தை 145 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வரை ரெயில் என்ஜின் மூலம் 145 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்ப ட்டது. இதில் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் என்ஜினியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சோதனை ஓட்டத்தின் போது தண்டவாளத்தின் அதிர்வு தன்மை மற்றும் சென்னை ஜோலார்பேட்டை இடையே உள்ள பாலாறு பொன்னை யாறு பாலங்களில் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தற்போது தமிழகத்தில் உள்ள ரெயில்களை அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க முடியும். தற்போது இன்னும் அதி வேகமாக செல்லக்கூடிய ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தால் விரைவில் சென்னை சென்ட்ரல் முதல் ஜோலார்பேட்டை வரை ரெயில்கள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வரை அதிவேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் போது பெங்களூர் கேரளா கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் இன்னும் விரைவாக சென்றடைந்து விடும்.
மேலும் குறித்த நேரத்தில் ரெயில்களை இயக்க முடியும். கூடுதலாக ரெயில்களை இயக்க வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தமிழகத்தில் உள்ள ரெயில்களை அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க முடியும்.
- சோதனை ஓட்டத்தின்போது தண்டவாளத்தின் அதிர்வு தன்மை மற்றும் சென்னை ஜோலார்பேட்டை இடையே உள்ள பாலாறு பொன்னையாறு பாலங்களில் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
வேலூர்:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக தினமும் 120-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு, கோவை கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு இந்த வழியாக ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக ரெயில்களின் வேகம் 110 கிலோமீட்டர் வரை உள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ஒரு சில ரெயில்களில் வேகம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வரை ரெயில்களில் வேகத்தை 145 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வரை ரெயில் என்ஜின் மூலம் 145 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இதில் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் என்ஜினியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சோதனை ஓட்டத்தின்போது தண்டவாளத்தின் அதிர்வு தன்மை மற்றும் சென்னை ஜோலார்பேட்டை இடையே உள்ள பாலாறு பொன்னையாறு பாலங்களில் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தற்போது தமிழகத்தில் உள்ள ரெயில்களை அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க முடியும். தற்போது இன்னும் அதிவேகமாக செல்லக்கூடிய ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தால் விரைவில் சென்னை சென்ட்ரல் முதல் ஜோலார்பேட்டை வரை ரெயில்கள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வரை அதிவேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்போது பெங்களூரு, கேரளா கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் இன்னும் விரைவாக சென்றடைந்து விடும்.
மேலும் குறித்த நேரத்தில் ரெயில்களை இயக்க முடியும்.கூடுதலாக ரெயில்களை இயக்க வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
- இந்த ஆய்வுக்குப் பிறகு ரயில்கள் மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் - பழனி ெரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 100 சதவீதம் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த புதிய 58 கி.மீ மின்மய ெரயில் பாதையில் அதிகாரிகள் பல்வேறு சோதனைகள் நடத்தி பயணிகள் பயன்பாட்டுக்கு இயக்கலாம் என அனுமதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று முதன்மை தலைமை மின்சார பொறியாளர் சித்தார்த் இறுதி கட்டபணி களை ஆய்வு மேற்கொ ண்டார். அவருடன் மதுரை கூடுதல் கோட்ட ெரயில்வே மேலாளர் ரமேஷ் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்று காலை 9 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி பழனி வரை சோதனை ெரயில் இயக்கப்பட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பிறகு இந்த ெரயில் பாதையில் ெரயில்களை இயக்குவதற்காக 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்ச ப்பட்டு பின்பு சோதனை ெரயிலில் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டது. மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
இந்த 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் மின் பாதையை நெருங்குவதோ, தொடுவதோ மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆய்வுக்குப் பிறகு ரயில்கள் மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்