search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் படுகாயம்"

    • செக்போஸ்ட் ரவுண்டானா பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர் வினித் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெரியகோட்டையில் இருந்து ஒரு மினிலாரி விறகு ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரம் வந்தது. மினி லாரியை வினித் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார்.

    திண்டுக்கல் சாலையில் உள்ள செக்போஸ்ட் டவுண்டானா பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர் வினித் காயங்களுடன் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செக்போஸ்ட் டவுண்டா னா அருகே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக ஏற்கனவே இருந்த சாலையின் மேல் பகுதியில் புதிய சாலை அமைக்க ப்பட்டது.

    இதனால் சாலையின் இரு பக்கமும் பெரிய பள்ளம் உள்ளது. வாகன ங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியா மல் கீழே விழுந்து காய மடைவது தொடர்கதையாகி வருகிறது.

    இதே இடத்தில் மினி லாரியும் கவிழ்ந்துள்ளது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியு ள்ளது. எனவே முறையாக சாலையை சீரமைக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மற்றும் தாமரைக்கரை மலைப்பகுதி வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு தினமும் கார், வேன், இருசக்கர வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் அதிகளவில் இந்த வழியாக மைசூருக்கு சென்று வருகிறது.

    இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து அட்டை லோடுகள் ஏற்றிக்கொண்டு அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி வழியாக ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை டிரைவர் நடராஜ் (வயது 52) என்பவர் ஓட்டி சென்றார்.

    இதையடுத்து அந்த லாரி பர்கூர்-மைசூரு நெடுஞ்சாலையில் சென்றது. தொடர்ந்து அந்த லாரி பர்கூர் அடுத்த வேலாம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென லாரி சாலையோரம் கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த அட்டைகள் கீழே விழுந்து கிடந்தது.

    இதில் டிரைவர் நடராஜூக்கு தலை மற்றும் கால் பகுதிகளில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதல் சிகிச்சை பெற்று பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அந்த பகுதியில சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

    இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பர்கூர் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்கு சென்று வருகிறது. இந்த வேலாம்பட்டி பிரிவு பகுதியில் வரும்போது அடிக்கடி லாரிகள் கவிழ்வது நடந்து வருகிறது. ரோடு வளைவு பகுதியாக இருப்பதால் புதிதாக வரும் டிரைவர்கள் வளைவு பகுதியை கவனிக்காமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்றனர்.

    • டிரைவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நாட்டறம் பள்ளி, திம்மாம்பேட்டை, அம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி டன் கணக்கில் ஆந்திர மாநிலத்திற்கும், கர்நாடக மாநிலத்திற்கும் அரிசி கடத்த பட்டு வருகிறது.

    இந்த அரிசி ரெயில்கள் மூலமாகவும், மினிலாரி, மோட்டார் சைக்கிளில் மூலமாக வெளிமாநிலத்திற்கு கடத்தப்பட்டு வந்தது.

    தற்போது வாணியம்பாடியில் இருந்து தனியார் மினி பஸ்களில் கடத்தல் அதிகரித்து வந்தது, இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு ரோடு பகுதியில் நேற்று காலை ரேசன் அரிசி மூட்டைகளை தனியார் மினி பஸ்ஸில் ஏற்ற ஒரு பிரிவினர் வந்தனர். அப்போது பஸ்ஸின் டிரைவர் நாகலிங்கம் (வயது 25)என்பவர் அரிசி மூட்டைகளை ஏற்ற முடியாது என மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அரிசி மூட்டை ஏற்ற வந்த குமார் மற்றும் ஆதரவாளர்கள் நாகலிங்கத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர். எங்களுடைய அரிசி மூட்டைகளை மற்றும் ஏன் ஏற்ற மறுக்கிறீர்கள், மற்றவர்கள் மூட்டைகளை மட்டும் எப்படி எடுத்துச் செல்லலாம் எனக்கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த டிரைவர் நாகலிங்கம் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து அம்பலூர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழக ஆந்திர எல்லையில் உள்ள வெலிதிகமாணிபெண்டா வழியாக அதிகமாக அரிசி கடத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த மலைக்கு போகும் வழியில் வனத்துறை செக் போஸ்ட் ஒன்றும் , காவல்துறை செக்போஸ்ட் 3 இருந்தும், தொடர்ந்து கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடிரென கண்டெய்னர் லாரியின் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சடன் பிரேக் போட்டார்.
    • கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்னால் வேகமாக மோதியது.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் டிரைவர். இவர் நேற்று இரவு திண்டிவனத்தில் இருந்து லாரியில் சவுக்கு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமநத்தம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று முன்னால் சென்றது. திடிரென கண்டெய்னர் லாரியின் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சடன் பிரேக் போட்டார்.

    இதனால் கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்னால் வேகமாக மோதியது. இதனை தொடர்ந்து அதன் பின்னால் சவுக்கு மர கட்டைகளை ஏற்றி சென்ற லாரி கண்டெய்னர் லாரி மீது மோதியது லாரியின் முன் பக்கம் அப்பளம்போல் நொருங்கியது. 2 லாரிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சவுக்கு கட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் டிரைவர் முருகன் பலத்த படுகாயம் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் லாரியின் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய லாரி டிரைவர் முருகனை 1 மணி நேரம் போராடி மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய லாரிகளை போலீசார் அப்புறப்ப டுத்தினர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் அந்த இடம் பரப்பாக இருந்தது.

    • ஆறுமுகம் தனது மோட்டார் சைக்கிளில் லிங்காபுரத்தில் இருந்து பாலப்பட்டிக்கு சென்றார்.
    • ஆறுமுகம் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    கோவை,

    கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் இளங்கோவடிகள் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் லிங்காபுரத்தில் இருந்து பாலப்பட்டிக்கு சென்றார். அப்போது திடீரென காட்டுப்பன்றி ரோட்டின் குறுக்கே வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது காட்டுப்பன்றி மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஆறுமுகம் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • டைல்ஸ் பாரம் ஏற்றி வந்த லாரி ஊருக்குலைந்தது.
    • ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    தருமபுரி,

    ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு டைல்ஸ் பாரம் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் மேல் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராமன் மகன் காசிராம் (வயது 30) ஓட்டுநர், மற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மகராஜன் மகன் தென்னரசு (37) ஆகிய இருவரும் தொப்பூர் கட்டமேடு பகுதியில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கல்கத்தாவில் இருந்து ஈரோட்டிற்கு எள்ளு பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் பின்னால் டைல்ஸ் பாரம் ஏற்றி வந்த லாரி ஊருக்குலைந்தது.

    இந்த விபத்தில் டைல்ஸ் பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் காசிராம் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் காயமடைந்த ஓட்டுநரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×