search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"

    • பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    நேற்றுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மணீஷ் நர்வால் வெள்ளியும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். தடகளத்தின் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீரரான சிவராஜன் சோலைமலையின் 'பிளையிங் ரிட்டர்ன்' ஷாட் தற்போது வைரலாகி வருகிறது.

    ஹாங்காங் வீரர் மான் கை சூவுக்கு எதிரான ஆண்கள் ஒற்றையர் SH6 குரூப் பிளே ஸ்டேஜ் ஆட்டத்தில், சிவராஜன் சோலைமலை சில அற்புதமான ஷாட்களை அடித்துள்ளார். இருப்பினும் இந்த ஆட்டத்தில், 13-21, 21-18, 15-21 என்ற கணக்கில் சோலைமலை தோல்வியடைந்தார்.

    • வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கார் மீது ஓலா கேப் மோதியதால் ஆத்திரமடைந்த சொகுசு காரின் உரிமையாளர் கால் டாக்சி டிரைவரை திரைப்பட பாணியில் தூக்கி விசி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    வைரலாகும் 30 வினாடிகள் கொண்ட வீடியோவில், குடியிருப்பு வளாக பகுதியில் ஆடி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இயங்கும் கார் ஒன்று வருகிறது. முன்னால் சென்ற ஆடி காரின் உரிமையாளர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த டாக்சி டிரைவரின் கார் லேசாக பம்பரில் மோதியுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆடி காரில் இருந்தவர்கள், இறங்கி வந்த ஒருவர் ஓலா கார் ஓட்டுநரை அப்படியே தூக்கி வீசி தாக்குகிறார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு 11:20 மணியளவில் மும்பையில் உள்ள காட்கோபரில் உள்ள ஒரு மாலுக்கு எதிரே உள்ள கட்டிடத்தின் நுழைவாயிலில் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதில் ஒரு பயனர், "இந்த திமிர்பிடித்த ஆடி பையன் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என்றார்.

    மற்றொரு பயனர், "இப்போதெல்லாம் சிலர் சக்தி வாய்ந்தவர்களாக மாற விரும்புகிறார்கள். அவர்கள் பலவீனமான நபர் மீது தங்கள் சக்தியைக் காட்டத் தொடங்குகிறார்கள்" என்றார்.

    • வீடியோ 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விருப்பத்தை பெற்றுள்ளது.
    • வீடியோவை பார்த்த பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ரெயில்களில் உள்ள கழிப்பறையில் வாளி திருட்டை தடுக்க அது இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கும். அதேபோன்று ஒரு ஹோட்டலில் சோப்பை யாரும் எடுத்து போகாமல் இருக்க அதன் நடுவே ஒரு துளையிடப்பட்டு உள்ளது.

    பின்னர் கயிற்றால் கட்டப்பட்டு அங்கு தொங்க விடப்பட்டு இருக்கிறது. இதனை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

    இந்த வீடியோ 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விருப்பத்தை பெற்றுள்ளது. மேலும் சிலர் இந்த தொழில்நுட்பம் இந்தியாவை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணமகள் மற்றும் மணமகன் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதமாக மாறியுள்ளது.
    • காயமடைந்த 8 பேரை சிகிச்சைக்காக நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நிஜாமாபாத், நவிபேட் பகுதியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற திருமண விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் ஆட்டிறைச்சி துண்டுகள் இல்லாததால் மணமக்களின் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    நவிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், நந்திப்பேட்டையைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணத்திற்குப் பிந்தைய கொண்டாட்டத்தின் போது மணமகனின் உறவினர்கள் குறைந்த அளவு ஆட்டிறைச்சி துண்டுகள் வழங்கப்படுவதாக புகார் சொல்லியுள்ளனர்.

    இது மணமகள் மற்றும் மணமகன் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதமாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் சமையல் கரண்டி, கற்கள், கட்டைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த 8 பேரை சிகிச்சைக்காக நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • நடனம் அல்லது நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
    • சகோதரரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

    டெல்லியில் பிரியாவிடை விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த இளம் போலீஸ் அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரியும் ரவிக்குமார், நேற்று முன்தினம் நடைபெற்ற சக ஊழியரின் பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து ரவிக்குமார் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

    ரவிக்குமாரின் இறுதித் தருணங்கள் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவரும் மற்றொரு நபரும் பாடல் ஒன்றுக்கு காலை அசைத்தபடி நடனம் ஆடுகின்றனர். சிறிது நேரம் கழித்து, ரவி சிரித்துக்கொண்டே ஒதுங்குவதைக் காணமுடிகிறது. இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

    உயிரிழந்த ரவிக்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் 2010-ம் ஆண்டு முதல் டெல்லி போலீஸ் படையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். 45 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டது.

    நடனம் அல்லது நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தனது சகோதரரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

    இந்தூரில் நடந்த ஒரு யோகா நிகழ்வில் தேசபக்தி பாடலில் உற்சாகமான நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்த போது, இந்தியக்கொடியைப் பிடித்தபடி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபரில், கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் முழுவதும் கர்பா நிகழ்வுகளில் குறைந்தது 10 மாரடைப்பு இறப்புகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் இளையவர் 17 வயது மட்டுமே.

    • கடந்த 6 மாதங்களாக அவன் ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு இருந்தான்.
    • ஜான் ஹென்றி, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரை சந்தித்து தன்னுடைய சந்தோஷத்தை பரிமாறி கொண்டான்.

    அமெரிக்காவின் ஓகிஹோ மாகாணம் கிளீவ்லேண்ட் நகரை சேர்ந்தவன் ஜான் ஹென்றி. இதய கோளாறுடன் பிறந்த அவனுக்கு 5 மாத குழந்தையாக இருந்தபோது தற்காலிக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதய மாற்று சிகிச்சையே நிரந்தர தீர்வு என டாக்டர்கள் கூறினர்.

    உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து கடந்த 6 மாதங்களாக அவன் ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு இருந்தான். இன்றோ, நாளையோ என இதய தானத்திற்காக ஜான் ஹென்றி காத்திருந்தநிலையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் ஜான் ஹென்றிக்கு பொருத்துவதற்கான தகுந்த இதயம் கிடைத்தது.

    இந்த தகவல், அவனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் உற்சாகத்தை அளித்தது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு ஜான் ஹென்றி, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரை சந்தித்து தன்னுடைய சந்தோஷத்தை பரிமாறி கொண்டான்.

    மருத்துவ உபகரணத்துடன் 'நான் புதிய இதயத்தை பெறுகிறேன்' என கூறியப்படி அவன் தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினான். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை நெகிழ வைத்துள்ளது.

    • சரியாக 30 வாரங்கள் 5 நாட்கள் கழித்து சரிதா ஹோலண்டுக்கு பிரசவ வலி எடுத்தது.
    • தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியநிலையில் இதுதொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    பெண் ஒருவர் பத்து மாதத்தில் வெவ்வெறு பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சரிதா ஹோலண்ட் (வயது 41). திருமணமான இவர் கர்ப்பம் ஆனார். பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

    பின்னர் 10 வார இடைவெளியில் சரிதா மீண்டும் கர்ப்பம் ஆனார். குறுகிய காலத்தில் தான் மீண்டும் கர்ப்பம் அடைந்தது குறித்து டாக்டர்களிடம் ஆலோசித்தபோது இரட்டை குழந்தைகள் பிறக்கும் என கூறியுள்ளனர்.

    சரியாக 30 வாரங்கள் 5 நாட்கள் கழித்து சரிதா ஹோலண்டுக்கு பிரசவ வலி எடுத்தது. ஆபரேஷன் மூலம் நடந்த பிரசவத்தில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. 2 மாதங்கள் குறைபிரசவத்தில் அந்த குழந்தைகள் பிறந்தன.

    இந்தநிலையில் தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியநிலையில் இதுதொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பெண் ஒரு குழந்தை பெற்ற 2-வது மாதத்தில் மீண்டும் கர்ப்பம் தரித்து 8-வது மாதத்தில் மேலும் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். எனவே 10 மாதங்களில் 3 குழந்தைகளை பெற்றதால் அவரது வீடியோ சமூக வலைத்தளத்தில் கலக்கி வருகிறது.

    • குடியிருப்பு பகுதி ஒன்றில் வசிக்கும் மாணவர்கள் சிலர் அங்குள்ள குளத்தில் உற்சாகமாக குதித்து விளையாடி மகிழ்கிறார்கள்.
    • சிறுவன் ஒருவன் சைக்கிளை மிதித்தப்படி குளத்தை நோக்கி வருகிறான்.

    அதிக 'லைக்'குகளை வாங்குவதற்காக சமூக வலைத்தள பயனர்கள் வித்தியாசமான முறையில் யோசித்து வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.

    அந்தவகையில் சிறுவன் ஒருவன் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. குடியிருப்பு பகுதி ஒன்றில் வசிக்கும் மாணவர்கள் சிலர் அங்குள்ள குளத்தில் உற்சாகமாக குதித்து விளையாடி மகிழ்கிறார்கள்.

    அப்போது சிறுவன் ஒருவன் சைக்கிளை மிதித்தப்படி குளத்தை நோக்கி வருகிறான். பின்னர் குளத்தை நோக்கி 'டைவ்' அடித்து குதித்து சாகசத்தில் ஈடுபடுகிறான். இந்த காட்சி இணையத்தில் வெளியானநிலையில் சிறுவனின் சாகசத்தை பாராட்டி பயனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.


    • சீருடை அணியாத மற்றொரு ஆண், அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து, தலையை பக்கவாட்டில் ஆட்டுவதைக் காணலாம்.
    • சம்பவம் மத்திய பிரதேசம் தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை குறித்து காட்டுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

    போபால்:

    மத்தியப் பிரதேச மாநிலம் கட்னியில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பெண் மற்றும் அவரது பாட்டியை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரசு ரெயில்வே காவல்துறையைச் (GRP) சேர்ந்தவர்கள் பாட்டி மற்றும் அவரது பேரன் (15 வயது) ஆகியோரை திருட்டு வழக்கு குறித்து விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அந்த பெண்ணை தாக்கியவர்கள், பின்னர் அவரது பேரனை நோக்கி தாக்க திரும்பியதாக கூறப்படுகிறது.

    ''அப்பா எங்கே என்று போலீஸ் கேட்டது... எங்கே என்று தெரியவில்லை. போலீசார் என்னை டிராபிக் இன்ஸ்பெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது என்னை அடித்தார்கள். அப்போது என் பாட்டியையும் அடித்தார்கள். என் அப்பா கூலித் தொழிலாளிதான்" என்று சிறுவன் கூறினான்.

    வீடியோவில், GRP போலீசார் அவரை பெல்ட்டால் அடிக்கும்போது அந்த அப்பெண் தரையில் கிடப்பதை காண முடிகிறது. சீருடை அணியாத மற்றொரு ஆண், அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து, தலையை பக்கவாட்டில் ஆட்டுவதைக் காணலாம்.

    வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த வீடியோ குறித்து ஏஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று கட்னி எஸ்பி அபிஜீத் குமார் ரஞ்சன் தெரிவித்தார். மேலும், இது திருடப்பட்ட நகைகளை மீட்பது தொடர்பான பழைய சம்பவம் இது என தெரிவித்த போலீசார், வீடியோவில் காணப்படும் GRP ஆட்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

    இதனிடையே, இந்த சம்பவம் மத்திய பிரதேசம் தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை குறித்து காட்டுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

    • பலத்த மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கியுள்ளனர்.
    • சிறிது நேரத்துக்குப் பிறகு சவாரி வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியதாக பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்களை பார்க்கும்போது நம்மை நாமே அறியாமல் திகைப்பில் ஆழ்ந்துபோவோம்... அதுபோல் ஒரு வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மெக்சிகோவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் வீடியோ அனைவரையும் ஒரு நொடி உறைய வைத்துள்ளது.

    35 வினாடிகள் ஓடும் வீடியோவில் பலத்த மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கியுள்ளனர். பயத்தில் அவர்கள் குரல் எழுப்புகின்றனர்.

    சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகு சவாரி வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியதாக பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஏற்கனவே பார்க்கிங் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் அது மோதலாக மாறியுள்ளது.
    • சம்பவம் தொடர்பாக இருதரப்பினரை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பார்க்கிங் தொடர்பாக 2 குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    நொய்டாவின் செக்டார் 72-ல் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கிடையே ஏற்கனவே பார்க்கிங் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் அது மோதலாக மாறியுள்ளது. கிரிக்கெட் பேட் மற்றும், தடியுடன் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தகராறில் ஒரு வாகனம் சேதமானது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இச்சம்பவம் தொடர்பாக செக்டார் 113 காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருதரப்பினரை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • காட்சிகள் நெஞ்சை பதைபதைக்கும் வகையில் இருந்தது.
    • பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதும் தெரியவந்தது.

    மும்பை:

    பள்ளி மாணவி சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிறுமிகள், அவர்களது பெற்றோருக்கு போலீசார் சார்பில் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

    மும்பையில் பள்ளி செல்லும் ஒரு மாணவியை சில சிறுமிகள் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சிறுமிகள் கும்பலாக சேர்ந்து இரக்கமின்றி பள்ளி மாணவியை முடியை பிடித்து இழுத்து அடித்து, கீழே தள்ளி உதைக்கும் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்கும் வகையில் இருந்தது.

    சிறுமிகள், பள்ளி மாணவியை தாக்கிய சம்பவம் 2 வாரத்துக்கு முன் வெர்சோவா யாரி ரோடு பகுதியில் நடந்தது என்பது தெரியவந்தது.

    சமூகவலைதளத்தில் பரவிய வீடியோ தொடர்பாக வெர்சோவா போலீசார் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர்.


    விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட சிறுமிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி யாரி ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், சிறிய பிரச்சனை தொடர்பாக தங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மாணவி, சிறுமிகள் மற்றும் அவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், போலீஸ் அதிகாரிகள் மூலம் கவுன்சிலிங் வழங்கினர்.

    பள்ளி மாணவியை சிறுமிகள் சேர்ந்து தாக்கிய சம்பவத்தை அடுத்து வெர்சோவா பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

    ×