என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சனாதனம்"
- சனாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என்று என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
- சமூக வலைதளங்களில் சனாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக ஜனசேனா கட்சிக்குள் நரசிம்ம வாராஹி படை' புதிய அணியை தொடங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய பவன் கல்யாண், "இந்து கோயில்களுக்குச் செல்லும்போதும், சனாதன தர்மத்தைப் பின்பற்றும்போதும் சில விஷயங்களை நாம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டும் விளக்காக விளங்கும் சனாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என்று என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை மதிக்கும் அதே சமயம், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் விளைவுகள் ஏற்படும் என்பதையும் உறுதி செய்வோம்.
இந்து மதத்தையோ, சனாதன தர்மத்தையோ கேலி செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை பொறுத்துக்கொள்ள முடியாது. சமூக வலைதளங்களில் சனாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
நரசிம்ம வாராஹி படையில் ஜன சேனானி என்று அழைக்கப்படும் ஜனசேனா உறுப்பினர்கள் சனாதன தர்மத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இந்த புதிய பிரிவு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்து மத விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கலாச்சார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.
- . உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள்.
- சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என்று பவன் கல்யாண் விமர்சித்து இருந்தார்.
சனாதனம் வைரஸ் போன்றது என்ற உதயநிதியின் பேச்சை கண்டித்து ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியிருந்தார்.
சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழிந்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என்று பவன் கல்யாண் விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
பொறுத்திருந்து பாருங்கள். சிரித்த முகத்துடன் LETS WAIT AND SEE என அவர் பதில் அளித்துள்ளார்.
#WATCH | On Andhra Pradesh Deputy CM Pawan Kalyan's remark 'Sanatana Dharma cannot be wiped out and who said those would be wiped out', Tamil Nadu Deputy CM Udhayanidhi Stalin says "Let's wait and see" pic.twitter.com/YUKtOJRnp9
— ANI (@ANI) October 4, 2024
- இந்து வாழ்வியலே சனாதானம்.
- இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சனாதானம் என்பது என்ன? என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.
சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, சனாதனம் பற்றிய எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.
சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சானாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை போலீசார் அவசர அவசரமாக சுட்டுக் கொன்றது ஏன்? இதில் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எதிர்கட்சிகள் அனைவரும் சி.பி.ஐ. விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசினார்.
- பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பெங்களூர்:
சென்னை தேனாம்பேட்டையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் டெங்கு, மலேரியா, கொரோனா போன்றது தான் சனாதன தர்மம். இது சமூக நீதிக்கும், சமுத்துவத்துக்கும் எதிரானது. எனவே சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பெங்களூரு பெருநகர 42-வது மக்கள் பிரதிநிதிகளுக்கான கோர்ட்டில் சமூக ஆர்வலர் பரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது.
இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று இரவு பெங்களூருக்கு சென்றார். இன்று காலையில் அவர் மக்கள் பிரதிநிதிகளுக்கான கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது தி.மு.க. தரப்பு வக்கீல்கள் உடனிருந்தனர். மேலும் அவருடைய வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமின் வழங்கி கர்நாடக மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது.
- நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது
சென்னை:
சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கோவில் அர்ச்சகர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-
சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தவில்லை. நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது. பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன்
- பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
பிரபல பாலிவுட் பாடகி அனுராதா பட்வால் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜக டெல்லி தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் அனுராதா பட்வால் பாஜகவில் இணைந்திருக்கிறார்.
பாஜகவில் இணைந்த பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனுராதா, "சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன். பாஜகவின் ஓர் அங்கமாக இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "அது குறித்து இன்னும் தெரியவில்லை" என்று அவர் பதிலளித்துள்ளார்.
பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில், பாடகி அனுராதா இசை நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய பிரதேசம் உள்பட 3 மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
- காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.
புதுடெல்லி:
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.
இந்நிலையில், சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், சனாதன தர்மத்தைக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதால் அக்கட்சி தோல்வியின் விளிம்பில் உள்ளது. சனாதனத்தை எதிர்த்து இந்தியாவில் அரசியல் செய்யமுடியாது. சனாதனத்தின் அழிவை அறிவிப்பவர்களுடன் காங்கிரஸ் கட்சி நிற்கிறது. சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சியை மூழ்கடித்து விட்டது. சாதிவாரி அரசியலை நாடு ஏற்காது, சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் நடக்கும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
#WATCH | On Congress trailing in MP, Rajasthan and Chhattisgarh, party leader Acharya Pramod Krishnam says, "Opposing Sanatan (Dharma) has sunk the party. This country has never accepted caste-based politics...This is the curse of opposing Sanatan (Dharma)." pic.twitter.com/rertLLlzMS
— ANI (@ANI) December 3, 2023
- ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும்.
- சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.
சேலம்:
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து 2017-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கருவறை மண்டபம், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்பட அழகிய வேலைபாடுகளுடன் கூடிய திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும். பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.
சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான 8 வழிச்சாலை வருங்காலத்தில் வரும். சேலம் மாநகரம் சென்னைக்கு மற்றும் பெங்களூருக்கு நிகராக வளர வேண்டும் என வேண்டுகிறேன்.
சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.
கவர்னர்கள் வாங்கும் சம்பளம் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பதை கண்டிக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கொலையாளிகள், குண்டு வைத்தவர்களை விடுவிக்க தீர்மானங்கள் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதை கவர்னர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது கவர்னர்களின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவில் ஆன்மிகச் சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- சனாதான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்.
சென்னை:
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத வைணவத் கோவில் ஆன்மிகச் சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் ஒரே நாளில் காலையில் தொடங்கி மாலைக்குள் 6 வைணவ கோவில்களில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனமும் அந்தந்த கோவில்களின் பிரசாதங்களும், மதிய உணவும் வழங்கப்படும்.
சென்னையில் 2 பயணத் திட்டங்களாகவும், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 4 மண்டலங்களில் இன்று தொடங்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆடி மாதத்தில் ஒரே நாளில் 6 அம்மன் கோவில்கள், எட்டு கோவில்கள் என இரண்டு பிரிவாக பிரித்து அம்மனை தரிசிப்பதற்கு இதேபோன்று ஒரு ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 1,000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றது மகிழ்ச்சியை தருகிறது.
நவராத்திரியை முன்னிட்டு ஒரே இடத்தில் பிரசித்தி பெற்ற 9 அம்மன்களை தரிசனம் செய்யக்கூடிய அளவில் ஒரு நிகழ்ச்சியினை நவ ராத்திரி விழாவாக ஏற்பாடு செய்ய இருக்கின்றோம். அந்த நிகழ்விலே கொலுவும் அமைக்கப்பட இருக்கின்றது.
இன்றைக்கு திருவல்லிக்கேணியில் தொடங்கப்பட்டுள்ள ஆன்மிகச் சுற்றுலாவில் 62 நபர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம், தல சயன பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு 34 நபர்களும்.
இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர், வைத்திய வீரராகவ பெருமாள் கோவில், ஸ்ரீ பெரும்புதூர், ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு 28 நபர்களும் அழைத்து செல்லப்படுகின்றனர்.
சனாதான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறுகிறார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மஸ்தான் பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச்சிலை திறப்பு விழா, தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதுபோல் தெரியவில்லை. இதனை அமல்படுத்த வேண்டுமென்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும், தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப்போகிறார்கள் என்ற தெளிவு இல்லை. மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து வருகிறோம்.
தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறுகிறார். எனவேதான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். சாதிய வேறுபாடுகள் எப்போதும் இருக்கக்கூடாது. சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நம்பவில்லையா, நம்புங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதான விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் மணிமாறன், கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- சனாதனத்தின் மீதான தாக்குதல் என்பது இந்துக்களுக்கு எதிரானது அல்ல.
- சனாதனம் பற்றிய புரிதலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கிறது.
இந்தியா கூட்டணி உருவானதில் இருந்து மோடி பதற்றத்தில் இருக்கிறார். சனாதனத்தின் மீதான தாக்குதல் என்பது இந்துக்களுக்கு எதிரானது அல்ல.
சனாதனம் பற்றிய புரிதலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கிறது. தமிழகத்தில் புரிந்து கொள்வதற்கும், வட இந்தியாவில் புரிந்து கொள்வதற்கும் வேறுபாடு தெரிகிறது.
- கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
- உலக அளவில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
பழனி:
என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பல்வேறு இடங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். மாரியம்மன் கோவில் தேரடி வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தேய்ந்துகொண்டே வருகிறது. தமிழகத்திலும் இதே நிலை ஏற்படும். 2014க்கு முன்பு 60 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பா.ஜ.க. 15 ஆண்டுகள்தான் ஆட்சி செய்திருக்கிறது. ஆனால் இந்த 15 ஆண்டுகளில் 200 வருடங்கள் கழித்து எப்படி இருக்க வேண்டுமோ? அதுபோன்ற வளர்ச்சியை கண்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 47 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது. தனி மனித வருமானம் உயர்ந்திருக்கிறது. உள்நாட்டு பிரச்சினைகள் அனைத்தையும் பா.ஜ.க. அரசு சரி செய்து உள்ளது. 3-வது முறையாக மோடி 2024-ம் ஆண்டு பிரதமராக அமரும்போது இந்தியா பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுக்கும்.
தற்போது அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் பேமிலி கோட்டாவில் உள்ளனர். குடும்ப கோட்டாவில் சீட் வாங்கி ஜெயிப்பதுதான் தி.மு.க.வின் பார்முலா.
முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை வாரிசு அரசியல் கூடாது என்றார். அவரது கொள்கையை கடைபிடிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. மட்டும்தான். தி.மு.க. அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டிய ஒரு கட்சி. ஏழை மக்களின் வலி அவர்களுக்கு தெரியாது.
காங்கிரசை எதிர்த்து அரசியலுக்கு வந்தவர்கள் மம்தாவும், கெஜ்ரிவாலும்.
தற்போது இவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் உள்ளனர். இதை மக்கள் எவ்வாறு ஏற்பார்கள். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. சனாதனத்தை ஒழிப்பதும், இந்து தர்மத்தை ஒழிப்பதும்தான் இந்தியா கூட்டணியின் கொள்கை. இந்த கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாது. 400 எம்.பி.க்களோடு மோடியை மீண்டும் பிரதமராக அமர வைக்க வேண்டும். தமிழகத்தில் இந்து கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் களவு போகிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என்ற நிலை ஏற்படும். பழனி கோவில் சொத்துக்களும் தொடர்ந்து மாயமாகி வருகின்றன. எனவே அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகால எதிர்காலத்தை யோசித்து பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்