search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94876"

    குத்தாலம் அருகே கோவிலில் தங்க நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம்:

    குத்தாலம் அருகே பாலையூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ஏ.கிளியனூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றுமுன்தினம் இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி அர்ஜூன் கதவை பூட்டி சென்றுள்ளார். நேற்று காலை பூசாரி கோவிலுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் செல்லியம்மன் கழுத்திலிருந்த 4 கிராம் எடையுள்ள 2 தாலிகள், 4 கிராம் மதிப்புள்ள ஒரு பொட்டு என மொத்தம் 1½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் புதுக்காலனியில் வசித்து வருபவர் சாமிதுரை(வயது 30). இவரது மனைவி அருள்மொழி(25). கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிதுரை தனது சொந்த ஊரான வேப்பந்தட்டை தாலுகா நூத்தாப்பூருக்கு சென்றார். 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு அருள்மொழியும் தீபாவளி பண்டிகைக்காக நூத்தாப்பூருக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் பக்கத்து வீட்டை சேர்ந்த மகாலட்சுமி, சாமிதுரை வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்டு அவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சாமிதுரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது. நகைகளை போர்வைக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததால், அவை தப்பின. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூரில் பர்னிச்சர் கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் தின்னூர் லட்சுமி நரசிம்மநகர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 42). இவர், தின்னூர் பிரகாஷ் நகர் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். தீபாவளியையொட்டி கடையில் மும்முரமாக விற்பனை நடந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு இவரது கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து, பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், கண்காணிப்பு கேமராக்கள், டி.வி., ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களையும் திருடிச் சென்றனர்.

    இதுகுறித்து சொக்கலிங்கம் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி கீழ் மசூதி தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 47). இவர் தர்மபுரி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்கச் சென்றார். அப்போது உழவர் சந்தையின் வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவருடைய மோட்டார் சைக்கிள் மாயமானது. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆனந்தராஜ் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பிள்ளைக்களத்தூர், பில்லூர் ஊராட்சிகளில் மின்கேபிள் வயர்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    பரமத்தி அருகே பிள்ளைக்களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பிள்ளைக்களத்தூர், சுள்ளிக்காடு, வில்லிபாளையம் மற்றும் நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலை அருகே உள்ள குட்டை ஆகிய 4 இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து மின் மோட்டார் அறைக்கு செல்லும் மின்கேபிள் வயர்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டதாக பிள்ளைக்களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா பரமத்தி போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதேபோல் பில்லூர் ஊராட்சிக்குட்பட்ட மொட்டையாம்பாளையம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் பில்லூர் மற்றும் அர்த்தனாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து மின்மோட்டார் அறைக்கு செல்லும் மின்கேபிள் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக பில்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் சரண்யா பரமத்தி போலீசில் புகார் செய்தார். இந்த 2 புகார்கள் குறித்தும் பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கேபிள் வயர்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நச்சலூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நச்சலூர்:

    நச்சலூர் அருகே உள்ள நெய்தலூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை நெய்தலூர் கடை வீதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு நிறுத்தி விட்டு சந்தைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
    பழவூர் அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பழவூர் அருகே உள்ள ஊரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பினர்.

    அப்போது அவரது வீட்டில் பின்பக்க வழியாக சென்று ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரிமங்கலம் அருகே மிட்டாய் கடையில் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    காரிமங்கலத்தை சேர்ந்தவர் பாஷா. இவர் போலீஸ் நிலையம் முன்பு பிஸ்கட், மிட்டாய் கடை வைத்துள்ளார். நேற்று மதியம் தனது மகனை கடையை பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு அவர் வீட்டிற்கு சென்றார். அப்போது கடைக்குள் நுழைந்த மர்ம நபர் பிஸ்கட் வாங்குவது போல் நடித்து சிறுவனை ஏமாற்றி கல்லாவில் இருந்த ரூ.8 ஆயிரத்தை திருடிச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாளையில் செல்போன் திருடிய 3 பேரை கைது செய்த போலீசர் அவர்களிடம் இருந்து காணாமல் போன செல்போனை பறிமுதல் செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை, பாளை பகுதியில் அடிக்கடி செல்போன்கள் திருட்டு போய் வந்தன. நெல்லை தற்காலிக பஸ் நிலையத்தில் தனது விலை உயர்ந்த செல்போன் திருட்டு போய் விட்டதாக அம்பையை சேர்ந்த கந்தசாமி (வயது39) என்பவர் புகார் செய்து இருந்தார்.

    இதுபோல வண்ணார்பேட்டையை சேர்ந்த கணேசன் (28) என்பவரும் தனது செல்போனை காணவில்லை என புகார் செய்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து பாளை குற்றப்பிரிவு போலீசார் அந்த செல்போன்களில் இ.எம்.ஐ. நம்பரை வைத்து ரகசியமாக தேடி வந்தனர். தற்போது அந்த செல்போன்கள் மீண்டும் இயக்கப்பட்டதால் உடனடியாக போலீசார் குற்றவாளிகளை கண்டு பிடித்தனர்.

    மேலப்பாளையம் ஆமீன் புரத்தை சேர்ந்த செய்யது இப்ராகிம் (35) என்பவர் கணேசனின் செல்போனை திருடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    இதுபோல கந்தசாமியின் செல்போனை நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த கதிர்வேல் (50) மற்றும் பேட்டையை சேர்ந்த ராஜா மைதீன் (26) ஆகிய 2 பேரும் திருடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்தும் காணாமல் போன செல்போனை பறிமுதல் செய்தனர்.

    கீழ்பென்னாத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சமலை (வயது 65), விவசாயி. இவரது மகன் முனுசாமி (43). சென்னையில் மளிகை கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சிறுநாத்தூர் சிவம் நகரில் முனுசாமி வீடு கட்டியுள்ளார். விசேஷ நாட்களில் குடும்பத்துடன் முனுசாமி தனது வீட்டிற்கு வந்து செல்வாராம். நேற்று காலையில் முனுசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, நகை - பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரத்தை திருடிசென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 45). இவர் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் உள்ள வேலாயுதம் நகரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.75 ஆயிரம் திருடுபோய் இருப்பது தெரிந்தது. பின்னர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

    தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரூ.75 ஆயிரத்தை திருடிசென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், ஆண்டியப்பன் தெருவை சேர்ந்தவர் சாந்தாராமன் மகன் பிரவீன் (27). இவர் கடந்த 14-ந்தேதி வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த 14 ந்தேதி மர்ம நபர்கள் அதனை திருடி சென்றனர்.

    இதே போல் கும்பகோணம், செம்போடையை சேர்ந்தவர் ஞானசம்பந்தம் மகன் வைரவேந்தன் (26), இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார் கடந்த 14 ந்தேதி இரவு மர்ம நபர்கள் அதனை திருடி சென்றனர்.

    இது குறித்து பிரவீன் மற்றும் வைரவேந்தன் ஆகியோர் மேற்கு போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, தாராசுரம், எலுமிச்சங்கா பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தீனதயாளன் (28), மாரி முத்து மகன் தாமோதரன் (24) மற்றும் மதுக்கூர், ராமானந்தபுரத்தை சேர்ந்த ரவி மகன் சிவபாரதி (20) ஆகியோரை கைது செய்தனர்.

    ×