search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94916"

    • துப்பாக்கி காட்டி மிரட்டி 20 பவுன் நகையை பறித்து சென்றது.
    • கொள்ளையில் ஈடுபடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே இங்கு வந்து தங்கி இருந்ததாகவும் கூறினார்.

    நாகர்கோவில் : 

    நாகர்கோவில் வேதநகர் மேல புதுத்தெருவை சேர்ந்தவர் முகமது உமர் சாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்பொழுது இங்கேயே வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின் மற்றும் அவரது மகள், மாமியாருடன் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். வீட்டில் முகமது உமர் சாகிப் மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் முகமது உமர் சாகிப்பிடம் துப்பாக்கி காட்டி மிரட்டி 20 பவுன் நகையை பறித்து சென்றது.

    இதுகுறித்து முகமது உமர் சாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி, மேலசரக்கல் விளையை சேர்ந்த தர்வீஸ்மீரான் ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. தலைமறைவாகி உள்ள மற்ற 4 பேரை தேடி வந்த நிலையில் ஷேக்முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம்.2 கோர்ட்டில் சரணடைந்தனர். 3 பேரையும் போலீசார் காவல் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்கள். முக்கிய குற்றவாளியான சார்லசை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று சார்லஸை கைது செய்தனர். கை செய்யப்பட்ட சார்லஸிடம் விசாரணை நடத்தியபோது இந்த கொள்ளைக்கு அமீர் மூளையாக செயல்பட்டதாக கூறியுள்ளார்.

    மேலும் கொள்ளையில் ஈடுபடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே இங்கு வந்து தங்கி இருந்ததாகவும் கூறினார். சம்பவத்தன்று காலையில் நாகர்கோவில் பகுதியில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்க சென்றபோது எங்களது முயற்சி பலிக்கா ததால் மாலையில் முகமது உமர் சாகிப் வீட்டில் கை வரிசை காட்ட சென்றபோது சிக்கி கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து சார்லசை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வீட்டின் முன் கேட்டின் கதவில் பூட்டு உடைக்கபட்டு இருந்தது.
    • போலீசார், கைரேகை நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சூளகிரி:

    திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் சிவக்குமார் (வயது39). இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பேரிகை பகுதி ரிங்ரோடு அண்ணா நகர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி வசித்து வருகிறார். மேலும், அதே பகுதியில் சிவக்குமார் பைனான்ஸ் நிறுவனத்தையும் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் முத்துலட்சுமி கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்ததால், மனைவியையும், குழந்தையையும் அழைத்து வருவதற்காக சிவக்குமார் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன் கேட்டின் கதவில் பூட்டு உடைக்கபட்டு இருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த 45 பவுன் நகைகளை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து சிவக்குமார் பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார், கைரேகை நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கொள்ளையர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் இருந்து தேனி வந்து குடியிருந்துள்ளனர்.
    • தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர், தாராபுரம், கொளத்துப்பாளையம், ராம்நகர், பல்லடம், உடுமலை ஆகிய பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளில் கதவை உடைத்து பணம், நகைகள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. இதில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் போலீஸ் எஸ்.பி., சாமிநாதன் உத்தரவின் பேரில் தாராபுரம் துணை சூப்பிரண்டு கவியரசன் மேற்பார்வையில் தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது டவுசர் அணிந்த 3பேர் முகத்தை மறைத்து கொண்டு நடமாடுவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த அடையாளத்தை வைத்து அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    கடந்த  மார்ச் மாதம் தேனி மாவட்டம் ஜங்கிள்பட்டியை சேர்ந்த முனியன் என்பவரின் மகன் முருகேசன் (வயது 52) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரையும் பிடிக்க தொடர்ந்து தேடி வந்தனர்.

    நேற்று தாராபுரம் எறக்கம்பட்டி பிரிவு அருகே தனிப்படை போலீசார் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர் தப்பித்து வேகமாக செல்ல முயற்சித்தார். அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த டவுசர் கொள்ளையன் தேனி காமாட்சிபுரம் சந்தன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சேகர் மகன் அர்ஜூன் (வயது30) என்பது தெரியவந்தது. இவரின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஆகும். கொள்ளையர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் இருந்து தேனி வந்து குடியிருந்துள்ளனர். டவுசர் கொள்ளையர்கள் முருகேசன், அர்ஜூன் மற்றும் தேடப்பட்டு வரும் மற்றொரு நபர் ஆகிய 3 பேரும் உறவினர்கள்.

    இவர்கள் கொள்ளையடிப்பதை குலத் தொழிலாகவே செய்து வந்துள்ளனர். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம், வெள்ளகோவில் ஆகிய பகுதிகளில் தங்களது கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.

    3 பேரும் இரவு- பகல் என்று பார்க்காமல் அவர்களுக்கு எந்த ஊரில் கொள்ளையடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அங்கே செல்வார்களாம். ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிடுவார்களாம். அந்த வீட்டுக்குள் புகுந்து தாங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களால் பூட்டை உடைப்பார்கள். அப்படி முடியவில்லை என்றால் கதவை உடைத்து உள்ளே போய் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு நேரத்தில் பெரும்பாலும் டவுசர் போட்டுக்கொண்டு தான் செல்வார்கள். இரவில் அடையாளத்தை மறைக்க முகமூடியும் அணிந்து கொள்வது இவர்களின் ஸ்டைல்.

    தற்போது கைதாகியுள்ள டவுசர் கொள்ளையன் அர்ஜூன் மீது கொங்கு மண்டலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 26 வழக்குகள் உள்ளது. சிறையில் உள்ள அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • ஹரிஷ் ஏழுகிணறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
    • 17 வயது சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

    சென்னை:

    ஏழுகிணறு, மிண்ட் தெருவில் வசித்து வரும் ஹரிஷ், வ/17, என்பவர் வெளியூர் சென்றுவிட்டு, நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் தனது வீட்டிற்கு செல்வதற்காக ஏழுகிணறு, அம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகில் கையில் செல்போன் வைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் ஹரிஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து ஹரிஷ் ஏழுகிணறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    போலீசார் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட காமேஷ் (வயது 19) என்பவரை கைது செய்தனர். மேலும் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனும் பிடிபட்டார். அவர்களிடம் இருந்து 1 செல்போன், 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட காமேஷ் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட் டார். 17 வயது சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

    • சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர்.
    • அய்யப்பராசு கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் அய்யப்பராசு (வயது 33). பெயிண்டர். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர். நள்ளிரவு வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்க பணம், மோதிரம், வளையல், செயின், கம்மல் உள்பட 10 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    அதிகாலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அய்யப்பராசு அதிர்ச்சியடைந்தார். பின்னர்

    இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். டனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிய பெயிண்டர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    தஞ்சாவூரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி மீரா (29). கூலித் தொழிலாளி. இவர் சூலூர் அருகே உள்ள காடம்பாடியில் உள்ள தனியார் மில்லில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது அறைக்குள் நுழைந்த மர்மநபர் மீராவின் 1½ பவுன் கைசெயின், ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் அவருடன் தங்கி இருந்தவர்களின் 6 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பேராசிரியர் வீட்டில் 35½ பவுன் நகைகள் திருட்டு நடந்தது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சின்னக்கடை வீதி எழுத்தாணி கார தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தேவக்கோட்டை கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்று தற்போது மதுரையில் உள்ள ஒரு வேறு கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாம்பிகை (வயது54).

    சம்பவத்தன்று இவர் வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து வேலைக்கார பெண் வந்தால் கொடுக்குமாறு கூறி சென்றார். வேலைக்கார பெண் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சாவியை திருப்பி கொடுத்துவிட்டு சென்றார்.

    அதன்பின்னர் மீனாம்பிகை வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் மறுநாள் பீரோவில் பார்த்த போது 35½ பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் மீனாம்பிகை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலைமறைவாகியுள்ள வாலிபரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர் ஷாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்பொழுது இங்கேயே வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின் மற்றும் அவரது மகள், மாமியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர்.

    வீட்டில் முகமது உமர் ஷாகிப் மட்டும் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் முகமது உமர் ஷாகிப்பை துப்பாக்கி காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முகமது உமர் ஷாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொள்ளையர்கள் பயன் படுத்திய காரை போலீசார் கைப்பற்றி னார்கள். கொள்ளை வழக்கு தொடர்பாக கோவில் பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகியபாண்டிய புரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்ச ரக்கல்விளையை சேர்ந்த தர்வீஸ் மீரான் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதில் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. தலை மறைவாகி இருந்த 4 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட னர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கேரளாவில் கொள்ளை யர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்ப டையில் போலீசார் அங்கு சென்று தேடினார்கள். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்சரக்கல்வி ளையை சேர்ந்த தர்வீஷ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம். 2 கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை நீதிபதியை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தர விட்டார்.

    இதையடுத்து 3 பேரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள கோவில்பட்டியை சேர்ந்த சார்லசை போலீசார் தேடி வருகிறார்கள். கோர்ட் டில் சரணடைந்த மைதீன் புகாரி, ஷேக் முகைதீன், தர்வீஸ்மீரான் ஆகிய 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • புள்ளம்பாடி அருகே சகோதரர்கள் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
    • பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள மணக்காடு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது சகோதரர் முருகேசன் (45). இவர் ஹார்டுவேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களது வீடு அடுத்தடுத்து அமைந்துள்ளது.இந்தநிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார். அதேபோல் முருகேசனும் தனது நிறுவனத்துக்கு சென்றுவிட்டார். இருவரும் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தனர்.அப்போது இரண்டு வீட்டின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, முருகேசன் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் பணமும், பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த இரண்டேகால் பவுன் நகையும் கொள்ளை போயிருந்தது.வீட்டை பூட்டிவிட்டு சகோதரர்கள் வெளியில் சென்றதை தொடர்ந்து நோட்டமிட்ட மர்மநபர்கள் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொள்ளை சம்பவம் வீட்டில் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • போதைப்பொருள் விற்பனையை தடுக்க தாங்கள் ஒவ்வொரு கடையாக சோதனை செய்து வருகிறோம்.
    • போலீசார் 7 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூர்-பாலக்காடு மெயின் ரோடு ஞானபுரம் ஜங்சனில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    அங்கு நேற்று முன்தினம் இரவு 7 பேர் கொண்ட கும்பல் சென்றனர். அவர்கள் அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் தங்களை ஜமாத்தில் இருந்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தாங்கள் ஒவ்வொரு கடையாக சோதனை செய்து வருவதாகவும், இங்கும் சோதனை செய்ய வேண்டும் என கூறி அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் சோதனை செய்வது போல நடித்து ஊழியரை மிரட்டி அங்கிருந்த மொபைல் டேப், சிசிடிவி காமிரா மற்றும் ஒரு சிம்கார்டை கொள்ளையடித்து சென்றனர்.

    இதனால், அதிர்ச்சியடைந்த நிறுவன ஊழியர், குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    • மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் ெபாடியை தூவி சென்றனர்.
    • போலீசார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    கோவை,

    கோவை நஞ்சுண்டாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(34).

    இவர் வெள்ளக்கிணறு அருகே உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவி உள்ளார்.

    இவர்களுடன் ராதாகிருஷ்ணனின் தந்தை பாண்டியராஜன் மற்றும் தாயார் சாந்தியும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இவர்கள் சொந்தமாக அந்த பகுதியில் பேன்சி ஸ்டோரும் நடத்தி வருகிறன்றனர்.

    நேற்று மதியம் ராதாகிருஷ்ணன் தனது தாய் மற்றும் மனைவியுடன், பேன்சி ஸ்டோருக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்று விட்டனர். பாண்டியராஜனும் மோட்டார் சைக்கிளை சரி செய்ய காந்திபுரம் சென்றார்.

    இந்த நிலையில் பாண்டியராஜன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டிற்குள் இருந்த பீரோவும் திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த துணிகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதையடுத்து பீரோவை சோதனை யிட்டார். அதில் வீட்டில் வைத்திருந்த செயின், ஆரம், நெல்லிக்காய் மாலை, 2 ஜோடி கம்மல் என மொத்தம் 26 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    இவர்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அதன்பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகையை திருடி சென்றதும்,போலீசில் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் ெபாடியை தூவி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். வீட்டில் தடயங்கள் ஏதாவது உள்ளதா எனவும் சோதனை செய்தனர்.

    மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த பச்சையப்பன் சேகர் வீட்டில் நகை திருட வந்தது தெரிய வந்தது.
    • பச்சையப்பன் மீது சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 45) விவசாயி. ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு சேகர் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். கோடை காலம் என்பதால் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்துள்ளனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் இவர்களது வீட்டிற்குள் வாலிபர் ஒருவர் நைசாக நுழைய முயன்றார். அவரை கண்டதும் வெளியே இருந்த ஆடுகள் கத்தின. சத்தம் கேட்டு சேகர் குடும்பத்தினர் வெளியே வந்தனர். அப்போது பின்பக்கம் வழியாக வாலிபர் உள்ளே புகுந்தார். அவரை கண்டதும் கூச்சலிட்டனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அவர்களை கண்டதும் திருட வந்த வாலிபர் தப்பி ஓடினான்.

    பொதுமக்கள் அவனை விரட்டி சென்றனர். அப்போது திருடன் அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தான்.

    துரத்திச் சென்ற பொதுமக்கள் கிணற்றில் இருந்த திருடனை மேலே தூக்கினர். மேலும் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

    இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    அவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் (வயது 42) என்பது தெரியவந்தது.

    நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த பச்சையப்பன் சேகர் வீட்டில் நகை திருட வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    பச்சையப்பன் மீது சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • டாஸ்மாக் கடை கொள்ளை முயற்சி நடந்தது.
    • காமிரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவியது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் - மானாசாலை செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு முருகன், பாலகிருஷ் ணன் ஆகியோர் விற்பனை யாளர்களாகவும், திருச்சுழியை சேர்ந்த இரு ளாண்டி சூப்பர்வைசராக வும் பணியாற்றி வருகின்ற னர்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை அடித்து நொறுக்கிவிட்டு கடையில் இருந்த மதுபான பாட்டில்களை மூட்டை களாக கட்டி தூக்கிக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.

    அப்போது இரவு ரோந்து செல்லும் வீரசோழன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் வருவதை கண்ட மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையில் திருடிய மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

    இது தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் கடையில் புகுந்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×