என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94916"
- விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர்-காளியம்மன் கோவில்களில் துணிகர கொள்ளை நடந்துள்ளது.
- கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு பூசாரி வன்னியராஜ் வழக்கம் போல் கோவிலை பூட்டி சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்குவந்த மர்மநபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு தப்பினர். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பூசாரி வன்னியராஜ் கதவு உடைக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பணம் கொள்ளை போயி ருந்தது.
இதுகுறித்து குடியிரு ப்போர் நலச்சங்க செயலாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காளியம்மன் கோவில்
ஆலங்குளம் தேவர் நகர் முக்கு ரோடு பகுதியில் கரையடி கருப்பசாமி கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் அங்கிருந்த அம்மனின் 6கிராம் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடம் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பினர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கொள்ளை கும்பல் சிறிய கோவில்களை குறிவைத்து நகை-பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- கொள்ளைகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றுவிட்டனர்.
- திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
திருநின்றவூர்:
திருநின்றவூர், பார்வதி நகரில் வசித்து வருபவர் திருபால். ரெயில்வேயில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். இவர் பணி சம்பந்தமாக பெங்களூர் சென்றார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு பம்மலில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளைகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
- பொன்முருகன் வீட்டிலிருந்து ரூ.12.40 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்க கட்டிகள் திருடு போனது.
- சவுந்தரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 50 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது 46). தொழில் அதிபரான இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.12.40 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்க கட்டிகள் திருடு போனது. இது குறித்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்க கட்டிகளை திருடிய அவரது வீட்டில் வேலை பார்த்த ஒண்டிப்புதூர் முத்துசாமி செட்டி வீதியை சேர்ந்த சிவராமன் என்பவரது மனைவி ஜோதி(47) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 93 கிராம் எடையிலான தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட ஜோதியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
முன்னதாக மீதமுள்ள தங்கத்தை மீட்பது குறித்து போலீசார் ஜோதியிடம் நடத்திய விசாரணையில், அது அவரது மகன் சவுந்தர்(27) என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று போலீசார் தலைமறைவாக இருந்த சவுந்தரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 50 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட சவுந்தரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
- போலீசார் கைது செய்து விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாற்று காட்டு பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினத்தையொட்டி மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனை நோட்டமிட்ட மர்மகும்பல், டாஸ்மாக் விற்பனை நேரம் முடிந்து ஊழியர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது கடைக்குள் புகுந்து, வீச்சரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி ஊழியர்களிடமி ருந்து ரூ.6லட்சத்து 47ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
கொள்ளையர்கள் வெட்டியதில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் 3பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
கொள்ளையர்களை அடையாளம் காண சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி, அதில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா மேலாயூர் பகுதியை சேர்ந்த தர்ஷிக் சரண்(வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மற்ற கொள்ளையர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலில் பேரில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு நாச்சிப்பா வீதியில் பிரிண்டிங் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு போஸ்டர் டிசைன், பிரிண்டிங், பேனர் டிசைன், திருமண பத்திரிக்கை டிசைன், லேசர் கட்டிங் மற்றும் அனைத்து வகையான டிசைன்கள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பிரிண்டிங் கடை அருகே குடோனும் செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் புஷ்பநாதன் (74). இவர் ஈஸ்வரன் கோவில் அருகே தெப்பக்குளம் வீதியில் வசித்து வருகிறார். இந்த கடை கடந்த 15 வருடமாக செயல்பட்டு வருகிறது.
இங்கு மேலாளர், பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடையின் மேல் தளத்தில் உரிமையாளர் அறையும், கேசியருக்கான அறையும் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் கதவை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை கடையில் வேலை பார்க்கும் ஊழியர் கடை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இது குறித்து உரிமையாளர் புஷ்பநாதனுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் உள்ளே சென்று பார்த்த போது கள்ளாப்பெட்டி திறந்து இருந்தது. மற்றும் கடையின் மேல் தளத்தில் உள்ள அறை, கேசியருக்கான அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. 2 அறையிலும் இருந்த கள்ளாப்பெட்டி சாவியை திறந்து ரூ.3 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த கடை மற்றும் அருகே உள்ள குடோன் வரை ஓடி சென்று திரும்பி வந்துவிட்டது.
போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது இன்று நள்ளிரவு 2.20 மணி அளவில் மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வது பதிவாகியுள்ளது.
சி.சி.டி.வி. கேமிராவில் தனது முகம் பதிவாகாமல் இருப்பதற்காக அவர் முகத்தில் துணி வைத்து மறைத்து இருந்தார். பின்னர் 3 மணிக்கு அந்த நபர் கடையில் இருந்து வெளியே செல்வது பதிவாகியுள்ளது. கடையில் எந்தெந்த இடத்தில் பணம் இருந்துள்ளது என்பது அந்த நபருக்கு நன்றாக தெரிந்துள்ளது.
எனவே இந்த கடையை பற்றி நன்கு தெரிந்தவர் தான் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செட்டிக்குளம் செல்லியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடினர்
- 2 பித்தளை மணிகளையும் திருடிச்சென்றனர்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத முயல்வேட்டை திருவிழா பிரசித்தம். இந்நிலையில் இரு தரப்பினர் பிரச்சினையால் இந்த கோயில் கடந்த 3 வருடங்களாக எந்தவித பூஜைகளும் நடைபெறவில்லை. முயல்வேட்டை திருவிழா மட்டுமே நடைபெற்று உள்ளது.இதன் காரணமாக அனைத்து கதவுகளும் எப்போதும் பூட்டி இருக்கும். ஆனால் கோவிலின் பிரதான வாயில் மட்டும் திறந்து இருக்கும்.
இந்நிலையில் இந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் உடைக்கப்பட்டிப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில், உண்டியல் பூட்டை உடைக்க முயன்று முடியாததால், கடப்பாறையால் உண்டியலின் பக்கவாட்டில் உள்ள மூடியை பிளந்து, ஒரு குச்சியை பயன்படுத்தி, பணத்தை லாவகமாக திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.
கோவில் உண்டியலில் சுமார் 40 ஆயிரம் பணம் இருந்திருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் கோவிலில் இருந்த பழமையான இரண்டு பித்தளை மணிகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து கோவில் தர்மகர்த்தா சக்திவேல், மூடப்பாடி சுதந்திரம் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சட்டரை உடைத்து மர்ம மனிதர்கள் துணிகரம்
- பணம் மட்டுமின்றி, சி.சி.டி.வி. கேமரா, ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனர்.
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு கூட்டமாவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 54). இவர் புத்தன் சந்தை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல் ஓட்டலை அடைத்துச்சென்றார். மறுநாள் காலை ஸ்ரீகுமார் ஓட்டலை திறந்து உள்ளே வந்தார். அப்போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. இதனால் கடைக்குள் யாரோ வந்து சென்றிருப்பது தெரியவர, மேஜை டிராயரை பார்த்துள்ளார். அதில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகுமார் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டலின் பின்பக்க சட்டரை உடைத்து மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் பணம் மட்டுமின்றி, சி.சி.டி.வி. கேமரா, ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் குக்கி வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து மோப்பம் பிடித்து ஓடிய நாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குவைத் நாட்டில் வசிப்பவரின் வீட்டை உடைத்து கைவரிசை
- 230 கிராம் வெள்ளி நகைகளை அள்ளி சென்ற கொள்ளையர்கள்
திருச்சி,
திருச்சி அருகே உள்ள அரியவூர் பள்ளிவாசல் தெரு விஜயநகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஊரில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் ராஜா முகமதுவின் மனைவி நூர்ஜ–ஹான் (வயது 35) காலையில் வீட்டை பூட்டிவிட்டு அருகா–மையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென் றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் வீடு திரும்பி–னார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை, 230 கிராம் வெள்ளி நகைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்தப் பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கம் ரூ.24 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
- விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
விருகம்பாக்கம், பாலாஜி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் காளிதாசன். இவரது மனைவி சந்தியா. ஓமியோபதி டாக்டரான இவர் வீட்டின் கீழ் தளத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
சந்தியா இரவு மருத்துவ மனையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் காலையில் வந்த போது பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கம் ரூ.24 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டை பூட்டி விட்டு ஒரத்தநாட்டில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு திருவிழாவிற்காக சென்றுள்ளனர்.
- ரூ. 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று விட்டது தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை யாகப்பாசாவடியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). இவர் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டை பூட்டி விட்டு ஒரத்தநாட்டில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு திருவிழாவிற்காக சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மனோகரன் மாமனார் மற்றும் மாமியார் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது அறையில் வைக்கப்பட்டி ருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று விட்டது தெரியவந்தது.
இது குறித்து அவர்கள் மனோகரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும், கடை உரிமையாளரையும் திசை திருப்பி உள்ளனர்.
- கண்காணிப்பு கேமராவை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது அவர்கள் நகைகள் திருடியது தெரிய வந்தது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பெரிய கடை தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு நகைகடைக்கு நகைகள் வாங்குவது போல மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் நகைகள் வாங்குவது போல ஒவ்வொரு நகைகளையும் எடுத்து பார்த்துள்ளனர். கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் மற்றும் நகைக்கடை உரிமையாளரையும் திசை திருப்பி உள்ளனர்.
பின்னர் ஊழியர்களை உரிமையாளரையும் ஏமாற்றி விட்டு கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்க காசு, தங்க மோதிரம் அடங்கிய 134 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.
அவர்கள் சென்ற பிறகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து அவர்கள் நகைகள் திருடி செல்வது தெரிய வந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் பாபு கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்த சம்பவத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன் மற்றும் காவல்துறை யினர்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து தப்பியோடிய கொள்ளையர்கள் தனிப்படை வைத்து தேடி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில் 134 கிராம் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- பெரம்பலூர் அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை போனது
- ஜன்னலை வலைத்து மர்மநபர்கள் கைவரிசை
பெரம்பலூர்,
பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே சங்குப்பேட்டை சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் சாகித் அப்ரிடி (வயது 25). இவர் எளம்பலூர் சாலையில் ரோஸ் நகரில் வாடகை வீட்டில் தனது தந்தை சையது முகமது, தாயார் குர்ஷிதா யாஸ்மினுடன் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குர்ஷிதா யாஸ்மின் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்று விட்டார்.சம்பவத்தன்று சாகித் அப்ரிடி வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை சையது முகமதுவை அழைத்துக்கொண்டு ஜெராக்ஸ் கடைக்கு சென்று விட்டார்.
வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.90 ஆயிரம், ஒரு பவுன் தோடு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.இரவு சாகித் அப்ரிடி தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் பெயர்த்து எடுக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்