என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95142"
மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் காமு என்ற காமராஜ் (வயது 21). மதுரையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அஜித் கண்ணன் (21).
நண்பர்களான இவர்கள் 2 பேரும், தங்களது நண்பர்கள் 18 பேருடன் சேர்ந்து 10 மோட்டார் சைக்கிள்களில் கடந்த 5-ந் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று காலையில் அவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள்களில் மதுரை நோக்கி புறப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காமு, அஜித்கண்ணன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளை காமு ஓட்டினார்.
சிலுக்குவார்பட்டி சிவன்கோவில் பகுதியில் வந்தபோது அங்குள்ள சாலை வளைவில் எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல நொறுங்கியது. காரின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் சினிமாவை மிஞ்சும் காட்சியை போல் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அஜித்கண்ணன் சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பி மீது பறந்து போய் விழுந்தார்.
மின்கம்பியில் தொங்கியபடி கிடந்த அஜித்கண்ணன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல் விபத்தில் சிக்கி, சாலையோரத்தில் போய் விழுந்த காமு படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த சக நண்பர்கள் விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இறந்து கிடந்த அவர்களை பார்த்து கதறி அழுத சம்பவம் காண்போரின் கண்களை குளமாக்கியது.
ராமநாதபுரம் கேணிக்கரையில் ஸ்டூடியோ நடத்தி வந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது37). இவரது நண்பர் குயவன்குடியை சேர்ந்த பிரகாஷ் (41). இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.
நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் காரிக்கூட்டம் சென்று விட்டு மாலை குயவன்குடி செல்வதற்காக ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்தனர்.
அப்போது ராமேசுவரத்தில் இருந்து குமுளி சென்ற அரசு பஸ் ராஜேஷ் கண்ணன், பிரகாஷ் மீது மோதியது. இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது குறித்து கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தி.நகரில் இருந்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் பழைய மகாபலிபுரம் சாலை செல்வதற்காக 4 பேர் காரில் புறப்பட்டனர்.
ஸ்ரீகாந்த் என்ற இளைஞர் காரை ஓட்டிச் சென்றார். காரில் மதுகிருஷ்ணன் என்ற வாலிபரும், 2 கல்லூரி மாணவிகளும் இருந்தனர்.
நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக கார் சென்று கொண்டிருந்தது. குயில் தோப்பு பகுதியில் பள்ளிக்கூடம் அருகில் திரும்பும் போது காரை ஓட்டிச்சென்ற ஸ்ரீகாந்தின் கட்டுப்பாட்டை இழந்து கார் மின்னல் வேகத்தில் சென்று தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணி போக்குவரத்து உதவி கமிஷனர் ரவிச்சந்திரன், வேப்பேரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர், பாண்டிவேலு, அடையாறு சப்-இன்ஸ்பெக்டர் போஸ் முத்தையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த காரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியோடு தூக்கி நிறுத்தினார்கள். பின்னர் காரில் இருந்தவர்கள் வெளியில் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.
கல்லூரி மாணவி ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டு இருந்தது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் போக்குவரத்து போலீசார், காரை ஓட்டி வந்த ஸ்ரீகாந்தை பரிசோதித்தனர். அப்போது அவர் மது அருந்தி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சினிமாவில் வருவது போன்று நள்ளிரவு நடந்த இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து நடந்த நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததால் பெரிய அளவில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாபநாசம் அருகே பண்டார வாடை லெட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் விஜயலட்சுமி (வயது 60). இவர் பண்டாரவாடை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது அந்த வழியாக சென்ற விரைவு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து அவருடைய மகள் ராஜகுமாரி (34) கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் மனோஜ்குமார் (வயது 31). பி.இ.எம்.பி.ஏ. படித்த பட்டதாரியான இவருக்கும், சென்னை பீர்க்கன்காரணையை சேர்ந்த எம்.பி.பி.எஸ். டாக்டரான கார்த்திகா (30) என்பவருக்கும் கடந்த 28-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு மனைவியுடன் சென்னையில் தங்கி இருந்த மனோஜ்குமார், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி கார்த்திகாவுடன் சென்னையில் இருந்து தனது ஊரான அரக்கோணம் நோக்கி காரில் சென்றார்.
திருவள்ளூரை அடுத்த கூவம் சாலையில் சென்றபோது, எதிரே சிமெண்டு கலவை எந்திரம் இணைக்கப்பட்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக புதுமண தம்பதி சென்ற கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் மீது சிமெண்டு கலவை எந்திரம் இணைக்கப்பட்டு இருந்த லாரி கவிழ்ந்தது. லாரிக்கு அடியில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது.
காருக்குள் இருந்த புதுமண தம்பதி மனோஜ்குமார்-கார்த்திகா இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். லேசான காயத்துடன் உயிர் தப்பிய லாரி டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மப்பேடு போலீசார், சுமார் 5 மணி நேரம் போராடி லாரிக்கு அடியில் சிக்கிய காரை வெளியே எடுத்தனர். பின்னர் காரின் பாகங்களை வெட்டி எடுத்து, இடிபாடுக்குள் சிக்கி கிடந்த கணவன்-மனைவி இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
திருமணமான 4 நாட்களில் விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஊர்கவுண்டனூரை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் செல்லதுரை (வயது 8). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
சிவக்குமார் தனது உறவினர்களுடன் 20 பேருடன் ஆண்டியப்பனூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று மினிவேனில் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பினர். வெங்டாபுரம் என்ற இடத்தில் வந்த போது மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் செல்லதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். சிவக்குமார், கோவிந்தசாமி, மீனா, உண்ணாமலை, சேட்டு உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு படுகாயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் புது தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 74). இவர் அதே பகுதியில் உள்ள பஸ் நிலையம் முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கணேசன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த யோகராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலாயுதம் (50), பார்த்திபன் (55) வடசேரியில் பார்த்திபன் மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகள் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
இதுபற்றி பேசுவதற்காக பார்த்திபன், வேலாயுதம் இருவரும் நேற்று வடசேரிக்கு சென்றுவிட்டு மாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். வெங்கடாபுரம் கூட்ரோடு அருகே வந்தபோது பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வேலாயுதம் இறந்தார்.
பார்த்திபனை மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோபி:
கோபியை அடுத்த கெட்டி செவியூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ராபர்ட் (வயது56). இவர் கோபி அடுத்த சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஜேம்ஸ் ராபர்ட் பிரண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் காரில் கெட்டி செவி ஊரிலிருந்து சிறுவலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை ஜேம்ஸ் ராபர்ட் ஓட்டி வந்தார்.
நள்ளிரவு 2 மணி அளவில் கெட்டி செவியூர் அருகே கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரேஞ்சர் மில் எதிரே உள்ள ஒரு புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஜேம்ஸ் ராபர்ட் மற்றும் கார்த்திகேயன் இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து கோபி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோபி போலீசார் விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சப் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ராபர்ட் இறந்து விட்டதாக தெரிவித்தார். கார்த்திகேயன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த சப் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ராபர்ட்டுக்கு ரோசலின் என்ற மனைவியும், ஸ்டெபி இன்சென்டா என்ற மகளும் உள்ளனர்.
ஜேம்ஸ் ராபர்ட் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு கோபி போலீசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்