என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95142"
வேடசந்தூர்:
மதுரையில் இருந்து கரூர் நோக்கி வேன் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. வேனை டிரைவர் ஸ்ரீராம் (வயது 30). ஓட்டி வந்தார். இந்த வேன் வேடசந்தூர் அருகே விருதலைப்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை வேன் முந்தி செல்ல முயன்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக வேன் கண்டெய்னரின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் ஸ்ரீராம் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்து கூம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 22). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி செண்பகம் (19). கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
சம்பவத்தன்று இரவு நாகராஜ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் சீராம்பாளையத்தில் வந்தபோது சாலையில் இருந்த சிறிய கல் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.
இதனால் நிலைதடுமாறியது. மோட்டார் சைக்கிளை நாகராஜ் திருப்பியபோது அங்கு ஏற்கனவே வெட்டிப்போட்டிருந்த மரத்தின்மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். நாகராஜின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.
இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்:
பல்லடம் வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையம் காலனியை சேர்ந்தவர் சின்னான் (வயது 70). விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று வாவிபாளையத்துக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்து இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டார்.
பல்லடம்- உடுமலை சாலையில் நடந்து வந்தபோது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத கார் சின்னான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காமநாயக்கன் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சின்னானை மீட்டு பல்லடம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரையும், அதன் டிரைவரையும் தேடி வருகிறார்கள்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையத்துக்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேர் வந்து செல்வதால், ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 12.30 மணிக்கு இந்த சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.
இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். சிலர் கார் சக்கரத்தில் நசுங்கினர். அதன் பின்னரும் தறிக்கெட்டு ஓடிய அந்த கார் ஒரு குப்பை லாரியின் மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் 20 வயதான ஒரு பெண்ணும், அவரது 2 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி நேற்று ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறு என்ற இடத்தில் சென்றபோது எதிரே மன்னார்குடியில் இருந்து கூத்தாநல்லூர் நோக்கி வந்த சரக்கு வேனும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. அதன் டிரைவர் பூதமங்கலம் கீழகண்ணுச்சாங்குடியை சேர்ந்த தினேஷ் (வயது24), முருகையன் (40), சிவகுமார்(40) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கவிழ்ந்த சரக்கு வேனில் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி முருகேசன், கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பிவேந்திரன், நிலைய போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம், தீயணைப்பு படை வீரர்கள் சம்பத்குமார், செல்வராஜுலு ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று சரக்கு வேனில் சிக்கிய தினேஷ், முருகையன், சிவகுமார் ஆகிய 3 பேரையும் மீட்டனர்.
இதையடுத்து 3 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல அதே பகுதியில் வெண்ணாற்றின் கரையோரத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் காருக்குள் சிக்கிய 8 பேரையும் தீயணைப்பு வீரர்கள் காயமின்றி மீட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் தனியார் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது.
இங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ், தனது மனைவி மற்றும் 7 மாத ஆண் குழந்தை வசந்த குமாருடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று மதியம் குழந்தை வசந்தகுமாரை தங்குவதற்காக அமைக்கப்பட்ட குடிசை வீட்டு முன்பு படுக்க வைத்தவிட்டு காமராஜும், அவரது மனைவியும் அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்தனர். அந்த நேத்தில் செங்கல் சூளையில் நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரியை டிரைவர் மணிமாறன் ஒட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டார்.
அப்போது வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை வசந்தகுமாரின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.
இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் மணிமாறனை தேடி வருகின்றனர்.
அருமனை:
அருமனை அருகே உள்ள ஆறுகாணி பகுதியைச் சேர்ந்தவர் பாலேஸ். அதே பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்யு என்ற உன்னிக்குட்டன் (வயது 22). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள்.
இன்று காலை ஆறுகாணியில் இருந்து மோட்டார் சைக்கிளில் களியக்காவிளை நோக்கி கட்டிட பணிக்காக பாலேசும், உன்னிக்குட்டனும் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பாலேஸ் ஓட்டிச் சென்றார். கடையாலுமூடு பகுதியில் அவர்கள் சென்றபோது கட்டாவிளையைச் சேர்ந்த ஜெகதீஷ் (35) என்ற நண்பர் ஒருவர் அவர்களது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டார்.
அருமனை அருகே குஞ்சாலிவிளை பகுதியில் காலை 7.45 மணி அளவில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதி நிலைதடுமாறி சாலையில் விழுந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தை பார்த்ததும் அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானது தெரியவந்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலேசையும், உன்னிக்குட்டனையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர்கள் 2 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் வழியிலேயே உன்னிக்குட்டன் பரிதாபமாக இறந்து விட்டார். பாலேஸ் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேராவூரணி:
பேராவூரணி அருகே முடச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி(வயது56). இவரது மனைவி நாகம்மாள்(48). இருவரும் நேற்று மாலை விளங்குளம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினர்.
அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது சம்பைப்பட்டினம் என்ற இடத்தில் எதிரே வந்த கார் மோதி 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நாகம்மாள் இறந்தார்.
ராமமூர்த்தி பேராவூரணியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டிவந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜ்மோகன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போரூர்:
கோவையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25) டிரைவர். இவர் பழனியில் இருந்து மதுரவாயலுக்கு பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை ஏற்றிக் கொண்டு லோடு வேனில் வந்து கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் மதுரவாயல் பைபாஸில் வந்தபோது கட்டுபாட்டை இழந்த லோடு வேன் திடீரென முன்னால் சென்ற டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி டிரைவர் கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த கிளீனர் மூர்த்தி அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் லோடு வேனை ஓட்டிய போது டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் கண்ணியப்பன் (வயது 60). இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்.
நேற்று மாலை தன் நண்பர் ஒருவருடன் காரில் ஊத்துக்கோட்டையில் உள்ள உறவினர்களை சந்திக்க வந்தார். பின்னர் அவர்கள் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே பெரியபாளையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி புளி மூட்டைகளுடன் வந்த லாரி திடீரென மோதியது.
இதில் கண்ணியப்பன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
கண்ணியப்பனுடன் வந்த அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தாராட்சியை சேர்ந்த நவீன், பிரவீன், வைதேகி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், குழியனூர், நரசிங்க கோம்பை ஆகிய கிராமத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட கட்டிட கான்கிரீட் தொழிலாளர்கள் 2 வாகனங்களில் ஏரியூருக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஒரு பிக்கப் வேனில் பின்புறம் கான்கீரிட் கலவை எந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த பிக்கப் வேனின் 10 தொழிலாளர்கள் இருந்தனர்.
இன்று காலை தருமபுரி குமாரசாமி பேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது வேகத்தடை மீது ஏறிய போது பிக்கப் வேன் எதிர் பாராத விதமாக நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த குழியனூர் பகுதியை சேர்ந்த குமணி மனைவி கலா (வயது40), நரசிங்ககோம்பை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (45) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சாலம்மாள் (43), நடுப்பிள்ளை (38), உன்னா மலை (30) உள்பட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த வழியாக வந்த தருமபுரி தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி நடந்த விபத்தை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு தடங்கம் சுப்பிரமணி சென்று படுகாயம் அடைந்தவர்களிடம் விசாரித்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான கலா, கிருஷ்ணன் ஆகிய 2 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்