search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் மீது தாக்குதல்

    திருச்சி,

    திருச்சி அருகே உள்ள மொராய் சிட்டி பகுதியில் அடிக்கடி திரைப்பட நட்ச–த்திரங்களைக் கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த 10-ந்தேதி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது.புத்தூர் ராமலிங்க நகர் 1-வது தெருவை சேர்ந்த திருச்சி மாவட்ட குற்ற காப்பகத்தில் இன்ஸ்பெக்ட–ராக பணியாற்றி வரும் அஜீம் என்பவரது மகன் முகமது ஹாசிம் (வயது 20). இவர் வல்லம் பகுதி–யில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்த நிலையில் முகமது ஹாசிம் தனது உறவினருடன் யுவன்சங்கர் இசை நிகழ்ச் சியை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது கூட்டத்தை சரி செய்கி–றேன் என்று கூறி யுவன் சங்கர் ராஜாவின் பாது–காவலர்கள் அங்கிருந்த பார்வையாளர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.மேலும், அவர்கள் பலரை தாக்கியுள்ளனர். அதில் முகமது ஹாசிமின் உறவினரை தாக்கியுள்ளனர். அதைக் கேட்டதற்கு முகமது ஹாசிமையும் அவர்கள் பிளாஸ்டிக் சேர், இரும்பு கம்பி, கம்பு, கை ஆகியவற்றால் பலமாக தாக்கியுள்ளனர்.இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து முகமது ஹாசிம் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் யுவன் சங்கர் ராஜாவின் பாதுகாவலர்கள் 10 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • போலீசார் 2 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்கி ளில் ஹெல்மெட் அணி யாமல் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.அப்போது அந்த 2 வாலி பர்களும் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 2 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கி ளையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் அந்த வாலிபர்கள் போலீசாரை வசைபாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரி வித்திருந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜாஹங்கிர் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சாரிடம் ரகளையில் ஈடுபட்ட ஈத்தாமொழி பெரியகாடு தெற்கு தெருவை சேர்ந்த ஆரோக்கியம் (வயது 40), பெருவிளை பள்ளவிளை விநாயகர் தெருவை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (38) ஆகிய இருவர் மீதும் 2 பிரிவு களில் போலீ சார் வழக்குப்ப திவு செய்துள்ளனர்.

    இந்திய தண்டனை சட்டம் 294பி, 353 ஆகிய 2 பிரிவுகளில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • விசாரணைக்கு சென்ற இடத்தில் போலீஸ் ஏட்டு தாக்கப்பட்டு சட்டை கிழிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அய்யாவு அவரது மகன் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜாக்கமங்கலம்:

    ராஜாக்கமங்கலம் அருகே அனந்த நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ் செல்வன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

    இதுகுறித்து தமிழ் செல்வன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.புகார் மனு தொடர்பாக விசாரிப்பதற்காக நேற்று மாலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பிரேம்லால், ஏட்டு சுதாகர் ஆகியோர் அய்யாவு வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த அய்யாவுவின் மகனை போலீஸ் ஏட்டு சுதாகர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார்.

    அப்போது போலீஸ் ஏட்டு சுதாகரை அவர் தாக்கியதாக தெரிகிறது. இதில் ஏட்டு சுதாகரின் சட்டை கிழிந்தது. மேலும் அவரும் படுகாயம் அடைந்தார். வீட்டிலிருந்து அய்யாவும் போலீசை தாக்க முயன்றார்.

    இதையடுத்து விசாரணைக்கு சென்ற போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர். ஏட்டு சுதாகர் தாக்கப்பட்டது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கு இடையில் அய்யாவு மற்றும் அவரது மகன் இருவரும் வீட்டிலிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஏட்டு சுதாகர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் ஏட்டு சுதாகர் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்தார். அய்யாவு அவரது மகன் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணைக்கு சென்ற இடத்தில் போலீஸ் ஏட்டு தாக்கப்பட்டு சட்டை கிழிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரம்பலூரில் லோக் அதலாத்தில் 416 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 416 வழக்குகள் சமரசமாக தீர்வு காணப்பட்டது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் பல்கீஸ் தலைமை வகித்து தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.மகிளா கோர்ட் நீதிபதி முத்துகுமரவேல், குடும்ப நல கோர்ட் நீதிபதி தனசேகரன், தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி மூர்த்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அண்ணாமலை, மாவட்ட உரிமையியல் கோர்ட் நீதிபதி ராஜமகேஸ்வர், குற்றவியல் கோர்ட் நீதிபதிகள் சுப்புலட்சுமி, சங்கீதாசேகர், கவிதா மற்றும் ஓய்வு பெற்ற தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி கண்ணையன் ஆகியோர் கொண்ட 6 அமர்வுகளாக வழக்குகள் விசாரணை நடந்தது.இதில் வங்கி வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள், சிவில் வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 416 வழக்குகள் 4 கோடியே 55 லட்சத்து 93 ஆயிரத்து 354 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. மேலும் மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்ப்டடவரின் குடும்பத்தாருக்கு மக்கள் நீதி மன்றத்தில் தீர்வு காணப்பட்டு ரூ. ஒரு கோடியே 40 லட்சத்திற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதில் வக்கீல்கள்,காவல் துறையினர், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
    • சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் அருகே உள்ள வடக்குஅஞ்சு குடியிருப்பு சாஸ்தான் கோயில் விளையை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனுஷ் (23), ஜெகன் (35), வினோத் (24), சுயம்புலிங்கம் என்ற லிங்கம் (30) ஆகியோர்க்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நி லையில் நேற்று முன்தினம் இரவு விஷ்ணு தனது வீட்டின் அருகில் உள்ள கோவில் மடத்து சொத்தில் வைத்து மது அருந்தி கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த தனுஷ், ஜெகன், வினோத், சுயம்புலிங்கம் என்ற லிங்கம் ஆகியோர் விஷ்ணுவை தகாத வார்த்தைகள் பேசி, கத்தியால் குத்தினர்.

    இதில் படுகாயம் அடைந்த விஷ்ணு சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் 4 பேரும் அங்கி ருந்து தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த விஷ்ணு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

    அங்கிருந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விஷ்ணுவை தாக்கிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

    • சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • திருமணம் நடந்தபோது மணமகள் 15 வயது சிறுமியாக இருந்தது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது35). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமங்கலம் தெற்குதெருவை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிறுமி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி செல்வேந்திரன் புகார் கொடுத்தார். இது குறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்திய போது செல்வேந்திரனுக்கு திருமணம் நடந்தபோது மணமகள் 15 வயது சிறுமியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மகளிர் ஊர்நலஅலுவலர் காமு இந்தக் குழந்தை திருமணம் தொடர்பாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் செல்வேந்திரன் மீது போக்சோ சட்டத்திலும் மற்றும் அவரது தந்தை முத்துகழுவன், தாய் சத்யபாமா மற்றும் சிறுமியின் உறவினர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடுதல் விலைக்கு மது விற்ற 7 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
    • அவர்களிடம் இருந்து 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கரூர் :

    கரூர் மாவட்டத்தில் 90 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மது பானங்களை விற்பனை செய்வது குறித்து கண் காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கரூர், மாயனூர், பசுபதிபா ளையம், வாங்கல், ஆகிய பகுதிகளில் மது விலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர், அப்போது அந்தபகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 7 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


    • போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர்.
    • செந்தாமரை (அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அம்மு என்ற பெண் காவலரை கன்னத்தில் பளார் என்று 2 முறை அடித்தார்.

    விழுப்புரம் :-

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செக்கடிக்குப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியும்,விவசாயம் செய்து வருவதாக புகார் மனு அளிக்கப்பட்டது.கன்னத்தில் அறைஇதனை தொடர்ந்து மேல்மலையனூர் தாசில்தார் அலெக்ஸாண்டர் தலைமை யிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக அவலூர்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர்.

    அப்போது மணி என்பவரின் மனைவி செந்தாமரை (அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அம்மு என்ற பெண் காவலரை கன்னத்தில் பளார் என்று 2 முறை அடித்தார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த சக போலீசார் பெண் காவலர் அம்முவை அங்கு இருந்து அழைத்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.இதுபற்றி விசாரணை நடத்த ப்பட்டதில் விசாரி த்ததில் அந்த பெண்ணுக்கு சாமி வந்தால் எதிரில் இருப்ப வர்களை அடிப்பார்களாம். நேற்று அதே போல் சாமி வந்ததால் அடித்திருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து செந்தாமரை மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள். 

    • 2 ,பேரும் நண்பர்கள். இதில் ஸ்டாலினுக்கு அவசரமாக 3 லட்ச ரூபாய் தேவைப்பட்டுள்ளது
    • இருந்த போதும் 3 லட்ச ரூபாய் பணம் திருப்பி வழங்கப்படவில்லை

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை எலவனாசூர் கோட்டையைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை (வயது 40), ஸ்டாலின் (42). 2 பேரும் நண்பர்கள். இதில் ஸ்டாலினுக்கு அவசரமாக 3 லட்ச ரூபாய் தேவைப்பட்டுள்ளது. தனது நண்பரான ஏழுமலையிடம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே யாரிடமாவது வாங்கி கொடுக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அதே பகுதியில் வசிக்கும் மதினா (30) என்பவரிடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி ஸ்டாலினிடம் ஏழுமலை கொடுத்தார். இதையடுத்து ஸ்டாலின் மாதா மாதம் வட்டி கட்டவில்லை எனத் தெரிகிறது. எனவே, கடன் தொகையை திருப்பித் தருமாறு ஸ்டாலினிடம் மதினா கேட்டுள்ளார். இதற்கு ஸ்டாலின் சரியாக பதில் தராமல் பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து மதினா இது தொடர்பாக ஏழுமலையிடம் கூறினார். ஸ்டாலினிடம் பேசி பணத்தை திருப்பி வாங்கித் தருவதாக கூறுகிறார். இருந்த போதும் 3 லட்ச ரூபாய் பணம் திருப்பி வழங்கப்படவில்லைஇ.ந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் ஜெகனிடம் நடந்த சம்பவங்களை மதினா கூறியுள்ளார். இது குறித்து பேச வேண்டும் எனது கடைக்கு வா என்று ஏழுமலையை, ஜெகன் அழைத்துள்ளார். இதையேற்று ஏழுமலை அங்கு சென்றார். அப்போது ஏழுமலைக்கும் மதினாவின் உறவினராக ஜாகீர் உசேன் (49) என்பவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து ஏழுமலையின் தலையில் ஜாகீர் உசேன் ஓங்கி அடித்தார்.தலையில் பலத்த காயமடைந்த ஏழுமலை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் ஜாகீர் உசேன், ஜெகன் மீது வழக்கு பதிவு செய்தனர். ஜாகீர் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 11-ம் வகுப்பு சிறுமியை காதலிக்க வற்புறுத்திய மின்வாரிய ஊழியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • சிறுமியின் பெற்றோர் நவீன் குமாரின் பெற்றோரிடம் கூறி அவரை கண்டிக்க வலியுறுத்தியுள்ளனர்.

    கரூர்

    தோகைமலையை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 25). இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர் 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நவீன் குமாரின் பெற்றோரிடம் கூறி அவரை கண்டிக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நவீன் குமார் பள்ளிக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்ற சிறுமியிடம் தன்னை காதலிக்கிறாயா இல்லையா? எனக்கூறி அவரது கையைப்பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அருகே இருந்தவர்கள் அவரை கண்டித்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நவீன் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நவீன் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருநாவலூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட கெடிலம் ஆற்றில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் அசோக், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் உடையானந்தல் வந்தனர்.

    அப்போது மணல் ஏற்றிக்கொண்டு வந்த 4 மாட்டு வண்டிகளையும் மடக்கிப் பிடித்தனர். மாட்டு வண்டியின் உரிமையாளரான மணிகண்டன், பெருமாள் வெங்கடேசன், வீரமணி, ஆகிய 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். உடனே 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கூடுதல் விலைக்கு மதுவிற்ற 4 பெண்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • 534 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 4 பெண்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 534 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×