search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95934"

    விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் உள்பட 4 பேர் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூடங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (65). சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூ.58 ஆயிரத்துடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து அவரது மனைவி நாகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவல்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரது பேரன் கவுதம் (17). 10-ம் வகுப்பு படித்து முடித்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோபாலபுரத்தைச் சேர்ந்த 17 வயது பெண் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மாயமானார்.

    இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் பார்வதி. இவரது மகள் மொட்டையம்மாள் (26). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மொட்டையம்மாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மேலப்பாளையத்தில் தொழிலதிபரின் மனைவி மற்றும் மகன் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    மேலப்பாளையத்தில் உள்ள கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அகமது மைதீன். தொழிலதிபரான இவர் தருவை பகுதியில் குடிநீர் கேன்- பாட்டில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

    இவரது மனைவி பஷிதா பேகம் (வயது28). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று அகமது மைதீன் தனது நிறுவனத்திற்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டில் இருந்த அவரது மனைவி பஷிதாபேகம் மற்றும் கடைசி மகன் இஷால் (4) ஆகிய 2 பேரையும் காணவில்லை. பக்கத்து வீடுகளில் விசாரித்த போதும் அவர்களை பற்றிய தகவல்கள் தெரியவில்லை

    இது குறித்து அகமது மைதீன் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஷிதாபேகம், அவரது மகன் இஷால் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள். 
    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது. இனான்கோவில் சாலை வசதிகள் சரிவர இல்லாததால் பெரும்பாலான மக்கள் படகு போக்குவரத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இந்த ஏரியில் 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 183 பேர் மட்டுமே அமர்ந்துசெல்ல அனுமதி உள்ள நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளோடு, சரக்குகளையும் ஏற்றி சென்றுள்ளனர்.

    இதனால் பாரம் தாங்காமல் படகு திடீரென ஏரியில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த கோர விபத்தில் 12 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இது குறித்து இனான்கோ நகர மேயர் சைமன் எம்பிவோ வெம்பா கூறுகையில், “படகு விபத்தில் பலியானதாக கூறப்படும் எண்ணிக்கை தற்காலிகமானதுதான். இது மேலும் அதிகரிக்கக்கூடும். பயணிகளின் சரியான எண்ணிக்கையையும் தெரிந்துகொள்வது தற்போது கடினமாக உள்ளது. எனினும் மாயமானவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது” என கூறினார்.
    சபரிமலை கோவிலுக்கு சொந்தமான தங்க நகைகள் மாயமாகி உள்ளதாக தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த புகாரையடுத்து, தேவசம் போர்டின் கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
    திருவனந்தபுரம்:

    பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையின்போது பல ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

    மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் போதும் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள்.

    தங்க, வெள்ளி நகைகள் மற்றும் பணமாக காணிக்கை செலுத்தப்படும். சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாகூர் தேவசம் போர்டு இந்த காணிக்கைகளை எண்ணி தேவசம்போர்டுக்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாத்து வருகிறது. ஆரன்முளா கோவிலையொட்டி உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான இடத்தில் இந்த பாதுகாப்பு அறை உள்ளது.

    தேவசம் போர்டு உதவி கணக்கு அதிகாரியின் தலைமையிலான 3 அதிகாரிகள் கொண்ட குழு இந்த பாதுகாப்பு அறைக்கு பொறுப்பு ஆகும். இந்த அறையை திறந்து காணிக்கை பொருட்களை வைக்கவோ, எடுக்கவோ வேண்டும் என்றால் 3 அதிகாரிகளும் இருந்தால் மட்டுமே முடியும். மேலும் ஆண்டுதோறும் பாதுகாப்பு அறையில் உள்ள காணிக்கை பொருட்களின் விவரங்களும் தணிக்கை செய்யப்படும்.

    இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகி உள்ளதாக தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் சென்றது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பாதுகாப்பு அறையில் இருந்த பொருட்களையும், அதற்குரிய ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அது தொடர்பான கணக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.

    இதுபற்றி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து அதை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை பரிசீலித்த ஐகோர்ட்டு பாதுகாப்பு அறையில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் பொருட்களின் விவரம் பற்றி உடனடியாக ஆய்வு செய்யும் படி தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து தேவசம் போர்டின் கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் இன்று தங்கள் ஆய்வை மேற்கொள்கிறார்கள். அவர்கள் ஆய்வை முடித்த பிறகு அது தொடர்பான அறிக்கை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அப்போது தான் சபரிமலையில் காணிக்கையாக கிடைத்த விலை உயர்ந்த பொருட்கள் எவ்வளவு மாயமாகி உள்ளது என்பது பற்றி தெரிய வரும்.

    இதற்கிடையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சபரிமலை கோவில் காணிக்கை பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு அறைக்கு தேவசம்போர்டு உதவி கணக்கு அதிகாரி தலைமையிலான 3 அதிகாரிகள்தான் பொறுப்பு. அதில் எந்த அதிகாரி மாறிச் சென்றாலும் புதிதாக வரும் அதிகாரியிடம் முறையாக பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். கடந்த 6 வருடங்களாக கணக்குகள் ஒப்படைக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கத்தான் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தங்கம், வெள்ளி போன்ற எந்த காணிக்கை பொருட்களும் மாயமாகவில்லை. இது சிலரின் திட்டமிட்ட சதி ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன் கூறும்போது சபரிமலை கோவிலுக்கு 2017-ம் ஆண்டு முதல் காணிக்கையாக வழங்கப்பட்ட 40 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி மாயமானதாக தகவல் கிடைத்து உள்ளது. இதுபற்றி தெரிந்து கொள்ள பக்தர்களுக்கு உரிமை உண்டு. தேவசம் போர்டு மந்திரி இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    சபரிமலை கோவிலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளி மாயமானதாக வெளியாகி உள்ள தகவல் பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    பொன்னேரியை அடுத்த மாலிவாக்கத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் நந்தினி (19). ரெட்ஹில்ஸ் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்ப வில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நந்தினியை தேடி வருகின்றனர்.

    வடமதுரை அருகே பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே உள்ள வன்னியபாறைப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் செல்லம்மாள் (வயது16). இவர் இதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று செல்லம்மாள் தனது பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டில் பார்த்தனர். எங்கு தேடியும் காணாததால் அவரது தந்தை பெருமாள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் யாரேனும் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும்? என்று தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

    மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காட்டை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழக கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.

    மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி மகாலட்சுமியை தேடி வருகிறார்கள்.

     

    கும்பகோணம் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே முத்தையாபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி (வயது 40). சுமதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 25-ம் தேதி இவரது மகள் ரூபா (வயது 25). தனது தாய் சுமதியை ஆஸ்பத்திரியில் பார்த்து விட்டு ஊருக்கு போகிறேன் என்று தாயிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இதுவரை ரூபா வீட்டுக்கு செல்லவில்லை.

    இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூபாவை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி மாயமானார்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி சத்யாநகரை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது மனைவியுடன் கேரள மாநிலம் உடுமஞ்சோலையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். செல்வத்தின் மகள் ரம்யா ஓடைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கம்பம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் ரம்யா திரும்பாததால் அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்போஸ். இவரது மகள் சோனியா சுபாஷ்(வயது20). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி கல்லூரிக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து மாணவியை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லை.

    இதையடுத்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசம் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றார்.

    களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா(23). இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த நிஷா மாயமாகி இருந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் விசாரித்தனர்.

    மேலும் உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    பெருந்துறை அருகே ஆஸ்டலில் தங்கி படித்த கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு மருத்துவகல்லூரியின் நர்சிங் படித்து வரும் மாணவி ஹாஸ்டலில் இருந்து மாயமான சம்பவம் தொடர்பாக முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், காசிபாளையம் பகுதியை சேர்ந்த  சிவராஜ் என்பவரது மகள் உமாதேவி (வயது 20). இவர் பெருந்துறை, சேனடோரியத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் மூன்றாமாண்டு நர்சிங் படித்து வருகிறார்.

    கல்லூரி வளாகத்தில் உள்ள ஹாஸ்டலிலேயே தங்கி படித்து வரும் இவர் நேற்று முன்தினம் காலை திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டிரெயினிங் சென்று விட்டு மதியம் ஹாஸ்டலுக்கு திரும்பி வந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து வார்டன் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் அனுமதி பெறாமல் வெளியே சென்றாராம். அவர் மீண்டும் ஹாஸ்ட லுக்கு வராததால் கல்லூரி முதல்வர் மனோண்மணி பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுகவனம் காணாமல் போன மாணவியை தேடிவருகிறார்.

    செந்துறை அருகே தேர்வு எழுத சென்ற அரசு பள்ளி மாணவி மாயமானதையடுத்து நத்தம் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செந்துறை:

    நத்தம் வட்டம் செந்துறை அருகே உள்ள சித்திரைக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த ஜெய ராமகிருஷ்ணனின் மகள் சித்ரா(16), பெயர் மாற்றப்பட்டுள்ளது.

    இவர் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை 8-ந்தேதி மதியம் ஆங்கில தேர்வு எழுதுவதற்காக காலையில் படிப்பதற்காக சித்ராவின் தந்தை பள்ளியில் கொண்டுபோய் இறக்கிவிட்டு வந்துள்ளார்.

    மதியம் நடந்த ஆங்கில பரீட்சையை மாணவி தேர்வு நடக்கும் அறைக்கு போய் எழுதவில்லை. வழக்கம் போல் தனது மகளை கூப்பிடுவதற்காக பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மகளை காணாமல் பரிதவித்தார்.

    ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர் இன்று தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறினர். பள்ளிக்கு வந்த மகள் காணவில்லை என்று நத்தம் போலீஸ் நிலையத்தில் தந்தை ஜெயராமகிருஷ்ணன் புகார் மனு கொடுத்துள்ளார்.

    இதையொட்டி நத்தம் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் வேல் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×