search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • மதுரை அருகே நடந்த விபத்தில் 2வாலிபர்கள் பலியானார்கள்.
    • வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள வலையங்குளம் நெடுமதுரையை சேர்ந்தவர் அழகு (வயது 48). நேற்று காலை இவர் அதே பகுதியை சேர்ந்த மொக்கை என்பவருடன், மோட்டார் சைக்கிளில் திருப்பரங் கு ன்றம் முருகன் கோவிலுக்கு சென்றார். பின்னர் திருமங்கலம் ரிங்ரோடு-நிலையூர் ரோட்டில் திரும்பியபோது திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் இருவரும் காயமடைந்தனர். தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அழகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அழகு மனைவி பெரிய அழகி கொடுத்த புகாரின்பேரில் சேலம் அன்னதானப் பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் ஷேக் தாவூத்தை கைது செய்தனர்.

    கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பிரிவில் வந்தபோது நள்ளிரவில் சாலையை கடக்க முயன்ற 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது சம்பந்த மாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கதிர் அறுக்கும் இயந்திரம் மோதி கல்லுாரி மாணவர் பலியானார்
    • இதுகுறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    குளித்தலை அருகே, சூரியனுார் பஞ்., மேலப்பட்டியை சேர்ந்தவர் காத்தான் மகன் ஹரிசெல்வன் (வயது 19). இவர், ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி. காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். தனது இருசக்கர வாகனத்தில் இவர் நங்கவரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, நங்கவரம் - திருச்சி நெடுஞ்சா லையில், கவுண்டம்பட்டி பகுதியில், எதிரே வந்த நெற்கதிர் அறுக்கும் இயந்திரம், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஹரி செல்வன் உயிரிழந்தார். இது குறித்து, அவரது தந்தை காத்தான் கொடுத்த புகாரின் படி, கதிர் அறுக்கும் இயந்திர டிரைவரான, காட்டு மன்னார்கோவில், கொண்டசமுத்திரத்தை சுப்பிரமணி, மீது குளித்தலை போலீசார் சேர்ந்த வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கார் மோதி விவசாயி பலியானார்.
    • இந்த விபத்து குறித்து செம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை

    செம்பட்டிவிடுதி அருகே உள்ள மணவிடுதி ஊராட்சி மாங்குடியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56), விவசாயி. இவர் கம்மங்காட்டில் இருந்து மாந்தங்குடிக்கு சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த குளத்தூர் அண்டக்குளத்தை சேர்ந்த அப்துல்சலாம் ஓட்டிச்சென்ற கார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மூர்த்தி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மூர்த்தியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூர்த்தி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து செம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




    • நாய் குறுக்கே ஓடியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(வயது 65). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் காருகுடி மெயின் ரோட்டில் உள்ள தனது வயல்காட்டிற்கு சென்று விட்டு, பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீரென ஒரு நாய் குறுக்கே வந்ததால், சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி வடிவேல் கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே அதே ஊரை சேர்ந்த துரைராஜின் மகன் சத்யா(26) ஓட்டி வந்த டிராக்டர், வடிவேல் மீது ஏறி இறங்கியது.இதில் வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த மங்களமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுப்பு ராயலு (வயது 80). விவசாயி. தனது நிலத்தில் மூங்கில் மர குப்பைகளை எரித்துகொண்டு இருந்தார்.
    • அப்போது மயங்கிய அவர் தீயில் விழுந்தார். இதனால் அவருக்கு முதுகில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி ஒன்றியம் கீழக்குப்பம் நாச்சியார் தெருவை சேர்ந்தவர் சுப்பு ராயலு (வயது 80). விவசாயி. கடந்த 4-ந்தேதி தனது நிலத்தில் மூங்கில் மர குப்பைகளை எரித்துகொண்டு இருந்தார். அப்போது மயங்கிய அவர் தீயில் விழுந்தார். இதனால் அவருக்கு முதுகில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்  மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

    இது குறித்து முத்தாண்டிக் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரெயில் ஓட்டுனர் விபத்து குறித்து ஜரபாதா நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
    • விபத்தால் ஒரு சில ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டன.

    ஒடிசா மாநிலம், அங்குல் மாவட்டம், ஜார்பாடா வனப்பகுதியில் வாராந்திர சம்பல்பூர்-ஷாலிமார் மஹிமா கோசைன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் யானை உயிரிழந்தது.

    கடந்த ஏப்ரல் 6ம் தேதி அன்று இரவு போயிண்டா மற்றும் ஜரபதா நிலையங்களுக்கு இடையே வாராந்திர ரெயில் இயங்கியது. அப்போது, யானை தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததாக கிழக்கு கடற்கரை ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, ரெயில் ஓட்டுனர் விபத்து குறித்து ஜரபாதா நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    பின்னர், வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று யானையின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவத்தால் ஒரு சில ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டன.

    யானை இறந்த சம்பவத்தை ரெயில்வே துறை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் மற்றும் நிர்வாகத்தின் உயர் மட்டத்தில் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தது.

    • எதிர்பாராத விதமாக திடீரென மரத்தின் கிளை முறிந்து முதியவரின் தலையில் விழுந்தது.
    • ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் தியாகராய புது வீதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு நேற்று மதியம் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மரத்தின் கிளை முறிந்து அவரது தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை.இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆரோக்கியராஜா ஆடுகளை தேடி கொண்டு இருந்த போது 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பன்னிமடை அருகே உள்ள தென்றல் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜா (வயது 45). ஐ.டி. ஊழியர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று ஆரோக்கிய ராஜா குன்னூரில் உள்ள தனது அக்கா மகள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். செல்லும் வழியில் அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமா ஜார்ஜ் பாலன் என்பவரது வீட்டிற்கு சென்றார்.

    அவர் வளர்த்து வரும் ஆடுகள் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. எனவே ஆடுகளை தேடி ஜார்ஜ் பாலன் வெளியே சென்றார். அவருடன் ஆரோக்கிய ராஜாவும் சென்றார். கல்லாறு ரெயில்வே பாலத்தில் ஆடுகளை தேடி கொண்டு இருந்த போது 30 அடி பள்ளத்தில் ஆரோக்கிய ராஜா தவறி விழுந்தார்.

    இதில் அவரது விலா எலும்பு உடைந்தது. உயிருக்கு போராடிய ஆரோக்கிய ராஜாவை அவரது மாமா மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆரோக்கிய ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் திடீரென்று சுட்டார்.
    • தாக்குதல் சம்பவம் முன்னாள் கிராம தலைவர் வீடு அருகே நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

    பாங்காங்:

    தாய்லாந்தில் தெற்கில் உள்ள சூரத் தானி மாகாணம் கிரி ராட் நிகோம் பகுதியில் துப்பாக்கி சூடு நடந்தது. பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் திடீரென்று சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தாக்குதல் நடத்திய நபர் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதல் சம்பவம் முன்னாள் கிராம தலைவர் வீடு அருகே நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

    தாய்லாந்தில் சமீபகாலமாக வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் நாங் புவாலாம் பு மாகாணத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி நடத்திய தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 36 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.

    • மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்
    • இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் பவித்திரம் குரும்ப பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் லோகேஷ் (வயது 20). இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் லோகேஷ் கரூர்-கோவை சாலை முத்துசோழிப்பாளையம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த லோகேஷ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • இவரும் இவரது 10 வயது மகன் அஸ்வின் ஆகிய இருவரும் திண்டிவனம் அண்ணா நகரில் இருந்து ஆட்சிப்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் ஆட்சிப் பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் இவரும் இவரது 10 வயது மகன் அஸ்வின் ஆகிய இருவரும் திண்டிவனம் அண்ணா நகரில் இருந்து ஆட்சிப்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.அப்பொழுது சென்னை மார்க்கமாக கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஸ்வின் சுந்தரமூர்த்தியின் கண்முன்னே டிராக்டரில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த ஆசிரியர் சுந்தரமூர்த்தி முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டார்.இந்த விபத்தால் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டார்
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

    திருச்சி,

    வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 53). இவர் தற்போது கல்கண்டார் கோட்டை பகுதியில் வீடு கட்டி அங்கு சென்று விட்டார். இவர் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் பம்ப் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி செந்தண்ணீர் புரம் மேம்பாலம் அருகே மொபட்டில் சிவக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவக்குமார் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×