என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96188"
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின் படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் இலுப்பூர் சத்திரம் அருகே கீழ்வேளூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து லாரியில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்
விசாரணையில் அவர்கள் திருக்குவளை மேலத்தெருவை சேர்ந்த சரவணன் (வயது 38) கச்சனம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் அய்யப்பன் ( வயது 19)ஆகியோர் என்பதும் அவர்கள் உரிய அனுமதியின்றி கீழ்வேளூர் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் அள்ளிச் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் ஐயப்பன் ஆகிய 2 பேரை கைது செய்தனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இதில் லாரி உரிமையாளர் பாங்கலை சேர்ந்த முருகையன் மகன் கோவிந்தராஜ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகன சோதனை மட்டுமின்றி பஸ், ரெயில், விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சி விமான நிலையத்திற்கு தனியார் விமானம் வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 2 பெண் பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்திய போது, ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2,203 கிராம் தங்க செயின்களை கழுத்தில் அணிந்து அதனை துணியால் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரிடம் விசாரிக்கும் போது அவர்கள் மலேசியாவை சேர்ந்த தனலட்சுமி (வயது 61) மற்றும் சசிகலா என தெரியவந்தது. அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது எப்படி? யாருக்காக கடத்தி வந்தார்கள்? குருவியாக செயல்பட்டு கடத்தி வந்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக தினமும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ரூ.70 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தங்கம் கடத்தலை தடுக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #TrichyAirport
இலங்கையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஒரு விமானம் வந்தது.
இதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்த போது ரப்பர் ஸ்பாஞ்சில் தங்கத்தை மறைத்து உடலில் கட்டி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.39 லட்சத்து 15 ஆயிரம்.
தங்கத்தை கடத்தி வந்தவர்கள் சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள். பெயர் விவரம் உடனே வெளியிடப்படவில்லை.
இவர்கள் யார்? தங்கம் கடத்தும் கும்பலுக்கும் இந்த 4 பேருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டை அடுத்த ஓதலவாடி கிராமம் அருகே உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையிலிருந்து குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமஜெயம் (வயது 38), ஆறுமுகம் (68), சந்தோஷ் (21) ஆகியோர் 3 மாட்டு வண்டிகளில் தனித்தனியாக மணல் கடத்தி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் 3 மாட்டுவண்டிகளையும் மடக்கிப்பிடித்து மணலுடன் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ராமஜெயம் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அடுத்த பையூர் கூட்ரோட்டில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மனுக்கம்பட்டு ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆந்திராவில் இருந்து கடந்த 19-ந் தேதி சென்னை துறைமுகத்துக்கு ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.
தகுந்த ஆவணங்கள் இல்லாததால் அந்த கண்டெய்னர் லாரி திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அதில் செம்மரக்கட்டைகள் கொண்டு வரப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த லாரி எங்கு சென்றது என்பதை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது குன்றத்தூர் அருகே சர்வீஸ் சாலையில் அந்த லாரி சென்றது தெரியவந்தது. 3 நாட்களாக தேடியும் அந்த லாரி சிக்கவில்லை.
போலீஸ் விசாரணையில், தண்டலம் அருகே கீழ்மாநகர் பகுதிக்கு லாரி வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்குள்ள ஒரு குடோனில் 5 டன் செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 3 கோடி. இந்த செம்மரக்கட்டைகள் இருந்த குடோனை வளசரவாக்கத்தை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் 2 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது.
அவருக்கு இதில் தொடர்பு உண்டா? என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #RedSandalwood
செங்கம்:
செங்கம் அடுத்த மேல்புழுதியூர் முறையாறு பாலம் அருகே 4 மாட்டு வண்டிகளில் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.
மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் செங்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மாட்டு வண்டிகளில் பயன்படுத்தப்பட்ட 8 மாடுகளை திருவண்ணாமலையிலுள்ள ஒரு கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
வேட்டவலத்தை அடுத்த நாரையூர் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சஜேஸ்பாபு மற்றும் போலீசார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. சந்தேகமடைந்த பறக்கும் படையினர் அந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ஆவூர் கிராமத்தை சேர்ந்த பாய் வியாபாரி ஜான்பாஷா (வயது 50) இருந்தார். அவர் ரூ.99 ஆயிரத்து 400 வைத்திருந்தார். பாய் வியாபாரம் செய்து விட்டு அதில் கிடைத்த பணத்துடன் திரும்பிக்கொண்டிருப்பதாக அதிகாரிகளிடம் அவர் கூறினார். ஆனால் உங்களிடம் உரிய ஆவணம் இல்லை எனக்கூறி அந்த பணத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். ஆவணங்களை காண்பித்த பின்னர் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என பறக்கும் படைடயினர் அவரிடம் கூறினர்.
இதேபோல் போளூர் தனி தாசில்தார் சுரேஷ் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் பேட்டை கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக போளூர் நோக்கி வந்த லாரியை அவர்கள் மடக்கி சோதனை செய்தனர்.
அந்த லாரியில் செங்கம் தாலுகா ஓரந்தவாடி கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் குப்பன் (வயது 64) வந்தார். நெல் வியாபாரியான அவரிடம் ரூ.70 ஆயிரம் இருந்தது. கேளூரில் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய செல்வதாக அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி அவர் வைத்திருந்த ரூ.70 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து போளூர் தாசில்தார் ஜெயவேலுவிடம் ஒப்படைத்தனர். அந்த பணம் போளூர் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. பணத்தை ரொக்கமாக கொண்டு செல்ல தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப செல்லும் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த வேனில் ரூ.3 கோடியே 20 லட்சம் ரொக்கம் இருந்தது. இந்த பணம் கொண்டு செல்வதற்காக உரிய ஆவணங்கள் அதில் இருந்த ஊழியர்களிடம் இல்லை.
இதையடுத்து ரூ.3 கோடியே 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை செய்யூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சென்னையில் இருந்து பாண்டிச்சேரி ஏ.டி.எம். பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஏ.டி.எம்.க்கு பணம் நிரப்பும் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். #LSPolls
பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என கண்டுபிடிக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் அதிகாரிகள் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சத்தி-கோபி ரோட்டில் கோபி கொடிவேரி அணை பிரிவில் பறக்கும் படை அதிகாரி பவானி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையத்தை சேர்ந்த விவசாயியான நரேந்திரன் என்பது தெரியவந்தது.
மேலும் நடத்திய விசாரணையில், நிலத்தை கிரையம் செய்வதற்காக சத்தியமங்கலம் சென்ற அவர், வேலை முடியாததால் ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்துடன் ஊருக்கு காரில் திரும்பியது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் நரேந்திரனிடம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைத்தனர்.
சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களை காட்டினால் அவரிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.
இதேபோல் விஜயமங்கலம்-ஊத்துக்குளி ரோட்டில் பெருந்துறை அருகே உள்ள வேட்டைக்காரன்கோவிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுந்தரவடிவேல் மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் 2 மணி அளவில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ரூ.75 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பவானியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பதும், ஊத்துக்குளியில் வெடிமருந்தை விற்றுவிட்டு அதற்கான பணம் ரூ.75 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு ஊருக்கு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சத்தியமங்கலம் அருகே உள்ள புதுரோடு என்ற கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜீவாதயாளன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். இதில் சத்தியமங்கலத்தில் இருந்து கேரளாவுக்கு பேக்கரி பொருட்கள் வாங்க காரில் சென்ற முகமது சுவேகான் (19) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.52 ஆயிரத்து 200 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.4லட்சத்து 29 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.
முதுகுளத்தூர் கீழத்தூவல் அருகே சாம்பக்குளம் விலக்குரோட்டில் எஸ்.ஐ., முத்துமாணிக்கம் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது சாம்பக்குளத்தை சேர்ந்த பாக்கியம் (50), டுவீலரில் அனுமதியின்றி 26 மதுபாட்டில்கள் கடத்துவது சோதனையில் தெரிய வந்தது. போலீசார் மது பாட்டிலை பறிமுதல் செய்து, பாக்கியத்தை கைது செய்தனர்.
மேலும் திருவரங்கம் - கொழுந்துறை கண்மாய் பகுதியில் மது விற்பனை செய்வதாக, கீழத்தூவல் போலீசாருக்கு தகவல் கிடைத்ததன்பேரில், தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.
அப்போது அலங்கானுரை சேர்ந்த சதக்அப்துல்லா (38), என்பவர் மறைத்து வைத்திருந்த 26 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
திருட்டு தனமாக விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்த இருவர் மீதும் கீழத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை உள்நாட்டு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
சென்னை பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது கைப்பையை சோதனையிட்டனர்.
அப்போது அதில் 1.4 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.46 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது.
அந்த விமானம் ஏற்கனவே இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த பன்னாட்டு விமானம் ஆகும்.
அதில் இலங்கையில் இருந்து வந்த பயணி தனது இருக்கைக்கு அடியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்துள்ளார். பின்னர் அந்த விமானம் சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு உள்நாட்டு விமானமாக சென்றது.
பின்னர் அங்கிருந்து உள்நாட்டு விமானமாக சென்னை வந்தது. அதே இருக்கையை முன்பதிவு செய்த அந்த பயணி சென்னை விமானத்தில் தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது சிக்கினார்.
அவரிடம் விசாரித்த போது, “பன்னாட்டு விமானங்களில் சோதனை கெடுபிடி அதிகம் இருக்கும். உள்நாட்டு விமானங்களில் கெடுபிடி அதிகம் இருக்காது. எனவே இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து பின்னர் அது உள்நாட்டு விமானமாக மாற்றப்படும் வரை காத்திருந்து தங்கத்தை கடத்தினோம்” என்றார். இலங்கையில் இருந்து கடத்தி வந்தது யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூடலூர்:
நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் முல்லைப்லப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து குறைவாக உள்ளது. தேனி பகுதியில் நீர்வரத்து இன்றி பெரும்பாலான இடங்களில் வறண்டு கிடக்கிறது. இதனை பயன்படுத்தி மர்ம கும்பல் மணல் கடத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுருளிபட்டி யானை கஜம் பகுதியில் மணல் கடத்தி குவியல்களாக வைத்திருப்பதை பார்த்த விவசாயிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த நிலை தொடர்ந்தால் கம்பம், கூடலூர் பகுதியில் கடும் வறட்சி ஏற்படும் என்பதால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் தெற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் குள்ளப்பகவுண்டன்பட்டி ஒத்தகளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்திசோனையிட்டபோது சுருளியாறு மின் நிலையம் செல்லும் சாலையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக ராமர் (வயது40) என்பவரை கைது செய்து மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்