என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிலம்பம்"
- தொடர்ந்து, 2 மணிநேரம் மிதித்து கொண்டே ஒற்றை கையில் சிலம்பம் சுற்றி சாதித்தனர்.
- வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று 14 மாணவ -மாணவிகள் கண்கள் இரண்டையும் துணியால் கட்டியவாறு சுருள்வாள் சுற்றி புதிய உலக சோழன் சாதனை படைத்தனர்.
அதன் பற்றிய விவரம் வருமாறு :-
பார்வையிழந்தும் தன்னம்பிக்கையோடு நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக பல இன்னல்களையும் இடர்களையும் சந்தித்து வரும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியல் பற்றிய விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தும் நோக்கத்தில் 14 மாணவ-மாணவிகள் தொடர்ந்து 2 மணிநேரம் கண்கள் இரண்டையும் கட்டியவாறு சுருள்வாள் சுற்றி அனை வரையும் மெய்சிலிர்க்க வைத்து புதிய சோழன் உலக சாதனை படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவி வந்தனா என்பவர் தொடர்ந்து 2 மணிநேரம் ஒற்றைக் கையில் சுருள்வாள் சுற்றி புதிய சோழன் உலக சாதனை படைத்தார் . பின்னர் 4 மாணவர்கள் சைக்கிள்களை தொடர்ந்து 2 மணிநேரம் மிதித்துக் கொண்டே ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றி சாதித்தனர். இந்த மூன்று சாதனை நிகழ்ச்சிகளும் தஞ்சை சண்முகநாதன் நகரில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வை யோவான் சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளியின் ஆசான் ராமநாதன் ஒருங்கிணைத்து நடத்தினார். மேலும், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் சார்பாக அதன் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன், தஞ்சை மாவட்டப் பொதுத் தலைவர் முனைவர் சந்தானசாமி மற்றும் தஞ்சை மாவட்டப் பொதுச் செயலாளர் நல்லாசிரியர் குழந்தைசாமி போன்றோர் நடுவர்களாக பங்கு கொண்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவர்களை கண்காணித்து உறுதி செய்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை வழங்கி பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் யோவான் சிலம்பப் பயிற்சிப் பள்ளியின் தலைமை ஆசான் யோவான், தன்னார்வ லர்கள் நீலமேகம், சஞ்சய், எஸ்தர் ராணி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சாதனை படைத்த மாணவ- மாண விகளை பாராட்டினர்.
- 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி மாணவர் சாதனை படைத்தார்.
- இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
கீழக்கரை
ராமநாதபுரத்தில் நோபல் உலக சாதனை மற்றும் கனி சிலம்ப விளையாட்டு, சிலம்பக்கலை அகாடமி இணைந்து இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி செய்யாலூர் ஆர்.கே.சாமி கல்லூரியில் நடந்தது.
சிலம்ப விளையாட்டுப் பள்ளியின் நிறுவனர் அகமது மரைக்கா, கனி சிலம்பப்பள்ளி நிறுவனர் வரிசை கனி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 3 மணிநேரம் உலக சாதனைக்காக 6 பள்ளி களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்று சிலம்பம் சுற்றினர்.
ராமநாதபுரம் முஹம்மது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர் முகமது அப்துல் ஹாலித், ஆர்.கே. சாமி கல்லூரியில் இருந்து நல்லாங்குடி கிராமம் வரையிலும், பின்னர் நல்லாங்குடியில் இருந்து ஆர்.கே.சாமி கல்லூரி வரையிலும் மொத்தம் 10 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பம் சுற்றியபடி சாதனை படைத்தார்.
இந்த மாணவருக்கு ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இதில் திருப்பூரை சேர்ந்த சோழன் சிலம்பம் மற்றும் விளை யாட்டு அகாடமி மாண வர்கள் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றினர்.
- சர்வதேச சிலம்ப போட்டியில் ராமநாதபுரம் மாணவி சாதனை படைத்தார்.
- வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம்
கர்நாடக மாநிலம் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் வோல்டு யூனியன் சிலம்ப பெடரேஷன் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
இதில் சப்ஜூனியர் ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவி கனிஷ்கா முதல் பரிசான தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த போட்டியில் இந்தியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, இலங்ைக ஆகிய 5 நாடுகளில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மாணவியுடன் சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேலும் உடனிருந்தார். ராமநாதபுரம் திரும்பிய மாணவிக்கு பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
- முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பரமக்குடி
பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. பள்ளி தலைவர் முகைதீன் முசாபர் அலி, முருகேசன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, குரு ஏழுமலை, தேசிய தலைவர், அகத்திய ஞானம் நிறுவன பொதுச் செயலாளர் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பரமக்குடி நகர் மன்ற கவுன்சிலர் அப்துல் மாலிக், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
போட்டியை அப்துல்கலாம் பள்ளி குழுவினர் மற்றும் பாரதி விளையாட்டு சங்க தலைவர் அசான் சண்முகவேல் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
- கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் விளையாடி மாணவி உலக சாதனை படைத்தார்.
- சிலம்பம் விளையாட பயிற்சியாளர் ஈஸ்வரன் குழுவினர் கடந்த 3 மாதமாக பயிற்சி அளித்தார்.
திருமங்கலம்
திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் செயல்பட்டு வரும் சிலம்ப பயிற்சி நிறுவனம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலம்பப் போட்டிைய நடத்தியது. உலக சாதனை படைக்க நோபல் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் விளையாட பயிற்சியாளர் ஈஸ்வரன் குழுவினர் கடந்த 3 மாதமாக பயிற்சி அளித்தார். இந்த நிலையில் இன்று டி.கல்லுப்பட்டி-கள்ளிக்குடி சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 110 மாணவ-மாணவிகள் பங்கேற்று கண்கள், கால்களை கட்டிக்கொண்டு 30 நிமிடம் தொடர் சிலம்பம் விளையாடும் நிகழ்ச்சி நடந்தது.
சிலம்ப கலையின் உள் சுத்து வெளிச்சுத்து, கிறுக்கி, பகிழ் உடான், நாலடி, தலை வெட்டு முன் கம்புபின்னல் பிரித்தல், பின்கம்பு பின்னல் பிரித்தல், உள்சுத்துகை மாற்றுதல், வெளிச்சுத்து கை மாற்றுதல், நான்கடி கைமாற்றுதல், தொடு முறை சுற்றுதல் என பல்வேறு கலைகளை 30 நிமிடத்தில் செய்து காண்பித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். உலக சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் சார்பில் வினோத் குமார், புளியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிகண்டன் ஆகியோர் சான்றிதழும், கேடயமும் வழங்கினர்.
- 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனை முயற்சி மேற்கொண்டனர்.
- தென்காசி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் சத்திய பீமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு உலக சிலம்பம் விளையாட்டு சங்கம், தென்காசி மாவட்ட சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் உள்ள எஸ்.டி.கே. ரைஸ் மில் வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனை முயற்சி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் சத்திய பீமன், செயலாளர் சுதர்சன், துணைத் தலைவர் ஜெயராஜ் மற்றும் பயிற்சியாளர்கள் பிரஜித்குமார், முத்தையா, சண்முகப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புதிய முயற்சியில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, மருதப்பபுரம், சுரண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
- 5-ம் வகுப்பு மாணவர்களால் கரகம் மற்றும் சிலம்பம் சுற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
- என் மேடை என் பேச்சு, செய்தித்தாள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சியும் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக நீலமேகம் மற்றும் அவரது மனைவி கவிதா அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகின்றனர்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மாநில மாவட்ட கருத்தாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான பொருட்களை வைத்து எண்ணும் எழுத்தும் பயிற்சி மேற்கொண்ட ஆசிரியர் தம்பதியினரை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்விக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில், இப்பள்ளி யில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கோடியக்காடு ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்.
இதில் ஆசிரியர்கள் குணசுந்தரி, சாந்தி, கவிதா, மணிமாலா, புஷ்பா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மீனாம்பாள், தாமரைச்செ ல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, 1 முதல் 3 வரை பயிலும் மாணவர்களால் என் மேடை என் பேச்சு, செய்தித்தாள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சியும், 5-ம் வகுப்பு மாணவர்களால் கரகம் மற்றும் சிலம்பம் சுற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு ஊராட்சி தலைவர் தமிழ்மணி பரிசு வழங்கினார்.
முடிவில் ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.
- 2 நாட்கள் தொடர்ந்து சிலம்பம் களரி பயிற்சி அளித்து வந்தார்.
- ஆதிதிராவிட விடுதி பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிட விடுதி பள்ளி கல்லூரி மாணவி களுக்கு உடுமலை பகத்சிங் சிலம்பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசானும் தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் மாநில செயலாளருமான சி.வீரமணி வாரத்தில் 2 நாட்கள் தொடர்ந்து சிலம்பம் களரி பயிற்சி அளித்து வந்தார். இவரது இலவச சேவையை பாராட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், காங்கேயம் தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர். மாணவிகளுக்கு சிறப்பாக இலவச சிலம்பபயிற்சி அளித்து வருவதாக பரிந்துரை செய்த தாராபுரம் மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி, அலுவலக கண்காணி ப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிலம்ப பயிற்சியாளர் வீரமணிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் இளமுருகு தலைமையில் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊக்குவிக்கும் விதமாக சிவம் சிலம்பம் அறக்கட்டளை மற்றும் குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 3வயது முதல் 21வயது வரை உள்ள மாணவ- மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு, ஒரு மணி நேரம் கால்களை முட்டி போட்டுக் கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.
மேலும் 7 வயது மாணவன் பரித்ராஜ் மற்றும் 12-வயது மாணவி இனியா ஆகியோர் 15அடி உயரத்தில் 6200ஆணிகள் பதித்த ஆணி பலகையின் மீது நின்று ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியை குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி செயலாளர் அர்த்தனாரி "மாதிரி ஒலிம்பிக் தீபம்" ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஜெட்லி புக் ஆப் நிறுவனம் மாணவர்க ளின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து, அதன் நிறுவனர் ஜெட்லி மாணவர்களுக்கு உலகசாதனை சான்றிதழ், மெடல் வழங்கினார்,
மேலும் சிவம் சிலம்பம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது,
நிகழ்ச்சியை சிவம் சிலம்பம் அறக்கட்டளை நிறுவனரும் சிலம்பம் தற்காப்புக்கலை பயிற்சியக தலைமை ஆசானுமான வே.மாதையன் தலைமையில் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் முன்நின்று நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசாமி பாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளரும்,மல்லூர் ஆல் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரு மான தமிழ்ச்செல்வன் செய்தி ருந்தார்.
- ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், சிலம்ப சண்டை என்று 3 விதமாக நடைபெற்றது.
- வயதின் அடிப்படையிலும், விளையாட்டின் அடிப்படையிலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது.
சுவாமிமலை:
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. போட்டியில் கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிடிவுகளாக ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், சிலம்ப சண்டை என்று 3 விதமாக நடைபெற்றது. மேலும், வயதின் அடிப்படையிலும், விளையாட்டின் அடிப்படையிலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது.
போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழையும் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். விளையாட்டுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.
- மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.
- விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:
புதுவை கடற்கரையில் ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக 1200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அபுல்கலாம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி ராஜ், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.
இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் புதுவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சிலம்பாட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
- கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள் அசத்தினர்.
- உடல் உறுப்புகளை தானம் செய்வதின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தியது.
திருமங்கலம்
உலக சோடகான் கராத்தே அமைப்பும், திருமங்கலம் லீ சாம்பியன் ஆர்ட்சும் இணைந்து உலக சாதனை நிகழ்ச்சியாக கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகளை நடத்தியது. திருமங்கலம் தனியார் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சி உடல் உறுப்புகளை தானம் செய்வதின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 5 மணிநேரம் கராத்தேயில் கிக்ஸ் (உதைத்தல்) நிகழ்ச்சியும், 2 கண்களை துணியால் கட்டியவாறு சிலம்பத்தில் இரட்டை கம்பு சுழற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.
ஆணழகன் சங்கத்தின் செயலாளர் மற்றும் சோழன் உலக சாதனை புத்தகத்தின் தென்மாநிலத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். நிறுவனர் நிமலன் நீலமேகம் முன்னிலை வகித்தார். கராத்தே அமைப்பின் செயலாளர் பால்பாண்டி வரவேற்றார். கராத்தே கிக்சில் 101 மாணவர்களும், சிலம்பம் சுற்றுவதில் 166 மாணவர்களும் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிவராமன், இந்தியன் சிலம்ப பள்ளி தலைமை பயிற்சியாளர் மணி, மதுரை மாவட்ட சிலம்ப கழகத்தின் பொருளாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்