என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 97500"
- குருசாமியிடம் அந்தோணி ராஜ் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- போத்திராஜ், ராஜ் ஆகியோர் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 65). இவர் கடந்த 4 ஆண்களுக்கு முன்பு நாட்டாமையாக இருந்ததாகவும், அதற்கு முன்பு சுப்பையா என்பவர் நாட்டாமையாக இருந்த தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாத கூட்டம் நடக்கும்போது குருசாமி, சுப்பையாவிடம் பொதுக்க ணக்கில் பற்றாக்குறையாக இருந்த பணத்தை கட்ட வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணி ராஜ்(37), முத்துராஜ்(32), குமார்(44), சுப்பையா, செந்தில்குமார்(47) ஆகியோர் குருசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரை தலையில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் குமார், ஊர் பொது வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றார். மாதக் கூட்டத்தில் வாடகை கட்ட வந்தபோது அங்கிருந்த குமாரின் தம்பி அந்தோணி ராஜ் என்பவரிடம் குருசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க வந்த போத்திராஜ்(31), ராஜ் ஆகியோர் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குருசாமி மற்றும் குமார் அளித்த புகாரின் பேரில் 2 வழக்குகள் பதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் அந்தோணி ராஜ், போத்திராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் குருசாமி, முத்துராஜ், குமார், சுப்பையா, செந்தில்குமார், ராஜ் ஆகியோரை வலைவீசி தேடுகின்றனர்.
- இப்ராகிம் ஒரு புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார்.
- ஷேக் மைதீன் என்பவர் இப்ராகிமிடம் தகராறு செய்துள்ளார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகன் முகமது இப்ராகிம்(வயது 23). இவர் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார்.
சம்பவத்தன்று வேலையை முடித்துக்கொண்டு கழுகுமலை சாலையில் நின்று நண்பருடன் பேசிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஷேக் மைதீன் என்பவர் இப்ராகிமிடம் தகராறு செய்து அவரை அடித்து கீழே தள்ளி தள்ளியதில் அவர் பலத்த காய மடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த முகமது இப்ராகிம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் திருவிழாவில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 20). அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று அந்த பகுதியில் ராஜகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அங்கு முளைப்பாரி எடுத்து செல்வதை மனோஜ் பார்த்து கொண்டிருந்தார். அவர் காலில் செருப்பு அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் செருப்பு அணிந்து பந்தலுக்குள் நிற்கக்கூடாது என கூறி வெளியே செல்லும்படி கூறி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி, மனோஜை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மனோஜ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
அவர் கொடுத்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காயம் அடைந்த இளங்கோவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
- இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கோவை,
குனியமுத்தூர் அருகே குளத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.காம். படித்து வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருரை, இளங்கோவன் கடந்த சில நாட்களாக ஒருதலையாக காதலித்து வந்தார்.
தினமும் இளம்பெண் செல்லும் இடங்களுக்கு சென்று அவரிடம் காதலிக்குமாறு கூறினார். இதில் கோபம் அடைந்த இளம்பெண் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இளங்கோவனை கண்டித்தனர்.
பின்னர் கடந்த சில நாட்களாக இளங்கோவன் இளம்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். சம்பவத்தன்று இளம்பெண் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார், இதனை பார்த்த இளங்கோவன் அவரிடம் மீண்டும் பேசுவதற்கு முயன்றார்.
இதில் மேலும் கோபம் அடைந்த இளம்பெண் அவரது உறவினர்களான கோவையை சேர்ந்த விவேக் (27), பார்திபன் (28) ஆகியோரிடம், தன்னை வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து காதலிப்பதாக தொல்லை தருகிறார் என தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் இளங்கோவனை தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும் என கூறினர்.
பின்னர் இளங்கோவன் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த விவேக் மற்றும் பார்திபன், இளங்கோவனிடம் ஏன் எங்கள் வீட்டு பெண்ணிடம் பேசுகிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இதில் அவர்களுக்கு இடை யே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விவேக் மற்றும் பார்திபன் இளங்கோவனை தகாத வார்தைகளால் பேசி கீழே கிடந்த முள் கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து இருவரும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயம் அடைந்த இளங்கோவன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் குனியமுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், விவேக் மற்றும் பார்த்திபன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- கோவில் திருவிழாவில் வாலிபர்-பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் உள்ள முனியம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடந்தது. இதில் நாதன்(வயது25) என்பவரின் குடும்பத்தினர் காவடி, முளைப்பாரி எடுத்து வந்தனர். அவர்களுக்கு முன்பு நாதன் கூச்சலிட்டபடி ஆடி பாடிக்கொண்டு வந்த தாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த சகோத ரர்களான பாலசுப்பிர மணியன்(48), தர்மர்(49) ஆகியோர் நாதனை கூச்சலி டாமல் செல்லும்படி கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை பிரித்து அழைத்துச் சென்றனர்.
இந்தநிலையில் சிறிது நேரத்தில் முளைப்பாரி வேறு தெருவில் வந்தபோது பாலசுப்பிரமணியன் மற்றும் தர்மர், நாதனை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நாதன் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சகோதரர்களை தேடி வருகிறார்.
ராஜபாளையம் அருகே உள்ள சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள்(50). இவர் தந்தை தனக்கு அளித்த பூர்விக சொத்தை சகோதரர் மாரிமுத்துவுக்கு கொடுத்துள்ளார். ஆனால் அவர் அந்த சொத்தை மற்றொரு சகோதரி ஜான கிக்கு கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த சொத்து தொடர்பாக காளியம்மாள் வட்டாட்சியர் அலுவல கத்தில் வில்லங்க புகார் பதிவு செய்தார்.
இந்த நிலையில் அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக காளியம் மாள் வந்தார். அப்போது ஜானகி, தனது கணவர் முப்பிடாதியுடன் சேர்ந்து காளியம்மாளை தாக்கினர். இதில் காயமடைந்த காளி யம்மாள், ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இதுகுறித்து காளியம் மாள் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- முதுகுளத்தூரில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் வட்டக் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- வட்டாட்சியர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
முதுகுளத்தூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் பிரபாகரன் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற போது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மணல் கொள்ளையர்களை கண்டித்தும், குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் முதுகுளத்தூரில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் வட்டக் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாட்சியர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர்கள் மீனாட்சி சுந்தரம், சங்கர், அய்யாத்துரை, வட்டத் தலைவர் பெரியசாமி, செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சிங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விமானம் டெல்லியை அடைந்ததும், அந்த பயணியை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.
- இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக விமானங்களில் ஊழியர்களிடம் பயணிகள் அத்துமீறி நடந்துகொள்வதும், கைகலப்பில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவாவில் இருந்து நேற்று டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஊழியரை தாக்கி உள்ளார். விமானம் டெல்லியை அடைந்ததும், அந்த பயணியை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-
விமானத்தில் பயணித்த ஒரு பயணி, ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஒரு ஊழியரை தாக்கி உள்ளார். டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோதும், அந்த பயணி ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். எனவே, அவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளித்துள்ளோம். பயணிகளின் பாதுகாப்புடன் உங்கள் பணியாளர்களின் பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது,
இவ்வாறு அவர் கூறினார்.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக விதிகளின் படி, அத்துமீறி நடக்கும் விமானப் பயணிக்கு, அவர் செய்த குற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட காலத்திற்கு விமானத்தில் பறக்க தடை விதிக்கலாம்.
- ஓட்டல் உரிமையாளரை தாக்கினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.
மதுரை
மதுரை காமராஜபுரம் மீனாட்சிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது40). இவர் முனிச்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு சையது இப்ராகிம் (38) என்பவர் தினமும் வந்து பணம் கொடுக்காமல் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அவரது தம்பியும் பணம் கொடுக்காமல் சாப்பிட்டதாக தெரிகிறது. இதை மணிமாறன் தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ராகிம், மணிமாறனை மரக்கட்டையால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து மணிமாறன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.
- மின் கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் மீது தாக்குதல் நடந்தது.
- 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் அருணாசலம்(வயது23). இவருக்கும் தேராபட்டியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் கணவர் சம்பவத்தன்று அருணாச்ச லத்தை தனியாக அழைத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி தேராபட்டியை சேர்ந்த நாராயணன், கிருஷ்ணசாமி, அருண், ஆனந்த், வல்லரசு, தீபா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கருங்கடல் பாதுகாப்பு வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ரஷியா கூறியுள்ளது.
- கருங்கடலில் உக்ரைனின் மூன்று ஆளில்லா விரைவுப் படகுகளையும் ரஷியா அழித்துள்ளது.
ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் ராணுவத்தை பயன்படுத்துவதால் கருங்கடல் பாதையில் கப்பல்கள் செல்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும், கருங்கடல் பாதுகாப்பு வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ரஷியா கூறியுள்ளது.
இந்நிலையில், கருங்கடலில் உக்ரைனின் மூன்று ஆளில்லா விரைவுப் படகுகளையும் ரஷியா அழித்துள்ளது. இதன் வீடியோவை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ரஷிய போர்க்கப்பலான இவான் குர்ஸை உக்ரைன் தாக்க முயற்சித்ததை அடுத்து உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் படகுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தி தொடர்பாளர் ஒருவர்,"போஸ்பரஸ் ஜலசந்தியிலிருந்து வடகிழக்கே 140 கிமீ தொலைவில் ரஷிய கடற்படைக் கப்பலின் நிலையான ஆயுதங்களிலிருந்து உக்ரைனின் அனைத்து படகுகளும் அழிக்கப்பட்டன" என்றார்.
- நடராஜன் கடந்த 2 ஆண்டுக்கு முன் டி.வி.எஸ்., கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார்.
- ஆண்டிக்குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கடன் தவணை கட்டாத வரை தாக்கிய ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 46). ஆசாரி வேலை செய்யும் இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் டி.வி.எஸ்., கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார். வாகனம் வாங்கியதற் கான தவணை தொகையை சரியாக கட்டி முடித்ததால் டி.வி.எஸ்., கிரிடிட் கம்பெனி மூலம் பர்சனல் லோன் ரூ.50 ஆயிரம் நடராஜனுக்கு வழங்கினர்.
இதற்கான மாத தவணை தொகையை சரியாக கட்டவில்லை. நேற்று முன்தினம் புதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஆண்டிக்குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டி.வி.எஸ்., பைனான்ஸ் வசூல் ஊழியர் விக்னேஷ், ந-டராஜனிடம் தவணை தொகை கேட்டார். இதில் விக்னேஷ்க்கும் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, விக்னேஷ் நடராஜனை தாக்கினார். இதனால் காயமடைந்த நடராஜன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- உமைய பார்வதி மீது நவஜோதி இருசக்கர வாகனத்தை கொண்டு மோதி உள்ளார்.
- மயங்கி விழுந்த உமைய பார்வதியை அப்பகுதியினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கோவிலூற்று கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் -உமைய பார்வதி தம்பதிக்கும், பன்னீர் - பாப்பம் மாள் தம்பதிக்கும் சுமார் 6 மாத காலமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களான இவர்க ளுக்குள் அவ்வப்போது சிறு, சிறு தகராறு நடந்து வந்துள்ளது.
பெண் மீது தாக்குதல்
இந்நிலையில் கடந்த 20-ந்தேதி மாலை தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த உமைய பார்வதி மீது பன்னீர் என்பவரது மகன் நவஜோதி (வயது27) இருசக்கர வாகனத்தை கொண்டு மோதி உள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திர மடைந்த நவஜோதி, உமைய பார்வதியை தாக்கி உள்ளார். தொடர்ந்து நவஜோதியுடன் அவரது தந்தை பன்னீர், தாய் பாப்பம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து, வீட்டுக்குள் சென்ற உமைய பார்வதியை சரமாரியாக அடித்து உதைத்ததோடு செங்கல்லை கொண்டு அடித்துள்ளனர்.
இதில் காயங்களுடன் மயங்கி விழுந்த உமைய பார்வதியை அப்பகுதியினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடையம் போலீசார் விசாரணை நடத்தி பன்னீர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தலைமறைவான நவஜோதிக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்