என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 97500"
- தரகம்பட்டி அருகே மது குடிக்க பணம் கேட்டு தந்தையை மகன் தாக்கியுள்ளார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர்.
கரூர்,
தரகம்பட்டி அடுத்த துாளிப்பட்டி, காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 60). இவரது மகன் முருகன் சம்பவத்தன்று பழனியாண்டியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பழனியாண்டி தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த முருகன் தகாத வார்த்தையால் பேசி இரும்பு கம்பியால் பழனியாண்டியை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனியாண்டியை மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து பழனியாண்டி கொடுத்த புகாரின்படி பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர்.
- தா.பழூர் அருகே வயலுக்கு சென்ற பெண்ணை தாக்கியுள்ளனர்
- இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி இன்பஜோதி (வயது 38). சம்பவத்தன்று இன்பஜோதி தனது வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது அருகிலுள்ள வயலில் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் மனைவி சித்ரா என்பவரை பொற்பதிந்தநல்லூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் துரையப்பன் (63), இவரது மகன் முருகன் (38) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை தட்டிக்கேட்ட இன்பஜோதியையும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இன்பஜோதியை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இதுகுறித்து இன்பஜோதி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- கடலூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது செய்யப்பட்டார்.
- ராஜலட்சுமியை கணவர் பாரதி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பாரதி (வயது 28). இவரது மனைவி ராஜலட்சுமி(வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. சம்பவத்தன்று ராஜலட்சுமி தனது கணவர் பாரதியிடம் 500 ரூபாய் பணம் கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ராஜல ட்சுமியை கணவர் பாரதி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பாரதி தனது மனைவியை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜலட்சுமி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கணவர் பாரதி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கணவர் பாரதியை போலீசார் கைது செய்தனர்.
- முன்விரோதத்தில் தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- ஜெகதீசன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.
மதுரை
திருப்பரங்குன்றம் கோட்டை தெருவை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் வேலுமணி (25). இவரது நண்பர்கள் பாலமுருகன், தெய்வேந்திரன், மருதுபாண்டி. இவர்கள் அடிக்கடி மெக்கானிக் ஷாப்பில் மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் மது அருந்துவது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த3 பேரும் மெக்கானிக் வேல் மணியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து வேலுமணி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகன், தேவேந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மருதுபாண்டியை தேடி வருகின்றனர்.
மதுரை தெப்பக்குளம் கேட்டலாக் ரோடு ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் (45). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இருள்ராஜ் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெகதீசனை வழிமறித்து இருள்ராஜ் பாட்டிலால் தாக்கி உள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜெகதீசன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு இருள்ராஜை கைது செய்தனர்.
- மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் உட்பட 3 ேபர் வந்து திடீரென்று அரசு பஸ்சை வழிமறித்தனர்.
- மோகன் குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கடலூர்:
அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய 3 பேரை ேபாலீசார் தேடி வருகிறார்கள். கடலூர் அடுத்த மேல் பூவாணிக்குப்பத்தை சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 40). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசுபஸ்சில் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தார். இந்த பஸ்சில் கண்டக்டராக ராமலிங்கம் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் உட்பட 3 ேபர் வந்து திடீரென்று அரசு பஸ்சை வழிமறித்தனர்.
பின்னர் பஸ் டிரைவர் மோகன் குமாரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த மோகன் குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அடையாளம் தெரியாத 3 ேபர் யார்? என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிகிச்சை பெற்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய நோயாளிகள் அலறி அடித்து ஓடினார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே விறகு போடுவதில் தகராறு ஏற்பட்டது.
இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. காயமடைந்த இருதரப்பின ரும் மேலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆத்திர மடைந்த ஒரு தரப்பைச் சேர்ந்த உறவினர் நேற்று மாலை மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து சிகிச்சை பெற்றுவரும் எதிர் தரப்பினரை கம்பி, ஆயுதம் கொண்டு தாக்கினார். இதனால் வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.
சம்பவ இடத்திற்கு வந்த துப்புரவு பணியாளர் மற்றும் காவலாளி அவர் களை தடுத்து கம்பிகளை பிடுங்கினர். கம்பியை பிடுங்கும்போது துப்புரவு தொழிலாளிக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை மருத்துவர் ஜெயந்தி மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் ெகாடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- கண்களில் மிளகாய் பொடியை தூவி அடி-உதை
- வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை மட்டங்கால் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் ரெங்கநாதன் (வயது 35). அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர்கள் வீரபாண்டி (30), முருகேசன் (25), இவர்களது நண்பர் ராஜ்குமார். ரெங்கநாதனுக்கும், வீரபாண்டி, முருகேசன் ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் வீரபாண்டி உள்பட 3 பேரும் ரெங்கநாதனை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று அழைத்துள்ளனர். இதை நம்பி அங்கு சென்ற ரெங்கநாதனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தாக்கினர். இதில் மயக்கம் அடைந்த ரங்கநாதனை அங்கேயே விட்டு விட்டு 3 பேரும் தப்பி சென்று விட்டனர். ரெங்கநாதனின் சத்தத்தை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் ரெங்கநாதனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில், கந்தர்வகோட்டை ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டி உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பாலமுருகன் மனைவியை மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது.
- போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 39).தொழிலாளி. இவருக்கும் இவரது அண்ணன் ராமனுக்கும் முன் விரோத தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று அண்ணன் தம்பிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராமன் மற்றும் அவருடன் வந்த 4 ேபர்கள் திடீரென்று பாலமுருகனை தாக்கினார்கள். இதனை தடுக்க சென்ற பாலமுருகன் மனைவி யை மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த பாலமுருகன் கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் ராமன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடந்து கொண்டிருந்போது ஏற்பட்ட வாய் தகராறால் கணவர் வெறிச்செயல்
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
திருச்சி,
திருச்சி பாலக்கரை தர்மநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெபமாலை ராஜ் (வயது 45). இவரது மனைவி ரேணுகாதேவி (41). இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இதில் அவரது நடத்தையில் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில் ரேணுகாதேவி உறையூர் மின்னப்பன் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெபமாலைராஜ், ரேணுகா தேவியின் கழுத்தின் இடது பகுதியில் பிளோடல் கிழித்து விட்டார். இதையடுத்து லேசான காயத்துடன் ரேணுகாதேவி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து ரேணுகா தேவி உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் ஜெபமாலை ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
- வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்- இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிறுவன் ஒருவன் பிடிபட்டான்.
புதுச்சேரி:
புதுவை மிஷன் வீதியை சேர்ந்தவர் ஆசிப் நசிர் பட் (39). இவரது சொந்த மாநிலம் காஷ்மீர்.
இவர் கடந்த 15 ஆண்டுகளாக புதுவையில் வசித்து வருகிறார். புதுவை - வில்லியனூர் மெயின் ரோட்டில் கடந்த 9 மாதமாக ஓட்டல் நடத்தி வருகிறார்.
இங்கு மேற்குவங்கத்தை சேர்ந்த ஷேக் ரகிமுதின் (21), அப்துல் ரசாக்கான் (19) ரூப் கான் (21) உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஷன் அலி (19) போலநாத் (26) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வில்லியனூர் பெரம்பை மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது உள்ளூரை சேர்ந்த சிலர் அவர்களை வழிமறித்து சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் அவர்கள் ஷேக் ரகி முதினை பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர்.
இதுகுறித்து ஆசீப் நசிர் பட் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்- இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கியவர்கள் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பதும், ஏற்கனவே மளிகை கடையை உடைத்து திருட முயன்ற வழக்கு, கொலைக்கு உதவி செய்வது உள்ளிட்டவற்றில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிறுவன் ஒருவன் பிடிபட்டான்.
அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே முதியவர் தாக்கப்பட்டார்.
- சேத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
சேத்தூர் வளையல் தெருவை சேர்ந்தவர் ஆணைக்குட்டி (65). இவர் விவசாய நிலங்களில் மாட்டுக்கிடை அமைத்து கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் அருகே உள்ள சிவக்காடு பகுதியில் மாட்டு கிடை அமைத்திருந்தார்.
நள்ளிரவு அங்கு ஆணைக்குட்டி காவல் பணி மேற்கொண்டிருந்த போது மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நீலமேகம், நாயகம் ஆகிய 2 பேர் வந்து தகராறு செய்து ஆணைக்குட்டியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மோட்டார் சைக்கிளை பக்கத்தில் ஒரு வீட்டருகே நிறுத்துவது வழக்கம்.
- சார்லஸ் மது அருந்துவதற்கு ஆன்றனி தாசனிடம் அடிக்கடி பணம் கேட்பாராம்.
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே கோணங்காடு அருகே வாரிவிளையை சேர்ந்தவர் ஆன்றனி தாசன் (வயது 40). இவர் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மோட்டார் சைக்கிளை பக்கத்தில் ஒரு வீட்டருகே நிறுத்துவது வழக்கம். ஆன்றனி தாசனின் உறவினர் சார்லஸ் (43).வெளி நாட்டில் வேலை பார்த்து வந்த சார்லஸ் தற்போது ஊரில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
சார்லஸ் மது அருந்துவதற்கு ஆன்றனி தாசனிடம் அடிக்கடி பணம் கேட்பாராம். ஆனால் ஆன்றனி தாசன் பணம் கொடுக்க மறுத்துள்ளார். அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆன்றனி தாசன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை சார்லஸ் கீழே தள்ளி விட்டாராம். இதையறிந்த ஆன்றனி தாசனின் மனைவி சகாய பிரபா (35), மகன் அஜேஸியுடன் (9) சென்று மோட்டார் சைக்கிளை தள்ளி விட்டாய்? என சார்லஸிடம் கேட்டார்.
இதில் ஆத்திரமடைந்த சார்லஸ் தகாத வார்த்தை யால் திட்டியதுடன் தாய்-மகனான சகாய பிரபா, அஜேஸ் ஆகியோரை தாக்கி மிரட்டல் விடுத்தார்.இதில் படுகாயமடைந்த 2 பேரும் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குளச்சல் போலீசார் சார்லஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்