search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99052"

    • சமயபுரத்தில் 17 வயது பயிற்சி நர்ஸ் திடீரென மாயமாகி உள்ளார்
    • போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் சமயபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 67). இவரது பேத்தியான 17 வயது சிறுமி ஒருவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி நர்சாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் விசாரித்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து ராஜாராமன் சமயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாயமான பயிற்சி நர்சை தேடி வருகின்றனர்.

    • இரு வேறு சம்பவங்களில் இரண்டு பேர் மாயமாகி உள்ளனர்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 50). இவர் ஆந்திரா மாநிலத்தில் ரயில்வே கூட்டுறவு வங்கியில், உதவியாளராக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த கதிரவன், கடந்த 19-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு மீண்டும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து, கதிரவன் மனைவி ஜெயலட்சுமி அளித்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், கரூர், வெங்கமேடு தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41) டிரைவர். இவரது மனைவி தீபா (40), கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில், வேலை செய்து வந்தார். கடந்த, 21-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற, தீபாவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சுரேஷ் வெங்கமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

    • நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை.
    • பதறிப்போன கலையரசின் பெற்றோர் பல இடங்களில் அவரை தேடி பார்த்தனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்.

    இவரது மகள் கலையரசி (வயது22). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கலையரசி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன கலையரசின் பெற்றோர் பல இடங்களில் அவரை தேடி பார்த்தனர். அவர் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து தாய் பூங்கொடி காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கலையரசியை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • 4-ம் தேதி வீட்டில் இருந்த மாணவன் காணவில்லை.
    • எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள கே.புதூரைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் மதன்குமார் (வயது18). இவர் சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 4-ம் தேதி வீட்டில் இருந்த மாணவன் காணவில்லை. இதனால் அவரை உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.

    • மதுரை அருகே வாலிபர் மாயமானார்.
    • குடும்ப தகராறு காரணமாக மனைவி, குழந்தைகளையும் விரட்டி விட்டார்.

    மதுரை

    மதுரை எம்.கே.புரம் தெற்கு சண்முகபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 37). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருணாதேவி(36). வேல்முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் மனைவியை குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டுக்கு விரட்டி விட்டார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அதிகாலை வேல்முருகன் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டை காலி செய்தார். அதன்பிறகு அவர் மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மனைவி அருணாதேவி கொடுத்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாயமான முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(63). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் கருப்பசாமி வீட்டிற்கு போன் செய்து திருவண்ணாமலை ரோட்டில் உள்ள செங்கல் சூளை அருகே முதியவர் ஒருவர் இறந்து கிடந்ததாகவும், அவருடைய உடல் சவக்கிடங்கில் உள்ளதாகவும், அது கருப்பசாமியா? என்பதை உறுதிப்படுத்துமாறும் தகவல் அளித்தனர்.

    உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அது கருப்பசாமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பசாமியின் மனைவி கலா ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டுக்கு திரும்புகிறேன் என்று கூறியவர் காணாமல் போனார்
    • இண்டர்வியூ சென்ற வாலிபரும் மாயம்.

    கரூர், 

    திருநெல்வேலி மாவட்டம், பண்ணகுடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40) . இவர் கரூர், முத்துவிநாயகர் கோவில் தெருவில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தார். கடந்த, 13ல் திருநெல்வேலிக்கு வருவதாக, மனைவி செல்வியிடம், போனில் தெரிவித்தார்ஆனால், ஆறுமுகம் திருநெ ல்வேலிக்கு செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த செல்வி, கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், வெங்கமேடு, கண்ணதாசன் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் நவீன்ராஜ் (வயது 25). பி.சி.ஏ., படித்துள்ளார். இவர் கடந்த, இன்டர்வியூவில் பங்கேற்க, திருச்சி சென்றார். ஆனால், அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து, தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

    • சிறப்பு வகுப்புக்கு சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி கிராமம் மூலகவுண்டன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பராஜ். இவரது மகன் கவியரசு (17).

    கவியரசு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் 11-ம் வகுப்புக்காக அவரை அந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    இது கவியரசுக்கு பிடிக்கவில்லை. தான் பழைய பள்ளியில் படிப்பதாக கூறினார். அதற்கு அவரது பெற்றோர் பிளஸ்-1 மட்டும் இந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு உன்னை பழைய பள்ளியில் சேர்த்து விடுவதாகவும் கூறினர்.

    இதனால் விருப்பமின்றி கவியரசு அந்த பள்ளியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வீட்டில் யாருக்கும் சொல்லாமல் ரெயில் ஏறி சென்னை சென்று விட்டார். பின்னர் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் கவியரசை அவரது பெற்றோர் மீட்டு வந்தனர்.

    அதன் பின்னர் பிளஸ்-1 பொதுத்தேர்வை கவியரசு எழுதி முடித்தார். அதன் பின்னர் பிளஸ்-2 சிறப்பு வகுப்புக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் சிறப்பு வகுப்புக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர் பள்ளியில் தொடர்பு கொண்டு கேட்ட போது உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை என்று கூறி விட்டனர்.

    இதனையடுத்து அவரது பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் காயத்திரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து வெங்கடேஷ் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரக்க ன்கோ ட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்க டேஷ். இவரது மனைவி காயத்திரி (வயது 22). இவர் வீட்டில் இருந்து வந்தார்.

    இவர்களுக்கு கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை வெங்கடேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். காயத்திரி குழந்தையுடன் வீட்டில் இருந்தார்.

    வெங்கடேஷ் வேலைக்கு சென்று விட்டு மதியம் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் காயத்திரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரது குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு வெளியே சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவி ல்லை.

    இது குறித்து வெங்கடேஷ் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள கரியப்பன அள்ளி பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளி செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    அதேபோல் வரகூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் பாப்பாரப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 2 மாணவிகளையும் தேடி வருகின்றனர்.

    • லிங்கமூர்த்தி- சினேகா தம்பதியருக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.
    • வீட்டில் இருந்த சினேகா திடீரென குழந்தையுடன் காணாமல்போய்விட்டார்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மருங்கூர் தோப்பு கொல்லை ஏரிமேட்டு தெருவை சேந்தவர் லிங்கமூர்த்தி. இவரது மனைவி சினேகா (24). இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று (19ம் தேதி) மாலை வீட்டில் இருந்த சினேகா திடீரென குழந்தையுடன் காணாமல்போய்விட்டார்.பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் அவரது கணவர் லிங்க மூர்த்தி முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரில் லிங்கமூர்த்தியின் தம்பி சபாபதி என்பவர் தனது மனைவி சினேகாவை குழந்தையுடன் கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் காணாமல் போன சினேகாவை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்.

    • கல்லூரி, கூலி தொழிலாளி மனைவி மாயம்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    லாலாப்பேட்டை அருகே, மேல சிந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். கூலி தொழிலாளி. இவரது மகள் ஹேமலதா (வயது 21), திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஹேமலதா, அதன் பிறகு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து, மகளை கண்டுபிடித்து தருமாறு, அசோக்குமார் லாலாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதேபோல், தோகைமலை அருகே, பாறைப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகேஸ்வரி (வயது 41). இந்நிலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் அதன் பிறகு வீட்டுக்கு திரும்பிவரவில்லை. இதுகுறித்து வெள்ளைச்சாமி அளித்த புகாரின் படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, நாகேஸ்வரியை தேடி வருகின்றனர்.

    ×