search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99728"

    ஒட்டன்சத்திரத்தில் மாமனாரை குத்திக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசபிள்ளை பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 49). இவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி கலைச் செல்வியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கலைச் செல்வி தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கலைச் செல்வி நடந்து சென்று கொண்டு இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த வேலுச்சாமி அவர் மீது மோதினார். இதனால் கலைச் செல்வி கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் கலைச் செல்வியின் தந்தை கருப்பணகவுண்டர் சம்பவ இடத்துக்கு வந்து மருமகன் வேலுச்சாமியை கத்தியால் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி தனது மாமனார் வைத்திருந்த கத்தியை பறித்து அவரையே குத்தினார்.

    படுகாயமடைந்த 2 பேரும் ஒட்டன்சத்திரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் கருப்பணகவுண்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.

    கொரடாச்சேரி அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    கொரடாச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள முசிறியத்தை அடுத்த திட்டாணிமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 35). இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

    இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் மாரியம்மாள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சேலத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவரை 2-வது திருமணம் செய்து திட்டாணிமுட்டத்தில் தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். வெற்றிவேல் வீட்டில் இருந்தபடியே தச்சு தொழில் செய்து வந்தார். வெற்றிவேலுக்கு மதுபழக்கம் இருந்தது. மேலும் அவர் தச்சுவேலை செய்து தருவதாக கூறி பலரிடமும் பணம் வாங்கி மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்தவர்கள் மாரியம்மாளின் வீட்டுக்கு வந்து பணம் கேட்டனர்.

    இது குறித்து மாரியம்மாள் தனது கணவர் வெற்றிவேலிடம் கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த மாரியம்மாள் சம்பவத்தன்று வீட்டுக்கு வெளியே வந்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதில் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாரியம்மாளின் உறவினர் கைலாசம் கொடுத்த புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொண்டி அருகே தகராறில் வாலிபரை குத்திக்கொலை செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    தொண்டி:

    தொண்டி அருகே உள்ள தெற்கு ஊரணங்குடியை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் ராமு (வயது32). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் உப்பூருக்கு சென்றார். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அவர் நின்றிருந்தபோது 2 லாரி டிரைவர்கள் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ராமு அவர்களை சமரசப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நெய்வேலி வடக்கு மேலூரைச் சேர்ந்த லாரி டிரைவர் சந்தோஷ்குமார் (45) என்பவர் ராமுவை அடித்ததாக தெரிகிறது. மேலும் லாரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ராமுவை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ராமு பலியானார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
    பெரம்பலூர் அருகே பணத் தகராறில் மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து தம்பியை படுகொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நக்கச்சேலம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருக்கு ராமதாஸ் (வயது 38), கோவிந்தராஜ் (36) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக ஊரின் அருகே 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதனை அவரது தந்தை இருவருக்கும் பிரித்து கொடுத்துள்ளார்.

    கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த அண்ணன், தம்பி இருவரும் பின்னர் ஊருக்கு வந்து அவர்களுக்குரிய நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். தற்போது கோடை காலம் என்பதால் கிணற்றில் போதிய தண்ணீர் இல்லை.

    இதனால் இருவரும் நிலத்திற்கு பொதுவான இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தனர். அதற்கான பங்கு தொகை ரூ.60 ஆயிரம் பணத்தினை தருமாறு தம்பி கோவிந்தராஜிடம், ராமதாஸ் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜ் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவு குடிபோதையில் ராமதாஸ், கோவிந்தராஜின் வீட்டிற்கு சென்று, ஆழ்துளை கிணறு அமைத்ததற்கான பணத்தை தருமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த கோவிந்தராஜூம் ராமதாசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த ராமதாஸ், மது பாட்டிலை உடைத்து கோவிந்தராஜின் கழுத்தை அறுத்தார். இதில் கோவிந்த ராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள், ஊர் பொது மக்கள் அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாக பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உயிரிழந்த கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    களக்காடு அருகே விவசாயியை வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தியை சேர்ந்தவர் பழனி (வயது 45). விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த துரைகுட்டி (30), செல்வம் (21), கார்த்திக் (23), சுடலைமுத்து (24). இவர்கள் 4 பேரும்  இரவில் தெருவில் நின்று கொண்டு பெண்கள், குழந்தைகள் மீது கற்களை வீசினார்களாம். இதனை பழனி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் பழனியை அரிவாளால் வெட்டினர். இதில் அவரது இடது கை நடுவிரல் துண்டானது. 

    மேலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கொலை முயற்சி வழக்குபதிந்து விசாரணை நடத்தி துரைகுட்டியை கைது செய்தனர். செல்வம், கார்த்திக், சுடலைமுத்து ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
    தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் இந்தக்கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பேரையூர்:

    சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டியைச் சேர்ந்தவர் அழகுசாமி. இவரது மகன் அழகுபாண்டி (வயது 35). இவர் கப்பலூரில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இதனால் மனைவி மற்றும் மகனுடன் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் வசித்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி அவரை விட்டுச் சென்றார். இதனால் மது பழக்கத்திற்கு அடிமையான அழகுபாண்டி சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தோப்பூர் கண்மாய்க்குள் குப்பை கிடங்கு அருகே அழகுபாண்டி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

    இதுபற்றி ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது அழகுபாண்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்தப்பகுதியில் மது பாட்டில்களும் கிடந்தன.

    இதனால் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதினர். கொலை செய்யப்பட்ட அழகுபாண்டி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தோப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அழகுபாண்டி (32) என்பவர் சம்பவத்தன்று கொலையான அழகுபாண்டியுடன் மது அருந்தியது தெரியவந்தது.

    அவரை பிடித்து விசாரித்தபோது, மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அழகுபாண்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் தோப்பூர் அழகுபாண்டியை கைது செய்தனர்.

    மதுரையை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் தந்தை கம்பால் தாக்கப்பட்டார்.

    பேரையூர்:

    மதுரையை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வன்னிவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 50). இவரது மகன் மணிகண்டன், அதே பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் மகள் ஜோதியை காதல் திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பழனிகுமாரின் அண்ணன் செல்லையா கேட்கச் சென்றார். மணிகண்டனின் தந்தை விஜயனை சந்தித்து அவர் இதுபற்றி கேட்டார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் செல்லையா ஆத்திரமடைந்து கம்பால் தாக்கியதாக டி.கல்லுப்பட்டி போலீசில் விஜயன் புகார் செய்தார். மேலும் அவர் காயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்குட் பட்ட டி.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ஞானகுரு. இவரை இடத்தகராறு காரணமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த இன்னாட்சி மகன்கள் முத்துக்குமார் (25), ராஜன், சார்லஸ், சதீஷ்குமார் ஆகியோர் கல்லால் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ஞானகுரு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேடசந்தூர் அருகே மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சிவனேசன் (வயது 45). இவருக்கும் விருதுநகரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகள் உமா தேவி (வயது 40) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கூலித் தொழிலாளியான சிவனேசன் அடிக்கடி வேலை வி‌ஷயமாக பல ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். நேற்று உமா தேவி வீட்டின் மாடி பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தனது மனைவிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் அதனால் இறந்து விட்டதாக சிவனேசன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஆனால் போலீசார் விசாரணையில் சிவனேசன் முன்ணுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்துள்ளார். எனவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தனது மனைவியை அடித்துக் கொன்றதை சிவனேசன் ஒப்புக் கொண்டார்.

    கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று கோபமடைந்த சிவனேசன் உமா தேவியை அடித்து தாக்கியுள்ளார். மேலும் படியில் இருந்து விழுந்த அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சிவனேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தளி அருகே வடமாநில வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தேன்கனிக்கோட்டை:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சபீத்பசுமாதிரி (வயது 26), பிரதீப்போரா (32). இவருடைய சகோதரியை தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சபீத்பசுமாதிரி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சபீத்பசுமாதிரி, பிரதீப்போரா ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கோட்டரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். தனது தங்கையை அசாமில் விட்டு வந்தது தொடர்பாக பிரதீப்போரா, சபீத்பசுமாதிரியிடம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த பிரதீப்போரா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சபீத்பசுமாதிரியை சரமாரியாக குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து ஓடி வந்தனர். இதைப் பார்த்த பிரதீப்போரா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சபீத்பசுமாதிரியை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சபீத்பசுமாதிரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரதீப்போராவை வலைவீசி தேடி வருகின்றனர். வடமாநில வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வாசுதேவநல்லூர் அருகே பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் இளம்பெண்ணை அவதூறாக பேசியதால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி இனிதா (வயது28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியுள்ளது. சுரேஷ் விவசாயம் செய்து வருகிறார். இனிதா தனது வீட்டருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கடை அருகே உள்ள பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் இனிதாவிடம் தகராறு செய்தார். அப்போது அவரை அவதூறாக பேசி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த இனிதா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி வாசுதேவநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து இனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பிரிந்து சென்ற மனைவியை பார்க்கச் சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள காஞ்சரம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவரின் மகள் அகிலேஸ்வரி என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு அகிலேஸ்வரி தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று தனது மனைவியை பார்ப்பதற்காக கண்ணன், மாமனார் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனார் கண்ணன், இவரது மனைவி செல்வி (39), உறவினர்கள் பஞ்சு (50), சத்யா (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    வந்தவாசி அருகே தகராறில் தாக்கப்பட்ட மகனை காப்பாற்ற முயன்ற தாய் வெட்டி கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி காசியம்மாள் (வயது 70). பலராமன் கடந்த மாதம் இறந்து விட்டார். தனது தந்தை சாவிற்கு உறவினர்கள் யாரும் சரிவர வரவில்லை என்று அவரது இளைய மகன் ரவி போதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தாரம். அப்போது அந்த வழியாக வந்த ரவியின் அண்ணன் பெருமாளின் மகன் அரிவரசன் ரவியிடம் ஏன் உறவினர்களை ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிறாய் என தட்டி கேட்டுள்ளார்.

    இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரிவரசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை வெட்டி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காசியம்மாள் தடுக்க முயன்றுள்ளார்.

    அப்போது அவர் காசியம்மாளையும் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்து அங்கேய அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் அங்கிருந்து அரிவரசன் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவலறிந்த வந்தவாசி டி.எஸ்.பி. அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் உடலை மீட்டு வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய அரிவரசனை தேடி வருகின்றனர்.

    ×