search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweets"

    • மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
    • இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

    நள்ளிரவில் பிரதான நகரங்களில் தெருக்களை ஆக்கிரமித்த ரசிகர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் இந்தியாவின் வெற்றியை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. நிலையத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் பரிமாறப்பட்டன.

    இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா தெருவில் இறங்கி தேசியக்கொடியை அசைத்து ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் உத்தரப் பிரதேசம் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களிலும் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளன. 

    • ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
    • பாடப்பு த்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தில் பள்ளி களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது . பின்னர் வெயிலின் தாக்கத்தால் 10-ம் தேதி ( இன்று) பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .

    அதன்படி கோடை விடுமுறை முடிந்து 2 மாதங்களுக்குப் பிறகு இன்று (திங்கட்கிழமை) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி இன்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர்.

    அப்போது பள்ளி மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு முதல் நாள் சந்தோச இனிப்புடன் தொடங்கும் வகையில் அவர்களுக்கு சர்க்கரை பொங்கல், கல்கண்டு போன்றவை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவர்கள் இன்முகத்தோடு சிரிப்புடன் அதை வாங்கி கொண்டு பள்ளிக்கு உள்ளே சென்றனர்.

    மேலும் 2 மாதங்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததால் பழைய நிகழ்வுகளை மனம் விட்டு பேசினர்.

    தொடர்ந்து 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது. முதல் நாளிலே மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப்பு த்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றை ஆர்வத்துடன் மாணவர்கள் வாங்கி படித்தனர். தொடர்ந்து இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடந்து வருகிறது.

    • அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேக்கிரி ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் முதற்கட்டமாகவும், ஒரேகட்டமாகவும் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நெல்லையில் பிரசாரம் மேற்கொண்டார்.

    நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். ராகுல் காந்தியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டார்.

    முன்னதாக, பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்திய ராகுல் காந்தி, சாலையை கடந்து பேக்கிரி ஒன்றுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்புகளை வாங்கினார்.

    பிறகு, பேக்கிரி ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ராகுல் காந்தி, தான் வாங்கிய இனிப்பை வழங்கி மகிழ்ந்தநார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    • சுவீட்ஸ் கடைகளில் செயற்கை ரசாயனம் பூச்சு கலந்து இனிப்புகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
    • அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து 12 கடைகளில் 15 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    திண்டுக்கல்:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் மொத்தமாக ஆர்டர் எடுத்து சுவீட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சில கடைகளில் செயற்கை ரசாயனம் பூச்சு கலந்து இனிப்புகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், லாரன்ஸ் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் நிலையம், திருச்சி சாலை, பழனி சாலை பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அதிக அளவில் செயற்கை ரசாயன பூச்சு கலந்து சுவீட்டுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து 12 கடைகளில் 15 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது .தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். மேலும் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ரசாயன செயற்கை பூச்சு கலந்து இனிப்புகளை வாங்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • நெல்லை டவுன் பகுதிகளில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த லாலா கடைகள் இயங்கி வருகின்றன.
    • உளுந்துடன் திராட்சை பழம் சேர்த்து அரைத்து, கிரேப்ஸ் ஜாங்கிரி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    பலகாரங்கள் விற்பனை

    தீபாவளி என்றதுமே சட்டென்று ஞாபகத்திற்கு வருவது பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் தான். தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து உடல் முழுவதும் எண்ணை தேய்த்து குளித்துவிட்டு புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பதில் குழந்தைகளுக்கு அவ்வளவு ஆசை.

    அதற்கு அடுத்தப்படியாக தீபாவளியில் இடம்பெறுவது பலகாரங்கள் தான். தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே, லாலா கடைகளுக்கு மவுசு கூடிவிடும். இந்த ஆண்டு தீபாவளியையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள லாலா கடைகளில் தீபாவளி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    புது ரகங்கள்

    நெல்லை டவுன் பகுதிகளில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த லாலா கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், பாரம்பரியம் வாய்ந்த நெல்லையப்பர் கோவில் ரத வீதியில் பல கடைகள் நூற்றாண்டுகளை கடந்து 4 தலைமுறையாக இனிப்பு பலகார விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கடைகளில் தற்போது மக்களை கவரும் வகையில் பல புது ரக இனிப்பு பலகாரங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக கிரேப்ஸ் ஜாங்கிரி என்ற புது இனிப்பு பலகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதாவது வழக்கமாக ஜாங்கிரி என்றாலே உளுந்து அரைத்து செய்வார்கள். ஆனால் இதில், உளுந்துடன் திராட்சை பழம் சேர்த்து அரைத்து, கிரேப்ஸ் ஜாங்கிரி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அசத்தலான அல்வா

    மேலும் கேரட் அல்வா, பூசணி விதை அல்வா, பால் அல்வா என அல்வாக்களிலும் பல ரகங்களை நெல்லை கடைக்காரர்கள் அறிமுகப்படுத்தி அசத்தி உள்ளனர்.

    நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு லாலா கடைகளில் இனிப்பு பலகாரங்கள் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அவற்றுக்கு அமோக வரவேற்பு உள்ளது. அதேபோல் அதிரசம், சீடை, கை சுற்றல் முறுக்கு, ஆகிய மிகவும் சிறப்பு வாய்ந்த பலகாரங்கள் விற்பனையும் தொடங்கி உள்ளது. இந்த நவீன காலத்தில் பேக்கரி, டீ ஷாப், கபே என இனிப்பு பலகார கடைகளுக்கு பல புது பெயர்கள் சூட்டப்பட்டாலும் கூட பாரம்பரிய பலகாரங்கள் தயாரிக்கும் கடைகளுக்கு மவுசு குறையவில்லை.

    கை சுற்றல் முறுக்கு

    எந்திரமயமாகி போன இந்த காலத்தில், பெரும்பாலான ஊர்களில் எந்திரங்கள் மூலமாகவே முறுக்கு சுடுகின்றனர். ஆனால் பாளை பகுதிகளில், தற்போது வரை கை சுற்றல் முறுக்கு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. கையால் சுற்றி போடப்படும் முறுக்கு, பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் பெருமாள் மேலரதவீதியில் கை சுற்றல் முறுக்கு போடும் பணியில் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கூட்டமாக அமர்ந்து இந்த முறுக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வியாபாரி பேட்டி

    இதுகுறித்து பாளை பெருமாள் மேலரதவீதியில் உள்ள கடை உரிமையாளர் கூறியதாவது:-

    தீபாவளியை முன்னிட்டு முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் மொத்தமாக ஆர்டர் வந்து கொண்டிருக்கிறது. தல தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு, மணப்பெண்ணின் வீட்டார் இனிப்பு பலகாரங்கள் அதிக அளவில் வாங்கி சீர் கொடுப்பர். எனவே, இனிப்பு பலகாரம் தயார் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து பலகாரங்களுக்கும் தலா ரூ.1 விலை கூட்டியுள்ளோம். ஏனெனில் கடந்த ஆண்டு 25 கிலோ புழுங்கல் அரிசி ரூ.850 ஆக இருந்தது. தற்போது அது ரூ.1,150 ஆக உயர்ந்துள்ளது. கியாஸ் விலையும் அதிகமாகி விட்டது.

    ஆர்டர்கள் குவிகிறது

    இந்த தீபாவளிக்கு கை சுற்று முறுக்கு ஒன்று ரூ.6-க்கு விற்பனை செய்கிறோம். அதிரசம் ரூ.6, தேன்குழல் முறுக்கு ரூ.7, அச்சு முறுக்கு, தட்டை ரூ.5, முந்திரி கொத்து ரூ.8, நெய் உருண்டை ரூ.7 என்ற விலையில் விற்பனை செய்கிறோம்.

    இதுதவிர வளைகாப்பு செய்யும் கர்ப்பிணி பெண்களுக்காக சீர் முறுக்கு தயார் செய்கிறோம். இது ஒரு முறுக்கு ரூ.200 என்ற விலையில் விற்கிறோம். ஒரு தாம்பூலம் அகலத்தில் இந்த முறுக்கு இருக்கும். வளைகாப்பு முடிந்ததும் கர்ப்பிணியின் மடியில் கட்டி இதனை அனுப்புவார்கள்.

    மற்ற முறுக்கு 100 எண்ணம் சுற்றுவதற்கு ஆகும் மாவின் அளவை கொண்டு 2 சீர் முறுக்கு செய்வோம். இந்த ஆண்டு அதிக அளவில் ஆர்டர்கள் வந்துள்ளன. மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயங்கொண்டம் முத்துச்சேர்வார்மடம் ஊராட்சியில்ரூ.1.50 லட்சம் செலவில் பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு
    • ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ரமேஷ் வழங்கினார்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மீன்சுருட்டி அருகே உள்ள முத்துச்சேர்வார்மடம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக பாரதி ரமேஷ் உள்ளார். இவர் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள், பம்பு ஆப்ரேட்டர்கள், புது வாழ்வு திட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் புத்தாடை, இனிப்பு வழங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டு ரெட்டிப்பாளையம், முக்குளம், நல்லிதோப்பு முத்துச்சேர்வார்மடம், சம்போடை, சுண்டிபள்ளம், கங்கவடங்கநல்லூர் உள்ளிட்ட 9 வார்டுகளில் பணிபுரிந்து வரும் 50 பணியாளர்களுக்கு அவர் தனது சொந்த செலவில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ரமேஷ் தனது சொந்த செலவில் 4வது ஆண்டாக புத்தாடை, இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் செய்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தனது சொந்த முயற்சியினால், வீடு வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் முத்துச்சேர்வார்மடம் ஊராட்சியில் வாழ்ந்து வரும் 3 பழங்குடி இனத்தவர்களுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.

    இந்த விழாவில் துணைத் தலைவர் அறிவழகன் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வைர வடிவத்துடன் இருக்கும் அதன் சின்னம் தனித்து நிற்கும் ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு.
    • இந்த இனிப்பு உட்கொள்வது ஒருவரின் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது என்றும் நம்பப்படுகிறது.

    உலகளவில் இருக்கும் சிறந்த உணவு அனுபவங்களைக் கண்டறியும் ஆன்லைன் வழிகாட்டியான பிரபல டேஸ்ட்அட்லாஸ் என்கிற அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில், உலகளவில் உள்ள சிறந்த 50 இனிப்புகளின் பட்டியலை டேஸ்ட்அட்லாஸ் வெளியிட்டது.

    இதில், இந்தியாவின் பிரபல இனிப்புகளான காஜூ கத்லி மற்றும் ரச மலாய் இடம் பெற்றுள்ளன. இதில், ரச மலாய்க்கு 31வது இடமும், காஜூ கத்லிக்கு 41வது இடமும் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

    இந்தியாவின் ஒரு பிரியமான இனிப்பாக கருதப்படும் ரச மலாய், வைட் க்ரீம், சர்க்கரை, பால் மற்றும் ஏலக்காய் சுவை கொண்ட பன்னீர் சீஸ் கொண்டு தயாரிக்கப்படும் கலவையாகும். இத்துடன், பாதாம், முந்திரி மற்றும் குங்குமப்பூவின் நறுமணத் தொடுகை ஆகியவற்றையும் இனிப்பில் சேர்த்து கூடுதல் சுவை அளிக்கிறது. மேற்கு வங்காளத்தில் இருந்து உருவான ரச மலாய் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளில் பிரபலமாகும்.

    இதேபோல், காஜூ கத்லி இனிப்பு. பண்டிகை காலங்கள் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் பலராலும் கவர்ந்திழுக்க கூடிய இனிப்புகளில் ஒன்று காஜூ கத்லி. 

    காஜூ பர்பி என்று அழைக்கப்படும் இந்த இனிப்பு வகை, முந்திரி பருப்பு, சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் நெய், வெண்ணெய் ஆகியவற்றின் கவலையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

    வைர வடிவத்துடன் இருக்கும் அதன் சின்னம் தனித்து நிற்கும் ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு வகையாகும்.

    இந்திய கலாச்சாரத்தில், கஜு கட்லியை உட்கொள்வது ஒருவரின் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது என்றும் நம்பப்படுகிறது.

    ராச மலாய் மற்றும் காஜு கத்லி ஆகிய இனிப்புகள் பட்டியலில் தங்கள் இடங்களை சரியாகப் பெற்றிருந்தாலும், முதல் மூன்று இடங்களில் க்ரீப்ஸ், பாம்போகாடோ மற்றும் கியூசோ ஹெலடோ ஆகிய இனிப்புகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டினர்
    • மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அ.தி.மு.க 52-ம் ஆண்டு தொடக்க விழா மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் க சண்முகம் செய்திருந்தார்.

    தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க கட்சிக்கொடியேற்றி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டினர்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் டி.கே.டி தேவராஜ், பாசறை மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு, மீனவர் அணி செயலாளர் விஷாந்த், பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், எம்.ஜி.ஆர் மன்ற நகர தலைவர் ஜெயராமன், அம்மா பேரவை செயலாளர் திவாகர், அவைதலைவர் சிவக்குமார், வர்த்தக அணி செயலாளர் பூக்கடை ஸ்ரீ, அம்மா பேரவை துணைத் தலைவர் சாந்தகுமார், கூட்டுறவு முன்னாள் தலைவர் சங்கர், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ராஜேஷ், பிரபு, நகரமன்ற உறுப்பினர் லயோலோ குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சம்சிகாபுரத்தில் அ.தி.மு.க. கொடியினை பாறைப்பட்டி கிளைச்செயலாளர் சுபாஷ்ராம் ஏற்றினார்.
    • தொடர்ந்து பொதுமக்களுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரவிச்சந்திரன் இனிப்பு வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு குருவிகுளம் வடக்கு ஒன்றியம் சம்சிகாபுரத்தில் அ.தி.மு.க. கொடியினை பாறைப்பட்டி கிளைச் செயலாளர் சுபாஷ்ராம் ஏற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரவிச்சந்திரன் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் காரிச்சாத்தான் முன்னாள் ஊராட்சி செயலாளர் முத்தையா, நடராஜன், திருநாவுக்கரசு, புதுச்சுப்புலாபுரம் கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தர்மராஜ், பிரித்விராஜ், கார்த்திகேயன், விக்னேஷ்வரன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் விஜயராணி, ஜெயராம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது.
    • இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள்.

    நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது. காரசாரமான உணவுகளை விட நாவிற்கு தித்திப்பூட்டும் இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள். தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் நாட்டின் மற்ற பகுதியில் வசிப்பவர்களும் சுவைக்க தூண்டும் அளவிற்கு ருசி மிகுந்தவை. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...

    கொழுக்கட்டை:

    அரிசி மாவு, வெல்லம், தேங்காய் கலந்து நீராவில் வேகவைக்கப்படும் இது அனைத்து தரப்பினரும் விரும்பும் இனிப்பு பலகாரமாக உள்ளது. கொழுக்கட்டையில் பல வகைகள் இருக்கின்றன. இனிப்பு மட்டுமின்றி காரமாகவும் இதனை தயார் செய்து ருசிக்கலாம்.

    மைசூர் பாக்:

    கர்நாடக மாநிலம் மைசூருவில் தயாராகும் இது அதன் பெயரையும் தாங்கி நிற்கிறது. உளுந்தம் பருப்பு, நெய், சர்க்கரை போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இது நாவில் பட்டவுடன் கரைந்துவிடும் தன்மையுடையது. கர்நாடகா மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் இந்தியர்கள் அறிந்திருக்கும் இனிப்பு வகைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அரசர் காலத்தில் இருந்தே அதன் தரம், ருசி மாறாமல் இன்றளவும் சுவைக்கப்படுகிறது.

    உன்னியப்பம்:

    கேரளாவில் பிரபலமான இனிப்பு வகையாக விளங்குகிறது. அரிசி மாவு, வாழைப்பழம், வெல்லம், வறுத்த எள், தேங்காய் துண்டுகள், ஏலக்காய் பொடி போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் இது ஒவ்வொரு வீடுகளிலும் ருசிக்கப்படும் சிற்றுண்டியாக விளங்குகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பரிமாறப்படும் இனிப்பு வகையாக கருதப்படுகிறது.

    ஒப்பாட்டு:

    கர்நாடகாவில் தயாரிக்கப்படும் இது பூரான் போளி என்றும் அழைக்கப்படுகிறது. கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல் போன்றவற்றின் கலவையில் இது உருவாகிறது. போளி வகையிலேயே மாறுபட்ட சுவை கொண்டது. இதனை இனிப்பு பிரெட் என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் திரு விழாக்கள், வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளின்போது இது பரிமாறப்படுகிறது.

    ஜாங்கிரி:

    உளுந்தம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை இது. அதனை நன்றாக வறுத்து பொடித்து சர்க்கரை பாகில் ஊறவைத்து தயாரிக்கப்படுகிறது. மெல்லிய இழைகளாக அச்சுக்களில் வார்க்கப்படும் இது ஆரஞ்சு நிற சாயலில் காட்சி அளிக்கும். தித்திக்கும் இனிப்பு பண்டங்களை விரும்புபவர்கள் ஜாங்கிரியை தவிர்க்கமாட்டார்கள்.

    கடலை மிட்டாய்:

    தமிழ்நாட்டின் பிரபலமான தின்பண்டமாக விளங்கும் கடலை மிட்டாய், வறுத்த வேர்க் கடலை, வெல்லம் சேர்த்து செய்யப்படுகிறது. மொறுமொறுப்பான, மிதமான இனிப்பு சுவை கொண்டது.

    கேசரி:

    ரவை, நெய், சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பு வகையை குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் ருசிப்பார்கள்.

    பூதரெகுலு:

    ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இது, அரிசி மாவு, நெய் மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படுகிறது. காகித இழை போல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் உலர் பழங்களும் சேர்க்கப்படும். உலர் பழங்கள் சேர்க்கப்படுவதால் இது சத்தான இனிப்பு பொருளாக அறியப்படுகிறது.

    • நாகையில் உள்ள புதேவாலயம், கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுவிட் வழங்கி கொண்டாடினார்.
    • மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி நாகூர் நாயகன் நேசபாசறை என்ற அமைப்பை சேர்ந்த ஹாஜா சம்சுதீன் சாகிப் என்ற இஸ்லாமியர் மீலாது நபியை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடும் வகையில் நாகப்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள புனித லூர்து அன்னை தேவாலயம், புகழ்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம், பாப்பாகோவில் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தர்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு சுவிட் கேக் வழங்கி கொண்டாடினார்.

    மீலாது நபி பெருவிழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமியர் ஒருவர் கேக் வழங்கி கொண்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது.

    • சாக்லெட் சுவையில் இருக்கும் பொருட்களைத் தான் குழந்தைகள் முதலில் தேர்வு செய்வார்கள்.
    • வீட்டிலேயே ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

    சாக்லேட் ஐஸ்கிரீம், சாக்லேட் கேக், சாக்லேட் மில்க் ஷேக் என எதனை தேர்ந்தெடுத்தாலும் அதில் சாக்லெட் சுவையில் இருக்கும் பொருட்களைத் தான் குழந்தைகள் முதலில் தேர்வு செய்வார்கள். அதனால் பல அம்மாக்களும் சாக்லேட் செய்வது சுலபமாக இருந்தால் அதனை வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாமே என்று நினைப்பார்கள். வாங்க நாம இன்றைக்கு கேரமல் சாக்லேட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சர்க்கரை - 200 கிராம்

    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் (உப்பு இல்லாதது)

    பிரஷ் கிரீம் -கப்

    உப்பு - 1 சிட்டிகை

    மில்க் சாக்லெட் - 400 கிராம்

    கார்ன் சிரப் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    (குறிப்பு கரண்டிக்கு பதிலாக சிலிக்கான் ஸ்பாட்சுலாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்).

    ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் சர்க்கரையை கொட்டி மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும். சிறிது நேரத்தில் சர்க்கரை உருகி கேரமலாக மாற ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதில் பிரஷ் கிரீம் மற்றும் அரை சிட்டிகை உப்பு கலந்து தனியாக வைக்கவும்.

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். மற்றொரு சிறிய பாத்திரத்தில் 250 கிராம் மில்க் சாக்லெட்டை போட்டு. அதை தண்ணீர் இருக்கும் பாத்திரத்தின் உள்ளே வைக்கவும். தண்ணீரின் வெப்பத்தால் சாக்லெட் உருக ஆரம்பிக்கும். இதை உடன் பாயிலிங் முறை" என்று குறிப்பிடுவார்கள்.

    சாக்லெட் முழுவதுமாக உருகியதும், அதனுடன் கார்ன் சிரப் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் இந்தக் கலவையை இரண்டு பங்காக பிரித்துக்கொள்ளவும்.

    ஒரு செவ்வக வடிவ பாத்திரத்தின் உள்ளே பட்டர் பேப்பரை வைக்கவும். அதன் மீது உருக்கி வைத்துள்ள ஒரு பங்கு மில்க் சாக்லெட்டை பரவலாக ஊற்றவும். அதற்கு மேல் கேரமல்லை ஊற்றி தடவ வேண்டும். பின்னர் மீண்டும் அதன் மேல் மற்றொரு பங்கு மில்க் சாக்லெட்டை ஊற்றி பரப்பி விடவும். இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும்.

    சாக்லெட் சற்று கெட்டியாகி இருக்கும். அதை 15 அங்குல அகலம் கொண்ட துண்டுகளாக வெட்டி எடுத்து. 30 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். மீதம் இருக்கும் 150 கிராம் மில்க் சாக்லெட்டை மீண்டும் டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக் கொள்ளவும்.

    இப்போது குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் சாக்லெட் துண்டுகளை வெளியே எடுக்க வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக உருக்கிய சாக்லெட்டில் தோய்த்து, பட்டர் பேப்பரில் வரிசையாக அடுக்கி வைக்கவும். பின்னர் மீண்டும் அதை குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வரை வைத்து எடுக்க வேண்டும். இப்போது கேரமல் நிறைந்த சுவையான சாக்லெட்டுகள் தயார்.

    இதன் மீது தங்க நிற ஜரிகை காகிதம் ஒட்டி, நண்பர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.

    ×