search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு"

    • முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
    • போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர்.

    பெரம்பலூர் :

    போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில், போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 10 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

    • வருகிற 30-ந்தேதி முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடக்கிறது.
    • தங்களது குறை களுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி தீர்வு காணலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் வருகிற 30-ந்தேதி மாலை 4.30 மணிக்கும் மற்றும் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாலை 5.30 மணிக்கும் மாவட்ட கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின், ஒருங்கி ணைந்த கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    இதில் சுயதொழில் வாய்ப்புகள் குறித்து பல்வேறு துறை அலுவ லர்கள் விளக்கி பேசுவர். எனவே ஆர்வமுள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர், சார்ந்தோர், தற்போது ராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தி னர் தங்களது குறை களுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி தீர்வு காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்கள் பெறப்பட்டது
    • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை அறிவுறுத்தப்பட்டு உள்ளது

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவ ரத்தை அறிவுறுத்தப்பட்டு உள்ளது .

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து அவர் கவின்மிகு தஞ்சை இயக்கம், அரசினர் மேல்நிலைப்பள்ளி திருமங்கலகோட்டை, கீழையூர், அறகானூயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை முனைவர் சதீஷ்குமார் ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது மற்றும் தலா ரூ 1,00,000 -க்கான காசோலை வழங்கினார்.

    பின்னர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில முதியோர்கள் நலன் பாதுகாப்பில் இளைய சமுதாயத்தினரின் பங்கு என்ற தலைப்பில் நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பெற்றுக்கொண்டார்.
    • கலெக்டரிடம் 300 மனுக்களையும் சிவபத்மநாதன் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் பல்வேறு ஒன்றியம், நகரம், பேரூர்களில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது.

    அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பெற்றுக்கொண்டார். அதில் பொது மக்களின் கோரிக்கைகளான முதலியார்பட்டி ஊராட்சி இந்திராநகர், வாகைகுளம், கடையம் பெரும்பத்து ஊராட்சி சபரி நகர் பகுதியைசேர்ந்த பொதுமக்கள் வழங்கிய மனுவில் பகுதிநேர ரேஷன் கடை வேண்டியும், அங்கபுரம் பொதுமக்கள் புதிய ரேஷன் கடை கட்டிடம் வேண்டியும் மற்றும் பள்ளி நேரங்களில் பள்ளி மாணவ -மாணவிகள் செல்ல குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வசதி வேண்டியும், கடையம் ஒன்றியத்தில் மேற்கு பகுதியில் வனவிலங்குகளால் விவசாய நிலங்களில் ஏற்படுகிற பாதிப்பை தடுக்க கோரியும், கடையம் முதல் ராமநதி அணை வரை செல்லும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாலையை சீர் செய்யவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மின்மோட்டார் வாகனம், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை வேண்டியும் பொதுமக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுத்த 300 மனுக்களை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து வழங்கினார்.

    • கும்பரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரக் கோரி மேலாண்மைக்குழுவினா் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • 2010-ம் ஆண்டில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், கும்பரம் அரசு உயர்நிலை பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திரா, துணை தலைவர் தீபா ஆகியோர் முன்னிலையில் மாண வர்களின் பெற்றோர் ராமநாதபுரத்தில் கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம், கும்பரம் அரசு உயர்நிலை பள்ளியில் 180 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போ தைய அரசு, மாண வர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள், சலுகைகளால் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 2 மடங்காக அதிகரித்து தற்போது 400 மாணவர் படித்து வருகின்றனர்.

    கடந்த 2010-ம் ஆண்டில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது கட்டப்பட்ட 4 வகுப்பறை கட்டிடங்களே இன்னும் உள்ளது.

    மேலும் இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடங்கள் நடத்தப்ப டுவதால் தனித்தனியாக கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகிறது. இடநெருக்கடியால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மரத்தடியில் பாடம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர் பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை ( செவ்வாய்க்கிழமை) தஞ்சை கோர்ட்டு சாலையில் உள்ள நகரிய செயற்பொ றியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

    எனவே தஞ்சை நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர் எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம் ,மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி ,நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர் ,பழைய வீட்டு வசதி வாரியம், காந்திஜி ரோடு, மருத்துவக் கல்லூரி ரோடு, நீலகிரி, மானோஜிபட்டி, ரகுமான் நகர், ரெட்டிபாளையம் ரோடு, சிங்கப்பெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேல வெளி பஞ்சாயத்து, தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதா கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கட நகர், இனாத்துகான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய இடங்களை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கணவர் மூர்த்தியின் பிணம் வனப்பகுதியில் உடம்பில் குண்டு காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • எனது கணவரை சுட்டு கொன்ற கும்பலை சேர்ந்தவர் அடிக்கடி தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை, குறிப்பாக காட்டுப்பன்றிகளை வேட்டை ஆடுவார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காக்கம் பாடி மலை கிரா மத்தை சேர்ந்த மெய்யன் மகன் மூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், மூர்த்தி ஆடு களுக்கு இலை வெட்டுவதற்காக வனப்பகுதிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் மூர்த்திக்கு அடிக்கடி வலிப்பு வருவது வழக்கம். இதனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று அவரது வீட்டினர் தேடி வந்தனர்.

    இதனிடையே அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஏற்காடு போலீசார் மூர்த்தி உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதனிடையே சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பின்னர் மூர்த்தி கொலை செய்யப்பட்டதாகவும், அவரை 8 பேர் கொண்ட கும்பல் சுட்டு கொன்றுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் ஏற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் மூர்த்தியின் மனைவி மணிமேகலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்கள் வீட்டில் 10 ஆடுகள் வளர்த்து வருகிறோம். என் கணவர் தினமும் காட்டிற்கு சென்று ஆடுகளுக்கு இலை தழைகளை வெட்டி எடுத்து வருவார். கடந்த 18-4-2023 அன்று வழக்கம் போல என்னுடைய கணவர் மற்றும் வேலு என்பவர் மேய்ச்சலுக்கு சென்றனர். ஆனால் அதன் பின்னர் என் கணவர் மூர்த்தி வீடு திரும்பவில்லை.

    இதை அடுத்து 19-4-2023 அன்று காலை முதல், என்னுடைய உறவினர்களுடன் சேர்ந்த என் கணவரை தேடினேன். அப்போது, கணவர் மூர்த்தியின் பிணம் வனப்பகுதியில் உடம்பில் குண்டு காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று, தலையிலும் விலாவிலும் குண்டு அடிபட்ட என் கணவரின் உடலை பார்த்தோம்.

    பின்னர் இதுபற்றி ஏற்காடு போலீஸ் நிலையத்தில் கூறினேன். அங்கு இருந்த போலீஸ் அதிகாரி உண்மைக்கு புறம்பான எதை எதையோ எழுதிக் கொண்டு என்னிடமும், வேலு மற்றும் வேறு சில சாட்சியிடமும் கையொப்பம் வாங்கிக் கொண்டனர்.

    இது மட்டுமன்றி வேறு சில வெற்று காகிதங்களில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு பின்னர் தேவைப்படும் என்று சொன்னார். அந்த நேரத்தில், என் கணவரை சுட்டு கொன்ற கள்ளத் துப்பாக்கி வைத்திருக்கும் கும்பல் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்தனர்.

    உடனே என்னை போலீஸ் அதிகாரி சரிமா நீ வீட்டுக்கு போ, நான் பார்த்துக் கொள்கிறேன், உன் கணவர் மூர்த்தியின் கொலைக்கு காரணமானவர்களுக்கு நான் உரிய தண்டனை வாங்கி தருகிறேன் என்று கூறி எங்களை போலீஸ் நிலையத்திலிருந்து விரைவாக அனுப்பிவிட்டார்.

    தற்போது என் கணவர் மரத்தில் ஏறி இலைகளை பறித்தபோது வலிப்பு வந்ததால், தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் எனது கணவரை சுட்டு கொன்ற கும்பலை சேர்ந்தவர் அடிக்கடி தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை, குறிப்பாக காட்டுப்பன்றிகளை வேட்டை ஆடுவார்.

    அவர் உள்பட 8 பேரும் வனப்பகுதியில் வேட்டையாடும் போது, அதன் அருகில் புறம்போக்கு நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த எனது கணவர், இதனை வன அதிகாரிகள், போலீசாரிடம் சொல்லி விடுவார் என்பதால் அவரை தடை செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டனர்.

    பின்னர் அதிகாரிகளின் துணையோடு, எங்கள் பழங்குடியினர் வழக்கத்திற்கு மாறாக குண்டு அடிபட்ட அவர் சடலத்தை எரித்து தடயங்களை அழித்துவிட்டனர். மேலும் போலீசார் உள்ளிட்ட அதி காரிகள் ரூ. 8 லட்சம் லஞசம் வாங்கி கொண்டு சாட்சிகளை மறைத்துவிட்டனர்.

    எனவே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சி.பி.சி.ஐடி போலீஸ் மூலமாக மறு விசாரணை செய்து 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் உயிர் ஆபத்து இருப்பதால், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    • மாணவ மாணவிகள் வசதிக்காக பேருந்து நிறுத்தம் இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து வர வேண்டி உள்ளது.
    • உடுமலையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.

    உடுமலை

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சிறப்பு தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட முன்னோடி கடன் வங்கி தலைமை அலுவலர், தாட்கோ பிரிவு அலுவலர், மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலர்கள் கலந்துகொண்டு சுயதொழில் வேலைவாய்ப்பு பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

    இதில் உடுமலையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கம் சார்பில் தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, பொருளாளர் சிவகுமார் ஆகியோர் மனு அளித்தனர்.

    இதில் சங்க மூத்த நிர்வாகிகள் நாயப் சுபேதார் நடராஜ், மோகன், கண்ணன், மோகன்ராஜ், கர்ணன், முத்துக்காளை, லியாகத் அலிகான், கிருஷ்ணசாமி, அழகிரிசாமி, சுரேஷ் மற்றும் வீர மங்கையர் ஜெயந்தி பூபதி, ராதா முருகேசன், அங்கம்மாள் கிருஷ்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் மருத்துவ வசதி, சிஎஸ்டி., கேண்டின் உடுமலை சைனிக் பள்ளியில் ஏற்படுத்துதல், சுயதொழில் வேலைவாய்ப்பு, இளைய தலைமுறைக்கான போலீஸ் ,ராணுவத்திற்கான உடல் தகுதித்திறன் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சாலையோர கடைகள் மற்றும் ஆவின் ஸ்டால்கள் அமைப்பது தொடர்பாக, சிஎஸ்டி., கேண்டினில் பணிபுரிய மற்றும் மாவட்ட படை வீரர் நல அலுவலகத்தில் பணிபுரிய முன்னாள் ராணுவத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    மேலும் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ள சங்க அலுவலகம் மற்றும் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை சார்பில் யூனிபார்ம் சர்வீசில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் வசதிக்காக பேருந்து நிறுத்தம் இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து வர வேண்டி உள்ளது. மேலும் முன்னாள் ராணுவ வீரர் நல சங்க அலுவலகம் இங்கு செயல்படுவதால் வயது முதிர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் வந்து செல்வதற்கு பேருந்து நிறுத்தம் வசதி செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    • கரூர் மாவட்டத்தில் குவாரி, கிரசர் தொழிலை நிறுத்தி வைப்பதாக மனு அளித்தனர்
    • கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழில் சார்ந்த தனியார் கல்குவாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவை செயல் பட்டு வருகின்றன.

    கரூர்,

    கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கா.பரமத்தி வட்டார குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழில் சார்ந்த தனியார் கல்குவாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவை செயல் பட்டு வருகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இதில் குவாரித்தொழில் செய்பவர்கள் முறையாக அரசு அனுமதி பெற்று உரிய வருவாயை முறையாக செலுத்தி வருகின்றனர். எங்களுடைய வரி வருவாய் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீசல் விலை உயர்வு மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக தொழிலை தொடர்ந்து நடத்துவதில் சிரமம் இருந்து வருகிறது. இந்த நிலையில் குவாரி மற்றும் கிரசர் தொழிலில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகள் பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான புகார்களை அழைத்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    மேலும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் நடவடிக்கைகள் காரணமாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளி மாவட்ட  அதிகாரிகளை கொண்டு ஆய்வில் ஈடுபட்டு அபராதம் விதித்து தொழிலை முடக்கும் எண்ணத்தோடு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, குவாரி மற்றும் கிரசர் தொழிலை இன்று முதல் நிறுத்தி வைப்பதாக, கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் ஏக மனதாக முடிவு எடுத்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    • கரூரில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை மனு அளித்தார்
    • நடவடிக்கை இல்லை என்கின்ற பட்சத்தில் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்

    கரூர்,

    முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபு சங்கரை சந்தித்து, மனு அளித்தார். அப்போது, அமராவதி அணையில் 64 அடி உயரம் தண்ணீர் இருக்கிறது. குடிநீர் தேவைக்காக கடைமடை வரை தண்ணீரை திறக்க வேண்டும், 60 அடி தண்ணீர் இருந்தாலே திறக்கலாம் என விதி இருக்கிறது. தற்போது 64 அடி தண்ணீர் இருப்பு இருப்பதால், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும்.

    அமராவதி ஆற்றின் துணை ஆறான குடகனாற்றில் வரும் கழிவு நீரில் 3,500 டி.டி.எஸ். உப்புத் தன்மை கலந்து வருவதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவு நீரை ஆற்றில் கலக்கும் நிறுவனத்தை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கரூரிலிருந்து கோவை மற்றும் ஈரோடு சாலைகள் பிரியும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வித்தியாசமான முறையில் ஸ்பீடு பிரேக் போடப்பட்டுள்ளது. அதில் வயதானவர்கள், பெண்கள் ஏறி இறங்கும் போது விபத்து ஏற்படுகிறது.

    அதை அப்புறப்படுத்தி விட்டு தேசிய நெடுஞ்சாலையின் விதிகளுக்கு உட்பட்டு வேகத்தடை அமைக்க வேண்டும். தன்னுடைய டிரஸ்ட் சார்பில் வைக்கப்பட்டுள்ள மரங்களுக்கு தண்ணீர் விட்டு வளர்த்து வருகிறோம். மாநகராட்சி அதிகாரிகள் 3 முறை அதில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்றுவது, தாரை ஊற்றி மரங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவற்றை தடுக்க வேண்டும். ஆண்டாங்கோவில் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி குப்பை கிடங்கில் மாதம் 10 ஆயிரம் செலுத்தி குப்பை கிடங்கில் கொட்டி வருகிறோம். அதனை கொட்ட அனுமதிக்காததால் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு, எரியூட்டும் நிலை உள்ளது. இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு மனு அளித்துள்ளார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை இல்லை என்கின்ற பட்சத்தில் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும், கரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், பொது கூட்டம் நடத்த கேட்ட இடத்திக் அனுமதி தருவது இல்லை. நாம் கேட்கும் இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் நடத்தச் சொல்லி அலைக்கழிப்பதாகவும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றே போராட்டங்கள் நடத்தக் கூடிய சூழ்நிலை உள்ளது என்றார். இந்நிகழ்வின் போது மாவட்ட அவைத் தலைவர் திருவிகா, ஆலம் தங்கராஜ், கரூர் மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் சேரன் பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற கோரி பா.ம.க.வினர் மனு அளித்தனர்
    • இட ஒதுக்கீட்டு முறையை எவ்வித சமரசமும் இல்லாமல் பின்பற்ற வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்

    ஜெயங்கொண்டம்,

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இச்சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை எவ்வித சமரசமும் இல்லாமல் பின்பற்ற வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி மாநில மாணவரணி செயலாளர் கொடுக்கூர் ஆளவந்தார் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற கோரி ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் இராணியிடம் மனு அளித்தார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் வினோத் ராஜ்குமார், அருண் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆணையாளர் தலைமையில் சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளில்சொத்து வரி, குடிநீர் வரி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் போன்ற இதர வரிகள் பொதுமக்களால் செலுத்தப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட வரிகள் குறித்து பொதுமக்கள், வியாபாரிகள், தொழிற்கூடஉரிமையாளர்கள் ஆகியோர் வழங்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில்ஆணையாளர் தலைமையில் துணை ஆணையர், உதவி ஆணையர், துப்புரவுஅலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுவின் கூட்டம் பிரதி மாதம் இரண்டாம் மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த (8.6.2023) அன்று நடைபெற்ற கூட்டத்தில் நான்குமண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    எனவே பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெறும் கட்டண குறைதீர்க்கும் கூட்டத்தில் தங்களது மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.மேலும் தகவல்களுக்கு 9843174448 என்ற செல்போன் எண்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    ×