என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Two Wheelers"
- காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
- முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
காங்கயம் :
காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்டு காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு எவராலும் உரிமை கோரப்படாத 79 இருசக்கர வாகனங்கள் வருகிற 17- ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அணுகி அங்கு ஏலத்தில் விட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்.
வாகனங்களை பார்வையிட விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்றோ அல்லது ஏலம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வரை வாகனங்களை பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்குள் முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஆதார் அடையாள அட்டையுடன் முன்வைப்பு தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவாள் மட்டும் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் ஏலம் நடக்கும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தை அவர்களது முழு பொறுப்பில் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
- 4 இருசக்கர வாகனநிறுத்தங்களில் இந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கிறது.
- வாகனங்கள் குறித்து தெற்கு போலீசார் கணக்கெடுப்பு செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன நிறுத்தங்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் குறித்து தெற்கு போலீசார் கணக்கெடுப்பு செய்தனர்.
அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2 வருடங்களாக 319 இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று உள்ளன. 4 இருசக்கர வாகனநிறுத்தங்களில் இந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கிறது. சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து வாகனங்களின் உரிமையை கோரலாம் என்று தெற்கு போலீசார் அறிவித்துள்ளனர்.
- மரியதாஸ் வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
- டிக்ஸன் மோட்டார் சைக்கிளுக்கும் சிலர் தீ வைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாள முத்துநகர் அன்னை திரேசா மீனவர் காலனியை சேர்ந்தவர் மரியதாஸ்(39).
நேற்று இரவு வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த மரியதாஸ் வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
நள்ளிரவில் திடீரென சத்தம் கேட்டு எழுந்து பார்க்கும்போது,அவரது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக வெளியே வந்த மரியதாஸ் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்துள்ளார். எதற்காக அவரது மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது? யார் வைத்தார்கள்? என்று தெரியவில்லை.
இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தெர்மல் நகர் எடை நிலையம் அருகே எடை நிலைய ஊழியரான தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த டிக்ஸன் என்பவரது மோட்டார் சைக்கிளையும் சிலர் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இது குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலங்குளம் பகுதிகளில் 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.
- டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் உட்கோட்ட எல்கைக் குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.
வருகிற 13, 14 மற்றும் 15-ந்தேதி ஆகிய 3 தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.
இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வாகனங்களை பாவூர்சத்திரம் வென்னி மலை முருகன் கோவில் வளாகத்தில் வருகிற 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலான 5 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம்.
மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ.3000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.
வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத் தெகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினையும் உடனடி யாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.
இத்தகவலை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சாம்சன் தெரிவித் துள்ளார்.
- முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிறுத்தமாக கடலூர் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தம் இயங்கி வருகின்றது.
- பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் உள்ளே சென்று வராததால் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்திற்குள் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்வது போல் மிக முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிறுத்தமாக கடலூர் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தம் இயங்கி வருகின்றது. இந்த பகுதியில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் கலெக்டர் முகாம் அலுவலகம், பல்வேறு துறை அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றது.
இதன் காரணமாக தின ந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவ மாணவிகள் என தினந்தோறும் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக கடலூருக்குள் வரக்கூடிய அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் சிறிது நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் விழா காலங்களில் மக்கள் திரள்வது போல் கூட்டமும் மற்றும் சாதாரண நேரங்களில் மக்கள் நின்று கொண்டு பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக மஞ்சகுப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் பெரிய அளவிலான பஸ் நிறுத்த ஷெட் அமைக்கப்பட்டு அனைத்து பஸ்களும் உள்ளே வந்து நின்று பயணிகளை ஏற்றி பாதுகாப்பாக வெளியில் செல்வதற்காக அமைத்தனர். மேலும் இப்பகுதியில் சாலையில் அனைத்து பஸ்களும் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருவதால் பெரிய அளவிலான பஸ் நிறுத்த ஷெட் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தினந் தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்றுவரும் நிலையில் வழக்கம் போல் சாலையில் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும் பஸ் டிரைவர்கள் தங்கள் பஸ்களில் அதிக அளவில் பயணிகள் ஏற்றுவதற்காக நடுச் சாலையிலே பஸ்களை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக பயணிகளை ஏற்றுவதும், அவர்களுக்குள் அடிக்கடி பயணிகள் ஏற்றுவதில் தகராறு ஏற்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
தற்போது பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் உள்ளே சென்று வராததால் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. மேலும் கால்நடைகள் உள்ளே அமர்ந்து பாதுகாப்பாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக எதற்காக பல லட்சம் செலவு செய்து இந்த பஸ் நிறுத்த ஷெட் அமைக்கப்பட்டது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் கடலூர் பெரு நகராட்சி மாநகராட்சியாக மாறிய பின்பு பெயர் மட்டுமே மாறி உள்ளது. அடிப்படை பணிகளான இது போன்ற பணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி அனைத்து பஸ்களும் பஸ் நிறுத்தத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கோபி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
- அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பஸ் நிலையத்தில் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளியூரில் பணிக்கு செல்லும் சிலர் பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பழனிச்சாமி மற்றும் பணியாளர்கள் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.
அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர். மீண்டும் வாகனங்கள் நிறுத்தும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- லட்சுமி நகர் பிரதான சாலையில் பல நாட்களாக சாலை போடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
- கண் பாதிப்புகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் லட்சுமி நகர் பிரதான சாலையில் பல நாட்களாக சாலை போடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வாகனம் செல்லும் போது புழுதிகள் பறந்து கண் பாதிப்புகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே புதிய சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
- போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மத்திய பகுதியில் சிறிய இடத்தில் இயங்கி வரும் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் பயணிகள் அதிகளவில் வருவதால் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகளவில் உள்ளது.
அரசு, தனியார் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்தை சரி செய்ய போலீசார் புதிய வழிமுறைகளை கொண்டு வந்தாலும் பொதுமக்கள் அதை கடைபிடிப்பதில்லை.
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் திருச்சி, சென்னை, பெங்களூரு, தஞ்சாவூர், நாகப்பட்டினம் பஸ்கள் நிறுத்த பகுதியில் அதிகளவில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்த வழியாகத்தான் பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல வேண்டும்.
அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் செல்வதற்கும், பஸ்களை திருப்பி நிறுத்துவதற்கும் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். இதுதவிர இந்த இருசக்கர வாகனங்கள் நடந்து செல்லும் பயணிகளுக்கும், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் இடையூறாக உள்ளன.
பஸ்கள் உள்ளே வரும் பகுதியில் நெரிசலை தவிர்க்க போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்த கூடாது என அறிவிப்பு செய்துள்ளனர்.
இதை கண்டுகொள்ளாமல் பஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அறிவிப்பு பலகை அருகிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு பஸ் நிலையத்திற்குள் செல்கின்றனர்.
இதனால் தினந்தோறும் அந்த பகுதியில் பஸ்களை நிறுத்த முடியாமல் டிரைவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஏற்கனவே நெரிசலாக உள்ள பகுதியில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை உணர்ந்து பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை வெளியிடங்களில் நிறுத்த வேண்டும்.
போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பதால் பொதுமக்களும் வாகனங்களை பஸ் நிலையத்தில் இஷ்டம் போல் நிறுத்துகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கடலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மீனவ மகளிர் பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
- பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பட்டா தொடர்பான 122 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 83 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 42 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 47 மனுக்களும், பள்ளி கல்வி துறை தொடர்பாக 38 மனுக்களும், இதர மனுக்கள் 124 ஆக மொத்தம் 456 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.
பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தின் வாயிலாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 சதவீத மானிய விலையில் மீனவர் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள 13 மீனவர் மீனவ மகளிர் பயனாளிகளுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனத்தினை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்