என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "workshop"
- தமிழ் வளர்ச்சித்துறை யின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்த ரங்கம் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது.
- அனைவரையும் ஈர்க்கக்கூடியது தமிழ்மொழி என கலெக்டர் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூ ரியில் தமிழ் வளர்ச்சித்துறை யின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்த ரங்கம் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கி பேசியதா வது:-
நமது தாய் மொழியான தமிழ் மொழிக்கு தனிச்சிறப்பு உள்ளது. உலக மொழிகளில் எளிமையாக கற்றுக் கொள்ளும் வகையிலும், சிறப்பு வாய்ந்த மொழி யாகவும் தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழிக ளிலுள்ள வார்த்தைகளின் அர்த்தங்களை எளிதில் உணர்ந்து, அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையிலும் ரசிக்கத்தக்க வகையிலும் உள்ளது. பல்வேறு காலச்சூழ் நிலையில் மாற்று மொழிக ளின் பயன்பாடுகள் அத்தி யாவசியம் அதிகரித்து வந்தாலும், தாய்மொழி பயன்பாட்டை தவிர்க்கக்கூடாது.
தாய்நாட்டில் முழுமையாக பேச்சு முதல் கோப்புகள் பராமரிப்பு வரை தமிழ் மொழியை பின்பற்றி பாதுகாப்பதுடன், வருங்காலச் சந்ததியினருக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்திட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
தாய்மொழியை காப்பதும் அதன் மூலம் அலுவலக செயல்பாடுகளை செயல்படுத்துவதும் என ஒவ்வொன்றையும் முழுமையாக பின்பற்றி அனைவரும் தமிழ்மொழியை பாதுகாத்திட வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஆஷா அஜித் பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் துரையரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம், தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு சார்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
- தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நான் முதல்வன் நிரல் திருவிழா அறிமுகம் மற்றும் விளக்கப்பட்டரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் நோக்கம் தொழில், கல்வி மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் எதிர்கா லத்திற்கான திட்ட இலக்கீட்டை எளிதாக கை யாளும் வகையில் அவர்க ளுக்கான வழிகாட்டுதலை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
பொதுவாக கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான திட்டத்தின் போது அவர்க ளுக்கு ஏற்படும் இடையூறு களை கண்டறிந்து சரியான வழிகாட்டுதலை மேற் கொள்ள செய்வதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் எதிர்காலம் சிறந்து விளங்கும். அதுதான் நான் முதல்வன் என்னும் திட்டத்தில் உன்னத லட்சியமாகும்.
இத்திட்டத்தில் மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதலை மேற்கொள்ள சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தை சேர்ந்த அனுபவம் மிக்க மாணவர்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு புராஜக்ட் திட்டத்திற்கு தக்க ஆலோசனை மற்றும் வழி காட்டுதலை செய்து கொடுப்பதற்கான பணி களை தொழில் பயிற்சி நிலையம் முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல் வர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாண வர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் இறுதி யாண்டு கல்வியை முடித்து ஒவ்வொருவரின் லட்சிய மும் நிறைவேறிடும் வகை யில் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் திறன் பயிற்சி குமரவேல், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மாரிமுத்து, ஓம் பிரகாஷ் திட்ட மேலாளர் ரூபன், மாவட்ட தொழில் மையம் உதவி பொறியாளர் பிரதீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூரில் உயர்கல்வி வழிகாட்டல் பயிலரங்கம் நடைபெற்றது
- பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் பள்ளி கல்விதுறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி வழிகாட்டல் குறித்து ஒருநாள் பயிலரங்கம் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பயிலரங்கிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் ஜெய்சங்கர் ( இடைநிலை), உதவித் திட்ட அலுவலர் ரமேஷ் (தொடக்கநிலை) ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர். மாதிரிப் பள்ளிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராசபாண்டியன் சிறப்புரையாற்றினார். கனகராஜ், கார்த்திக், அனன்சியா ஆகியோர் கருத்தாளராக கலந்துகொண்டு ஜே.இ.இ, நீட், கிளாட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், பங்கேற்றல் மற்றும் உயர் கல்வி குறித்த பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இதில் ரோவர் பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, உயர்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகாதேவன், உள்ளடங்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், ஆசிரியர் பயிற்றுநர் கீர்த்தனா மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- பயிலரங்கிற்கு துறைத் தலைவர் அ.அந்தோணி சகாய சித்ரா தலைமை தாங்கினார்.
- பேராசிரியர்கள் ம.ரெ.கார்த்திகேயன், மலர்க்கொடி மற்றும் மாணவர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை மன்றம் சார்பில் இளைஞர்களுக்கான நிதி சார்ந்த கல்வி என்ற தலைப்பில் 2 நாள் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனைப்படி நடந்த பயிலரங்கிற்கு துறைத் தலைவர் அ.அந்தோணி சகாய சித்ரா தலைமை தாங்கினார். தோவாளை லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குனர் தி.விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் வணிக நிர்வாகிவியல் துறை பேராசிரியர்கள் ம.ரெ.கார்த்திகேயன், மலர்க்கொடி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். வணிக நிர்வாகவியல் துறை மன்ற ஒருங்கிணைப்பாளர் அ.தர்மபெருமாள் நன்றி கூறினார். பயிலரங்க ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடந்தது.
- முடிவில் மாணவி நந்தினி நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடந்தது. கல்லூரி செயலர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் வைரம் பட்டை தீட்டப்பட்டு ஜொலிப்பதை போல, ஒருவர் தன்னைத்தானே அறிந்துகொள்ளவும், மற்றவர்களை மிஞ்சி வெற்றிபெறவும் தனித்துவமாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்பைப் பெறுவதை விட வேலைவாய்ப்பை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாணவி ஆகாஷ் செல்வி விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.மாணவர் பாலசங்கர் வரவேற்றார். மாணவி ஆகாஷ் செல்வி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். முடிவில் மாணவி நந்தினி நன்றி கூறினார்.
- மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.
- இந்த விபத்தில் பணிமனையில் சுற்றுச்சு வர் மற்றும் இரும்பு கதவு உடைந்து சேதம் அடைந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டையில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கடலூர் இம்பீரியல் சாலையில் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரசு வாகனங்களின் பழுது நீக்கும் பணிமனையின் சுற்றுச்சுவர் மீது மோதி பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பணிமனையில் சுற்றுச்சு வர் மற்றும் இரும்பு கதவு உடைந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இது குறித்து கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைக்க அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தொழிற்துறை ஆணையர் அர்ச்சனா பட்னாயக் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டபப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்னாயக் பேசுகையில், முதல்-அமைச்சர் பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அத்தகைய திட்டங்களை பொதுமக்கள் சிரமமின்றி கிடைத்திடும் வகையில் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தங்கள் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் திட்டங்களை செயல் படுத்திட வேண்டுமென அலுவலர்களிடம் கேட்டு கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கேலிவதை தடுப்பு குழு சார்பில் பெண்மொழி படைப்புத்திறன் பயிலரங்கம் நடந்தது.
- குறும்பட இயக்குனர் செந்தில்ராம் கதையை குறும்படம் ஆக்குவது குறித்து பேசினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் மாணவர் குறைதீர் மன்றம் மற்றும் கேலிவதை தடுப்பு குழு சார்பில் பெண்மொழி படைப்புத்திறன் பயிலரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ஜான்பீட்டர் தலைமை வகித்து பேசும்போது, பெண்களுடைய உணர்வு களை அவர்கள் பதிவு செய்யும் போதுதான் ஒரு படைப்பு உயிர்ப்புடன் இருக்கும் என்றார்.
எழுத்தாளர் சசிகுமார், கவிஞர் ஜெயந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
குறும்பட இயக்குனர் செந்தில்ராம் கதையை குறும்படம் ஆக்குவது குறித்து பேசினார்.
மாணவி யோகப்பிரியா, உதவி பேராசிரியை தங்கமதி, விடுதி காப்பாளர் மெகருனி சாபேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் இந்திரா காந்தி, இணை ஒருங்கிணைப்பாளர் சுஜித்ரா மற்றும் குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் செய்திருந்தார்.
மதுரை
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சுய நிதிப் பிரிவில் "ஆய்வு வடிவமைப்பு" என்னும் தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்" நடந்தது. அமெரிக்கன் கல்லூரி இணைப் பேரா சிரியர் டாக்டர். சாமுவேல் அன்புச் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முது கலை மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி எப்படி ஆராய்ச்சி நடத்துவது என்பது பற்றிய நுண்ணறிவு குறித்து விளக்கினார். மேலும் ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வடிவ மைப்பு, அறிக்கை எழுதுதல், நூல் பட்டியல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். கல்லூரித் தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் டாக்டர்.ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு ஆகியோர் வாழ்த்தினர். மாணவர் கார்த்திக் வரவேற்றார். மாணவர் சம்யுக்தா நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் செய்திருந்தார். உதவிப் பேராசிரியர்கள் ராஜாமணி, பாரதி, தினேஷ் குமார் ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர்.
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
- இயக்குனர் பிரபு, உதவிப் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (சுயநிதிப் பிரிவு) வணிகவியல், கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் "தொழில்முனைவோருக்கான வணிக வாய்ப்புகள்" என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது. பாத்திமா கல்லூரி முதுகலை வணிக மேலாண்மைத் துறை உதவிப்பேராசிரியை சுகன்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான வணிக வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் தொழில் முனைவோருக்கான தகுதிகள், மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். செயலாளர் விஜயராகவன் பேசினார். முதல்வர் ராமசுப்பையா, வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் பிரபு, உதவிப் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவி சுஜிதா பாலா வரவேற்றார். துறைத் தலைவி நாகசுவாதி விருந்தினரை அறிமுகப்படுத்தினார். உதவிப் பேராசிரியைகள் மஞ்சுளா மற்றும் பாபி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மாணவி ஷானு நன்றி கூறினார்.
- கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசினார்.
- பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியை மற்றும் இயக்குனர் அன்னாவீனஸ் ஆராய்ச்சி செய்வதற்கான வழிமுறைகளை விளக்கி கூறினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி பட்டறை, கல்லூரி உள்தர உறுதிப்பிரிவு மற்றும் ஆராய்ச்சிக்குழு சார்பில் நடைபெற்றது. கல்லூரி ஆராய்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாலு வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியை மற்றும் இயக்குனர் அன்னா வீனஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆராய்ச்சி செய்வதற்கான வழிமுறைகளை விளக்கி கூறினார். குறிப்பாக, ஒரு துறையை சார்ந்த ஆராய்ச்சியை எவ்வாறு தொடங்க வேண்டும், ஆராய்ச்சி கட்டுரைகளை சிறந்த முறையில் எழுதுவது எப்படி? அதை சிறந்த ஆராய்ச்சி இதழ்களில் பிரதியிடும் முறைகளையும், ஆராய்ச்சி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் முறையையும் விரிவாக எடுத்து கூறினார். கல்லூரி உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜீம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் நன்றி கூறினார். இப்பயிற்சி பட்டறையில் கல்லூரி பேராசிரியர்கள், ஆராயச்சி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
- மாவட்ட அளவிலான பணிமனை நடந்தது
வேலூர்:
பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் 50 ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனை நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் சி. அலமேலு வரவேற்று பேசினார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் என். ரமேஷ் மற்றும் துணைத்தலைவர் என். ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். மணிமொழி மதிப்பீட்டுப் புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனையை தொடக்கி வைத்து பேசியதாவது:-
பணிமனையில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் மிகச் சிறந்த தேர்வு வினா தயாரிப்பா ளராகத் திகழ வேண்டும்.
நல்ல தரமான வினாக்களை தயாரித்து மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து அதன் மூலம் அனைத்து மாணவர்களையும் முழுமை பெறச் செய்து தனித்துவம் வாய்ந்த ஆசிரியர்களாக வர வேண்டும்.
எந்த நேரத்திலும் கல்விப் பணி ஒன்றையே ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் வினாக்கள்தான் தமிழகத்திலேயே மிகச் சிறந்த வினாவாக இருக்க வேண்டும்.
ஆசிரியர்களது வாழ்க்கையில் எப்போதும் தேடல் வேண்டும்.
நிறைய புத்தகங்களை படியுங்கள். அதிக முயற்சி, கடுமையான பயிற்சி மேற்கொண்டு அரசுத் தேர்வுகளில் வேலூர் மாவட்டத்தின் தேர்ச்சியை 100 சதவீதம் பெறுவதற்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் சி. குமார் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்