search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    • ஒரு தொழிலாளி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
    • கடத்தப்பட்ட தொழிலாளர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    லாகூர்:

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அம்மாகாணத்தில் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், வெளிமாகாணங்களை சேர்ந்தவர்கள், உள்ளூர் மக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன

    இந்நிலையில், அம்மாகாணத்தின் பஞ்ச்கூர் நகர் குபா இ அபடன் பகுதியில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இங்கு பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 8 கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் அனைவரும் கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒரு தொழிலாளி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்

    அதேவேளை, பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி வந்த 20 தொழிலாளர்கயும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    • 'ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மீது தனிமனித ரீதியிலான தாக்குதலை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ளார்.
    • விஸ்கான்ஸின் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி கடுமையாகியுள்ளது.

    ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மீது தனிமனித ரீதியிலான தாக்குதலை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ளார்.


    இந்நிலையில் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டார்; கமலா அப்படித்தான் பிறந்தார் என்று விமர்சித்துள்ளார்.

    • ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
    • ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.

    கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் உயிரழந்துள்ளனர். 

    வெனிசுலா நாட்டு எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

    அப்போது அந்த ஹெலிகாப்டர் குமரிபோ என்ற நகராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரும் தப்பவில்லை. இந்த விபத்தில், ராணுவ வீரர்கள் 8 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

    இதனை அந்நாட்டின் ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார். எனினும், விபத்து எப்போது நடந்தது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.

    • கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
    • நிலச்சரிவால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    காத்மண்டு:

    நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல நகரங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. தலைநகர் காத்மண்டுவில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ கடந்தது.

    அதிகபட்சமாக காத்மண்டு பள்ளத்தாக்கில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 64 பேரை காணவில்லை. தொடர் மழையால் காத்மண்டுவின் முக்கிய நதியான பாக்மதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.

    பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

    நேபாளம் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    • ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
    • இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

    ஜெருசலேம்:

    லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து கடந்த வாரம் முதல் இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் படுகாயம் அடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர்.

    தொடர்ந்து, லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா கமாண்டர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரே வாரத்தில் லெபனானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். போர் பதற்றம் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.

    இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாஹியே பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

    இந்நிலையில், லெபனான் மீது நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மற்றொரு உயர்மட்ட தலைவரான நபில் கவுக் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் முக்கிய தலைவர்களை இழந்து வருவது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • துணை முதல்வராக நீங்கள் இன்று பதவியேற்ற செய்தியை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    • தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதையிலும் புதிய மைல்கல் எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மாநிலத்தின் துணை முதல்வராக நீங்கள் இன்று பதவியேற்ற செய்தியை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    அரசியல், சமூக நலத்துறை மற்றும் மக்களின் நன்மைக்காகச் செய்த உழைப்பின் அங்கீகாரம் இந்த உயர்ந்த பதவி தங்களுக்கு கிட்டி இருக்கிறது உங்கள் அனுபவமும், ஊக்கமும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை ஏற்படுத்தும்.

    உங்கள் புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்கள் நலனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதையிலும் புதிய மைல்கல் எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

     

    • வடமேற்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் ஐ.எஸ், அல்-கொய்தா அமைப்புகளைச் சேர்ந்த 37 பேர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    வாஷிங்டன்:

    மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

    அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு அமெரிக்க ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில், வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதலில் ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா அமைப்புகளைச் சேர்ந்த 37 பேர் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

    • பிரேசில் மற்றும் இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.
    • ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகளையும் ஆதரிக்கிறோம் என்றார்.

    ஐ.நா. பொதுசபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த கருத்தை ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் வலியுறுத்தின.

    இந்த நிலையில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க ரஷியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பேசும்போது, சந்தேகத்திற்கு இடமின்றி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலகளாவிய தெற்கின் பிரதிநிதித்துவத்தை விரிவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. பிரேசில் மற்றும் இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். மேலும் அதே நேரத்தில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகளையும் ஆதரிக்கிறோம் என்றார்.

    • நமது எதிரி அரசிடம், ராணுவத்திடம், சமூகத்திடம் நாம் கடந்த 11 மாதமாக சொல்வது இதுதான்
    • லெபனானில் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுவருகிறது.

    லெபனான் முனை

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். கடந்த வாரம் ஹிஸ்புல்லாவினரின் பேஜர்கள் வாக்கிடாக்கிகள் உள்ளிட்ட தோலைத் தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் 35 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் உட்பட 4000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 800 பேர் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லாவின் உயர் காமிண்டர்கள் உயிரிழந்த நிலையில் தங்கள் அமைப்பை இதனால் அளித்துவிடமுடியாது என்று நஸ்ரல்லா இறப்பதற்கு முன் பேசி இருந்தார்.

     

    சோதனையான காலம் 

    கடந்த செப்டம்பர் 19 அன்று நஸ்ரல்லா கடைசியாக பொது வெளியில் தோன்றி பேசினார். இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த கமாண்டர் இப்ராஹிம் அகில் உயிரிழந்ததையொட்டி நஸ்ரல்லா பொதுவெளியில் தோன்றி நிகழ்த்திய உரையில், லெபனான் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதல்கள் நம்மீது தொடுத்த போர் பிரகடனம் ஆகும். இஸ்ரேலின் இந்த வல்லாதிக்கத்துக்கு நாம் தக்க பதிலடி கொடுப்போம்.

     

    மிகவும் சோதனையான காலம் காத்திருக்கிறது. ஆனால் எக்காரணம் கொண்டும் இந்த சூழல் உங்களை மன ரீதியாக பலவீனமாக்கி விடக் கூடாது. கடவுளின் மீதுள்ள நம்பிக்கையுடன் , இந்த இக்கட்டில் இருந்து ஹிஸ்புல்லா எழுந்து வரும். நமது தலைகளை நிமிர்த்தும் காலம் விரைவில் வரும். நமது எதிரி அரசிடம், ராணுவத்திடம், சமூகத்திடம் நாம் கடந்த 11 மாதமாக சொல்வது இதுதான், காசா மீதான அட்டூழியங்களை நிறுத்தும்வரை லெபனான் முனையில் இருந்து நமது எதிர்ப்பு நிற்கப்போவதில்லை என்று அந்த உரையில் அவர் பேசியிருந்தார். 

     

    ஹிஸ்புல்லாவின் எதிர்காலம் 

    இந்நிலையில் கடந்த 1992 முதல் 32 வருட காலமாக ஹிஸ்புல்லாவின் தலைவராக அந்த அமைப்பை வழிநடத்தி வந்த ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பின்னர் அதன் எதிர்காலமும் அடுத்தகட்ட நகர்வுகளும் எவ்வாறு அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹிஸ்புல்லா தங்களை எந்நேரமும் தாக்கலாம் என்று பதற்றத்தில் உள்ள இஸ்ரேல் நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரித்து ஹை அலர்ட்டில் தயாராக உள்ளது.

    தாரைவழித் தாக்குதல் 

    ஹிஸ்புல்லா தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தினால் அது இஸ்ரேலுக்கு பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தும். மீதமுள்ள ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தாவிட்டால், இஸ்ரேல் அவற்றை எப்படியும் அழித்துவிடும் என்பதால் அவை கைவசம் இருக்கும்போதே சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள ஹிஸ்புல்லா திட்டமிடலாம். மேலும் லெபனானில் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுவருகிறது.

    வான்வழித் தாக்குதலாகவன்றி அவ்வாறான தரைவழித் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்திற்கே பெருமளவிலான சேதத்தை ஹிஸ்புல்லா ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொறுப்பை அடுத்து யார் ஏற்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

     

    அடுத்த தலைவர் 

    இதற்கு சர்வதேச அரசியல் நோக்கர்கள் ஒருமித்த குரலில் சொல்லும் பதில் ஹாசிம் சஃபிதீன் [Hashem Safieddine] என்ற பெயரே ஆகும். ஹிஸ்புல்லா அமைப்பின் செயற்குழு தலைவரும் அவ்வமைப்பு எடுக்கும் அரசியல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிப்பவருமான ஹாசிம் ஹிஸ்புல்லாவின் ராணுவ செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் ஜிகாத் கவுன்சிலிலும் இடம் பெற்றவர் ஆவார். மேலும் ஹாசிம் உயிரிழந்த நஸ்ரல்லாவின் உறவினரும் ஆவார்.  

    • அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகளிடம் மயக்கும் வகையில் பேசி அவர்களின் பாலியல் இச்சையை தூண்டி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
    • பெண்களை பணத்தாசை காட்டி வரவழைத்து பல்வேறு இடங்களில் பிராத்தல்களை உருவாக்கியுள்ளார்

    அமெரிக்காவில் ராணுவ உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கார்ப்பரேட் பெரும்புள்ளிகளிடம் ஆசிய பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹான் லீ என்ற 42 வயது பெண், பாஸ்டன் மற்றும் வாஷிங்டனில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகளிடம் மயக்கும் வகையில் பேசி அவர்களின் பாலியல் இச்சையை தூண்டிவிட்டு அதன்மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

    அவர்களை மகிழ்விக்க ஆசியாவில் இருந்து பெண்களை பணத்தாசை காட்டி வரவழைத்து பல்வேறு இடங்களில் பிராத்தல்களை ஏற்படுத்தி இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி மிகப்பெரிய பாலியல் நெட்வொர்க் -ஐ ஹான் லீ உருவாக்கி சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் தெரியவந்த தகவலை அடுத்து ஹான் லீ பெடரல் போலீசால் கைது செய்யப்பட்டார். பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் கிளைன்ட்களிடம் சென்று வருவதற்காக ஏர்லைன் மற்றும் தங்குமிட வசதிகள், பெண்கள் கடைபிடிக்கவேண்டிய விதிகள் என மிகவும் அட்வான்ஸ் ஆக இந்த தொழில் நடத்தப்பட்டுள்ளது. இவர்களது வலையில் விழுந்த உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகளிடம் இருந்து ஒரு மணி நேரத்துக்கு $350 to $600 டாலர்கள் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நீதிமன்றத்தில் ஹான் லீ மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் ஹான் லீ தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் தான் எந்த பெண்ணையும் கட்டாயப்படுத்தி இந்த தொழிலில் ஈடுபடுத்தவில்லை என்றும் தெரிவித்தார். விசாரணையில் முடிவில் ஹான் லீக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 

    • லெபனான் ராணுவத்தை விட வலிமையான ஒரு படையாக மாற்றினார்.
    • ஹிஸ்புல்லாவை அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

    ஹிஸ்புல்லா இயக்க தலைவராக 32 ஆண்டுகளாக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலுக்கு கடும் சவாலாக விளங்கினார்.

    1960-ம் ஆண்டு பெய்ரூட்டின் கிழக்கு போர்ஜ் ஹம்மூத் பகுதியில் பிறந்தவர். அவரது தந்தை காய்கறி கடை நடத்தி வந்தார். ஹசனின் இளமைக் காலத்தில் லெபனான் உள்நாட்டு போரில் சிக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து லெபனானை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.

    இதையடுத்து இஸ்ரேலை வீழ்த்த ஹிஸ்புல்லா இயக் கம் உருவாக்கப்பட்டது. இதில் ஹசன் நஸ்ரல்லா இணைந்தார். 1992-ம் ஆண்டு அப்போதைய ஹிஸ் புல்லா தலைவராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி, இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் அந்த இயக்கத்துக்கு தனது 32-வது வயதில் ஹசன் நஸ்ரல்லா தலைவரானார்.

    தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுடனான போரை நஸ்ரல்லா தொடர்ந்து முன்னின்று நடத்தினார். அங்கிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின் வாங்கியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு எதிரான முதல் அரபு வெற்றியை ஹெஸ்பொலா அடைந்து விட்டதாக நஸ்ரல்லா அறிவித்தார்.


    மத்திய கிழக்கில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஈரானுடன் நெருக்கமான தொடர்பு களைக் கொண்ட அவர் அதுமட்டுமல்லாது ஹிஸ்புல்லாவை ஒரு அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

    அவரது தலைமையின் கீழ், பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் மற்றும் ஈராக், ஏமனில் உள்ள போராளிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்த, ஈரானிடம் இருந்து ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளையும் பெற்றார். ஹிஸ்புல்லா இயக்கத்தை, லெபனான் ராணுவத்தை விட வலிமையான ஒரு படையாக மாற்றினார்.

    லெபனான் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா இயக்கம் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    • கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
    • வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    நேபாளத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தலைநகர் காத்மாண்டுவில் 226 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

    மேலும் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இந்த நிலையில் நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.

    அதிகபட்சமாக காத்மாண்டு பள்ளத்தாக்கில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 64 பேரை காணவில்லை. இடைவிடாது மழை பெய்ததால் காத்மாண்டுவின் முக்கிய நதியான பாக்மதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. நேபாளம் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.

    ×