ஆஷஸ் தொடர்- இங்கிலாந்து அணி வெற்றி பெற 224 ரன்கள் தேவை
- 2-வது நாள் ஆட்டத்தில் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
- 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
ஆஷஸ் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 19 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, 2-வது நாள் ஆட்டத்தில் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பென் ஸ்டோக்ஸ் மட்டுமே நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் முன்னிலையுடன் 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால், 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 224 ரன்கள் தேவைப்படுகிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இந்த இலக்கை அடைந்து இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.