கிரிக்கெட் (Cricket)
null

டி20 உலகக் கோப்பை: ஒன்றல்ல இரண்டு சாதனைகளை படைத்து அசத்திய அர்ஷ்தீப் சிங்

Published On 2024-06-13 01:19 GMT   |   Update On 2024-06-13 02:34 GMT
  • இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் தவிர ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

நேற்றைய போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. முன்னதாக 2014 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 3.2 ஓவர்கள் பந்துவீசி 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

அந்த வகையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் 10-க்கும் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் மேற்கொண்டார். இதுதவிர டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார்.

நேற்றைய போட்டியில் முதல் பந்தை வீசிய அர்ஷ்தீப் சிங் அமெரிக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை சேர்த்தது. அமெரிக்கா சார்பில் நிதானமாக ஆடிய ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களிலும், நிதிஷ் குமார் 27 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும், ஷிவம் துபே 31 ரன்களையும் குவித்தனர்.

Tags:    

Similar News