கிரிக்கெட் (Cricket)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்த இந்தியா

Published On 2023-12-17 16:03 GMT   |   Update On 2023-12-17 16:03 GMT
  • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • ஆஸ்திரேலியாவின் வெற்றியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 1 - 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் 14-ம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலியா 478 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 164 ரன்களும், மிட்சேல் மார்ஷ் 90 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அமீர் ஜமால் 6 விக்கெட்களை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக இமாம்-உல்-ஹக் 62 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதன் பின் 216 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 233 ரன்களில் 2-வது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 90, மிட்சேல் மார்ஷ் 63* ரன்களும் எடுத்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு 450 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது.

கடினமாக இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சவுத் சாக்கில் 24 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

மேலும் ஆஸ்திரேலியாவின் வெற்றியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் 66.67% புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே 66.67% புள்ளிகளை கொண்டிருந்தாலும் 3-ல் 1 தோல்வியை பதிவு செய்ததால் பாகிஸ்தான் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா 41.67% புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News