கிரிக்கெட் (Cricket)
உலகக் கோப்பை தொடர்: பாகிஸ்தான் அணியில் வைரஸ் காய்ச்சல் பரவல்
- பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியாவை நாளை மறுதினம் பெங்களூருவில் எதிர்கொள்கிறது.
- பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் திடீரென வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
பெங்களூரு:
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியாவை நாளை மறுதினம் பெங்களூருவில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் திடீரென வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், சிலர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் தற்போது அவரது அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.